Thursday, June 22, 2017

மொழி மாற்றங்கள்


                                மொழிமாற்றங்கள்
                               ------------------------------
 அண்மையில் ஒரு போட்டி பற்றிய அறிவிப்பு பார்த்தேன்  எதிலிருந்து எதை என்பது எனக்கு சரியாகப் புரியவில்லை  இருந்தாலும் எனக்கு நான் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்த பதிவுகள் நினைவுக்கு வந்தது நான் பள்ளிப்படிப்பு அதிகம் பயின்றவன் அல்ல. ஏதோ ஆங்கிலத்தில் வர்கிங் நாலெட்ஜ்  கொஞ்சம் உண்டு. மொழி வல்லுனன்  அல்ல இருந்தாலும் சில   மொழி மாற்றங்களை  செய்து பார்த்திருக்கிறேன்  மொழி பெயர்ப்பு அல்ல 2011ம் ஆண்டு முகநூலில்  செல்வி மாதங்கி எழுதி இருந்த   The lonely bird ஐ தமிழாக்கம் செய்து பதிவிட்டேன்   அதன் பின்   என்  பேரன் ஆங்கிலத்தில் அவன் தாயை நினைத்து எழுதி இருந்ததை தமிழ்ப்படுத்தினேன்  என்னுடைய செய்யாத குற்றம் என்னும்  பதிவைதிரு அப்பாதுரைஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து என் வேண்டுகோளை நிறைவேற்றினார்  திரு டி பி கைலாசம் என்னும் கவிஞர் ஆங்கிலத்தில் எழுதி இருந்த  drona  வையும் தமிழ்ப்படுத்தினேன் அவரது ஆங்கிலம்  விக்டோரியா காலத்து மொழி போல் இருந்தது அகராதியின்  துணை கொண்டு நான்புரிந்து கொண்ட தமிழில் எழுதினேன்  இருந்தாலும் வலைப்பதிவில்  ஆங்கில மொழி வல்லுனர்களிடம்
அதைத் தமிழ்ப்படுத்த வேண்டி இருந்தேன் 
 சிலர் முயற்சிக்கிறேன் என்றதோடு சரி  இதுவரை செய்யவில்லை.  இப்போதும்  குறைந்து போகவில்லை இப்பதிவின் பின்னூட்டத்தில் எழுதலாம் யாரும் எழுதாவிட்டால்நான்  எழுதியதை அங்கே வெள்யிடுவேன் 
செல்வி மாதங்கியின் 
 The lonely bird
---------------------------
 The dusk was a rage of red
And melted away, was gold
The breeze was a welcome bliss
But in came a cruel cold.

The sun was away for a while
Stars, waiting for the moon
The sky was an empty heart
Oh Night! Be here soon.

Through the gray, gold and red
Fluttered a little lone bird
"Where were his friends"? I wondered
And it seemed, for a moment- he heard.

"What had kept you back?
Why did you wait so long?
Is it for a grain of rice?
Or some poet's sad- bird song?

You flutter as you fight with the breeze
Your wings growing tired as I see
What had kept you back- waiting?
While you watched your friends fly, free?

Fly home safe, little bird
Worry not, for the grain of rice
Your little ones wait for you, back home
Keep them safe from a world of lies.

Return to them, help them live
Return to them, to life
For rice is rice, and song- a song
But life- not something rife"!

He fluttered along- soon, was gone
The sky now dark- an empty space,
I closed my eyes, to feel through the sky
And I found his little wings' pace.

He was home, he was safe
That was all, I needed to know
The night was here- and so was the cold
"Au Revoir, little bird- for now, I must go"...
 என்  தமிழாக்கம்
-----------------------------------

                                                  தனிமைப் பறவை
                                   ----------------------------
மஞ்சள் வெயில் மாலை மதி மயங்கும் வேளை
ஆதவன் மேற்கே மறைய மறைய
செக்கர் வானச் சிவப்பினூடே கருமேகம்
களைகட்ட ,இருட்டு கோலோச்சத் துவங்க
மென்காற்று வீச மெய் குளிரத் துவங்கியது.

