Tuesday, October 20, 2015

புதுக்கோட்டை via மலைக் கோட்டை(5)


                                புதுக் கோட்டை via மலைக் கோட்டை (5)
                                  ------------------------------------------------------------------
புதுக் கோட்டைvia மலைக்கோட்டை  என் எண்ணங்கள்
இப்பதிவை எழுதுவதா வேண்டாமா என்ற பலத்த சிந்தனைக்குப் பின் எழுதுகிறேன் 11-10-2015  நடை பெற்ற  பதிவர் விழா நிகழ்வுகள் குறித்துப் பலரும் எழுதுகிறார்கள் எழுதுவார்கள் நானும் கடந்த நான்கு பகுதிகளில் பதிவர் விழாவுக்கு நான் வந்ததையும்  சந்தித்தவர் பற்றியும் எழுதி விட்டேன் எல்லாமே MUNDANE பதிவுகள்ஆகவே இந்தப் பதிவு விழா பற்றியது அல்லi மனதில் பட்டதைச் சொல்வது என் குணம்தானே அதை நான் ஏன் மாற்றிக் கொள்ள வேண்டும்  ஆனால் இதில் சொல்லப் போகும் விஷயங்கள் யார் மனதையும் நோகடிக்க அல்ல. பலருக்கும் தோன்றி இருக்கலாம்  சொல்லி ஏன் பொல்லாப்பை கட்டிக் கொள்ள வேண்டும் எனவே நினைப்பவர்களே பதிவுலகில் அதிகம் என்பது என் அனுபவப் பாடம்
பொது வாக இம்மாதிரி சந்திப்புகளை ஆர்கனைஸ்  செய்து நடத்துவது மிகவும் சிரமமான ஒன்று. அர்ப்பணிப்பும் மனோபலமும் தேவை. அது நம் புதுக் கோட்டை வலைப்பதிவர் சந்திப்பினர் குழுவுக்கு இருந்ததுஅதனைத் திறம்பட நடத்திச்சென்ற திரு முத்து நிலவனுக்கு நிறையவே இருந்தது. கிரிக்கட் விளையாட்டில்  காப்டனைப் போல் வீரர்களா  வீரர்களை போல் காப்டனா என்னும் கேள்வி அவ்வப்போது எழும்  அதுவும் தோல்விகளைச் சந்திக்கும் குழுவில் அதிகமாகவே இருக்கும் எந்தக் குறையும் இல்லாமல் விழா நடை பெற்றிருக்கலாம் ஏன் என்றால் நான் முன்பே சொன்னதுபோல் காப்டனும் வீரர்களும் ஒருங்கே இணைந்து நடந்தனர். இருந்தாலும் எனக்குத் தோன்றுவது எந்த ஆலோசனை வந்தாலும்  அதை ஏற்காமல் அதே சமயம் உதாசீனப்படுத்துவது போலும் அல்லாமல் செயல் பட்டனர். ஓரிரு விஷயங்களை குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்  முதலில் கவிதைக்கு ஓவியம் என்று அறிவித்தார்கள்  எந்த பதிவருக்கும் இருக்கும் ஆசைதானே தன் கவிதைக்கு ஓவியம் வரையப் படுவது எனக்கும் இருந்தது தெரிந்த உடன் இரு கவிதைகள் அனுப்பினேன் உடனே மறுபடி வந்தது. கவிதைகள்பத்து வரிகளுக்குள் இருக்க வேண்டும் என்று. இதை முதலிலேயே அறிவித்திருக்கலாம் ஏனோ செய்ய வில்லை. பதிவர்கள் அவர்கள் ஒருவேளை ஆங்கிலத்தில் சொல்வது போல் taken  for granted  இருந்தும்  நான் பத்து வரிகளுக்குள்ளான  இன்னொரு கவிதையைஎழுதி அனுப்பினேன்  அது ஏற்கப்பட்டதா என்று அறியாத நிலையில்  பதிவர் விழாவுக்கு ஆர்வத்துடன் சென்றபோது ஏதும் இல்லாமல் ஏமாற்ற மடைந்தேன் ஓவியம் வரைய என்ன  criteria  என்பது கூறப்படவில்லை  இந்தப் பத்து வரிக் கண்டிஷன் தவிர  நான் எழுதி அனுப்பி நிராகரிக்கப்பட்ட கவிதை கீழே
 . அய்யா வணக்கம்
தங்களின் ஆர்வத்திற்கும் ஆற்றலுக்கும் எங்கள் வணக்கம்.
ஓவியத்திற்கான கவிதை 10 வரிகளுக்குள் இருந்தால்தான் படம் வரைய இடம் கிடைக்கும் (பெரிய கார்டு போர்டில் பாதி கவிதை, மீதி இடம் ஓவியத்திற்கு)
தாங்களே சுருக்கித்தந்தாலும் சரி, அல்லது வேறு சிறிய கவிதை இருந்தால் அனுப்பினாலும் சரி.
நன்றி வணக்கம்.

அன்புடையீர் எனக்கு இந்த விதி தெரிந்திருக்கவில்லை. இருந்தால் என்ன.?கவிச் சோலையில் ஒரு போட்டிக்காக நான் எழுதிய கவிதை கீழே. முத்தொள்ளாயிரப் பாடல் ஒன்றுக்குப் புதுக்கவிதை  ஒன்றுக்கு இரண்டாக எழுதி இருந்தேன் அது சரியாகுமா பாருங்கள்
முத்தொள்ளாயிரப் பாடல்
---------------------------------------
வீறுசால்  மன்னர் விருதாம் வெண்குடையை
பாற்  எறிந்த பரிச்சயத்தால் -தேறாது
செங்கண்மாக  கோதை  சின வெங்களி  யானை
திங்கள் மேல் நீட்டுந்தன்  கை.
என் கவிதை -1
----------------------
சேர மன்னன் வீர மறியாது,
வெற்றி கொள்ளும்  ஆவலில்,
செருக்கோடு  செருக்களம்  புகுந்த
வீரர்தம் தேர்க் குடைகளை
சென்றங்கு  செருமுனையில்  இழுத்து,
மிதித்துப் பழகிய  வெங்கரியின்  ஏறோன்று
 
