Saturday, April 27, 2019

ஜகதலப்பிரதாபன்



                                 ஜகதலப்பிரதாபன்
                                  ----------------------------
பொழுது புலர்ந்தது  மெல்லென எழுவீர்
யாரோ மென்  குரலில்பாடி என்னை எழுப்புவதுபோல்  இருந்தது  கண்விழிப்பு வ்ந்ததும்   கற்பனையும் கனவு என்று தெரிந்தது அதுசரி ஏன்  அந்தமாதிரி  ஒரு கற்பனைக் கனவு என்று  ஆராய்ந்தால் கனவே கற்பனையின்  காரணம் என்றுநினைக்க முடிந்தது  கனவுதான்  என்னை   நான் ஒரு ஜகதலப் பிரதாபனாகக்கனவு கண்டிருக்கிறேன்
நிஜம் என்ன வென்றால்  வீட்டில் பாட்டுப்பெட்டியில் கௌசல்யா சுப்ரஜா ராமா சந்தியா பிரவர்த்ததே  என்று ராமனை துயில் எழுப்பும்  பாடலை என் மனைவி போட்டுக் கேட்டுக் கொண்டிருப்பாள் தினமும்  ராமனைத் துயில் எழுப்பும்  என்மனைவி ஏன் என்னைத் துயிலெழுப்புவதில்லை  என்னை ஏன்  துயில் எழுப்பவேண்டும்   நான்தான்  எப்போதும்அரை உறக்கத்தில்தானே இருக்கிறேன் அருகில்படுத்திருக்கும்  அவள்  சிறிது அசைந்தாலும்   விழித்துக் கொள்வேன்   அது போல்தான் அவளும் இருந்தாலும்  என்னைப் பாட்டுபாடி எழுப்பாதது ஒருகுறையாகத் தெரிகிறது மனைவியிடம் சொன்னால்  போங்கன்னா  என்பாள்  மேலும் இல்லாத ஒருவரை துயிலெழுப்புவது சரி இல்லை  என்று சொன்னால் அது அவளுக்குப் பிடிக்காது ஒருவருக்குப் பிடிக்காததை செய்யாமல் இருப்பதே  சுமூக மண வாழ்வுக்கு நல்லது என்பது நான் கற்ற பாடம்
நான் என்னை ஒரு ஜகதலப் பிரதாபனாக கற்பனையில் இருந்தேன்   மிகுந்த சின்ன வயதில் ஜகதலப்பிரதாபன் படம் பார்த்திருக்கிறேன் முழு கதை நினைவுக்கு வர வில்லை  இணையத்தில் தேடினால்ஆச்சரியமாக இருந்தது ஜகதலப் பிரதாபன் ஒரு ராஜ குமாரன்   அவனுக்கு   நான்கு தேவகன்னியரோரு வாழ விருப்பம் இதை கேட்ட அவன்  தந்தை அவனைச் சிரசேதம்செய்ய உத்தரவிடுகிறார்  ஆனால் தாய் அவரைத் தப்பிக்க விடுகிறார்அவ்வை  எனுமொரு தெய்வத்தாயின் பராமரிப்பில் ப்ரதாபனும் அவரதுநண்பரும் இருக்கிறார்கள் ஒரு நாள் அருகே இருக்கும் குளம் ஒன்றில் ஒரு அழகிகுளித்துக் கொண்டிருப்பதைக் காணுபிரதாபன்  அப்பெண்ணின்  புடவயை எடுத்து மறைத்துக் கொள்கிறார்  புடவை தேடி வரும் அழகிகாணாதிருக்க அவ்வை பிரதாபனை ஒரு குழந்தையாக மாற்றி விடுகிறார் நாளாவட்டத்தில்  அழகி அக்குழந்தையை நேசிக்கிறார்  விரைவில்குழந்தைஉருவம் மாற ப்ரதாபனும்  அந்த அழகியும்மணம் புரிந்து வாழ்கின்றனர்
அவர்கள் வாழும் நாட்டின் அரசன்   பிரதாபனின் மனைவியிடம் மனம் பறி கொடுத்து பிரதாபனை தனக்கு இல்லாத ஒரு நோய்க்கு  மருந்து தேடி கொண்டுவர நாக லோகத்துக்கு அனுப்புகிறார்   பிரதாபனோ வேலையை கச்சிதமாக முடித்துமேலும் மூன்று அழகிகளோடு திரும்பி வந்து இனிதே வாழ்கிறார்  என்பதாகக் கதை
 ஒரு வேளை  ஆழ்மன ஆசைகளே கனவாக வருகிறதோ ஆனால் நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் நான் நல்லபையன்  அது பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன் 







  


       -

21 comments:

  1. அட??????????/// இங்கேயும் நான் மட்டுமா? ஜகதலப்ரதாபன் கதை தெரியாது. படிச்சேன். ஆனால் தனியா இருக்கப் பயமா இருக்கு. அப்புறமா வரேன்.

