Sunday, March 17, 2019

நம் அரசு பற்றி அயலக ஏடு ஒன்றின் பதிவு


                             நம் அரசுபற்றி அயலக ஏடு ஒன்றின் பதிவு
                            -------------------------------------------------------------------
 எனக்கு நீண்ட நாட்களுக்குப் பின்  ஒரு மெயில்வந்தது அதில் கண்ட வரிகள்அவற்றை வலை நண்பர்களுடன்  பகிர வேண்டும் என்று நினைக்க வைத்தது
முனவர் ஜம்புலிங்கம் அவர்கள் அயலக வாசிப்பு  என்று பதிவுகள் இடுகிறார் அயலக ஏடுகளில் காண்பவற்றைபகிர்வது நன்றாயிருக்கும்   என்பதால் இதை அதில் உள்ளவாறே  பகிர்கிறேன்  நம் அரசும் நம் கான்ஸ்டிட்யூஷனும்  வேற்றுமை இல்லா அரசு என்பதையே கூறுகின்றன  ஆனால்  இப்போதைய அரசு மாற்றுக்கருத்துகளைக் கொண்டவர்களையே பலியாக்கி விடுகிறது மதம் என்றும்  சாதி என்று கூறியே வாழ்கிறோம்  இல்லை என்று கூறுபவர்கள்வெளிக்கு அப்படிச் சொன்னாலும்  உண்மையில் அதையே  நம்புகிறார்கள் அதை நான் சொல்வதை விடஅயலக ஏடு ஒன்று என்ன சொல்கிறது என்பதைப் பாருங்கள்  சிறிது நீளமுடையதானாலும்  தயை செய்து முழுதும் படியுங்கள்  ஆங்கிலம் தெரிந்தவர்கள் பதிவுலகில் இருக்கிறார்கள் என்னும்   நம்பிக்கையே என்  வார்த்தைகளில்  கூறாமல்  அதில் உள்ளது உள்ளபடியே  கூறுகிறேன் நம் அரசுபற்றி அயலக  ஏட்டின் கருத்தும் தெரிகிறது என்முன்னுரையே நீண்டு விட்டது

நியூ யார்க் டைம்ஸ் 


பதிவை வாசித்தீர்களா நண்பர்களே  கருத்துகளைப்பகிரலாமே 

42 comments:

  1. பொதுவான கருத்து புரிகிறது. பின்னர் படிக்கிறேன். முதல் கமென்ட்டாய் இதை இடுவதற்கு(ம்) மன்னிக்கவும்!

    ReplyDelete
    Replies
    1. மீள்வருகை தந்து கருத்திட வேண்டுகிறேன்

      Delete
  2. சார், அயலக ஏடுகள் வெளியிடும் கருத்துக்கள் சரியா என்று சரி பார்ப்பது தான் நாம் செய்யக் கூடியது. சரி பார்ப்பது உங்கள் புரிதல் சம்பந்தப்பட்டது. உங்கள் புரிதலின் படி அது சரி என்றால் சரி,
    என் புரிதலின் படி அது தவறு என்றால் தவறு. அவ்வளவு தான்.
    உங்களுக்கு சரியானதை இன்னொருவருக்கு நியாயப்படுத்த முடிந்தால் விவாதம் தான் மிஞ்சும். அப்படியான விவாதங்களுக்கு நானும் நீங்களும் முழுத் தகவல்களை பெற்றிருக்கிற ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். பிற நாட்டு உள் சுதந்திரங்களில் தலையிடுகிற வேலையை எல்லா நாட்டு அரசியலும் கொண்டிருக்கின்றன எனப்து பொதுவாக எல்லோரும் ஏற்றுக் கொள்கிற புரிதல். சில தகவல்கள் ராஜீய ரகசியமாக வெளியில் சொல்லப்படாததாக கூட இருக்கலாம். அதனால் அவை சாதாரண பொதுமக்களின் தெரிந்து கொள்ளலலுக்கு அப்பாற்பட்டு இருக்கலாம்.
    அதனால் வெளிநாட்டு பத்திரிகை பிரசுரங்களை வைத்து அதன் அடிப்படையில் எது பற்றியும் தீர்மானம் கொள்ளாமல் இருப்பதே நாட்டுக்கு நல்லது.

    ReplyDelete
    Replies
    1. கருத்துகள் நம்போன்ற பொடு மக்களுக்கு ஏதோ பெர்செப்ஷன் மூலமே ஏற்படுகிறது இதில் சரி எது டவறு எது என்பதுபிர்ரச்ச்டனை அல்லஎன்னேன்ன கருத்துகள் உலவுகிறது என்பதை அறியலாம்

      Delete
    2. நிறையவே தட்டச்சுப் பிழைகள் பொதுவுக்கு பொடு ---தவறுக்கு டவறு ------பிரச்சனைக்கு பிர்ரச்ச்டனை மன்னிக்கவும்

      Delete
    3. ஜீவி சார்... உங்கள் கருத்துகள் மிகவும் சரி என்றே நான் நினைக்கிறேன்.

      எந்த ஒரு நிகழ்வையும் நம் கோணத்தில் பார்க்கலாம். அதை வைத்து நாம் புரிந்துகொள்ளலாம்.

      Delete
    4. நம் கோணமே சரி என்று நினைக்கும்வாய்ப்புமுண்டு

      Delete
  3. சீனா ஐயாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்...

    ReplyDelete
    Replies
    1. சினா ஐயாவின் மறைவுக்கு இரங்கலை எங்கள் பிளாகில் பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தேன் பதிவுக்கு கருத்தில்லையா

      Delete
  4. Replies
    1. அரசியலும் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா

      Delete
  5. //ஆனால் இப்போதைய அரசு மாற்றுக்கருத்துகளைக் கொண்டவர்களையே பலியாக்கி விடுகிறது// - இது உங்கள் பெர்சப்ஷன். என் பெர்சப்ஷன் முற்றிலும் வேறுமாதிரியானது.

    இது நாம் எதை வாசிக்கவிரும்புகிறோம், யார் சொல்வதை நம்ம ஆசைப்படுகிறோம் என்பதைப் பொறுத்தது.

    ReplyDelete
    Replies
    1. ஒரு சிறு மாற்றம் மாற்றுக் கருத்து உடையவர்கள் சிறிது பெயர் பெற்றவர்களாகி விட்டால் / இது நாம் எதை வாசிக்கவிரும்புகிறோம், யார் சொல்வதை நம்ம ஆசைப்படுகிறோம் என்பதைப் பொறுத்தது/ எதையாவது தெரிந்து கொள்ள விரும்பினால் you must be prepared to unlearn what you have already learnt .

      Delete
    2. ஜிஎம்பி சார்... மற்றவர்கள் கருத்தை நாம வாசிப்பது என்பது வேறு. நாம் எதைப் பகிர்வோம்னா, நாம் நினைப்பது மாதிரியே மற்றவர்கள் எழுதியிருந்தால் அதனைப் பகிர்வோம். உங்க பெர்சப்ஷன் பாஜகவுக்கு எதிரானது. அதுனால பாஜக ஆதரவுச் செய்திகளை, எங்கு போட்டிருந்தாலும், நீங்க படித்தாலும், அதனைக் கண்டுகொள்ளாமல் போய்விடுவீர்கள். அதைத்தான் நான் சொல்லியிருக்கேன்.

      Delete
  6. //மதம் என்றும் சாதி என்று கூறியே வாழ்கிறோம் இல்லை என்று கூறுபவர்கள்வெளிக்கு அப்படிச் சொன்னாலும் உண்மையில் அதையே நம்புகிறார்கள்// - இதுதான் பெரும்பான்மையினரின் மனநிலை கடந்த 60+ வருடங்களாக. இது ஏனோ இந்த சில வருடங்களில் வந்ததில்லை.