அகண்ட வானில் புள்ளினங்கள் அழகாக ஓர்
ஒழுங்கில் சீராகப் பறந்து தத்தம் கூடுகள் நாட,
எல்லாம் சென்றதைக் கண்ட நான்
தூரத்தே தன்னந்தனியே ஒரு சிறு பறவை
ஆயாசத்துடன் பறந்து வருதல் கண்டேன்.

புள்ளே நீ ஏன் பின் தங்கி விட்டாய்.?
சிறகில் வலிமை குறைந்ததோ ?
உன் குஞ்சுகளுக்கு இரை கிடைக்க நீ
வெகுவாகப் பாடுபட்டாயோ.?
தானியங்கள் சிதறிக் கிடக்க வில்லையோ.?
புழுக்கள் மண்ணுக்கடியில் பதுங்கி விட்டனவோ?
இரையின்றி நீ சென்றால் அவற்றின்
ஏமாற்றம் தாங்க முடியாததோ.?

இருந்தாலும் சின்னப் பறவையே
உன் கூட்டம் விட்டு நீ பின் தங்கிச் செல்வது 
எனக்கு என்னவோ போல் தோன்றுகிறது
இருட்டி விட்டால் உனக்குப் பாதை தெரியுமா.?
விரைவாய் சிறகசைத்துச் செல் சின்னப் பறவையே
தனியே இருத்தல் இவ்வுலகில் கொடிது.

நான் கண்களை மூடிக் கொள்கிறேன்.
நீ உன் சிறகசைப்பை விரைவாக்குகிறாய்
இருட்டினூடே நீ மறைந்து விடுகிறாய்.
உன் கூட்டிற்குள் சேர்ந்து விடுகிறாய்.
உன் குஞ்சுகள் ஆர்பரிக்க உன் அலகால்
அவற்றுக்கு ஆகாரம் ஊட்டுகிறாய்.

நன்றாயிரு பறவையே .நீ நலமாயிரு.
உன் நலம் நாடி கண்களை விழிக்கிறேன்.
சென்று வா என் சின்னப் பறவையே.
-------------------------------------------------

பேரனின்   அன்னை பற்றிய ஆங்கிலக் கவிதை
----------------------------------------------------------------------------------------
When I was home alone
I was happy thinking about the freedom
But without you it was actually boredom
The fights we have and the love we share
I missed it all and wanted nothing but care
Time passed
Oh I never knew it was cause I was thinking only about you
Things have changed  and so have I
I don’t know whether it is good or bad
But my love  always  was you mom
You were the Sun rays that woke me up
And the moon that put me to sleep
Like that I convinced  myself that you were there within myself
You are the one and only one who is so complete and so damn sweet
You are mine and you make me shine
Mom you are the best
LOVE YOU MOM
 என் தமிழாக்கம்
--------------------------------
தளைகளும் கட்டுப்பாடும் அற்ற தனிமையில்
நானிருந்தபோது விடுதலை உணர்விருந்தது.
ஆனால் நீ இல்லாதது வெறுமை உணர்த்தியது
அன்புடன் உன அதட்டலும்,அதிகாரமும் இல்லாதிருந்தது
என்னுள் ஏக்கத்தை ஏற்படுத்தியது.

உன் உதிரத்தின் உயிராய் தொப்புள் கொடி
உறவாய் உதித்தவன் நான்.காலங் கடந்து
உணர்கிறேனோஅம்மாநீயின்றி நானில்லை என்று ?. 

என்னுள் மாற்றங்கள் நிகழ்கிறது நான் அறிவேன்
அவை நல்லதோ அல்லதோ நானும் அறியேன் -ஆனால்
அறிகிறேன் அம்மாஎன் அன்பு என்றும் மாறாதது.

விடியலில் என்னை எழுப்பும் ஆதவன் நீ
அந்தியில் என்னை உறக்கும் நிலவும் நீ
என் எண்ணத்தில் உன்னை நிறுத்தி
நீயில்லா வெறுமையை விரட்டினேன்.

இனிமையின் இருப்பு நீ,பூரணத்தின் பொலிவு நீ
என்னுள் என்னை மிளிரச் செய்பவள் நீ
எல்லாம் எனக்கு நீயே அம்மா உலகில் சிறந்தவள் நீயே அன்றோ.!