நீல வானில்  ஒளி வீசும்
முழு வெண்ணிலவை மாற்றானின் தேர்க்
குடை என்றெண்ணித தன துதிக்கை
கொண்டிழுக்க முயன்றது (  தாம். )  ,
========================================
என் கவிதை -2
     சேர  ராசாவ  சண்டைல  சுளுவா
     
கெலிக்க  லாம்னு  தேரோட வர
     
சிப்பாய்ங்க  தேர்மேல கீற கொடைங்கள
     
சும்மா இசுத்து மெதிச்சு காலி பண்ணிப் பளகின
     
சேரனோட  யானே ,வட்ட நெலாவப் பாத்து,
     
தேர்க் கொடேன்னு நெனச்சு இசுக்க
     
அதோட தும்பிக்கைய  நீட்டிச்சாம்.
( ஹையா இரண்டுமே பத்து வரிகளுக்குள்)

இப்படிக்கு அன்புடன் ஜீஎம்பி
                      --------------------
பதிவர் கையேடு என்பது மிகச் சிறந்த விஷயம் அறிந்தவர் அறியாதவர் எல்லோரது விவரங்களும் விரல் நுனியில் கிடைக்கப் பெறுவது நல்ல விஷயம்தானே  பதிவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்க பதிவர்களை அவர்களது தளப் பெயர் , அவர் பெயர் தள முகவரி.  புகைப்படம்  தொலைபேசி எண், மற்றும் அவர்கள் பற்றி அவர்களே கையேட்டில் பார்க்க விரும்பும் விஷயங்கள்  என்று கேட்டிருந்தனர். எனக்கென்னவோ இவ்விஷயத்தில் பதிவர்கள் சில விஷயங்களைக் கொடுத்து பல விஷயங்களை கொடுக்காமல் மறைத்திருக்கின்றனர் என்றே தோன்றுகிறது கொடுக்கப்பட்ட விஷயங்களாவது கொடுத்தபடி கோர்க்கப் பட்டிருந்தால் யார் யார் எப்படி எப்படி விஷயங்களைக் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியும்  வாசகர்களது மெத்தனமே கையேடு சரியாக வர விடவில்லையோ என்றும் தோன்றுகிறதுபதிவர் பற்றிய விவரங்களை  அறிந்து கொள்ள  தேடும் முறை கொடுக்கப்படவில்லை. பதிவர்களை அவர்களின் இருப்பிட(ஊர்) வரிசையில் கொடுக்கப் பட்டிருக்கிறது. அதுவும் பல இடங்களில் மாறி இருக்கிறது. பதிவர்கள் பெயர்படி வரிசைப் படுத்தி இருக்கலாம் வலைத்தளமோ பெயரோதான் பலராலும் அறியப் படுகிறது சில இடங்களில் வெறும் பெயர் மற்றும் தள முகவரி மட்டுமே இருக்கிறது பதிவர்கள் விவரங்களைக் கொடுக்காவிட்டால் எப்படித் திரட்ட முடியும்?
போகட்டும் பிரபல எழுத்தாளர்களின்  பெயர்களுடன் அவர்களது தள முகவரியும் கொடுத்திருக்கிறார்கள்
(பத்திரிக்கைகளில் இவர்கள் படைப்பு வருவதால் பிரபல எழுத்தாளர்களாகிறார்களா) அதேபோல் பதிவர்கள் அனைவரது பெயர்களையும்  வலைத்தள முகவரியையும் கொடுத்திருக்கலாம் அல்லவா. இல்லையே ஏன் என்றால் பதிவர்கள் பிரபல எழுத்தாளர்கள் அல்லவே. எதற்கு இந்த தாழ்வு உணர்ச்சி. இன்னும் ஒன்று .கையேட்டில் எழுத்தாளர்கள் படிக்க வேண்டிய வலைத் தளங்கள் என்று சிலரது வலைப்பக்கங்களைப் பரிந்துரை செய்திருக்கிறார்கள்  அதற்கு என்ன தகுதியைக் கருத்தில் கொண்டிருக்கிறார்கள் கொடுக்கப்பட்டிருக்கும் வலைப் பக்கங்கள் எந்த விதத்தில் இந்த உரிமை பெறுகிறது மற்ற வலைப்பக்கங்கள்  மாற்றாந்தாய் பிள்ளைகள் இல்லையே  பதிவர் கையேட்டில் பதிய புகைப்படங்களைக் கேட்டிருந்தார்கள் பலர் அனுப்பி இருக்காமல் இருக்கலாம் ஆனால் அனுப்பியவர்களது படங்களையாவது வெளியிட்டிருக்கலாமே  ஒரு வரவேற்கத்தக்க விஷயமாக பதிவர் கையேடு சிந்திக்கப் பட்டது ஆனால் இன்னும்  சிறப்பாக இருந்திருக்கலாம் என்னும் ஆதங்கமே என் எழுத்து. யாரையும் குறை கூற அல்ல
புதுகை வலைப் பதிவர்  குழுவைச் சேர்ந்தவர்கள் ( தனபாலன் தவிர)சந்திப்பின் HOSTS போன்றவர்கள் வருகைதருபவர்களிடம் தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளவோ அறிமுகப் படுத்திிக் கொள்ளவோ இன்னும் முயற்சி எடுத்திிருக்கலாம் ( என்னிடம் எம் கீதாவும் வைகறையும் அறிமுகப் படுத்திக் கொண்டனர்) ஏனென்றால் புதுகைப் பதிவர்களின் எண்ணிக்கைதான்  அதிகம் இருந்தது சீருடையில் இருந்தோரை விழாக்குழுவினர்  என்று நினைக்கிறேன்  சில பதிவர்கள் வந்திருக்கின்றனரா  என்று கேட்டபோது  வருகைப் பதிவில் இருந்தோர் பட்டியல் பார்த்துப் பதில் சொன்னது மகிழ்ச்சியை அளித்தது           

தருமி கந்தசாமி. சீனா
  
என்மனைவி, நான் செல்லப்பா வைகறை?
  
