Friday, December 4, 2015

ரெய்ன் ரெய்ன் கோ அவே..........


                                                        ரெய்ன் ரெய்ன் கோ அவே
                                                         ---------------------------------------


தமிழகத்தில் குறிப்பாகச் சென்னையில் மழை பற்றி நிமிடத்துக்கு ஒரு செய்தி தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கிறது பலரும் சென்னை நீரில் மிதக்கிறது என்று எழுதுகிறார்கள்எனக்கு என்னவோ மனம் ஆறவில்லை. நான் சில நாட்கள் தங்கி இருந்த சென்னை வேளச்சேரிஅடுக்குமாடிக் குடி இருப்பு இருக்கும்  100 அடி சாலையே நீரில் மூழ்கி இருப்பதாக என் மகன் கூறுகிறான் தனிப்பட்ட முறையில்  தினசரி அவர்கள் செய்யும் காரியங்களுக்கு பாதிப்பு ஏதும்இல்லாமல் இல்லை. மின்சாரம் கிடையு  டீசில் ஜெனெரேட்டர் ஓட்டுவில் சிரம் ொடர்பு சங்கள் இயக்குடியில்ல என்றாலும் சுற்றி நிகழும் சம்பவங்களில் மனம் செல்லாமல் இருக்க முடிவதில்லை. நாம் தொலைக்காட்சிகளில் காணும் விஷயங்கள் பொதுவான நிலையைக் கூறுவதாக இருக்கிறது. அடுக்கு மாடி குடியிருப்புகள் அல்லாமல் இருக்கும் தனி வீடுகளில் வசிப்போர் நிலைமை நினைத்துப் பார்க்கக் கூட முடிவதில்லை. இத்தனை அளவு மழை  இதுவரை பெய்திராத அளவு என்றெல்லாம் செய்திகள் வந்தாலும்  பொது மக்களின் நிலையை அவை எடுத்துக் கூறுவதாக இல்லை. ஏரிகளில் நிரம்பும் உபரி நீரை கூவத்திலும்  அடையாற்றிலும் வெளியேற்றுகிறார்கள். ஆற்றின் கரைகளில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பான முகாம்களுக்குஅனுப்பப்பட்டு தங்க வைக்கப் படுகிறார்கள். ஒரு வகையில் அவர்கள் எதிர்பார்ப்பதும் இதுதான். நினைத்த மாத்திரத்தில்வேறு இடத்துக்குக் குடிபோகத் தயாராய் இருப்பவர்கள்பலரும் ஏழைமக்கள் . ஆனால் இந்த நடுத்தரமக்கள்  தனி வீடுகளில் இருப்பவர்கள் வீட்டில் வெள்ளம் வந்து அவதிப்படுபவர்கள் நிலை பரிதாபத்துக்கு  உரியது. ஒரு முறை தொலைக்காட்சி செய்தியில்பார்த்தேன்  அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர விரும்பாமல் எல்லா இன்னல்களையும் அனுபவிக்கத் தயாராய் இருந்தார்கள்(அப்பு வெள்ளிின் கொடுமை இத்தனை  இருக்கில்லை).
மனிதனுக்கு முக்கியமாக வேண்டியது காலைக் கடன்கள் கழிப்பது . வயிற்றுக்குப் பசி எடுக்கும் போது உண்ணுவது  வேலை செய்து நாளின் முடிவில் உடலைச் சாய்த்து உறங்குவது. இந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் வெள்ளம் சூழ்ந்தும்  வீட்டுக்குளேயே வந்தும் இருந்தால்…………..நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. பாதுகாப்பான இடத்துக்கு இவர்களைப் போக விடாமல் தடுப்பது எது.?.இவர்கள் ஆயுசுகாலம் சேமித்து வைத்த பொருட்களின் பாதுகாப்பு….? ஏனென்றால் எரிகிற வீட்டில் கொள்ளி பிடுங்கும் மனிதர்களும் இருக்கிறார்களே  என் மனம் இவர்களுக்காக வேதனைப் படுகிறது. இந்தமாதிரியான நேரங்களில் வீட்டில் யாருக்காவது உடல் நலம் குன்றி விட்டால் இவர்கள் மனம் என்ன பாடுபடும் . இவர்களால்  என்ன செய்ய முடியும்?
தொலைகாட்சி செய்திகளில் பலரும் தங்களது ஆற்றாமையைக் கொட்டித்தீர்க்கிறார்கள் யாரும் வந்து எதையும் செய்வதில்லை என்று புலம்புகிறார்கள் யார் வந்து என்னதான் செய்ய முடியும்  உயிர் பாதுகாப்பாக முகாம்களுக்கு அனுப்பலாம். ஆனால் இவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்  பலரையும் பாது காப்பான இடத்துக்குக் கூட்டிப் போக நாட்கள் ஆகிவிடும் அதுவரை சொல்லொணாத்துயரை அனுபவிக்க வேண்டியதுதானா.