செய்யாத குற்றம் –திரு அப்பாதுரையின்  ஆங்கில மொழியாக்கம்
------------------------------------------------------------------------------------------------------------------------

IS OLD AGE A PUNISHMENT FOR A CRIME NOT COMMITTED

Eyes drift away from the tube
as body retires to sleep;
the mind starts to ruminate
all day's events in keep

planned tasks are many; lay forgotten
incomplete, or left in abandon;
omission seems acceptable, if
the important ones are done

slumber isn't imminent; and when
eyes swoon down to sleep
colorful dreams parade in waves
like a story broad and deep.

dreams crafted in words
a thing of pleasant savor;
be posted in blogs - such
thoughts in dreams waver.

attempts to translate dreams
get foggy; lost in reformation
failed by elusive language
let down by own imagination
in early morning strolls - words
that tend to flow in a stream,
when armed with pen on return
why disappear as if in a dream?

faces remain familiar
but names tend to fade
mind desires to play with children
yet body has become a jade.

thoughts remain forever young
bodily discomforts, those bookmarks of age!
mind pursues what it desires; yet
alerts nothing can be done at this stage.

oh, dear world
to you this question is remitted
is dotage a fit retribution
for a crime never committed?

 என் பதிவு செய்யாத குற்றம் ( தமிழில் )
தொலைகாட்சி   நிகழ்ச்சிகள் 
நிறையவே   பார்த்து  விட்டு, 
நித்திரை  செல்லப் போகுமுன், 
அன்றைய   நிகழ்வுகள்  
நினைவினில்  நிழலாடும். 

       
என்னென்னவோ   செய்ய  எண்ணியவை 
       
செய்தே   முடிக்காமல்   மறக்கப்பட்டிருக்கும். 
       
மறந்தாலும்   பாதகமில்லை 
       
முக்கியமானதாய்   இல்லாதவரை. 

கண்ணயர  சில நேரம்   பிடிக்கும் 
பின் கண்   மூடி உறங்கிவிட்டால்
கலர்கலராய்க்  கனவுகள்அலை அலையாய்
கதை போல  விரிந்து  பரவும்.

       
எழுத்தில்   கொண்டு வந்தால் 
       
இனிதே   ரசிக்கலாம், 
       
இடுகையில்   பதிக்கலாம் 
        
என்றெல்லாம்   கனவினூடே   
       
நினைவுகளும்   கூடவே   வரும், 

விடியலில்   எழுந்து  இனிய   கனவுகளை 
அசை   போட  முயன்றால், மசமசவெனத்
தெளிவின்றித்  தோன்றுவதை  எழுத்தில்
வடிக்க  வார்த்தைகளும்  வராது,
கற்பனையும்   கை  கொடுக்காது.
      
         அதிகாலை   நடை பயிலுகையில் 
         
எழுதுவதற்கு   விஷயங்கள்  யோசிக்க
        
நடையினூடே   வார்த்தைகளும்
        
அழகாக  வந்து   வீழும்.

சற்றே  மலர்ந்து  வீடு  வந்து, 
பேனா   பிடித்தால்   என்னதான்  
எழுதுவதுஒன்றும்   தோன்றாது
நினைப்பது   ஏன்  மறக்க  வேண்டும்..?

        
பார்த்த   முகம்  பரிச்சயமானது , பேர்மட்டும் 
        
வேண்டும்போது   நினைவுக்கு   வராது.
         
ஆடும்   சிறார்  கண்டு  மனம்  மகிழும்
        
கூடவே   ஓடியாட  உடல்   மறுக்கும்.
        
எண்ணங்களில்   இளமை  என்றுமிருக்கும்
        
உடல் உபாதைகள்  முதுமையை  நினைவூட்டும்.
        
வேண்டியதை  விரும்பிச்  செய்ய  விழையும் மனமே, 
        
உன்னால்  முடியாது  என்று  கூடவே   கூறும்.

உலகோரே   உங்களிடம்   கேட்கிறேன் 
வயோதிகம்   என்பது  செய்யாத   குற்றத்துக்கு 
விதிக்கப்பட்ட   தண்டனையா..?