 
பரிசு வழங்கள் Add caption
விழாமேடை
திருமதி ருக்மிணி சேஷாசாயி திருமதி ரஞ்சனி  நாராயணனுக்கான பரிசு பெறுகிறார் 

                              



49 comments:

  1. சொல்வதில் தவறில்லை. அப்போதுதானே அடுத்த சந்திப்பில் இதுபோன்ற குறைகளைக் களைய முடியும்? ஆமாம், அடுத்த சந்திப்பு எங்கே?

    ReplyDelete
  2. மிகச் சரியாக சொல்லவேண்டியதை
    சொல்லிச் சென்றது அருமை
    புதுகைப் பதிவர்களைப் பொருத்தவரை
    அவர்கள் அனைத்து விஷயங்களையும்
    குழுவினருடன் கலந்து பேசியும்
    பதிவுகள் மூலம் வந்த ஆலோசனைகளையும்
    முடிந்தவரை அமல்படுத்தவும் செய்தார்கள்
    என்பது என் கருத்து

    நீங்கள் சொல்லிச் சென்ற விஷயமும்
    நிச்சயம் கவனிக்கப் பட்டிருக்கவேண்டியதே.

    இப்போது கூட பின்னூட்டப் பதிவுகளையும்
    பதிவர் சந்திப்புப் பக்கத்தில் பதிவது
    அவர்களது வெளிப்படைத் தன்மைக்கு
    மற்றுமொரு எடுத்துக்காட்டாகக் கூடக் கொள்ளலாம்

    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  3. பாராட்டையும் குறைகளையும் தொடர் பதிவாக சொன்ன விதம் அருமை. தொடர்கிறேன்.

    ReplyDelete
  4. நமக்கு நிறையாகத் தோன்றுவது மற்றவருக்குக் குறையாகவும், அவர்களுக்கு நிறைவாகத் தோன்றுவது நமக்குக் குறையாகவும் தோன்றலாம். எப்படியோ இவ்வளவு தூரம் முயன்று செய்திருப்பதற்குப் பாராட்டத் தான் வேண்டும். எந்த நிகழ்விலும் ஒரு சில குறைகள் தவிர்க்க முடியாத ஒன்று!

    ReplyDelete
  5. புலி வருகிறது வருகிறது என்று வந்தே விட்டது.

    வந்ததோ புலி அல்ல எலி. உங்களை அளவுகோலாக வைத்து அளந்ததாலோ என்னவோ சரியான வழா வழா கொழ கொழாவாக அமைந்து விட்டது. எதிலும் உங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் தவிர்த்துக்கொண்டு விஷயங்களை பொதுவில் அலசினீர்கள் என்றால் பொதுப்பார்வை சித்தி கிடைத்துவிடும்.

    ஒரு பெரிய முயற்சியில் ஒவ்வொருவர் நோக்கில் ஓரிரண்டு தம்மாத்துண்டு சறுக்கல்கள் இருக்கலாம். ஆனால் அதுவே பொதுப்பார்வை என்றாகி விடாது. பொதுப்பார்வை என்பது விசாலமானது. பிர்மாண்டத்தை உள்ளடக்கியது. A to Z கணக்கில் எடுத்துக் கொண்டால் சின்ன சின்ன விஷயங்கள் பொருட்டாகவே தெரியாது. பட்ட சிரமங்களில் அமுங்கியே போய் விடும்.

    எந்த விழாவும் நடந்து முடிந்த பின் அதை நடத்தியவர்கள் பட்ட அனுபவங்கள் தாம் அடுத்த விழாவுக்கான உரம். நடந்த நிகழ்வுகளை அவர்கள் விவரிப்பது தான் உண்மையான ஸ்டாக் டேக்கிங்காக இருக்கும். ஆனால் விழாவை வெற்றிகரமாக நடத்திய மகிழ்ச்சியில் எல்லாமே நிறைவாகத் தெரியும் அவர்களுக்கு. அதுவே அடுத்த விழாவில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கான அச்சாரமாக அவர்களுக்கு அமையும். இது தான் பொதுப்பார்வை பெற்றோருக்கே வாய்த்த பொதுநல சித்தாந்தம்.

    தேர்களை இழுப்பவர்களின் தளறாத முயற்சிகளால் தான் தேர்கள் இழுக்கப்பட்டு நிலை சேர்கின்றன. தேர்களை இழுப்போரைப் பார்ப்பவர்களும் வடத்தைப் பிடித்து தங்கள் முயற்சியை அதில் பதிக்கும் பொழுது தேர் இழுப்பதின் சிரமம் தெரிகிறது. அத்தனை பேரின் பங்களிப்பில் லேசாக ஒரு குலுங்கு குலுங்கி தேர் அசைந்து நகரும் பொழுது அது அத்தனை பேரின் மகிழ்ச்சியும் ஆகிறது.

    இது ஆரம்ப ஸ்டேஜ். தவழும் பருவம். வலைப்பதிவர்களுக்கென்று மாநில அளவில் ஒரு அமைப்பு ஏற்படும் பொழுது அதற்கான ஆரம்பப் படிக்கட்டுகளைக் கட்டியவர்கள் சிந்திய வியர்வையின் சிறப்பு தெரியும்.

