Monday, November 26, 2018

வீர ஆஞ்சநேயர் கோவில் மஹாலக்ஷ்மி லேஅவுட்



                                வீர ஆஞ்சநேயர்  கோவில் மஹா லக்ஷ்மி  லேஅவுட்
                                   ---------------------------------------------------------------------------
இந்த மாதம்  17ம் தேதி தமிழில் கார்த்திகை மாத முதல் தேதியாம் பல ஆண்டுகளுக்குப் பின்  என் மனைவி மஹாலக்ஷ்மி லேஅவுட்டில்  இருக்கும்  வீர ஆஞ்சநேயஸ்வாமி  கோவிலில் வடை மாலை சார்த்துவதாக பிரார்த்தனைசெய்து அதற்கான பணமும்கட்டி ரசீதும்வாங்கி இருந்தாள் என்  வீட்டில் இருந்து சுமார் பத்து கிமீ தூரத்திலிருப்பது ஒரு சிறு குன்றின் மீது அமைந்திருக்கிறது
பெங்களூரில் பிரசித்தி பெற்ற ஹனுமான்  கோவில்களில் ஒன்று  முன்பெல்லாம் அடிக்கடி செல்வது வழக்கம்  காலை சுமார் 11 மணி அளவில் மங்கள் ஆரத்தி நடை பெறும்  நான்கு வேதங்களாலும் போற்றுவார்கள் அங்கு சுமார் 22 அடி உயரமும் 16 அடி அகலமும்  கொண்ட  ஆஞ்சநேயர் சிலைக்கு பக்தர்களே அபிஷேகம்செய்யலாம் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்வெண்ணை அலங்காரம் ஷ்ரவண மாதம்  (புரட்டாசி )செய்வார்கள் அத்தனை பெரிய சிலைக்கு வெண்ணை  அலங்காரம்பக்தர்களின் பங்களிப்போடு நடைபெறும்   ஒரு பக்தர் மறக்காமல் எங்களிடம் அன்பளிப்பு வாங்கி பின் பிரசாதமும் ஒவ்வொரு முறையும் தருவார் ஒரு முறை தம்பதிகள் சமேதராக விளக்கு பூஜை செய்தோம் அங்கேயே  உணவும் உண்டு  என் இளையமகன் ஒரு ஆஞ்சநேய பக்தன்  திருச்சி குடி இருப்பில் இருந்தபோது  முதல் மாடியிலிருந்து எதற்கோ எட்டிப்பார்த்த போது  கீழே விழுந்து விட்டான்  ஆனால் எந்தகாயமும் இல்லாமல்  எழுந்து வந்தான்   அவன் கழுத்தில் இருந்த ஆஞ்ச்நேயர் டாலரே  அவனைக் காப்பாற்றியது என்றுநம்பினான்
 இந்த கோவில் 1980 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகசெய்தி 
 முன்பு பொட்டல் காடாக இருந்தகுன்றில் இருந்தபெரிய  கருங்கல்லை ஒரு கான்வாசாக  உபயோகப்படுத்தி  ஹனுமான்  படம்வரைந்தாராம் பின்  பக்தர்கள் துணையோடு கற் சிலையாக வடிக்கப் பட்டதாம்   அழகானகுன்றில்  இருக்கும் இந்தக் கோவில் அமைதி தவழ்வதுஒரு பெரிய மஹாலக்ஷ்மி சிலையும் உண்டு  கோவிலின் கோபுரம் இப்போது  தங்கத்தால்  வேயப்பட்டு இருக்கிறது காலை ஆறு மணியில் இருந்து இரவு எட்டு மணிவரை கோவில் திறந்திருக்கும் 17 ம் தேதி கோவில் சென்று வடை மாலை  சார்த்தப்பட்டதற்கான  அடையாளமாக  வடைகளைபிரசாதமாகக் கொடுத்தார்கள்  பெங்களூரில்  மஹாலழ்மி லேஅவுட்தவிர ராகி குட்டா  என்னும் இடத்திலும்   பான்ஸ்வாடியிலும்  ஆஞ்ச்நேயர் அருள் பாலிக்கிறார் இன்னும்  சில இடங்களும் இருக்கலாம்  இவை நான் போய்ப் பார்த்துவந்த இடங்கள். பலருக்கும்  நினைவு இருக்கலாம் பல ஆண்டுகளுக்கு முன்   பான்ஸ்வாடி  ஆஞ்ச்நேயர் கண்களிலிருந்து நீர் வழிந்ததாக செய்தி பத்திரிகைகளில் வந்தது
குன்றேற  படிக்கட்டுகள்


