சில பகிர்வுகள்
---------------------
வலை நண்பர்கள் என் உடல்
தேற  வேண்டி அன்புடன் ஓய்வு எடுத்துக்கொள்ள  வேண்டுகிறார்கள் அவர்களின்  கனிவுக்கு நன்றி என்னை அறிந்த வர்களுக்குத்  தெரியும்  IF I REST I WILL RUST அதை விட நான் என் நேரத்தை
பகிர்வதில் மகிழ்ச்சி அடைவேன்  
எனக்கு ஒரு நண்பர்
இருந்தார் அவர் சொல்வதுஇப்போதும்  என்
காதில் ரீங்கரிக்கிறது நமக்கு இவ்வளவுதான் தாங்கும்  சக்தி என்று நாம்நினைப்பதை விட  ஆறு மடங்கு நம்மால் தாங்க முடியும் என்பார்
அவர்  அது அவர் அனுபவத்தில் கூறியது 
மகளின் text  தந்தைக்கு
அப்பா  நான் திருமணம் செய்துகொள்ள வருகிறேன் உங்கள்
செக் புத்தகத்துடன் தயாராக  இருங்கள்
LOL  உங்களுக்குத் தெரியும்  நான் ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன்  அவர் யூ எஸ்ஸில்  இருக்கிறார் முகநூல் மூலம் நண்பர்களானோம்  வாட்ஸாப்பில் நிறையப்பேசினோம் ஸ்கைப்பில் அவர்
ப்ரொபோஸ் செய்தார் வைபர் மூலம் உறவு தொடர்ந்தது 
உங்கள் ஆசிர்வாதம்
வேண்டும் வாழ்துகளுடன் விமரிசையாகத் திருமணம் நடக்க வேண்டும்  அன்புடன் 
உங்கள் மகள் லில்லி
தந்தையின்  பதில் 
அன்புள்ள லில்லிக்கு   wow 
நிஜமாகவா ? என் சஜெஸ்ஷன்  நீங்கள்
ட்விட்டரில் மண முடியுங்கள் have fun in 
Tango அமேசான் மூலம்பொருட்களைப்பெற்றுக் கொள்ளுங்கள் pay pal  மூலம் பணம் 
செலுத்துங்கள்இந்தக் கணவன் போதுமென்றாகி விட்டால்   அவனை E bay 
மூலம் விற்றுவிடவும் 
ஆங்கிலத்தில் வந்த
விஷயம்  செய்தி தமிழில் பகிர்கிறேன்  
€ருவாய்
என அவன்  ஏங்கி நின்றான்  
வந்ததும்
வந்தாய் அவன் சென்றபின் வந்தாய்  
உறவுகளுக்கு
ஆறுதல் கூற அவன் இருக்கும்போதே
 வந்திருந்தால் அவனும் மகிழ்ந்திருப்பானே  
அவன்
குறைகளை மறந்தாயோ மன்னித்தாயோ
அதை
அவன்  அறிவது எங்ஙனம் 
அவனுள்ள
போதெ செய்திருக்கலாமோ 
அவனும்
மகிழ்ந்திருப்பானே 
அவன்
இருந்த போது இன்னும்  
அவனுடன்
நெருங்கி இருக்கலாமோ
 இருந்திருந்தால் அவனும்  மகிழ்ந்திருப்பானே 
எதற்கும்
காலம் தாழ்த்தாமல் இருந்தால்  
நலமாய்
இருந்திருக்கும்   என இப்போது 
தோன்றுவது
அப்போதே செய்திருந்தால்
அவனும்  மகிழ்ந்திருப்பானே 
இந்தக் காணொளியைப் பலரும் கண்டிருக்கலாம்   இன்னுமொரு முறையும்  காணலாம்  ஒரு நாயின்  பரிவு என்ன என்று  தெரிய வரும்
இந்த படம் பற்றி ஏதேனும்  யூகம் உள்ளதா  ஒரு க்லூவும் இருக்கிறது லண்டன் இண்டெர் நேஷனல்  கேக் காம்பெடிஷனில்  முதல் பரிசு பெற்ற  சீனாக்காரனின்  கேக் இது சாப்பிடத் தோன்றுமா   
|  | 
| மங்கை ஒரு கேக்காக | 
ரசித்தேன் அனைத்தையும்.
பதிலளிநீக்குஸ்ரீராம் ரசித்தார் என்றால் மகிழ்ச்சிதானே
நீக்குமீண்டும் உற்சாகமாகப் பதிவுகள் தர ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஅருமையான தொகுப்பு.
எழுதிப் பழகிவிட்ட என்னால் வாளா இருக்க முடியவில்லை உற்சாக மூட்டுவதற்கு நன்றி மேம்
நீக்குஸூப்பர் பதிவு ஐயா
பதிலளிநீக்குகாணொளி கண்டேன் அது சித்தரிக்கப்பட்டதாக இருந்தாலும் நல்ல அனுபவத்தை தந்து இருக்கிறது நான் முதன்முறையாக காண்கிறேன் பகிர்வுக்கு நன்றி.