    ReplyDelete

  6. @ ஸ்ரீராம்
    நான் சொல்லியவை எல்லாம் குறைகளே அல்ல என்று நினைப்போரும் இருக்கலாம்.நான் எழுதிவது என் பார்வையில்தான் என்றும் கூற விரும்புகிறேன் அதை எப்படி யார் யார் எடுத்துக்கொள்கிறார்களோ அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது வருகைக்கு நன்றி ஸ்ரீ

    ReplyDelete
  7. பாராட்டையும் அதே நேரத்தில் குறையையும் தயங்காது சுட்டிக்காட்டி செல்லும் உங்கள் பாணி பிடித்திருக்கிறதுங்க ஐயா.
    கவிதை ஓவியத்தில் நானும் ஆவலுடன் சென்று ஏமார்ந்து வந்தேன் என்பதே உண்மை.

    விழாப்பணி அலைச்சலில் மறந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

    மிகச்சிறப்பாக விழாவை நடத்தி முடித்திருக்கிறார்கள் நாம் எதுவும் கேட்டு சங்கடப்படுத்தக்கூடாது என்றே நானும் எதையும் கேட்க வில்லை.

    எங்களைப்போன்ற பெண் பதிவர்கள் இது போன்ற விழாக்களுக்கு எவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவில் வருவோம் என்பது அனைவருக்கும் தெரியும்.

    ஒரு சின்ன ஆறுதல் என் கவிதையும் ஓவியமாக இருந்தது என்று படம் பிடித்து வந்து பதிவிடும் எண்ணம் அங்கு சென்றதும் மிகப்பெரிய ஏமாற்றத்தையே தந்தது.

    மற்றபடி இது என் எண்ணமே யாரையும் குறை சொல்லவில்லை.

    அடுத்த விழாவில் இதுபோன்றவற்றை தவிர்க்கவும் இந்த பின்னூட்டம்.

    (விழாக்குழுவினர் மன்னிக்க)

    ReplyDelete

  8. @ ரமணி
    /மிகச் சரியாக சொல்லவேண்டியதை
    சொல்லிச் சென்றது அருமை
    புதுகைப் பதிவர்களைப் பொருத்தவரை
    அவர்கள் அனைத்து விஷயங்களையும்
    குழுவினருடன் கலந்து பேசியும்
    பதிவுகள் மூலம் வந்த ஆலோசனைகளையும்
    முடிந்தவரை அமல்படுத்தவும் செய்தார்கள்
    என்பது என் கருத்து/ இதையும் நான் கவனிக்காமல் இல்லை இருந்தாலும்எந்த ஆலோசனை வந்தாலும் அதை ஏற்காமல் அதே சமயம் உதாசீனப் படுத்துவது பொல் அல்லாமல் செயல்பட்டனர் என்றே கூறி இருக்கிறேன்
    / இப்போது கூட பின்னூட்டப் பதிவுகளையும்
    பதிவர் சந்திப்புப் பக்கத்தில் பதிவது
    அவர்களது வெளிப்படைத் தன்மைக்கு
    மற்றுமொரு எடுத்துக்காட்டாகக் கூடக் கொள்ளலாம்/ நான் விமரிசனப் போட்டி பற்றி எழுதி இருந்தேன் அதை எங்கும் இணைக்கவில்லை. இதுவே நான் எழுதிய முன் வாக்கியத்துக்கு எடுத்துக்காட்டு குறைகள் என்று நான் குறிப்பிடுபவை சிலர் பார்வையில் குறைகளாகவே தெரியாமல் போகலாம் வருகைக்கு நன்றி ஐயா.



    ReplyDelete

  9. @ எஸ்பி செந்தில் குமார்
    வருகைக்கு நன்றி ஐயா குறை நிறை என்று இரண்டு பக்கங்களையும் கூறி இருக்கிறேன்

    ReplyDelete

  10. @ கீதா சாம்பசிவம்
    எந்த நிகழ்ச்சியிலும் குறைகள் தவிர்க்கப்பட முடியாதவை என்பது தெரிகிறது ஆனால் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும் வருகைக்கு நன்றிமேம் .

    ReplyDelete

  11. @ ஜீவி
    வருகைக்கும் க்ரிடிகல் பார்வைக்கும் நன்றி ஒரு விஷயம் பற்றிப் பேசப் படும்போது நம் அனுபவங்களை வைத்தே குறிப்பிட வேண்டி இருக்கிறது பொதுப் பார்வை என்பது வேறு உணர்ந்ததைச் சொல்வது என்பது வேறு வந்தது புலியா எலியா என்பொஅது சர்ச்சை அல்ல. பலரும் சொல்லத் தயங்கும் விஷயங்களை முன்னிலைப் படுத்தவே எழுதிய பதிவு.செய்தபணி இன்னும் சீராக இருந்திருக்கலாமோ என்பதே எழுத்தின் நோக்கம்அதற்காக நடந்த விழா எல்லாமே சரியில்லை என்று எப்போதும் சொல்லவில்லை. small things make perfection but perfection is no small thing என்று புரிந்தால் சரி.

    ReplyDelete

  12. @ சசிகலா
    /விழாப்பணி அலைச்சலில் மறந்திருப்பார்கள் என நினைக்கிறேன்/ அப்படி நான் நினைக்க வில்லை மேடம் அதைக் காட்டவே பரிமாறப்பட்ட அஞ்சல்களைச் சுட்டிக் காட்டி எழுதி இருக்கிறேன் எனக்கென்னவோ பதிவர்களை taken for granted என்றே நினைக்கப் பட்டதாகத் தெரிகிறது எனக்குக் குறை என்று படுவது பலருக்கு அவ்வாறு தெரியாமல் போகலாம் ஒரு மகத்தான விழாவை நடத்திச் செல்வது சுலபமானதல்லகுறைகள் நேர்ந்திருக்கின்றன அவற்றையும் இல்லாமல் செய்திருக்க முடியும் என்பதை காட்டுவதே பதிவின் நோக்கம் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மேம்

    ReplyDelete
  13. உங்களின் கவிதைகள் இரண்டையும் இரசித்தேன். வலைப்பதிவர் விழாவில் தாங்கள் சுட்டிக் காட்டிய சிறு குறைகள் அடுத்த விழாவில் அதுபோல் நடக்காதிருக்க உதவும். எப்படியிருப்பினும் திரு முத்து நிலவன் அவர்களின் சீரிய தலைமையில் விழாக்குழுவினர் இரவு பகல் பாராது உழைத்து தத்தம் பணிகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதற்காக அவர்களைப் பாராட்டுவோம்.