என்னதான் சொன்னாலும் செய்தாலும் இயற்கையின் சீற்றத்துக்கு முன் மனிதன்  எம்மாத்திரம்?பூமி நடுங்கி பேரிடர் ஏற்பட்டபோதும்  பேரலைகளால் தாக்கப் பட்ட போதும் புயல் வீசி சேதங்கள் ஏற்பட்டபோதும்  மனிதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. முடிந்தபின் மீண்டும் புனர்ப் பணிகளில்

ஈடுபடுவதை விட என்ன செய்ய முடியும்  இவற்றை வருமுன்  தடுக்க இயலாது
கணவனைத் தவிர வேறு தெய்வங்களைத் தொழாத பத்தினிப் பெண்டிர்  பெய் என்று சொன்னால் பெய்யும் மழை. என்பதெல்லாம் படிக்க இன்பம் பயக்கலாம்  அதே பெண்டிர் நில் எனச் சொன்னால் மழை நிற்குமா. நீரும் காற்றும் நெருப்பும் சீறத்தொடங்கினால் நாம் ஒன்றும் செய்ய முடியாது( சீறும் புயலும் மழையும் சேர்ந்தால் சின்னக் குடை தாங்காது. அதனால் துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே சோகம் பொல்லாது பழைய பாட்டு நினைவுக்கு வருகிறது). கதைகளில் வேண்டுமானால் கண்ணன் மலையைத் தூக்கி மக்களை மழையிலிருந்து காக்கலாம்


நமது அனுபவங்களிலிருந்து நாம் கற்க வேண்டியது நிறையவே இருக்கிறது இயற்கையின் சீற்றம் மிகக் குறைந்த அளவு பாதிப்பு ஏற்படுத்துமாறு செய்யலாம் . இதெல்லாம் தெரியாதவர்களா நாம். எல்லாவற்றுக்கும் பொதுவாக  விதி என்று சமாதானப் படுத்திக் கொண்டு  கிருஷ்ணா ராமா  என்று ஜபித்துக் கொண்டு சமாதான மடையலாம் ஆனால் அதை அனுபவிப்பவருக்குத்தானே அதன் கொடுமை புரியும்
( நமது வலை பதிவர்கள் பலரும் சென்னையில் வசிப்பவர்கள் அவர்கள் பொதுவாக சென்னை மிதக்கிறது என்று சொல்லிப் போவதை விட இடர்களை எப்படி சமாளிக்கிறார்கள் என்று எழுதலாமே நான் எழுதுவது நெருப்பு சுடும் என்பதைச் சொல்வது போல் இருக்கிறது.  உங்கள் அனுபவம் பற்றி எழுதுங்களேன்)
என் மகன் வீட்டில்  இருந்த என் மச்சினனை என் மகன்  நேற்று  ஆலந்தூர் வரைக் காரில் கொண்டு விட அவன் அங்கிருந்து கோயெம்பேடு சென்று ஹொசூர் வரை செல்லும் ஒரு பேரூந்தில் ஏறி அங்கிருந்து வேறு ஒரு பஸ்ஸில்  இன்று அதிகாலை பெங்களூரு வந்து சேர்ந்தான்  மழை சற்றே குறைந்திருக்கிறது சீக்கிரமே சகஜ நிலைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்
ஒரு செய்தி. சென்னையில் இருந்து ஓசூர் வருவதற்கு தனியார் பேரூந்தில் தலைக்கு ரூ1500-/ வசூலித்தார்களாம் ஏடிஎம் பல இடங்களில் வேலைசெய்யாததால் பஸ் கட்டணத்தைப் பெரிய மனது பண்ணி தவணை முறையில் வசூலித்தார்களாம் ஆம்பூரில் ஏடிஎம்மில் பணம் எடுத்துப் பலரும் கட்டணம் செலுத்தினார்களாம் இதை நான் தட்டச்சு செய்யும்போது என் மகன் சென்னையில் மீண்டும் மழை என்று தொலைபேசினான்  37 comments:

 1. மீண்டும் மழை... நினைக்கும் போதே மனம் பதறுகிறது...