    மதம் இல்லை, சாதி இல்லை என்று பேசுபவர்கள் அனேகமாக எல்லாரும், உதட்டளவில்தான் பேசுகிறார்கள். முற்றிலும் அதனைக் கடைபிடிப்பவர்களை நீங்கள் உதாரணமாகக் காட்டலாம்

    ReplyDelete
    Replies
    1. அது என்ன 60 வருடங்கள் எங்கள் கிராமத்தில் நான் சிறு வயதில் பார்த்தது மாதிரி இப்போது இல்லை கிராம அக்கிரகாரத்திலேயே மற்ற சாதியினரும்வசிப்பதைக்கண்டேன்

      Delete
    2. சார்... அதற்குக் காரணம் வேறு ஒன்றும் இல்லை. அங்கு இருந்தவர்கள் புலம் பெயர்ந்துவிட்டார்கள். அதனால் தங்கள் வீட்டை விற்றுவிட்டார்கள். அவ்வளவுதான்.

      Delete
    3. வாங்குபவர் அக்கிர காரத்துமனிதர்கள் ஆக இருந்தால் மட்டும் விற்கப்படும்முன்பெல்லா தாழ்த்தப்பட்டவர்கள் அக்கிர கார்த்தில் நடக்கவே முடியாது அதுவும் மிதியடி அணிந்து என்றால் நினைத்துக்கூட பார்க்க முடியாது இப்போது எவ்வளவோ மாறுதல்கள்

      Delete
  7. என் அயலக வாசிப்பினை பற்றி நினைவுகூர்ந்தமைக்கு நன்றி ஐயா. கடந்த 10 ஆண்டுகளாக அயலக இதழ்களை வாசிக்கும்போதும், சில சமயங்களில்தான் ஆழமாக வாசிக்கமுடிகிறது. நியூயார்க் டைம்ஸ் இதழில் ஒரு மாதத்திற்கு ஐந்து கட்டுரைகளை மட்டுமே இலவசமாகப் படிக்க முடியும். அதனால் சில சிக்கல்கள் உள்ளன. கார்டியன், டெய்லி மெயில், சன், டெலிகிராப், அப்சர்வர், டான் போன்ற இதழ்களில் வரையறை கிடையாது. சில வருடங்களுக்கு முன்னால் நியூயார்க் டைம்ஸ் இதழில் The India Ink என்ற தலைப்பில் புதிதாக ஒரு உள் தளத்தையே உருவாக்கி இந்தியா தொடர்பான முக்கிய பதிவுகளை வெளியிட்டார்கள். அதனை பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் படிப்பதை பகிர வேண்டுமென்பதேஎன் அவா

      Delete

  8. படிக்க படிக்க ஜவ்வுமிட்டாய் போல இழுத்து கொண்டே போவதால் மேலும் படிக்க விருப்பமில்லை என்னை பொருத்தவரை சொல்ல வரும் விஷயத்தை நறுக்கென்று சொல்லி ஒரு படத்தையும் வெளியிட்டு விளக்க வேண்டும் இல்லையென்றால் அதை படிக்க இந்த காலத்தில் உள்ளவர்கள் யாருக்கும் நேரம் கிடையாது முடிந்தால் நீங்கள் படித்துவிட்டு நறுக்கென்று நாலுவரியில் பதிவு எழுதுங்கள்

    ReplyDelete
    Replies
    1. அப்படிச் செய்தால் அதில் என் சுய கருத்துகளாக எண்ணப்படும் வாய்ப்பும் உண்டு

      Delete
    2. இந்த காலத்தில் உள்ளவர்கள் யாருக்கும் நேரம் கிடையாது

      சாப்பிட நேரம் இருக்குமா நண்பா. இல்லை அதுவும் ஜுஸ் வழியாகத்தானா?

      Delete
    3. படித்து தெரிய நேரமில்லாதவர்கள் கருத்து சொல்லக் கூடாதுஎன்றே நினைக்கிறேன்

      Delete

  9. மதமும் சாதியும் இருப்பது தவறில்லை ஆனால் அதன் மீது வெறி கொண்டு மற்ற மதங்களையும் சாதியையும் இழித்துரைப்பதுதான் தவறு மற்ற மதங்களை சாதியை இழித்துரைக்கும் ஈனப்பிறவிகளை நாம் கீழ்த்தரமாகவே கருதி செயல்படவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. மதமும் சாதியும் மற்றவர்களை கீழாக நினைக்க வைக்கக் கூடாது

      Delete
    2. மற்ற மதங்களையும் சாதியையும் இழித்துரைப்பதுதான் தவறு

      இதைத்தான் கௌரி லங்கேஷ் தொடர்ந்து செய்து கொண்டு வந்தார்.