    ReplyDelete
  14. தங்களின் கருத்தை நிறைவையும், குறைகளையும் வெளிப்படையாக பகிர்ந்து உள்ளீர்கள் தங்களது கவிதை நன்று நான் இன்னும் கையேடு பார்க்கவில்லை.

    ReplyDelete

  15. @ வே.நடனசபாபதி
    திரு முத்து நிலவனையும் அவரது குழுவினரையும் நானும் பாராட்டி இருக்கிறேன் இந்தச் சிறிய குறைகள் அவர்கள் இன்னும் சிறிது கவனம் எடுத்திருக்கலாம் என்பதையே குறிக்கிறது

    ReplyDelete
  16. "கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்" என்று தனி லேபில் உருவாக்கப்பட்டு, இந்த பதிவு உட்பட தங்களின் அனைத்து பதிவுகளும் சேர்க்கப்பட்டு விட்டது அய்யா...

    இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/bloggersmeet2015.html

    நன்றி...

    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete

  17. @ கில்லர்ஜி
    நான் நினைத்ததை எழுதி இருக்கிறேன் இது ஒரு கருத்துப்பகிர்வே வருகைக்கு நன்றி

    ReplyDelete

  18. @ வலைப் பதிவர் சந்திப்பு 2015
    நன்றி தனபாலன்

    ReplyDelete
  19. ஐயா,
    மாதக் கணக்கில் உழைத்து, தங்களின் சொந்தப் பணத்தையும் போட்டு, தங்களின் சொந்த அலுவல்கள் அனைத்தையும் புறந் தள்ளி வைத்து விட்டு,ஒரு சந்திப்பித் திருவிழாவினை நடத்தியிருக்கிறார்கள்.
    வருகின்றேன் என்று பெயர் பதிந்த பதிவர்கள் பலரும் வரவில்லை,அவர்களும் வருவார்கள் என்று நம்பி, அவர்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அச்சிட்ட கையேடுகள், அவர்களுக்காக தைக்கப் பட்ட அன்பளிப்புப் பைகள், அவர்களுக்காகத் தயாரிக்கப் பட்ட உணவுகள் அனைத்தும் விரயமாகி விட்டன.
    அதற்கான செலவும் விரயம்.
    கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்களின் தலைமையில்,இருபதிற்கும் மேற்பட்டப் பதிவர்களின் உழைப்புதான் அன்றைய நிகழ்வு.

    பல விழாக்கள், மாநாடுகள், கருத்தரங்குகள், பேரணிகள் என அனைத்து வகையான விழாக்களையும் நடத்திய அனுபவம் எனக்கு உண்டு.
    குறைகள் சிறிதும் இல்லாத விழா என்று எந்த விழாவினையும் நடத்திட முடியாது என்பது என் கருத்து.
    ஏனெனில் ஒருவருக்குப் பிடித்தது, மற்றொருவருக்குப் பிடிக்காது.
    எனவே வலைப் பதிவர் திருவிழாவில் குறைகள் என்பதெல்லாம், புறந்தள்ள வேண்டியவையே.
    கவிஞர் முத்து நிலவன் தலைமையிலான குழுவினர் பாராட்டுதலுக்கு உரியவர்கள்
    பாராட்டுவோம்
    ஐயா, தங்களுக்கு ஓர் வேண்டுகோள், இப்பதிவின் தொடக்கத்தில் தாங்கள் வைத்திருக்கும் படத்தின் அர்த்தம் புரியவில்லை .
    அப்படத்தினை நீக்குவீர்களேயானால் மகிழ்வேன்
    இது ஒரு அன்பு வேண்டுகோள்
    நன்றி ஐயா

    ReplyDelete

  20. @ கரந்தை ஜெயக்குமார்
    ஐயா நீங்கள் என் பதிவைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லைஇதனை ஒரு ஸ்டாக் டேக்கிங் முயற்சி என்று தெரிந்து கொள்ள வேண்டும் நானும் திரு முத்து நிலவனையும் வலைப்பதிவர் குழுவினையும் பாராட்டுகிறேன் ஆனால் சிறு குறைகள் இருந்தால் அதைச் சொல்வதும் முறை என்றே எண்ணுகிறேன் . எனக்கு சில காணொளிகளும் படங்களும் வருகின்றன. அவற்றை பலரும் பார்க்கும் விதத்தில் பகிர்கிறேன் சென்ற பதிவில் ஒரு காணொளி இப்பதிவில் ஒரு படம் கேரளத்தில் ஒரு இடத்தில் ஓணம் அன்று குரங்குகளுக்கு விருந்து படைப்பதை அவை ஒழுங்காக உண்பதுதான் படம் விசேஷமாக அர்த்தம் தேட வேண்டாம் என்று வேண்டுகிறேன் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  21. தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டது நன்று. இப்படி விழாக்கள் நடத்தும்போது சில தவறுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. அடுத்த சந்திப்பில் தவறுகள் நேராது பார்த்துக்கொள்ள இப்படிச் சுட்டிக் காட்டுவது வழி தரும்.

    ReplyDelete
  22. கருத்து நன்றுதான் ,அதற்கு உரியவர்கள் பதில் சொன்னால் நன்றாக இருக்கும் :)

    ReplyDelete
  23. தங்களது கருத்துக்களைக் கூறுவதில் தவறில்லை ஐயா...
    தாங்கள் விழாவுக்குச் சென்று வந்தீர்கள் அங்கு நிறை குறை எல்லாம் இருக்கலாம்...
    அதைப் பகிர்ந்தால்தான் அடுத்தடுத்த விழாக்களில் குறைகளைத் தவிர்க்கலாம்.