  ReplyDelete
 2. நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது ஐயா

  ReplyDelete
 3. ஆம் ஐயா இந்த வேதனை போதாதென்று திருடர்களும் தங்களது கைவரிசையை காட்டுகின்றார்களாம்.

  ஐயா எழுத்து சில இடங்களில் குழப்பமாக உள்ளது கவனிக்கவும்.

  ReplyDelete
 4. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கடும் விலைக்கு பொருட்களை விற்பதாகவும் ஆளில்லாத வீடுகளை உடைத்து பொருட்களைத் திருடுவதாகவும் செய்திகள் வருகின்றன..

  என்ன கொடுமை.. இதுவும் இயல்பு போலும் மனித வடிவிலுள்ள அரக்கர்களுக்கு..

  விரைவில் இயல்பு நிலை திரும்பவேண்டும்..

  ReplyDelete
 5. வணக்கம்
  ஐயா
  எல்லாம் இறைவன் துணை....
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 6. சென்னைவாசிகளின் நிலையை நினைத்து என்னால் சரிவரத் தூங்க முடியவில்லை. இன்னும் மழை பெய்கிறது என்றால் சோதனைதான்.

  ReplyDelete
 7. சென்னை நிகழ்வு சோதனைமேல் சோதனை என்றளவில் தொடர்கிறது. இயல்பு நிலை திரும்ப பிரார்த்திப்போம்.
  பௌத்த சுவட்டைத்தேடி 23 ஆண்டு களப்பணியில் கண்ட 29 சிலைகளைக்காண அழைக்கிறேன். http://www.ponnibuddha.blogspot.com/2015/12/23-29_4.html

  ReplyDelete
 8. மழை குறைந்திருப்பதாகவே சொல்கின்றனர். என் சகோதரர்கள் குடும்பம், நாத்தனார் குடும்பம், சித்திகள் குடும்பம், மற்றும் தந்தை வழி, தாய்வழிச் சகோதர, சகோதரிகளின் குடும்பங்கள் அனைத்துமே இந்த மழையால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. எவரையும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

  எங்கள் ப்ளாக் ஶ்ரீராம் இருமுறை தொடர்பு கொண்டு பேசினார். அவர்கள் குடும்பமே கலங்கிப் போய் இருப்பதை அவர் பேச்சின் மூலம் தெரிந்து கொண்டேன். என்றாலும் அவர் வீட்டிலிருந்து கிளம்பி வேறு பாதுகாப்பான இடத்திற்குச் சென்றிருக்கின்றனர். விரைவில் எல்லாம் சரியாக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 9. எப்படியோ இந்த தருணத்தில் வெள்ளத்தில் நீங்கள் சிக்கிக் கொள்ளவில்லை. சென்னையில் உள்ள பதிவர்களுடன் செல்போனில் தொடர்பு கொள்ள இயலவில்லை. மின்சார இணைப்பு வீடுகளுக்கு வந்தால்தான் எல்லாமே சாத்தியம் போலிருக்கிறது. தரைக்கடியில் அமைத்த மின்சார கேபிள் முறையில் எங்கோ கோட்டை விட்டு விட்டார்கள் என்று நினைக்கிறேன். ’வால்மார்ட் கொள்ளையர்கள்’ என்று சொன்னவர்கள் இப்போது சென்னையில் அடிக்கும் கொள்ளைக்கு அளவே இல்லை.

  ReplyDelete
 10. @தி.தமிழ் இளங்கோ அவர்களே, தரைக்கு அடியில் அமைத்த கேபிள்கள் முழுவதும் நீரில் மூழ்கி இருக்கின்றன! அவற்றைப் பழுது நீக்க நேரம் ஆகும். கொஞ்சமானும் வெயில் வர வேண்டும். தோண்டுகையில் நீர் ஊற ஆரம்பித்தால் மேலும் பிரச்னை! கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அவ்வளவு விரைவில் முடியாது என்பது நமக்கே புரியும் அல்லவா? மற்றபடி அத்தியாவசியப் பண்டங்கள் விஷயத்தில் கொள்ளை தான் அடிக்கின்றனர். இது நம் மக்களின் கொள்கையாகவே மாறி விட்டது! அதோடு நிவாரணப்பணிகளுக்கான பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை வழிமறித்து அரசியல்கட்சிகளின் பானரை வைக்க வேண்டும் என வற்புறுத்தல் வேறு என்கின்றனர். இந்தச் சமயத்தில் கூட அரசியல் செய்யும் மனிதர்கள்! :(

  ReplyDelete
 11. @ கீதாசாம்பசிவம் அவர்களுக்கு.
  அம்மா நான் - // தரைக்கடியில் அமைத்த மின்சார கேபிள் முறையில் எங்கோ கோட்டை விட்டு விட்டார்கள் என்று நினைக்கிறேன்.// என்று சொல்ல வந்தது, மழை, வெயில், தீவிபத்து போன்றவற்றை எதிர்பார்த்து, எதிர்கால பாதுகாப்பு எச்சரிக்கையோடு, உடனுக்குடன் சரி செய்யும்படி, அவர்கள் கேபிள் முறையை அமைத்து இருக்க வேண்டும் என்பதுதான். பிறநாடுகளில் பேரிடரின் போது இதுபோல் மின்சாரம் பலநாட்கள் தடைபட்டதாகத் தெரியவில்லை. (உதாரணம் ஜப்பான்) சென்னையில் இனி எப்போது மழை விடும்? எப்போது தரை காயும்? மக்களுக்கு மின்சாரம் கிடைக்க என்ன மாற்று திட்டம்? என்பதெல்லாம் யோசிக்க வேண்டிய ஒன்று.

  ReplyDelete
 12. பரிதாப நிலையில் மக்களைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது.

  ReplyDelete
 13. வெள்ளம் பற்றிய எந்த செய்தியும்
  கவலையாகத்தான் இருக்கிறது.

  ReplyDelete
 14. @தமிழ் இளங்கோ ஐயா, அமெரிக்கக் கண்டத்தில் உள்ள யு.எஸ்ஸிலும் கடும் பனிப்புயல், கடும் மழை, புயலில் மின்சாரம் போவது உண்டு. டொர்னடோ என்னும் புழுதிப் புயல் சமயம் நாங்களே அந்த அனுபவம் பெற்றிருக்கிறோம். அதோடு சென்னை மின் பகிர்மானக் கழகம் அண்ணாசாலை எனப்படும் மவுன்ட்ரோடில் உள்ளது. அது முழுவதும் நீரால் சூழப்பட்டு மெல்ல மெல்ல வடிந்து வருகிறது. இந்த மின்பகிர்மானக் கழகம் தான் மின்சாரங்களைப் பகிர்ந்து பிரிந்து அளிக்கும் இடம். இங்கே நீர் வடிய வேண்டும் என்பதும் முக்கியம். மேலும் பல இடங்களில் பல தெருக்களில் நீர் வடியவில்லை. மின்சாரம் கொடுத்தாலும் அதில் ஏதேனும் கசிவு இருந்தால் உயிரிழப்பு நேரிடலாம். அதற்கும் நாம் அரசைத் தான்குறை சொல்வோம். நேற்று மின்வாரியத் தலைவர் சாய்குமார் அவர்கள் எல்லாவற்றையும் சோதனை செய்த பின்னரே மின்சாரம் விநியோகிக்கப்படும் என்று தொலைக்காட்சிகளில் கூறினார். வேறு வழியில்லை. நிலைமை மிக மிக மோசம்!

  ReplyDelete
 15. மற்றபடி நான் எந்த அரசுக்கும் அல்லது கட்சிக்கும் ஆதரவு இல்லை. எனக்குத் தெரிந்தவரை, நான் அறிந்தவரை அனைவரும் அயராமல் உழைக்கின்றனர். மத்திய மாநில அரசு ஊழியர்கள், ராணுவ வீரர்கள், தன்னார்வலர்கள் அனைவருமே!

  ReplyDelete
 16. இது மிகப் பெரிய கொடுமைதான். ஆனால், நாம் ஆக்கிரமிப்பை குறைத்திருந்தால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. மனிதனின் பணவெறிக்கு விழுந்த அடி!

  நேரமிருப்பின் எனது மழைப் பற்றிய தொடர் பதிவை படிக்க அழைக்கிறேன்.

  http://senthilmsp.blogspot.com/2015/12/2.html

  ReplyDelete
 17. ஐயா! வணக்கம். சென்னை மக்கள் பட்ட துயரத்தை இனி யாரும் பெறக்கூடாது. மக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்கு அலையும் நேரத்தில் ‘எரியிர வீட்டில் பிடுங்கினது இலாபம்’ என்பது போல் அரை லிட்டர் பாலை 50 ரூபாய்க்கும் சிலசமயம் 100 ரூபாய்க்கும் விற்று கொள்ளை அடித்தவர்களும் இங்கு உண்டு.

  சென்னை வாழ் மக்கள் மாடியிலும், தெருவில் இடுப்பளவு நீரிலும் நின்றுகொண்டு உணவுக்கும் நீருக்கும் கையேந்தி நிற்பதைப் பார்க்கும்போது ‘பரந்து கெடுக உலகியற்றி யான்’ என்றே சொல்லத் தோன்றுகிறது.இதைப் பற்றி எழுதி என்ன செய்யப்போகிறோம்.இயற்கை தான் சீற்றத்தைக் குறைத்து சென்னையின் பேரில் கருணை காட்டும் என நம்பி இருக்க வேண்டியதுதான்.

  ReplyDelete

 18. @ திண்டுக்கல் தனபாலன்
  நெஞ்சை உலுக்கும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றனசீக்கிரம் சீராகும் என்று நம்புவோம் வருகைக்கு நன்றி டிடி.

  ReplyDelete

 19. @ கரந்தை ஜெயக் குமார்
  தமிழக மாவட்டங்கள் பலவும் மழையால் இடருற்று இருக்கின்றன என்றாலும் சென்னையும் கடலூரும் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. நிலைமை சீராகும் என்று நம்புவோம் நன்றி ஐயா.

  ReplyDelete

 20. @ கில்லர்ஜி
  வருகைக்கு நன்றி ஐயா. எரியும் வீட்டில் கொள்ளி பிடுங்குவோரும் இருக்கத்தானே செய்கிறார்கள் என் பதிவில் எழுத்துக்கள் சரியாகத்தானே உள்ளது.

  ReplyDelete

 21. @ துரை செல்வராஜு
  எத்தனையோபேர் மனிதாபிமானமுடன் தொண்டு புரியும் போது சில கொடியோர்களும் இருக்கிறார்களே வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 22. நேற்று காலை செய்தித்தாள், மாலை தொலைபேசி வசதி, இரவு மின்சாரம், இன்று வலையுலகம் கிடைக்கப் பெற்றோம். ஒற்றைக் கேன் குடிநீர் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வார காலத்திற்கு தாக்குப் பிடித்திருக்கிறது. பாதுக்காக்கப்பெற்ற குடிநீர், காஸ் சிலிண்டர், தொலைக்காட்சி, மொபைல் இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு வரலாம்.

  மனிதாபிமானம் மிக்க பதிவுக்கு நன்றி.

  ReplyDelete

 23. @ ரூபன்
  ஐயா ஏதோ நம்பிக்கையில்தான் பெரும்பாலோரது பொழுதும் கழிகிறது. வருகைக்கு நன்றி.

  ReplyDelete

 24. @ டாக்டர் கந்தசாமி
  இந்த மறு மொழி எழுதும் நேரம் சென்னை மெதுவாக சகஜ நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது என்று தகவல். வருகைக்கு நன்றி ஐயா

  ReplyDelete

 25. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  கடைசித்தகவல் படி சென்னை இயல்பு நிலைக்கு வருகிறது என்று தெரிகிறது. உங்கள் பதிவைப் படித்து விட்டேன் நன்றி ஐயா.

