Thursday, August 30, 2018

யார்தான் இவர் யாரோ


                          யார்தான்   இவர்  யாரோ
                         --------------------------------------
காற்றடைத்த பலூனில் மாதொருத்தி
ககனமார்க்கமாகப் பறக்கையில்
போகுமிடம் அறிந்தும், இருக்குமிடம்
அறியாமல்,சிறிதே காற்றிறக்கிக் கீழே
பறந்தவள் பார்த்தாள் ஆங்கொரு மனிதனை.
இன்னும் சற்றே கீழே பறந்துச் சத்தமாகக்
கேட்டாள்,” ஐயா, நான் எங்குள்ளேன்.?
ஒரு மணிநேரம் முன்பே ஒருவரை நான்
சந்தித்திருக்க வேண்டும். போகும் திசை
புரியாமல் நானும் விழிக்கிறேன்.”

நீங்கள் காற்றடைத்த பலூனில் தரையிலிருந்து
சுமார் முப்பது அடி உயரத்தில் ,நாற்பது டிகிரி
வடக்கு லாடிட்யூடிலும் அறுபது டிகிரி
கிழக்கு லாஞ்சிட்யூடிலும் பற்ந்து கொண்டு
இருக்கிறீர்கள்பட்டென்று பதில் வந்தது.

நீங்கள் ஒரு பொறியாளரோ.?”

ஆம். எப்படிப் புரிந்து கொண்டீர்கள்.?”

நீங்கள் கூறியதெல்லாம் சரியான குறியீடுகள்.
 
ஏதும் புரியாத புதிராய்,எனக்குதவாத பதில்கள்.
 
நான் இன்னும் காணாமல்தான் போகிறேன்.
 
போதாக்குறைக்கு உங்களால் இன்னும் தாமதம்.
 
இது போதாதா புரிந்து கொள்ள. “

நீங்கள் ஒரு உயர்மட்ட நிர்வாகியோ.?”

ஆம். எப்படிக் கண்டு பிடித்தீர்கள்.?”

எங்கிருக்கிறோம் எங்கு போகிறோம் என்று
 
புரியாமல் இருக்கிறீர்கள்.கொடுத்த வாக்கைக்
 
காப்பாற்ற எந்த சிந்தனையும் இல்லாமல்
 
கீழிருப்பவர் உங்கள் பிரச்சனைக்கு தீர்வு சொல்ல
 
எதிர்பார்க்கிறீர்கள் .இதற்கு மேலும் என்ன
 
வேண்டும் உங்களைக் கண்டுகொள்ள.”
------------------------------------------------------------------

வனாந்திரப் பகுதி ஒன்றில்  ஆட்டிடையன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான் 
புத்தம் புதிய கார் ஒன்றில் கனவான் ஒருவன் ஆட்டிடையனை அணுகினான்  உன்னிடமிருக்கும்  ஆடுகளின்   எண்ணிக்கையை நான் கூறிவிட்டால் எனக்கொரு ஆடு தருவாயா

வந்தவனை ஒரு முறை ஏறெடுத்து நோக்கினான்   இடையன்   பரந்தவெளியில் மேயும் தன்  ஆடுகளையும் ஒரு நோட்டம்விட்டான் ஒப்புதலாக தன் தலையை ஆட்டினான்   ஆட்டிடையன்
வந்தவன் ஆடுகளின் மேல் தன் பார்வையைச் செலுத்தினான்
அங்கு விரிந்தது அவன் மடிக்கணினி நாசா வெப்சைட்டில் புகுந்தான் தரையை ஜீ பி எஸ்ஸில்  பர்த்தான் ஒரு டாட்டா(data) பேசை உருவாக்கினான் சில வினாடிகளில் 150 பக்கங்களை தன்  மினி ப்ரிண்டரில் எழுதிப் பதிவுசெய்தான் இடையனைப் பார்த்து 1586 ஆடுகள் இங்கே மேய்கின்றன என்றான் இடையன் முறுவலித்து உனக்குப்பிடித்த ஆட்டை எடுத்துக் கொள் என்றான் தன் காரில் தனக்குப் பிடித்த ஆட்டைவைத்தான்   வந்தவன்
முறுவல் மாறாமல்  ஆட்டிடையன் உன் பணி என்ன என்று நான் யூகித்துக் கூறிவிட்டால் என் ஆட்டைத் திருப்பித் தருவாயா  ஆட்டிடையனுக்கு முடியாது என்று எண்ணி  நிச்சயமாக  என்றான் வந்தவன்
 நீங்கள் ஒரு நிர்வாக ஆலொசகர்தானே
 உனக்கு எப்படித் தெரிந்தது
 மிகவும் சுலபம்   என்ற ஆட்டிடையன்
முதலில் நான் வேண்டாமலேயே வந்தீர்கள் 
எனக்குத் தெரிந்ததைச் சொல்ல  என்னிடம் விலை பேசினீர்கள்
 மூன்றாவதாக  என் தொழில் பற்றிஏதும் தெரியவில்லை உங்களுக்கு
 இப்போது என்  நாயைத் திருப்பித்தருவீர்களா 
---------------------------------------------------------------------------------------------------------    








20 comments:

  1. இரண்டாவதை மிகவும் ரசித்தேன். புன்னகைத்தேன்!

    ReplyDelete
    Replies
    1. எனக்கு வாட்ஸாஅப்பில் வந்ததை தமிழ்படுத்தி இருக்கிறேன்

      Delete
  2. ரசித்தேன் ஐயா
    நண்பர் ஸ்ரீராம் போலவே இரண்டாவதை மிகவும் ரசித்தேன்

    ReplyDelete
  3. இரண்டாவது சூப்பர் ஐயா.

    ReplyDelete
  4. So management consultants also lose sometimes to even Shepherds.I wonder why didn't the dog bark or bite?.

    ReplyDelete
    Replies
    1. the idea is that what has been read is only theoretical and their practical information are next to nothing meant just as a joke

      Delete
  5. எனக்கும் இரண்டாவதுதான் பிடிச்சிருக்கு

    ReplyDelete
  6. //இப்போது என் நாயைத் திருப்பித்தருவீர்களா //

    இராண்டாவது நன்றாக இருக்கே!

    ReplyDelete
    Replies
    1. பெரும் பாலும் படிப்பது வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இருப்பதை நகைச்சுவையாக்கியது

      Delete
  7. இரண்டையுமே ரசித்தேன் ஐயா.

    ReplyDelete
  8. வருகைக்கும்ரசிப்புக்கும் நன்றி ஐயா

    ReplyDelete
  9. இரண்டும் அருமை!

    ReplyDelete
  10. வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி மேம்

    ReplyDelete
  11. Replies
    1. வருகைக்கு நன்றி மேம்

      Delete
  12. இரண்டும் ரசித்தேன். இரண்டாவது முன்னரே படித்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இரண்டாவதுநான் தமிழ்படுத்தியது வருகைக்கு நன்றிசார்

      Delete