    நானும் சில கவிதைகள் அனுப்பினேன்... விவரம் தெரியவில்லை.

    கையேடு இப்போது பார்க்கும் வாய்ப்பில்லை...

    சிறப்பான விழாக்களில் சில தவறுகள் இருக்கத்தான் செய்யும்... இதை பொதுப்பார்வை கொண்டோ தனிப்பார்வை கொண்டோ பார்க்க வேண்டியதில்லை...

    பலர் சொல்லத் தயங்குவார்கள்... தாங்கள் மனதில்பட்டதை சொல்லியிருக்கிறீர்கள்...

    இது போன்ற நிறை குறைகளைத்தான் விழாவை நிகழ்த்திய நம் உறவுகளும் தெரிந்து கொள்ள ஆசைப்படுவார்கள்.

    பதிவுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete

  24. @ வெங்கட் நாகராஜ்
    என் மனதில் பட்டவற்றை எடுத்துக் காட்டி இருக்கிறேன் குறைகள் இருப்பது சகஜம் என்பது போல் தோன்றினாலும் எடுத்துக் காட்டுவது சகஜமில்லை என்று பலரும் நினைக்கிறார்கள் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  25. @ பகவான் ஜி
    கருத்துக்குப் பதில்தான் பலரும் சொல்கிறார்களே. இம்மாதிரி விழாவில் குறைகள் இருக்கத்தான் செய்யும் என்று யாரும் நான் சொல்லும் குறைகளின் மாக்னிட்யூடினைக் குறிப்பிடுவது இல்லை. வருகைக்கு நன்றி ஜி.

    ReplyDelete

  26. @ பரிவை சே குமார்
    இது வரை வந்த பின்னூட்டங்களில் என் பார்வை தனிப்பட்ட முறை என்னும் குறை தெரிகிறது என்று கருத்து இருக்கிறது பதிவர் கையேட்டில் காண்பதில் தனிப்பட்ட முறையில் எனக்கு என்ன நஷ்டம் புரியவில்லை. வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  27. வழக்கம்போல தங்கள் பாணியில் நிகழ்வுகளைப் பதிந்துள்ளீர்கள். அதிக எண்ணிக்கையிலான நண்பர்களை ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் சந்திக்கும்போது சிலருடன் முழுமையாக பேசமுடியாமல்கூட போய்விடுகிறது. அது ஒரு குறையாகவே தெரிந்தது.

    ReplyDelete

  28. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  29. நாம் அனைவரும் பதிவர் குடும்பம் என்றே நான் நினைப்பதால் குறைகள் சொன்னால் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டோம்தானே? அடுத்து வரும் நிகழ்வுகளில் தவற்றைத் திருத்திக்கொண்டு இன்னும் நன்றாக செயல்படமாட்டோமா என்ன?

    பதிவர் கையேடுக்கு நானும் தகவல் அனுப்பி இருந்தேன். என் தள முகவரி கையேட்டில் இருக்கிறதா என்று தெரியவில்லை.

    ReplyDelete

  30. @ துளசி கோபால்
    உங்களைப்போல் பெருந்தன்மை எல்லோருக்கும் இருந்தால் நல்லது பதிவர் கையேட்டில் உங்கள் பெயர் தள முகவரி, மின் அஞ்சல் முகவரி எல்லாம் இருக்கிறது பக்கம்109, வரிசை எண் 291 ஊர் நியூ சிலாந்து . வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete
  31. ஆஹா..... துளசிதளம் இருப்பதை அறிந்து மகிழ்ச்சி!

    தகவலுக்கு நன்றிகள்.

    ReplyDelete

  32. துளசி கோபால்

    என்ன கொஞ்சம் தேட வேண்டும் அவ்வளவே

    ReplyDelete
  33. ஐயோ...சிரமம் கொடுத்துட்டேனா? மன்னிக்கணும்.

    ReplyDelete
  34. The monkey picture is offensive. Your note that it does not pertain to the post is meaningless. If so why publish it? It is a mockery on all those who ate food at the meeting.

    ReplyDelete
  35. @ டாக்டர் கந்தசாமி
    IT IS NOT MEANT TO OFFEND ANYONE. I ALSO PARTOOK THE FOOD THERE. MY WORD SHOULD BE TAKEN கரந்தையாருக்குக் கொடுத்த பதிலைப் பாருங்கள் நினைக்காத ஒன்றை சொல்லக் கூடாது.