    ReplyDelete
    Replies
    1. தனியா இருக்க பயமா ஆச்சரியம்தான்

      Delete
  2. ஜகதலப்ரதாபன்... டி ஆர் மகாலிங்கம் படம்தானே? என் அப்பா பார்த்திருப்பார். டி ஆர் எம் அவருக்குப் பிடித்த நடிகர். டி ஆர் எம் ஒரு முறை தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது எங்கள் வீட்டிலிருந்து அவருக்கு உணவு சென்றிருக்கிறது. நான் அவர் முன்னால் 'தென்றலோடு உடன்பிறந்தாள் செந்தமிழ்ப் பெண்ணாள்' பாடிக்காட்டி இருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. இந்த ஜகதலப்பிரதாபன் படம் பி யு சின்னப்பா நடித்தது கல்கியில் ஒருவிமரிசனத்தில் படம் வசுலில் எகிரி விட்டது எறுசொல்லப்பட்டதாம் எகிரி என்னும் வார்த்தை பிரபலம் அடைந்ததாம் நீங்கள் படி நான்கேட்க வேண்டுமே

      Delete
    2. ஸ்ரீராம் ஆஹா பல ஸ்வாரஸ்யமான தகவல்களை எல்லாம் கொடுக்கறீங்களே!!

      கீதா

      Delete
  3. நவீன ஜகதலப்பிரதாபனோ...

    ReplyDelete
    Replies
    1. சில நெரங்களில் ஜகதலப்ரதாபனாக கற்பனைவருவது உண்டு ஆனல் நான் நல்ல பையன்

      Delete
  4. ஆகா எதற்கு நன்றிசார்

    ReplyDelete
  5. கதை நன்றாக இருக்கிறது சார். ஃபேன்டஸி கதைகள்...நான் இப்போதுதான் இக்கதையைக் கேட்கிறேன்.

    எங்க வீட்டுல யாராவது வாய்ச்ஜாலம், சவடால் காரியம் சாதித்தல் என்று இருப்பவர்களை அட ஜகதலப்ரதாபனா இருக்கானே என்பார்கள்...பெண் என்றால் னி!
    ஆனால் கதைக்கும் எங்கள் வீட்டில் அப்படிச் சொல்லியதற்கும் என்ன பொருத்தம் என்று தெரியவில்லை
    ஆனால் வயது வந்த பையன்கள் நிறைய பேரை சைட் அடித்தால் அவர்களுக்கு வைத்த பட்டப்பெயர் ஜகதலப்ரதாபன்!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பல கலைகளைக் கற்றறிந்தவன் ஜகதலப்பிரதாபன்

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. கனவு, கற்பனை, நிஜம் எல்லாவற்றையும் அழகாக இணைத்திருக்கிறீர்கள்.
    தி.கீதா சொல்லியிருப்பதைப் போல வாய் சவடால் பேர்வழிகளைத்தான் ஜகதலபிரதாபன் என்று அழை ப்பார்கள் என்று நினைத்தேன். அந்த சினிமா கதையைக் கேட்டால் வேறு எதையோ சொல்கிறதே!
    *முதலில் அனுப்பிய பின்னூட்டத்தில் இரண்டுக்கு மேல் பிழைகள் இருந்ததால் நீக்கி விட்டேன்.

    ReplyDelete
  8. கனவு கற்பனை நிஜம் என்று கலந்து கட்டி எழுதினால் ரசனை கூடும்

    ReplyDelete
  9. ஜகதலப்ரதாபன் படம் நான் பார்த்திருக்கிறேன் , அதில் வாய் குமாரி , ' காற்றை யுண்டு உயிர்வாழ்வோம் சோற்றுக் கவலை எமக்கில்லை ' என்று பாடியது நினைவிருக்கிறது .நிறைவேறாத ஆசை கனவாக வரும் என ஃராய்ட் கூறியிருக்கிறார் .

    ReplyDelete
    Replies
    1. நானும் படம்பார்த்திருக்கிறேன் ஆனால் ஏதோநிக்ஷல் மாதிரியான நினைவே பாட்டுகளை நா இணையத்தில் தேடவி ல்லை சிக்மண்ட் ஃப்ராய்ட் இந்த வ்ஷ்யத்தில் சரி என்று தோன்றவில்லை

      Delete
  10. வாயு குமாரி என்பதற்குப் பதிலாய் வாய் எனத் தப்பாய் எழுதிவிட்டேன் .

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் தட்டச்சு செய்யும்போது நிறைய பிழைகள் வருகின்றன ஐ டேக் தெம் இன் மை ஸ்ட்ரைட்

      Delete
  11. //ஒருவருக்குப் பிடிக்காததை செய்யாமல் இருப்பதே சுமூக மண வாழ்வுக்கு நல்லது என்பது நான் கற்ற பாடம்.. //

    பாஸிடிவ் x நெகடிவ் என்பது சயின்ஸ் அறிவு. வாழ்க்கைப் பாடமும் கூட.

    முரண்பட்டு முரண்படுவது சமனப்பட்டு சமனப்பட்டதுக்கு சந்தோஷித்து...

    ReplyDelete
  12. ஆனால் வலைப்பதிவுகளில் அதைக் கடை பிடிக முடியவில்லை என் எண்ணங்கள் எழுத்தாகின்றன வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  13. //..ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் நான் நல்லபையன்..//

    இது கற்பனைக் கனவா அல்லது கனவுக் கற்பனையா ?

    ReplyDelete
  14. உங்களூக்கு ஏனிந்த சந்தேகம் கனவும் இல்லை கற்ப்னையும் இல்லை அக்மார்க் உண் மை

    ReplyDelete