டிபி கைலாசத்தின்   DRONA

THY flaunted virgin phalanx cleft a two
By but a stripling, thine own pupil's son
Whose bow abash'd his sire's preceptor! You,
In pain of tortur'd vanity, let run
Thine ire to blind thee to the blackest deed
Besmirch'd the scroll of Aryan Chivalry!
The while thy master's ghoulish hate did feed
And fatten on thy victor's butchery,
 
Thy father's heart had it bore some pity
For Partha in his dire calamity,
Dread Nemesis had spar'd thine aged brain
The searing, killing agony accrued
Of death of thine own son. Thou didst but drain
The bitter gall thy vanity had brewed!
36 comments:

 1. தனிமைப்பறவை கவிதை வடிவில் சொல்லப்பட்ட நிகழ்வு அருமை ரசித்து படித்தேன்.

  அன்னையைக் குறித்த உங்களது பேரனின் கவிதையும் நன்று.

  செய்யாத குற்றம் தங்களது மன ஓட்டத்தை பகிர்ந்தது அழகான கேள்வியுடன் அருமை.

  ஆங்கிலம் அது மட்டும் படிக்கவில்லை ஐயா காரணம் ஆங்கிலம் படித்தால் எனக்கு முதுகுவலி வரும்.

  ReplyDelete
  Replies
  1. பதிவில் எழுதி இருந்தபடி லோன்லி பெர்ட் ஆங்கிலக் கவிதை அதை தமிழில் மொழியாக்கம் செய்தது நான் அதுபோல் மற்றகவிதைகளும் மொழியாக்கம் செய்யப்பட்டவை ஒரிஜினலை ரசித்தீர்களா மொழியாக்கத்தை ரசித்தீர்களா என்பதை அறிவதே நோக்கம் ஆனால் ஆங்கிலம் படித்தால் உஇங்களுக்கு முதுகு வலிக்கும் என்பது தெரியாதே வருகைக்கு நன்றி ஜி

   Delete
  2. தமிழ்மண வாக்குக்கு நன்றி ஜி

   Delete
 2. எல்லாமே நல்லா இருக்கு ..பேரனின் கவிதை ரொம்ப பிடிச்சது

  ReplyDelete
  Replies
  1. தமிழில் இருந்ததா ஆங்கிலத்தில் இருந்ததா வருகைக்கு நன்றி ஏஞ்செல்

   Delete
  2. ஆங்கிலத்தில் இருந்ததை தமொழில் மாற்றம் செய்தது நான் தமொழில் இர்ந்த என் பதிவை ஆங்கிலத்துக்கு மாற்றியது அப்பாதுரை கைலாசத்தின் துரோணாவை மொழி மாற்றம் செய்ய வாசகர்களை வேண்டுகிறேன் வருகைக்கு நன்றி மேம்

   Delete
 3. >>> விடியலில் என்னை எழுப்பும் ஆதவன் நீ..
  அந்தியில் என்னை உறக்கும் நிலவும் நீ.. <<

  அருமை..

  அனைத்தும் இனிய நடையில் எழிலாக அமைந்துள்ளன..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. மொழி பெயர்ப்பு செய்யும்போது அதன் பொருளும் அழகும் மாறக்கூடாது அல்லவா வந்து ரசித்ததற்கு நன்றி சார்

   Delete
 4. எல்லாமே அருமை! முக்கியமா அப்பாதுரையோடு எல்லாம் நாம் போட்டி போட முடியுமா? :)

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு ஒரு செய்தி. இதை நான் பதிவில் எழுதி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய வேண்டி இருந்தேன் அப்பாதுரை அதை நிறைவேற்றினார் யாரும் யாருடனும் போட்டி போட அல்ல. ஆறூஆஈஊ ஆண்ரீ ஏஏ

   Delete
  2. //யாரும் யாருடனும் போட்டி போட அல்ல. ஆறூஆஈஊ ஆண்ரீ ஏஏ//

   அப்படியும் பொருள் கொள்ளலாமா? ஹிஹிஹி, நான் சாதாரணமா அப்பாதுரையைப் பாராட்டும் விதமாகச் சொன்னேன்! :))))) இனி கவனமாக இருக்கணும்! :))))