    ReplyDelete
  36. அய்யா வணக்கம். தாமத வருகைக் மன்னியுங்கள். தங்களின் பதிவில் கண்டுள்ள குறைகள் அதை்தும் எங்கள் குழுவின் -அனுபவக் குறைபாடுகளால் நேர்ந்த - தவறுகள்தான் அய்யா. சுட்டிக்காட்டியமைக்கு, நண்பர் பரிவை சே.குமார் அவர்கள் சொன்னது போல எங்களுக்குப் பயன்படக்கூடிய -களைந்திருக்க வேண்டிய - குறைபாடுகள் என்று புரிந்து அடுத்த நிகழ்விற்கு இவற்றை நிச்சயமாகக் களைய கவனத்திற் கொள்வோம்.
    (1) தாங்கள் மட்டுமல்லாமல் தங்கை சசி, குமார் உள்ளிட்ட பதிவர் பலரும் தங்கள் கவிதைகளை ஓவியங்களாக்கி இருப்பார்கள் என்னும் எதிர்பார்ப்போடு வந்து ஏமாற்றமடைந்த நிகழ்வாக “பதிவர் ஓவியக் கண்காட்சி” அமைந்ததற்கு பொறுப்பேற்று மன்னிப்பைக் கோருகிறோம் . நடந்தது என்னவெனில், அப்படியான கவிதைகளைப் பதிவர்களின் பக்கங்களில் போய்த் தேடித்தேடி எடுத்துப் பலமுறை மின்னஞ்சல்வழியே பகிர்ந்துகொண்ட தங்கை மைதிலி, கவிஞர் வைகறையின் கருத்துகளை நம் ஓவியர்கள் -அல்லது ஓவியர்கள் சார்பாக அவற்றை எடுத்து ஓவியர்களிடம் தந்த- குழு, சரியாகப் புரிந்துகொள்ள வில்லை. நான் பலமுறை “வரும் பதிவர்கள் தங்கள் கவிதைகளை ஓவியமாகத் தேடுவார்கள் என்பதை கவனத்தில் கொண்டு ஓவியங்களைத் தீ்ட்டுங்கள. அப்படியே நல்ல பிற கவிதைகளையும் பயன்படுத்தி, ஓவியங்களைப் பதிவரல்லாத பிறரும் ரசிப்பதுபோல அமையுங்கள், எல்லாவற்றையும் முடித்து முன்னரே அனுப்பினால் இந்தக் குறைகள் இன்றி, வருவோரை திருப்திப் படுத்தலாம். இல்லாவிடில் தம் கவிதைக்கான ஓவியங்களைத் தேடும் பதிவர் மிகுந்த அதிருப்தி அடைவர்” என்று முன்னரே தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தும், அது நடக்கவில்லை. இவ்வளவு ஏன்? கவிதைகளைத் தேடிக்கொடுத்த மைதிலியின் கவிதை ஒன்று கூட இல்லை எனில் மற்றவற்றை என்ன சொல்ல? இதுதான் நடந்தது. மன்னிக்க.
    (2) கையேடு தொடர்பாக, 21-09-2015க்குள் பதிவர் குறிப்புகளை அனுப்பக் கேட்டிருந்தோம். அன்றுவரை வந்திருந்த பதிவர் குறிப்புகள் வெறும் 100க்குள் தான்! என்ன செய்வது? நாள் நீட்டித்து, கடைசிவரை (5-10-2015வரை) வந்த 331தகவல்களை கையேட்டில் இடுவதற்கேற்ப அமைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. 10,15பேர் தம்மைப் பற்றிய குறிப்புகளை 6முதல் 10பக்கம் வரை அனுப்பியிருக்க, சுமார் 75பேர் எந்தக் குறிப்பையுமே அனுப்பாமல் தமது வலைப்பக்கப் பெயரை மட்டும் அனுப்பிவிட்டு கம்மென்று இருந்துவிட்டார்கள் யுஆர்எல் தேடியே எங்கள் கையேட்டுக்குழு களைத்துப் போனது! பிறகு இவற்றையெல்லாம் தொகுத்து, அகர நிரல்படி அமைக்க தேதி 05-10-2015 ஆகிவிட்டது. அச்சகத்தில் அடுததநாள் கொடுத்தாலன்றி விழாவுக்கு கையேடு வராமலே போய்விடும் அபாயம் எங்களை அச்சுறுத்தியது. எனவே, எழுத்துப் பிழைகளோடும், தகவல் குறைவு மற்றும் அகரநிரல் இல்லாத கையேட்டை அழகுபடுத்தி மட்டுமே வெளியிட நேர்ந்தது. இவற்றையெல்லாம் எனது முன்னுரையில் கோடிட்டுக் காட்டியிருப்பேன் பாருங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக கரந்தையார் சொன்னதுபோல வராத பதிவர்கள்தான் எங்களை மிகவும் சோதித்துவிட்டார்கள். வந்தவர்கள், நிதி தந்தவர்கள் மற்றும் தங்களைப் போலும் பதிவுகளிட்டு உற்சாகப் படுத்தியவர்கள் சொல்லும் குறைகள் எங்கள் அலட்சியத்தால் நேர்ந்ததல்ல அதில் நாங்கள் எவ்வளவோ கவனமாக இருந்தும் இயலாமையால் நேர்ந்த பிழைகள் என்று புரிந்துகொண்டு மன்னித்து, எனது விளக்கங்களை ஏற்க வேண்டுகிறேன். இந்த விளக்கங்களைத் தர வாய்ப்பளித்த தங்கள் பதிவை நான் மிகவும் மதிக்கிறேன். இந்த தங்கள் விமர்சனத்தைத்தான் நாங்கள் கன்ஸ்ட்ரக்டிவ் கிரிட்டிசிசம் என்று மகிழ்கிறோம். நன்றி

    ReplyDelete
  37. அப்புறம், “தொடர்பில்லாத கருத்துகளைத் தொடர்பு படுத்தும்” அந்த முகப்புக் குரங்குப் படததை எடுத்துவிடலாம் என்னும் முனைவர் கந்தசாமி மற்றும் கரந்தையார் கருத்தே என்கருத்தும். அன்பு கூர்ந்து எடுத்துவிட்டு வேறு பொருத்தமான படத்தைப் போடுங்கள்.

    ReplyDelete
  38. வணக்கம் அய்யா
    நலமா?நீங்கள் கூறிய நிறை குறைகளை ஏற்கிறோம்...குறைகள் அனைத்தும் எங்களை மீறி நடந்த செயல்..மேலும் சரியான விவரங்கள் கையேட்டுக்கு கிடைப்பதில் தாமதம்....இருப்பினும் தங்களின் கவிதைகள் ஓவியமாக வராமைக்கு வருந்துகின்றோம்.....எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை..அதனால் வந்த குறைகள்...அடுத்த விழாவில் இக்குறைகள் களையப்படட்டும்...எங்களாலான உதவிகளை செய்கின்றோம்..நன்றி...அய்யா

