நினைவடுக்குகளில் ஒரு பயணம்
-------------------------------------------------
இப்போதெல்லாம்
மிகவும் தெரிந்தவர்களின் பெயர்கள் உடனே
நினைவுக்கு வருவது இல்லை உணவு உட்கொள்ளும் போது பல்லிடுக்கில் சிக்கிக் கொள்ளும்
ஏதொ ஒன்று போல் எடுக்காவிட்டால் அமைதி
இருப்பதில்லை. அதுபொல் தான் தெரிந்தவரின்
பெயர் நினைவுக்கு வராவிட்டால் மனம் அழுந்துகிறது இது பற்றி நான் முன்பே எழுதி இருக்கிறேன்
சில
பழைய புகைப்படங்களை நோக்கிக் கொண்டிருந்தேன்
கோயமுத்தூரில் ஒரு நண்பனின் மகளது
திருமணத்துக்குச் சென்றபோது எடுத்தவை
ஒவ்வொரு வரையும் அடையாளம் காட்ட மனம் விரும்பியது
அதில் ஒருவர் எனது நல்ல நண்பர் மிகவும்
தெரிந்தவர் பெயர் நினைவுக்கு வரவில்லை
இது எப்படி என்றால் நீலாம்பரி நினைவுக்கு வருவாள் அவளது இயற்பெயர்
நினைவுக்கு வராது நண்பர் குறித்த பல நினைவுகள் அலை மோதின. ஆனால் அவர் பெயர்
மட்டும் நினைவுக்கு வரவில்லை. பொதுவாக
இம்மாதிரி நேரங்களில் மனைவியின் துணை
நாடுவேன் ஆனால் இந்த நண்பர் என் மனைவிக்குப் பரிச்சயப்படாத அலுவலக நண்பர்
எனக்கோ திலகவதி அம்மையாரின் தம்பியின் பெயர்தானோ என்னும் சந்தேகம் எழுந்தது ஆனால்
ஒரு பெயர் பெற்ற படைத்தளபதியின் பெயர்
என்றும் நினைவுக்கு வந்தது ஏதோ சினிமாவில் ராதிகா தன் கிளிக்கு இப்பெயர் சூட்டி இருந்தார்
என்றெல்லாம் நினைவுக்கு வந்தது ஆனால் அந்தப் பெயர் மட்டும் ஞாபகத்துக்கு வரவில்லை
இரண்டு நாட்களாக இதே நினைப்பு/ அந்தப் பெயர்
என்னை வாட்டிக்கொண்டு இருந்தது திடீரென்று யுரேகா என்று கத்த வேண்டும் போல்
இருந்தது பெயர் நினைவுக்கு வந்து விட்டது
அந்தப் பெயரை உங்களால் யூகிக்க முடிகிறதா நண்பர்களே பரஞ்சோதி
பெயர் நினைவுக்கு
வந்தபின் என்னால் நினைத்துப்பார்க்கப்பட்ட
வர்களின் கதைகளைத் தேடிப் பார்த்தேன்
திலகவதி அம்மையாரின் தம்பி பெயர் மருள் நீக்கி என்று அறியப்பட்ட
திருநாவுக்கரசர் பல்லவ மன்னனின்
படைத்தளபதியாக இருந்தவர் கருணாகரத் தொண்டைமான்
இவருக்கு பரஞ்சோதி என்னும் பெயர் இருந்ததா தெரியவில்லை. ராதிகாவின் கிளிக்குப் பெயர் பரஞ்சோதிதான்
அப்பாடா ஒரு வழியாகப் பெயரை நினைவடுக்குகளில்
இருந்து தேடி எடுத்துவிட்டேன்
இது AAADD Syndrome ஆக இருக்கலாம் என்று தோன்றுகிறது பார்க்க பழைய பதிவு
அனைவருக்கும் புத்தாண்டு தின நல் வாழ்த்துகள்
இது AAADD Syndrome ஆக இருக்கலாம் என்று தோன்றுகிறது பார்க்க பழைய பதிவு
அனைவருக்கும் புத்தாண்டு தின நல் வாழ்த்துகள்
'