   Delete
  3. தமிழில் இருந்த என் பதிவை அப்பாதுரை ஆங்கிலத்துக்கு மாற்றி இருக்கிறார் மற்றவை எல்லாம் ஆங்கிலத்தில் இருந்தது தமிழுக்கு மாற்றம் செய்தது நான் அப்பாதுரைக்கு துரோணரை மொழிமாற்றக் கோரி விண்ணப்பம் இருந்தது நானும் தமிழில் மாற்றி எழுதி இருக்கிறேன் இருந்தாலும் ஒரு தயக்கம் வாசகர்கள் எழுத வில்லை என்றால் நானே எழுதியதை வெளியிடுவேன்

   Delete
 5. அருமையான மொழிபெயர்ப்பு
  மீண்டும் மீண்டும் படித்து
  மகிழத் தக்கதாக உள்ளது
  ஆங்கிலத்தில் பொருள் அறிய முடிகிறது
  ஆயினும்
  நம் மொழியில்தான் அதனை
  உணர்ந்து இரசிக்க முடிகிறது
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. ஆங்கிலத்தில் இருக்கும் கைலாசத்தின் துரோணரையும் மொழியாக்கம் செய்திருக்கிறேன் ஆங்கில வல்லுனர் யாராவது மொழிபெயர்ப்பார்களா என்னும் எதிர்பார்ப்பும் இருக்கிறதுயாரும்முன்வர வில்லை என்றால் எனது மொழியாக்கத்தைக் கூறுவேன் தமிழில்தான் ரசிக்க முடியும் என்பதை விட ஒரு நேட்டிவிடி இருக்கும் என்பதே சரி என்று நினைக்கிறேன் வருகைக்கு நன்றி சார்

   Delete
 6. Replies
  1. அருமை என்று கூறுவது மகிழ்ச்சி அளித்தாலும் எதை ரசித்தீர்கள் என்பதை கூறி இருந்தால் அதுவே ரெட்டிப்பாயிருக்கும் வருகைக்கு நன்றி சார்

   Delete
 7. அனைத்தும் நல்லாருந்தது சார் பேரனின் கவிதை மிகவும் பிடித்தது.

  துளசிதரன், கீதா

  ReplyDelete
  Replies
  1. பேரன் ஆங்கிலத்தில் எழுதி இருந்தான் அதை தமிழ்ப்படுத்தினேன் நான் திரு ரமணியின் பின்னூட்டம் பார்க்க வேண்டுகிறேன்

   Delete
 8. இரண்டையுமே ரசித்தேன். தம +1

  ReplyDelete
  Replies
  1. எந்த இரண்டு என்று தெரியவில்லையே நன்றி ஸ்ரீ தமிழ் மண வாக்குக்கு

   Delete
 9. பல முறை முயற்சித்துவிட்டேன். என்னால் மொழிபெயர்க்க முடியவில்லை ஐயா. உங்களின் இருமொழித் திறமை என்னை வியக்க வைத்தது.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றி சார்

   Delete
 10. செல்வி மாதங்கியின் ஆங்கில கவிதைக்கு உங்களின் தமிழாக்கம் அருமை.

  //நான் கண்களை மூடிக் கொள்கிறேன்.
  நீ உன் சிறகசைப்பை விரைவாக்குகிறாய்
  இருட்டினூடே நீ மறைந்து விடுகிறாய்.
  உன் கூட்டிற்குள் சேர்ந்து விடுகிறாய்.
  உன் குஞ்சுகள் ஆர்பரிக்க உன் அலகால்
  அவற்றுக்கு ஆகாரம் ஊட்டுகிறாய்.

  நன்றாயிரு பறவையே .நீ நலமாயிரு.
  உன் நலம் நாடி கண்களை விழிக்கிறேன்.
  சென்று வா என் சின்னப் பறவையே.”//

  ஒவ்வொரு வரியையும் ரசித்தேன் அதிலும்
  கண்களை மூடி வாழ்த்துவது மிகவும் பிடித்து விட்டது.

  பேரனின் ஆங்கில கவிதைக்கு தங்களின் தமிழாக்கம் நன்றாக இருக்கிறது.

  /இனிமையின் இருப்பு நீ,பூரணத்தின் பொலிவு நீ
  என்னுள் என்னை மிளிரச் செய்பவள் நீ
  எல்லாம் எனக்கு நீயே அம்மா உலகில் சிறந்தவள் நீயே அன்றோ.!//

  அருமை.