    ReplyDelete
  39. @ முத்து நிலவன்
    ஐயா நான் கருத்துக்களை எழுதியதன் நோக்கமே குறைகளை காண அல்ல. இருப்பினும் குறையே இல்லை என்று சொல்லிச் செல்லவும் விரும்பவில்லை முத்து நிலவன் தலைமையிலான குழு இரவுபகல் பாராமல் பணி செய்து இருக்கும் போது சிறு குறைகள் ஆக இருந்தாலும் சுட்டிக்காட்டுவது என் தார்மீகப் பொறுப்பு என்று தோன்றியது small things make perfection but perfection is no small thing என்பார்கள் . இன்னும் சிறு கவனம் விழாவை முழுவது நிறைவாகக் காட்டி இருக்கும் கையேட்டில் பதிவர் பற்றிய விவரங்களை அகர நிரலியில் வெளியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்பது தேடும்போதுதான் தெரிய வருகிறது. பதிவர்களை தள முகவரி மூலமோ பெயர் மூலமாகவோதான் தெரியவருகிறது. இன்னார் இந்த ஊரைச் சேர்ந்தவர் என்னும் தகவல் மிகவும் சொற்பமேநான் எழுதியவற்றை ஒரு கன்ஸ்ட்ரக்டிவ் கிரிடிசிசம் ஆக எடுத்துக் கொள்வதாக நினைப்பது நிறைவைத்தருகிறது. என் பதிவு யார் மனதையும் நோகடிக்க
    அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன் பின்னூட்டத்துக்கு நன்றி ஐயா
    எழுத்தாளர்கள் படிக்க வேண்டிய வலைப் பக்கங்களை தேர்ந்தெடுக்க கையாண்ட அளவுக்கோல் புரிபடாத ஒன்று அதுபற்றி ஏதும் கூற வில்லையே

    ReplyDelete

  40. @ முத்து நிலவன்
    நீங்களே தொடர்பு இல்லாத கருத்துக்கள் என்று கூறி இருக்கிறீர். அதன் பின்புலம் பற்றி கரந்தையாருக்கு மறு மொழி கொடுத்திருக்கிறேன் நான் நினைத்தும் பார்க்காத ஒன்று சிலர் மனதில் தோன்றினால் அது அவர்கள் கற்பனை வளத்தையே குறிக்கும் பதிவிட்ட என் சொல் நம்பப்பட வேண்டும் நன்றி

    ReplyDelete
  41. @ எம் கீதா
    நான் சுட்டிக்காட்டி இருக்கும் சிறு குறைகளில் கவிதைக்கு ஓவியமும் ஒன்று. நான் வலைப்பதிவர் குழுவுடன் நடத்திய அஞ்சல் போக்கு வரத்தையும் வெளியிட்டிருக்கிறேன் கூறப்பட்ட குறைகள் என்னென்ன என்பதையும் அது பற்றி எழும் எண்ணங்கள் எல்லாம் பூர்த்தியாக இல்லை என்றே தோன்றுகிறது விழா நாள் நடை பெற்ற நிகழ்வுகள் குரித்து நான் குறை ஏதும் கூறவில்லையே வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete
  42. @பழனி கந்தசாமி ஐயா
    கடிந்து கொள்வதற்கு மட்டும் தமிழுக்கு விலக்கு அளித்த உங்கள் நாகரிகம் நாங்கள் பின்பற்ற வேண்டிய ஒன்று.

    ReplyDelete
  43. அய்யா உங்கள் விமர்சனத்தை நீங்கள் முன் வைக்கிறீர்கள். ஆனாலும், மேலே, மற்றவர்கள் சொல்வது போல … … அந்த குரங்குகளின் ‘பந்தி போஜனம்” சற்று நெருடல்தான் அய்யா. ஒரு பதிவர் விரும்பவில்லை என்பதற்காக, நீங்கள் உங்கள் பதிவில் போட்ட அவரது போட்டோவை நீக்கவில்லையா?

    கடந்த இரண்டு நாட்களாக உங்கள் வலைப்பக்கம் வந்து படித்ததோடு சரி. கருத்துரை தர இயலாமல் போய்விட்டது.( வெளி வேலைகள்தான் காரணம்)

    ReplyDelete

  44. @ ராஜ்குமார் ரவி
    நமக்கும் ஆங்கிலம் கொஞ்சம் தெரியும் இல்ல வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  45. @ தி தமிழ் இளங்கோ
    வருகைக்கு நன்றி ஐயா. குரங்குகளின் பந்தி போஜனம் புகைப்படம் அரிதாகப் பட்டது எனக்கு பகிர்ந்து கொண்டேன் அவ்வளவுதான் இல்லாத அர்த்தம் கற்பிப்பது அதீதக் கற்பனையே. புகைப்படம் பதிவில் வர விரும்பாதவர் படத்தை நீக்கினேன் இன்னொரு படத்தைப் பதிவிடவும் இல்லை. ஏன் என்றால் இது அவர்கள் சம்பந்தப்பட்டது/ ஆனால் இந்தப் புகைப்படம் அப்படி இல்லையே மீண்டும் நன்றி.

    ReplyDelete
  46. அன்பு வலைப்பதிவர்களின் அன்பு வேண்டுகோளினை ஏற்று, அந்த குரங்குகளின் ‘பந்தி போஜனம்” படத்தை நீக்கியமைக்கு நன்றி. அப்படி அந்த படத்தில், தனியாக ஏதேனும் விஷேசம் இருக்குமானால், அது பற்றியும் மற்ற தகவல்களையும் சேர்த்து , அந்த படத்தோடு தனியாக ஒரு பதிவை (இப்போது வேண்டாம்; சில நாட்கள் சென்றபின்,) எழுதவும். மீண்டும் நன்றி.

    ReplyDelete

  47. @ தி தமிழ் இளங்கோ
    தொடர்பில்லா தொடர்புகளை தொடர்பு படுத்தும் பதிவர்களின் வேண்டு கோளுக்கு இணங்கி நான் புகைப்படத்தை அப்புறப்படுத்தவில்லை. வீண்சர்ச்சைகளும் சங்கடங்களும் தடுக்கவே நான் என் விருப்பப்படி நீக்கினேன் என் பதிவில் நான் செய்ய வேண்டியதை நிர்ணயிப்பவன் நானே சம்பந்தப் பட்டவர்கள் புரிந்து கொண்டால் சரி வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete