நாட்டு நடப்பு
----------------------
"தலெ... இப்பவாவது வாய்ல வெச்சிருக்க அந்த இட்லிய முழுங்கிட்டு, மோடிய கூப்ட்டு என்னான்னு கேளுங்க தலெ..."
"யோவ்... போனவாரம் நீ சொன்னேன்னு மோடிய கூப்ட்டு, 'காஷ்மீர் மாநில பிரச்சனைக்கு பஞ்சாயத்து பண்ணவா ?' ன்னு கேட்டேன். 'ஒரு வாரத்துல பதில் சொல்றேன்' னு சொல்லிட்டு, மூணேநாள்ல காஷ்மீர அக்குவேறா ஆணிவேறா மூணா பிச்சுப் போட்டுட்டாரு. இனி கேட்டம்னா... 'எங்ககிட்ட காஷ்மீருன்ற யூனியன் பிரதேசம்தா இருக்கு. மாநிலம் இல்லையே... எதுக்கும் பக்கத்து நாட்ல தேடிப்பாருங்க' ன்னு கலாய்ப்பாரு. ஆமா... ஆவூன்னா சீனாகாரன்ட்ட ஓடுவியே. இப்பமட்டும் எதுக்கு இங்க வந்தே ?"
"நா கூப்டுவேன்னு தெரிஞ்சுதான், மூணுநாளா சீனஅதிபரு போன ஆப்பண்ணி வெச்சிருக்காரு தலெ. அவரோட செக்ரூட்டிக்கு கூப்டேன், அவெ... 'அதிபரு கொழுந்தியா புள்ள வளைகாப்புக்கு போயிருக்காரு' ன்றான். போனவாட்டி நா சீனா போனப்போ... பீஜிங் போய் சேர்ந்ததும், எந்த டவுன்பஸ் ஏறி எங்க வரணும்னு தகவல் சொல்றதுக்காக, வழக்கமா சீனஅதிபர் வீட்டுக்கு துணி துவைக்க வர்ற பொம்பளைய விட்டு கூப்ட்டு சொன்னாங்க. எதுக்கும் இருக்கட்டும்னு, அந்த நெம்பர சேவ் பண்ணி வெச்சிருந்தேன். இன்னைக்கு கூப்டதும், அந்த பொம்பள நேரா... போனக் கொண்டுபோய் அதிபர் சம்சாரத்துட்ட குடுத்துருச்சு. அந்தம்மா... 'பாகிஸ்தான கட்டிமேய்க்க வாங்குன பணத்துக்கு, வட்டிகட்டத் துப்பில்ல. இதுல, காஷ்மீர் பொண்டாட்டி கேக்குதோ?' ன்னு, நாக்கப் புடுங்குற மாதிரி கேக்குது. மானம் போகுது தலெ..."
"சரி அழாத விடுய்யா... இதென்ன உனக்கு புதுசா ?. அடுத்து மோடி... POK-ன்னு ஏதோ புது ப்ரோஜெக்ட் ஆரம்பிக்கறாரு போல. அப்ப பாத்துக்கலாம்"
"அப்ப, அடிச்சு தூள் பண்ணிடலாமா தலெ ?"
"ஆசையப்பாரு... இன்னும் மன்மோகன் நெனப்புலயே இருக்குற. எதுக்கும் உன்னோட பாகிஸ்தான பத்திரமா வெச்சுக்கய்யா. அப்புறமா வந்து... கராச்சிய காணம், லாகூர காணம்னு ஒப்பாறி பாடாத. திரும்ப அந்தாள்ட்ட... 'மிஸ்டர் மோடி, கராச்சிய பாத்தீங்களா ?' ன்னு கேட்டா... நாலுகிலோ கராச்சி பிஸ்கெட்ட, வெள்ளை மாளிக அட்ரஸுக்கு அனுப்பி வெச்சுடுவாரு. அவ்ளோ நக்கல் புடுச்ச ஆளு. உனக்காவது சொல்லி அழுகுறதுக்கு நா இருக்கேன். எனக்கு யாரு இருக்காங்கன்னு யோசிச்சு பாத்தியா ? முதல்ல ஊருக்கு கிளம்புய்யா. இந்தியராணுவம் ஊருக்குள்ள பூந்து... இந்தியகொடிய ஏத்திடப் போகுது"
எதையும் நகைச்சுவையாக்கும் பக்குவம் இவனுக்கில்லை ஒரு சந்தேகம் இந்திரா காந்தி 1975ல் அவசரப்பிரகடனம் செய்திருந்தார் அதுஇந்தியா முழுமைக்கும் ஒரு மாநிலத்துக்கு மட்டும் எமெர்ஜென்சி டிக்ளேர் செய்ய முடியுமா முடியும் என்றே தோன்றுகிறது ஆனால் எமெர்ஜென்சி என்று சொல்லவில்லை சொன்னால்தான் எமெர்ஜென்சியா அறிவிக்கப்படாத மாநில எமர்ஜென்சி ஆனால் தைரியமாக எமெர்ஜென்சி என்று சொல்ல வேண்டியதுதானே காஷ்மீரில்படைகளைக் குவிக்கும்போதே ஏதேதோ சப்பைக்காரணங்கள்சொன்னார்கள் அமர்நாத் யாத்திரிகர்களுக்கு பாதுகாப்-பு என்றார்கள்காஷ்மீரத் தலைவர்கள எல்லாம் காவலில் வைத்தார்கள்இணையத் தொடர்புகளைத் துண்டித்தார்கள் திடீரென்று ஜம்முகாஷ்மீர் மாநிலத்தையே யூனியன் டெரிடொரியாக்கினார்கள் 370ம் பிரிவையே இல்லாமலாக்கினார்கள் 35 Aபிரிவையே செல்லாது என்றார்கள் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதிதானே சிலவிசேஷ சரத்துகளைக் கொண்டிருந்தது அங்குள்ள மக்கள் இந்தியர்தானே சுமூகமாகப் பேசித் தீர்க்க வேண்டிய