Sunday, March 6, 2016

ATS AMBERNATH ALUMNI MEET



                        ATS AMBERNATH ALUMNI MEET
                        ---------------------------------------


இரண்டு மூன்று மாதங்களாக எதிர் பார்த்திருந்த அம்பர்நாத் அலும்னி சந்திப்பு ஃபெப்ருவரி 27 மற்றும் 28 தேதிகளில்  இனிதே நடந்து முடிந்தது. அம்பர்நாத் அலும்னி சந்திப்பில் கலந்து கொண்டவர்கள்  ஏறத்தாழ அனைவரும் எழுபது வயதுக்கு மேற்பட்டவர்களே அம்பர்நாத்தில் பயிற்சி பெற்றவர்கள் இந்தியா முழுவதும் ஏன் சிலர் வெளிநாடுகளிலும் கிதறிக் கிடக்கிறார்கள் கிட்டத்தட்ட 15 பேட்சுக்கும் மேல் இருக்கிறார்கள் அவரவர் பாட்ச் நண்பர்கள் தவிர ஏனையோரை நினைவில் வைத்திருப்பதே அசாத்தியம் சந்திப்புக்கு வந்திருந்தோர் எண்ணிக்கை  350 பேருக்கும் மேல் இருக்கும்  பலரும் தங்களதுமனைவியருடன் வந்திருந்தனர் அயல் நாடான அமெரிக்கா கனடா ஜெர்மனி போன்ற இடங்களிலிருந்தும் வந்திருந்தனர்   


எனக்கு அடிப்படையில் ஒரு சந்தேகம் இருந்தது அறிமுகம் கூட இல்லாத இத்தனை முதியவர்களையும் ஒருங்கிணைக்கும் சக்திதான் என்ன.? இந்தக் கேள்வியைப் பலரிடமும் கேட்டேன் பெரும்பாலும் பதில் கூறியவர்கள் இந்த சந்திப்பை அந்த பயிற்சிப்பள்ளிக்கே சமர்ப்பித்தனர்  ஒவ்வொருவரும் அவரது இப்போது இருக்கும் நிலைக்கு அந்தப் பள்ளியில் பயின்றதே காரணம்  என்கின்றனர். அதுதான் உண்மையுங்கூட. உலகம் தெரியாத வயதில் அந்தப் பயிற்சிப்பள்ளி அனைவரிடமும் ஒரு தன்னம்பிக்கையை வளர்த்திருக்கிறது எதையும் சாதிக்க முடியும் என்னும் நம்பிக்கை. அது அவரவர் வாழ்வில் நிதர்சன உண்மையாய் இருக்கிறது பயிற்சிக்காலத்துக்குப் பிறகு நான் ஒரு மினி இந்தியாவை அந்த சந்திப்பில் கண்டேன்


வலைப்பதிவர் சந்திப்புகளிலாவது அவரவர் வலைத் தளங்கள் மூலம் ஒருவர் பற்றிய சில கணிப்புகள் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சந்திக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கலாம்

 ஆனால் இங்கோ இந்தியாவின் பல கோடிகளிலிருந்து  நிறையவே பணம் செலவு செய்து கலந்து கொள்ளப் பதிவுக்கட்டணமும் செலுத்தி இரண்டு நாள் பொழுதைக் கூடிக் கழிக்கும் ஆர்வமே இருந்தது. வயதானோர் பலருக்கும் பயணம் செய்யவும் தன்னம்பிக்கையை வளர்க்கவும் இந்த சந்திப்பு வழிவகுத்தது எனலாம் மூன்று மாதம் முன்பே திட்டமிட்டுக் கலந்து கொள்ளப் பெயரும் பதிவுக் கட்டணமும் கொடுத்து டிக்கட்களையும் எடுத்தவர்களில் சிலர் திரும்பவராத இடத்துக்கு இந்த சந்திப்புக்கு முன்பே பயணப்பட்டு விட்டார்கள் என்பதும் உண்மை.
இந்த சந்திப்புக்காகவே பெங்களூரு சாப்டர் துவங்கப் பட்டதுஇந்த சாப்டரின் பொறுப்பை ஏற்று இந்த சந்திப்புக்கு வழிவகுத்த நண்பர்கள் இந்த வயதிலும் அயராது உழைத்து சந்திப்பு வெற்றிகரமாக நடக்கப் பேருதவியாய் இருந்தனர்