விக்கிரகங்கள்  பிரதிஷ்டை  செய்த இடம் 


மேல் தளத்தில் ஆஞ்ச நேயர் படம் 
மஹாலக்ஷ்மி சிலை 


விநாயகர் 
ராம லக்ஷ்மண சீதா 



லக்ஷ்மி


வீர ஆஞ்சநேயர் சிலை 












34 comments:

  1. அருமையான தரிசனங்கள். இந்த ஆஞ்சநேயர் கோயில் பற்றிய விபரங்களுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆஞ்சநேய பிரியர் நீங்கள் பெங்களூர் வண்டால் அவசியம் பார்க்க வேண்டிய கோவில்

      Delete
  2. Replies
    1. என் பதிவுகளை வாசிப்பவர்களில் பலரும் பக்தர்களே இருந்தாலும் பதிவுக்கு அட்டெண்டன்ஸ் இதுவரை எதிர்பார்த்த அளவு இல்லை வருகைக்கு நன்றி

      Delete
  3. விவரங்கள் தெரிந்து கொண்டேன்.

    அதிகாலை ஆஞ்சநேயர் தரிசனம்.

    ReplyDelete
    Replies
    1. பெங்களூர் வந்தால் கோவிலுக்கு வரலாமே நன்றி ஸ்ரீ

      Delete
  4. படங்களின் தரிசனங்களோடு விளக்கமும் நன்று.

    ReplyDelete
  5. வீர ஆஞ்சனேயரின் தரிசனம் காலையிலேயே... நன்றி.

    கோவில் பற்றிய தகவல் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆஞ்சநேயர் அருள் பாலிக்கட்டும் வருகைக்கு நன்றி சார்

      Delete
  6. தரிசனம் சிறப்பு... துணைவியால் நலம் பெறுக...

    நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. 54 ஆண்டுகள் அவளால் நானும் என்னால் அவளும்நாம்பெற்றே வந்திருக்கிறொம் நன்றி சார்

      Delete
  7. பிரார்த்தனைக்கும் :-

    1) உங்களின் எண்ணங்களுக்கும் (உங்களின் பதிவுகளுக்கும்)
    2) மற்ற தளத்தில் உங்களின் கருத்துரைக்கும் சம்பந்தமே இல்லையே ஐயா...

    நன்றி ஐயா...

    ReplyDelete
  8. சம்பந்தம் ஏதோ இருக்க வேண்டும் என்று நினைத்து தேடுகிறீர்கள்திறந்த மனதுடன் எழுத்துகளை அணுகுங்கள்

    ReplyDelete
  9. சம்பந்தமாக எதையோ நினைத்துக் கொண்டு வாசிக்கிறீர்கள்

    ReplyDelete
  10. வீர ஆஞ்சநேயர் படன் ரொம்ப நன்றாக வந்துள்ளது.

    நீங்கள் ராகிகுடா (ஜெ.பி. நகர்) ஆஞ்சநேயர் கோவிலைச் சொல்கிறீர்களோ என்று பார்த்தேன்.

    ஆமாம்... வடைமாலை படம் எங்குபோய்விட்டது?

    ReplyDelete
  11. ராகி குட்டா ஆஞ்சநேயர் கோவிலுக்கும் சென்றிருக்கிறேன் பதிவிலும் சொல்லி இருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. @நெத படத்தில் வடை மாலையைப் பார்க்க வில்லையா ஆஞ்சநேயருக்கு சார்த்தி இருக்கிறதே

      Delete
    2. இப்போதான்பார்த்தேன். ஆஞ்சநேயர் உருவத்தில் அந்த வடைமாலை இப்போவும் தெளிவாத் தெரியலை. அது நீங்க சாத்தினதா? ரொம்பப் பெரிசா இருக்கு?

      Delete
    3. அத்தனை பெரிய சிலையில் வடைகள் மிகச் சிறியதாகத்தான் தெரிகிறதுபலரும் வடை மாலை சார்த்துகின்றனர் எங்கள் பங்கும் உண்டு அன்றைக்கு

      Delete
  12. படங்களுடன் அனுமன் கோவில் விவரம் அருமை.
    பெரிய அனுமன் தான். வடைமாலை இவருக்கு போட நிறைய வேண்டுமே! அவர்களே தானே செய்வார்கள்?
    குழந்தையாக இருக்கும் போது அனுமன்தான் குழந்தைகளுக்கு இஷ்ட தெய்வமாக இருக்கும்.உங்கள் மகனின் நம்பிக்கை அருமை.

