ஒரு சோதனை
------------------------
நான் என்பதிவு ஒன்றுக்கு
எழுதிய ஆரம்பவரிகள் இவை என்ன பதிவு என்று
யூகிக்க முடிகிறதா முடிந்தால் பதிவுகளை
ஊன்றிப் படிப்பவர் நீங்கள்ஷொட்டு கொடுத்துக் கொள்ளலாம்
...
என் சிறு தோட்டம் நீரின்றி காய்கிறது
பூவாளியில் நீரை ஏற்றி இரைக்கப்
போகும்போது அழுக்கடைந்த கார் காண
அதை முதலில் கழுவலாம் என்று தோன்ற
அருகில் செல்லும் போது தென் படுகிறது
வீட்டின் முன் மாட்டியிருக்கும் தபால் பெட்டி.
காரைக் கழுவும் முன் தபாலை எடுத்துப்
ஹாலில் மேசை மேல் கார் சாவியை வைத்து
ஃப்ரிட்ஜிலிருந்து ஃபான்டா பாட்டிலைத் திறந்து
ஒரு வாய் அருந்தி அதை அருகில் வைத்து
கடிதங்களைப் பிரித்துப் பார்க்க அவை
குப்பைத் கூடையில் போக வேண்டியது என்று
அதைப் பார்க்க அதுவும் நிரம்பி இருக்க –அதைக்
காலி செய்து குப்பைத் தொட்டியில் போட
வெளியே போக வேண்டும் போகிறபோதே
அருகில் இருக்கும் கியோஸ்கில் மின் கட்டண்ம்
செலுத்தினால் ஒரு வேலை முடியும். அதற்கு முன்
அட்டைப் படத்தில் கவர்ச்சியுடன் சிரிக்கும் அழகியைத்
தாங்கி வந்திருக்கும் வாராந்திரி கண்ணில் பட அதை
எடுத்துப் படிக்கக் கண்ணாடி தேவை அதை வைத்த
இடம் மறந்து தேட மேசை அறையில் கார் சாவி கண்டதும்
காரைக் கழுவ நினைத்ததும் நினைவுக்கு வர
அங்கே போனால் பூவாளி நீரும் குப்பைக் கூடையும்
என் முன்னே இளிக்க ஆயாசத்துடன் ஃபாண்டா பருக்
எண்ணி எடுத்தால் அதுவும் குளிர் விட்டுப் போய் –ச்சே!
எந்தவேலையும் திட்டமிட்டபடி நடப்பதில்லையே
என நான் சிந்திக்கும் போது மனசு குரல் கொடுக்கிறது

பல்வேறு genre களில் எழுதியாகி
விட்டது எது பற்றி எழுத நினைத்தாலும் எங்கோ எப்போதோ
எழுதி இருப்பது தெரியவருகிறது இருந்தாலும் என்ன எழுதியது எல்லாமே உள்வாங்கப் படுகிறதா சோதிக்கவே இப்பதிவு