சந்திப்பு பெங்களூரில் பீன்யா மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெகு அருகே இருக்கும் PLATINUM CITY APARTMENT- ல் நடந்தது. வருகையை ஜனவரி 7-ம் தேதிக்கு முன்பே உறுதி செய்யும் விதமாக  பதிவுக் கட்டணம்  வசூலிக்கப் பட்டது தனி நபருக்கு ரூ 1500-ம் மனைவியோடு வருபவருக்கு ரூ 2500-ம் வசூலிக்கப்பட்டதுபெரும்பாலோருக்கு அவர்கள் சௌகரியப்படி தங்கும் இடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டது தங்குமிடமும்  அதே அபார்ட்மெண்ட் வளாகத்திலேயே இருந்தது சிங்கிள் ரூம் டபிள் ரூம் சாதாரணம்  குளிரூட்டப்பட்டது என்று தேவைக்கேற்ப வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது இரண்டு நாட்களுக்கும் காலை உணவு முதல் இரவு உணவு வரை ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது


ஆர்டிசான் ட்ரெயினிங் ஸ்கூல்  என்று அழைக்கப்பட்ட பயிற்சிப் பள்ளி அம்பர்நாத் என்னும் இடத்தில் 1950 களில்  மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முயற்சியால்  பாதுகாப்பு துறையின் கீழ் சுவிட்சர்லாந்து  ஓர்லிகன் கம்பனியினருடன்  கூட்டு முயற்சியாகத் துவங்கப் பட்டு சுமார் ஆயிரம் பேருக்கும் மேலாக பயிற்சி அளித்திருக்கிறது பொறி இயல் துறையில் பயிற்சி அளிக்கப்பட்டது அந்தப் பள்ளியில் பயிற்சி பெற்றோருக்கு நல்ல டிமாண்ட் இருந்தது அதில் பயிற்சி பெற்றோர் முதலில் ordinance factory  களில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர் எச் ஏ எல் –ல் போதிய பயிற்சி வசதிகள் இல்லாததாலும்  அம்பர்நாதில் இருக்கும் வசதிகளைப் பயன் படுத்தும்  முறையிலும் சிலரைப் பயிற்சிக்கு  அனுப்பினர் அம்மாதிரி அனுப்பப்பட்டவர்களின் முதல் பாட்சில் நானும் இருந்தேன்1957-1959 வரை இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றேன்
 2010 –ம் ஆண்டு சென்னையில் நடை பெற்ற ஆலும்னி சந்திப்புக்கு நான் சென்றிருக்கிறேன்  அது பற்றி ஒரு பதிவிலும் குறிப்பிட்டிருக்கிறேன்
 இந்த மாதிரி சந்திப்புகள் புனே ஜபல்பூர் கொல்கத்தா கான்பூர் கோவை மும்பை போன்ற இடங்களில் இதற்கு  முன்  நடந்திருக்கிறது. முதன்  முதலாக இப்போது பெங்களூருவிலும்  நடந்தது சந்திப்பு பற்றிய பிற தகவல்கள் பின் வரும் பதிவில் தொடரும்


பெங்களூரு சாப்டர் கமிட்டி உறுப்பினர்கள்






21 comments:

  1. சந்திப்பு சிறப்புற்றமைக்கு வாழ்த்துகள்
    மேலதிக தகவல்கள் வரும் என்ற ஆவலில் நானும் ஐயா...

    ReplyDelete
  2. என் கூடப் படித்த நண்பர்கள் பெயரை சில நண்பர்கள் சொல்லும்போது, 'இப்படி ஒரு பெயருடைய நண்பர் நம்முடன் படித்தாரா?' என்ற சந்தேகம் எனக்கு வரும். சிலரைப் பார்த்தால் அடையாளம் கவனத்துக்கு வந்து விடும். எப்படித்தான் இத்தனை வருடங்களுக்குப் பின்னர் ஞாபகம் வைத்திருக்கிறீர்களோ.. ஆச்சர்யம்தான்.

    ReplyDelete
  3. வயது முதிர்ந்த நிலையிலும் இதுபோன்ற சந்திப்புகளை ஏற்பாடு செய்து
    அனைத்துவித முன்னேற்பாடுகளையும் செய்வோர் போற்றுதலுக்கு உரியவர்
    நிச்சயமாக கலந்து கொண்ட அனைவரும் புது இரத்தம் பாய்ச்சப்பட்டதைப் போல் உணர்ந்திருப்பார்கள், புத்துணர்வு பெற்றிருப்பார்கள் என்பது உறுதி
    நன்றி ஐயா

    ReplyDelete
  4. சந்திப்பு பற்றிய பகிர்வு மனதிற்கு நிறைவினைத் தந்தது. அதனைத் தாங்கள் பகிர்ந்தவிதம் மிகவும் அருமை. இதுபோன்ற சந்திப்புகள் குறித்த நினைவுகள் என்றென்றும் மனதில் நிற்கும். நன்றி.