விஷயத்தை செய்ய ஏன் இந்த அசுரப்பலப்பிரயோகம் தவறு செய்கிறார்கள் என்று தானே அர்த்தம் பொதுவாக சாதாரண மனிதன் அரசின் செய்கைகளை அதிகமாகக் கண்டு கொள்வது இல்லை அதை நாம் 1975 எமெர்ஜென்சியின் போதே பார்த்திருக்கிறோம் அதுவும் அரசின் சக்தி முன்பு நமக்குஏன் வம்பு என்று ஒதுங்கிக் கொள்ளும் குண்மே முன் நிற்கும் ஆனால் அது மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதை காட்டாது எதையும் பாராளுமன்றத்தில் தங்களுக்கு இருக்கும் அதீதப் பெரும்பான்மை பலத்தால் ஸ்டீம் ரோல் செய்து விடலாம் என்ற எண்ணத்தால் தானே சில நாட்களுக்கு முன் ஒரு சர்வாதிகாரி உருவாகிறாரோ என்று எழுதி இருந்தேன் இந்தமாதிரியான தடால் நடவடிக்கையாக POK யை இந்திய தேசத்துடன் இணைக்க முடியுமா செய்தால் விளைவுகள் விபரீதமாகுமே ஆனால் சர்வாதிகார மனப் பான்மையில் இருப்பவர்களுக்கென்ன கவலை பார்ப்போஎன்னதான் நடக்கிறது என்று
இன்னும் முன்னரே எதிர்பார்த்தேன்!
பதிலளிநீக்குஏதாவது மாறம்வரலமென்னும் எதிர்பார்ப்பில் தமதமாகி விட்டது
நீக்குஅவரவர் பார்வை!
பதிலளிநீக்குநேர்கொண்ட பார்வை அல்லவா
நீக்குஅலட்டல் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்குது ஐயா விரைவில் தீர்வு கிடைக்கட்டும்.
பதிலளிநீக்கு//அதிபரு கொழுந்தியா புள்ள வளைகாப்புக்கு போயிருக்காரு' என்றான்//
ரசிக்க வைத்தன...
///அதிபரு கொழுந்தியா புள்ள வளைகாப்புக்கு போயிருக்காரு' என்றான்//
நீக்குஎனக்கு அதுமாதிரி எழுத வராது அது வந்த ஒரு வாட்ஸாப் ப்கிர்வு
பார்ப்போம்
பதிலளிநீக்குநம்மால் வேறு என்ன செய்ய முடியும்
நீக்குஇதை நாங்கள் ஜனசங்கம் துவக்கப்பட்ட காலத்திலிருந்தே கேட்டு வந்தோமே என்று அத்வானி கூறியதை பார்த்தபோது இது பாஜகவுக்கு இதை நடத்தி காட்ட தேவையான மெஜாரிட்டி இல்லாததால்தான் முடியவில்லை என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குசெய்த முறைதான் தவறு போல் தோன்றுகிறது
நீக்குபொறுத்திருந்து பார்ப்போம். பார்த்துத்தான் ஆகவேண்டும்.
பதிலளிநீக்குமுதுகெலும்பு இல்லாதவர்களுக்கு வேறு வழி இல்லை
நீக்கு//சுமூகமாகப் பேசித் தீர்க்க வேண்டிய விஷயத்தை செய்ய ஏன் இந்த அசுரப்பலப்பிரயோகம் தவறு செய்கிறார்கள் என்று தானே அர்த்தம்// - எத்தனை யுகங்கள் பேசித் தீர்க்கணும்? 5 மாவட்டப் பிரச்சனைக்கு எவ்வளவு பணம் நாம் செலவு செய்கிறோம்? செலவு செய்யும் பணம் அத்தனையும் இரு குடும்பங்களுக்கே போகிறதே..
பதிலளிநீக்குநாட்டைப் பற்றி கொஞ்சம்கூட அக்கறை இல்லாத பதிவு இது.
/நாட்டைப் பற்றி கொஞ்சம்கூட அக்கறை இல்லாத பதிவு இது./ அக்கறை பற்றி உங்கள்டம்பாடம்கற்கவேண்டும்
நீக்குவிரைவில் தமிழ்நாட்டிலும் "அசுரப்பலப்பிரயோகம்" நடக்கலாம்...!
பதிலளிநீக்குஅதையும் வரவேற்க ஒரு கூட்டமுண்டு
நீக்குஐயா
பதிலளிநீக்குபாணடவர்கள் வனவாசத்தில். வனவாசம் முடிந்தவுடன் குருச்சேத்திர யுத்தம் நடைபெறும். துரியோதனன், சகுனி ஆட்சி முடிவுக்கு வரும். தர்ம்ம் வெல்லும். சொல்வது புரியும் என்று நம்புகிறேன்.
Jayakumar
மஹபாரதமே ஒரு கற்பனைக் கதை என்று நினைப்பவன் நான் நீங்கள் பூடகமாக ஏதோ சொல்கிறீர்கள் தவறாக நான் நினைக்கக் கூடாது அல்லவா
பதிலளிநீக்குசரியா தவறா என்பதை இனி ஏற்படும் விளைவுகளைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும் என்று கருதுகிறேன் .
பதிலளிநீக்குவரும் முன் காப்பது முடியாவிட்டாலும் வர இருப்பதை யூகித்து இருக்கிறேன் நான் தவறாக இருப்பது நல்லது என்றே நினக்கிறேன்
பதிலளிநீக்கு