    ReplyDelete
  13. படங்கள் அருமை ஒருமுறை இக்கோவிலுக்கு நானும் சென்றிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நினைவில் இருப்பது மகிழ்ச்சி

      Delete
  14. கர்நாடகத்தில் அனுமன் வழிபாடு பிரசித்தம் வடை மாலை கோவிலில் இருந்தே தயார் ஆகிறது நாம் பணம் கட்டினால் போதும்

    ReplyDelete
  15. எனக்கும் ஆஞ்சநேயரை ரொம்பப் பிடிச்சுப் போச்சு... இலங்கையில் எங்கள் ஊரிலும் ஆஞ்சநேயரின் பென்னாம்பெரிய சிலை அமைத்திருக்கிறார்கள் கோயிலுக்கு வெளியே.. அது எப்படியும் 30-40 அடியாவது வரும்...

    படங்கள் அழகு தரிசனம் கிடைத்ததில் மகிழ்ச்சி.
    பொதுவா வெற்றிலை மாலைதானே போடுவினம், வைரவருக்குத்தானே வடை....

    ReplyDelete
    Replies
    1. வெற்றிலைமாலை போடும் வ்ழக்கமும் உண்டுவைரவருக்கு வடை தெரியாத செய்தி வருகைக்கு நன்றி

      Delete
    2. வைரவருக்கும் வடைமாலை உண்டு. நாங்க சிதம்பாம் கோயிலில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு நெய் வடைமாலை சாற்றி வழிபட்டிருக்கோம். அதே போல் கருடாழ்வாருக்கும் கொழுக்கட்டை/வடைமாலை உண்டு. நெ.த. கொழுக்கட்டையை அமிர்த கலசம் என்கிறார். உள்ளே என்ன இருக்கும் என அவர் சொன்னால் தான் உண்டு. :))))

      Delete
    3. தகவ்லுக்கு நன்றி மேம்

      Delete
  16. அருமை! இவரை இன்னும் தரிசனம் செய்யலை. ஆனால் வரும் மார்ச் மாதம் அங்கே வரணும். அப்போ கிடைக்கணுமுன்னு இப்பவே வேண்டிக்கறேன்!

    ReplyDelete
    Replies
    1. மார்ச் மாதத்துக்காக காத்திருக்கிறேன் நன்றி மேடம்

      Delete
  17. எங்கள் கோயில் உலாவின் போது, செல்லவுள்ள கோயில்களில் குறித்துக்கொண்டேன் ஐயா.

    ReplyDelete
  18. கோவில் உலாபோது பெங்களூர் வந்தால் சந்திக்க விருப்பம் நன்றி சார்

    ReplyDelete
  19. இப்போதுதான் இந்தப் பதிவைப் பார்த்தேன். பெங்களூர் முழுதுமே ‘லே-அவுட்’தானே. ‘மஹாலக்ஷ்மி லே-அவுட் ஆஞ்சனேயர்’ என்று இப்படிக் குறுக்கிவிட்டாரே என நினைத்தேன். ஒருவேளை, இந்தப்பெயரில்தான் பிரசித்தம் போலும்.

    உங்கள் இளைய பையனை திருச்சியிலே காப்பாற்றியிருக்கிறார் ஆஞ்சனேயர்! வடைமாலை வைபவத்திற்கு அவரையும் ஜலஹள்ளிக்கு அழைத்திருக்கலாமே..வந்தாரா? அவரைத்தான் உங்களோடு புதுக்கோட்டைப் பதிவர் விழாவில் பார்த்தேன் என நினைக்கிறேன்.. பெரும்பாக்கம் வீட்டுக்காரர்தானே அவர்?

    படங்கள் சில blurred-ஆகத் தெரிகின்றன. கோவில்பற்றிப் பகிர்ந்தது நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  20. மஹாலக்ஷ்மி லேஅவுட் ஆஞ்சநேயர் என்னும் பெயரில்தான்பிரசித்த ம் என் இளைய மகனு வந்திருந்தார் உங்கள்நினைவு சரியே புதுக்கோட்டைக்கு வந்தவர்தான் ஆனால் பெரும்பாக்கத்துக்காரர் இல்லை

    ReplyDelete