    ReplyDelete

  5. அம்பர்நாத் ATM இல் பயிசி பெற்ற நண்பர்கள் சந்திப்பு விமரிசையாய நடைபெற்றது அறிந்து மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்! இது போன்ற சந்திப்புக்கள் மனதில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது என்பதால் தான் இந்த வயதிலும் எல்லோரும் வந்திருக்கிறார்கள் என எண்ணுகிறேன்.

    நாங்கள் படித்து முடித்து 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதால் இந்த ஆண்டு செப்டம்பர் திங்களில் தஞ்சையில் எங்களின் பொன் விழா சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த சந்திப்பெல்லாம் Battery ஐ recharge செய்வதுபோல். தங்களின் அப்பிப்பிராயம் என்ன?

    ReplyDelete
  6. அருமையான சந்திப்பாக அமைந்திருக்கும் எனத் தெரிகிறது. இது போன்ற சந்திப்புகள் உற்சாகம் தருபவை.

    சந்திப்பு பற்றிய மற்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  7. அருமை. தங்கள் ஞாபக சக்தியைக் கண்டு வியக்கிறேன். தொடர வாழ்த்துகள் பாலா சார்.

    ReplyDelete

  8. @ கில்லர்ஜி
    சந்திப்பு பற்றிய தகவல்களுடனும் புகைப்படங்களுடனும் அடுத்தபதிவில் எழுதுகிறேன் ஜீ வருகைக்கு நன்றி

    ReplyDelete

  9. @ ஸ்ரீராம்
    எனக்கும் அந்தக் குறைபாடு (?) உண்டு. தொடர்பில் இருக்கும் வெகுசிலரே நினைவில் முகம் காட்டுபவர்கள் வருகைக்கு நன்றி ஸ்ரீ

    ReplyDelete

  10. @ கரந்தை ஜெயக் குமார்
    சுமார் எழுநூறு பேருக்கும் மேலாக முகவரிகளைத் திரட்டித் தெரியப்படுத்தி இந்த விழாவினைச் சிற்ப்பிக்கச் செய்தவர்கள் பாராட்டுக்குரியவர்களேபாட்டரி ரீசார்ஜ் செய்வது போல் பலரும் உணர்ந்திருப்பார்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete

  11. @ திண்டுக்கல் தனபாலன்
    இனிய சந்திப்புதான் டிடி வருகைக்கு நன்றி

    ReplyDelete

  12. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    இதுசந்திப்பின் முன்னோட்டம்தான் சந்திப்பு பற்றிய தகவல்கள் அடுத்தபதிவில் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  13. @ வே நடனசபாபதி வங்கியாளர் அல்லவா நீங்கள் அதுதான் ATS என்பதை ATM என்று குறிப்பிட்டீர்கள் என்று நினைக்கிறேன் உங்கள் பொன் விழா சந்திப்பு இனிதே நடக்க வாழ்த்துக்கள் வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  14. @ வெங்கட் நாகராஜ்
    சந்திப்பு பற்றிய விளக்கப் பதிவு அடுத்ததில் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  15. @ தேனம்மை லக்ஷ்மணன்
    ந்ன் ஞாபக சக்தியும் பிறரது போல்தான் நினைவாற்றல் குறந்து கொண்டே வருகிறது வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete
  16. பட்டம் எவ்வளவு உயரப் பறப்பினும்
    பிடி பிரமானம் என்பதைப் போல
    நாம் எவ்வளவு சிகரம் தொட்டாலும்
    பள்ளியும்.பணியாற்றிய இடங்களுக்கும்
    நமக்குமான இருக்கமான பிணைப்பு
    அலாதியானதுதான்

    ReplyDelete
  17. அருமையான சந்திப்பு ஐயா

    ReplyDelete

  18. @ ரமணி
    அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே என்பதுபோல் இருந்தது அந்த சந்திப்பு வலைப் பதிவர் சந்திப்புகளுக்கும் அவர்களது வழியைப் பின்பற்றலாமே வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  19. @ அஜய் சுனில்கர் ஜோசப்
    உங்கள் பெயரை என்னைத் தொடர்பவர்களின் பட்டியலில் பார்த்தேன் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  20. பழைய மலரும் நினைவுகளோடு நண்பர்களைச் சந்திப்பதிலும் ஒரு மகிழ்ச்சிதான். சந்தித்துக் கொண்டவர்கள், 70 வயது கடந்த இளைஞர்கள் எனும்போது நான் இன்னும் இளைஞனே என்ற மகிழ்ச்சியை உங்கள் பதிவு தந்தது.

    ReplyDelete