சித்தரிக்கப் பட்டதா என்னால் இனம் காண முடியவில்லை வருகைக்கு நன்றி ஜி
நீக்குரசித்தேன் ஐயா
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சார்
நீக்குகாணொளி முதல் தடவை பார்க்கிறேன் மிக அருமை....என்வீட்டிலும் அதே போல ஆனால் வெள்ளைகலரில் ஒரு நாய்குட்டி நான் வேலை செல்லும் நேரம் தவிர மீதி நேரம் எல்லாம் அவன் என் கூடத்தான் உற்ங்குவதும் என் பெட்டில்தான் இப்போதெல்லாம் அவனை பிரிந்து இருக்க முடியாத நிலைதான் பயணம் என்றால் எங்கு காரில் செல்லமுடியுமோ அங்குதான் பயணம் இல்லையென்றால் நோ
பதிலளிநீக்குநாய் பற்றிய காணொளி சிலர் ரசிப்பார்கள் என்று தெரியும் ஸ்ரீராமும் தில்லையகத்து கீதாவும் நாய்ப் பிரியர்கள் ஆனல் நமது இலக்கியங்களில் நாய் பற்றி கூறி இருப்பது வேறு மாதிரி இருக்கிறது சார்
நீக்குமகள் தந்தைக்கு அனுப்பிய மெயில் ஏற்கெனவே படிச்சது. மற்றவை புதிது. பகிர்வுக்கு நன்றி. மங்கை கேக்காக இருப்பது ஆச்சரியம்!
பதிலளிநீக்குகேக்கை கடித்தால் மங்கையை கடித்த மாதிரி இருக்குமோ அது சீனாக்காரரின் கை வேலை என்று எனக்கு வந்த செய்தி கூறுகிறது
நீக்குஎன்னது கேக்கா...?!!!!
பதிலளிநீக்குஅப்பட்த்தான் எனக்கு வந்த செய்தியில் இருந்தது
நீக்குகாணொளி ஏற்கனவே பார்த்திருக்கிறேன் என்றாலும் மீண்டும் பார்ப்பதும் அலுக்காது சார்.
பதிலளிநீக்குஉற்சாகமாக எழுதுங்கள் சார்...நல்ல பதிவு
கீதா
நீங்கள் ஒரு நாய்ப்பிரியை என்று தெரியும் ரசிப்பீர்கள் என்றும் தெரியும்
நீக்குமீண்டும் வலைத்தளத்தில் உங்கள் பதிவைக் கண்டதில் மகிழ்ச்சி. நீங்கள் தன்னம்பிக்கையானவர்.
பதிலளிநீக்கு// IF I REST I WILL RUST //
என்ற வரி எனது மனதில் பதிந்தது. நன்றி.
எனக்கிருக்கும் சில நல்ல குணங்களில் என் மீது இருக்கும் நம்பிக்கையும் ஒன்று . உங்கள் உடல் நலம் பற்றி பிறகு ஏதும் தெரிவிக்க வில்லையே
நீக்குநலன் விசாரிப்பிற்கு நன்றி அய்யா. நான் நலம். உங்கள் மின்னஞ்சலுக்கு எனது மறுமொழியை அனுப்பி வைத்துள்ளேன்.
நீக்குசுவையான பகிர்வுகள்! நன்றி ஐயா!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சுரேஷ்
நீக்குகாணொளி மிகவும் அருமை. மங்கை வடிவ கேக் பிடித்தது.
பதிலளிநீக்குகேக்குக்கு போஸ் கொடுத்த மங்கை பற்றியும் சிந்தனை வந்தது வருகைக்கு நன்றி சார்
நீக்குஅனைத்தும் அருமை.
பதிலளிநீக்குகாணொளி முதல் தடவைப் பார்க்கிறேன்.
மங்கை வடிவ கேக் அழகு.
உங்களுக்கு எல்லாமே அழகாகத் தெரியும் அது உங்கள் குணம்
நீக்குபல்சுவைக் கதம்பம் அருமை.
பதிலளிநீக்குவீடியோ சூப்பர்.
நீக்குபாராட்டுக்கு நன்றி அதிரா
நீக்குஉங்கள் நண்பி ஏஞ்சல் இன்னும் காணவில்லையே மிகவும் பிஸியோ
நீக்குமுதலில் சிரிப்பாக இருந்தது. காணொளி சிந்திக்கச் செய்தது. நன்றி
பதிலளிநீக்குதஒடர்ந்து வந்து உற்சாக மூட்டுங்கள் மேம்
நீக்குIf I rest I will rust என்பது உங்களுக்குப் பொருந்தாது என நினைக்கிறேன் ஐயா. இன்னும் மெருகேறுவீர்கள். உங்கள் எழுத்திலும் மெருகேறும் என்பது என் நம்பிக்கை.
பதிலளிநீக்குஓய்வெடுத்தால் துரு வேறும் என்று சொல்ல நினைத்தேன் மற்றபடி அப்படியாக விடமாட்டேன்
பதிலளிநீக்குகாணொளி பிடித்திருக்கிறது. மங்கை வடிவ கேக். கூடுதல் சிறப்பு.
பதிலளிநீக்குகாணொளி பிடித்திருக்கிறது. மங்கை வடிவ கேக். கூடுதல் சிறப்பு.
பதிலளிநீக்கு