  நமக்கு தெரிந்த மொழியில் கவிதை இருக்கும் போது மேலும் ரசிக்க முடிகிறது.

  உங்கள் கவிதையை படித்தேன் முதுமையில் ஏற்படும் நிலையை அழகாய் எழுத்தில் கொண்டு வந்து விட்டீர்கள்.

  //பார்த்த முகம் பரிச்சயமானது , பேர்மட்டும்
  வேண்டும்போது நினைவுக்கு வராது.
  ஆடும் சிறார் கண்டு மனம் மகிழும்
  கூடவே ஓடியாட உடல் மறுக்கும்.
  எண்ணங்களில் இளமை என்றுமிருக்கும்
  உடல் உபாதைகள் முதுமையை நினைவூட்டும்.
  வேண்டியதை விரும்பிச் செய்ய விழையும் மனமே,
  உன்னால் முடியாது என்று கூடவே கூறும்.//


  அப்பாதுரை சார் ஆங்கில மொழியாக்கம் செய்தது மகிழ்ச்சி.


  ReplyDelete
  Replies
  1. kurippittu rasitha varikalaip pakirumpothu manam makizkirathu. thamiz ezuththurukkal pirassanai tharuvathaal ivvizi. nanri madam

   Delete
 11. ம்ஹிம்...
  ம்ஹிம்...
  ம்ஹிம்...

  ReplyDelete
 12. தனிமைப்பறவை அழகான பாடல்!

  ReplyDelete
 13. சற்றே அதிக நேரம் தேவைப்படும் என்று நினைக்கிறேன், to do justice to your article.எனவே மீண்டும் வருவேன். அப்போது கருத்திடுவேன். - இராய செல்லப்பா சென்னையில் இருந்து.

  ReplyDelete
  Replies
  1. மீள்வருகையை எதிர் நோக்குகிறேன் நன்றி சார்

   Delete
 14. வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 15. அருமையான மொழிமாற்றம்! மூலக்கருத்தை உள் வாங்கி, மூலக்கவிதையில் உள்ளதுபோல் சொற்சிலம்பம் ஆடுவது எல்லோருக்கும் வராது. தங்களுக்கு அது ‘கை வந்த கலை’ போலும். பாராட்டுகள்!


  தங்களின் மொழிமாற்றத்தில் எனக்குப் பிடித்த வரிகள் கீழே.


  தனிமைப் பறவை


  //நன்றாயிரு பறவையே .நீ நலமாயிரு.
  உன் நலம் நாடி கண்களை விழிக்கிறேன்//


  அன்னை


  //விடியலில் என்னை எழுப்பும் ஆதவன் நீ
  அந்தியில் என்னை உறக்கும் நிலவும் நீ//

  //கலர்கலராய்க் கனவுகள், அலை அலையாய்
  கதை போல விரிந்து பரவும்.//

  செய்யாத குற்றம்

  //உலகோரே உங்களிடம் கேட்கிறேன்
  வயோதிகம் என்பது செய்யாத குற்றத்துக்கு
  விதிக்கப்பட்ட தண்டனையா..?//

  ReplyDelete
  Replies
  1. செய்யாத குற்றமும் மொழி மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது செய்தவர் திரு அப்பாதுரை திரு ரமணி சொன்னதுபோல் தமிழில் வாசிக்கும் போது நமக்கு ரசனை கூடுகிறது வருகைக்கு நன்றி ஐயா

   Delete
 16. ‘செய்யாத குற்றம்’ மொழி மாற்றம் இல்லை என்பது தெரியும்.. அதில் கடைசியில் வரும் கேள்வி அருமையாய் இருக்கிறது என எழுத நினைத்து மற்ற இரு மொழிமாற்றம் பற்றிய கருத்தோடு சேர்த்துவிட்டேன். தட்டச்சு செய்யும்போது அது தவறுதலாக மொழிமாற்றம் என வந்துவிட்டது மன்னிக்க!

  ReplyDelete
  Replies
  1. செய்யாத குற்றமும் மொழி மாற்றம் செய்யப்பட்டுஇருக்கிறதே

   Delete