  ReplyDelete

 26. @ கீதா சாம்பசிவம்
  இப்போதுதான் ஸ்ரீராமுடன் தொடர்பு கொண்டேன் இரண்டு மூன்று நாட்கள் வீட்டைவிட்டு வெளியே போய் இன்றுதான் வீடு வந்தாராம் இயல்பு வாழ்வு சீக்கிரமே திரும்பும் என்று நம்புவோம் வேம்புலி அம்மன் கோவில் தெருவில் இருந்த என் உறவினர் குடும்பத்துடன் டாக்சி பிடித்து பெங்களூரு வந்திருக்கிறார் இதுவும் கடந்து போகும் என்று நினைத்துக் கொள்வோம் வருகைக்கு நன்றி

  ReplyDelete

 27. @ தி தமிழ் இளங்கோ
  மின் வினியோகம் பற்றிய விஷயத்தில் மிகவும் கவனத்துடன் இருப்பதே நல்லது. பாதுகாப்பான முறையில்விநியோகம் செய்வதே நல்லது இல்லையென்றால் சேதங்கள் ஏற்படலாம் சாய் சரோவரில் மின் கசிவு என்று பயந்தது பற்றி எழுதி இருக்கிறேனே வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 28. @ கீதா சாம்பசிவம்
  இந்த மறு மொழி எழுதும் போது பெரும்பாலான இடங்களுக்கு மின் விநியோகம் மீண்டும் துவங்கிவிட்டதாகத் தகவல் மற்றபடி கொள்ளை அடிப்பவர்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் திரு நாளாகும்

  ReplyDelete

 29. @ பரிவை சே குமார்
  லட்சக் கணக்கில் பணம் போட்டு மாடி வீட்டில் ஃப்லாட் வாங்கியவர்கள் உணவுப்பொட்டலத்துக்காக மொட்டை மாடியில் ஹெலிகாப்டரின் விநியோகத்துக்காகக் காத்திருப்பது வேதனை தரும் நிகழ்ச்சிதான் வருகைக்கு நன்றி.

  ReplyDelete

 30. @ அருணா செல்வம்
  இப்போதெல்லாம் சிறு தூறலும் பீதியைக் கிளப்புகிறது. வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 31. @ கீதாசாம்பசிவம்
  மக்களுக்கு மின் விநியோகம் தேவை என்று அதன் பொறுப்பில் இருப்பவர்களுக்குத் தெரியும் என்று நம்புவோம் படிப்படியாக நிலைமை சீரடைந்து வருகிறது.

  ReplyDelete

 32. @ கீதா சாம்பசிவம்
  தன்னார்வலர்கள் விநியோகிக்கும் பொருட்களின் மீது அம்மா படம் ஒட்டப்பட வேண்டும் என்று ஆளும் கட்சியினர் சொல்வது டூ மச் அல்லவா? கண்டிக்க வேண்டியதைக் கண்டிக்க வேண்டுவதும் சரியே

  ReplyDelete

 33. @ செந்தில்குமார்
  மனிதனின் பணவெறிக்கு விழுந்த அடி/ யாருக்கு அடி என்பதும் சிந்திக்க வேண்டும் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 34. @ வே நடன சபாபதி
  இயற்கையின் சீற்றத்துக்கு முன் மனிதன் எம்மாத்திரம் ? அண்ணாநகரில் பாதிப்பு பற்றி எழுதலாமே வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 35. @ ஜீவி உங்கள் பின்னூட்டம் தெம்பைத் தருகிறது நன்றி சார் மிகுந்த இன்னல்களுக்குப் பின் ஸ்ரீ ராம் இப்போது நிலைமை தேவலாம் என்று சொன்னார் எப்பவும் எதுவும் நடக்கலாம் என்னும் முன்னெச்சரிக்கையுடன் இருக்கப் பழக வேண்டும்

  ReplyDelete
 36. இப்போது மீண்டும் சென்னை பர பர என்று ஓடுகின்றது. அடையார், கூவம் எல்லாம் மீண்டும் பழைய நிலை நாற்றம் குப்பை ....என்ன தண்ணீர் கொஞ்சம் அதிகம் இருக்கின்றது அவ்வளவே..

  ReplyDelete

 37. @ துளசிதரன் தில்லையகத்து
  இனியாவது கூவம் அடையாறு பக்கிங்காம் கால்வாய் கரைகளில் ஆக்கிரமிப்பு நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் தூர்வாரி ஆழப்படுத்தினால்வெள்ளம் வரும்போது வருங்காலத்தில் அதிக வெள்ளம் கொள்ளலாம் வருகைக்கு நன்றி சார்.

  ReplyDelete