      Delete
    3. கௌரி லக்கேஷ் எழுதி வந்தது கன்னடத்தில் என்ன எழுதினார் என்படு எனக்குப் புரியவில் அதனால் தா ஆங்கில ஏட்டின் பதிப்பையே வெளியிட்டேன்எத்தனை ஜாதி வெறி இருந்தால் கொலை செய்யவும் துணிவார்கள் மாற்றுக் கருத்து சற்று காட்டமாகவும் இருந்தாலும் கொலை என்பது தீர்வல்ல என்பதே என் எண்ணம்

      Delete
  10. தேர்தல் வந்தாலே இந்த ஜாதி பல்லிளிக்கும் இலட்சணம் விகாரமானது. எந்தத் தொகுதியில் எந்த ஜாதியின் வாக்குகள் அதிகம், அதற்கேற்ப எந்த ஜாதி சார்ந்தோரை வேட்பாளாராக நிறுத்தலாம் என்று கணக்குப் போடுவது எனக்குத் தெரிந்து 70 வருடங்களாக புரையோடிப் போன சமாச்சாரம்.

    ஜாதி என்றால் என்ன, மதம் என்றால் என்ன இரண்டுக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா அல்லது இரண்டும் ஒன்றே தானா என்பதெல்லாம் புரியாதபடிக்கு குழப்பி விட்டவர்கள், மத சார்பு, மத சார்பின்மை என்றெல்லாம் பேசும் பொழுது வேடிக்கையாகத் தான் இருக்கிறது.

    ஜிஎம்பீ சார், தெரியாமல் தான் கேட்கிறேன். ஜாதி வேறு, மதம் வேறா?.. ஜாதி வேண்டும், மதம் வேண்டாம் என்று கூட நாடக வசனம் பேச முடியுமா?..

    ReplyDelete
    Replies
    1. தெரிந்து கொண்டே தெரியாததுபோல் பேசுகிறீர்கள் என்பதே என் எண்ணம்

      Delete
    2. என்ன செய்யறது? நீங்கள் சில விஷயங்களைக் கொளுத்திப் போடும் பொழுது அதன் ஆபத்தான விளைவு கருதி பொது வெளியில் பொறுப்புடன் உங்களுக்கும் எனக்கும் தெரிந்த மாதிரி தானே பேச வேண்டியிருக்கிறது? ஒரு சார்பாக நீங்கள் பேசுகிறீர்கள் என்பது உங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதும்.

      Delete
    3. என் மனசுக்கு ஒப்புடையதைப் பகிர்கிறேன் பொது வெளிக்கு ஒன்று எனக்கு ஒன்று என்று எண்ணுவதில்லை பாஜக மீது என் எதிப்பு எண்ணமெல்லாம் அவர்களுடைய ஹிந்துத்வா கொள்கையே மற்றபை அவர்கள் ஆட்சித்திறன் பற்றி என் அறிவு மிகவும் குறைந்தது மனிதருள் ஏற்ற தாழ்வு கூடாதுஎன்றுதான் எழுதி வருகிறேன் அதற்கு துணை போகாதவை எல்லாம் சரியில்லை என்பதே என் எண்ணம்

      Delete
    4. கொளுத்திப்போடுதல் என்னும் பிரயோகம்சரியில்லை என்றே எண்ணுகிறேன்

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF

      Delete
    7. சுட்டி விக்கிபீடியாவுக்கு அழைத்துச் சென்றது படித்தேன்....!

      Delete
  11. பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி மேம்

      Delete
  12. பதிவு நிண்டாலும் விஷயம் இருக்கிறதே

    ReplyDelete
  13. அருமையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. பதிவு எனதல்ல சார் பகிர்வே எனது வருகைக்கு நன்றி

      Delete