Friday, August 23, 2019

கிருஷ்ணஜயந்தி


 ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி கொண்டாட்டம்  எங்கள் வீதியில்  உறியடியுடன்  பல ஆண்டுகளுக்கு முன் எடுத்தது
   
ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி 
கிருஷ்ணஜயந்தி அன்று வெளியாகும் இப்பதிவு கண்ணனைக் கேசாதிபாதம்கண்டு மகிழ்பவனின் எண்ணங்கக்ொமுன்பே எழுதியது ஒரு மீள் பதிவாக மீண்டும்ஒரு காலத்தில் நாராயணீயம் கேசாதி பாதத்திலிருந்து எடுத்து  ஆண்டது

  கண்டேன் நான் கண்ணனை
கார்மேக வண்ணனைக்
குருவாயூர் கோவில் நடையில்

கருநிறம் சுருட்டைமுடி
ரத்தினம் பதித்த தலையணி
மயில் பீலி செருக
வெண்ணிறப் பிறை நெற்றி ,
மேல்நோக்கி இடப் பெற்ற
குறியுடன் முடியும்
நெற்றியும் கண்ணாரக்
( கண்டேன் நான் கண்ணனை )

விபுவே.!அசைகின்ற புருவங்கள்
அடியில் அருள்தரும் உன் கண்கள்
ஒளிவீசி என் அகம் குளிர்விக்கக்
( கண்டேன் நான் கண்ணனை )

எடுப்பான நாசி கண்ணாடிக் கன்னங்கள்
சுடரிடும் மகர குண்டலங்கள்  அசைந்தாட,
ஒளிவீசும் முத்துப் பற்கள் செவ்விதழ்களின்
நடுவே பளீரிடப் புன்னகைக்கும் உன் முகம்
( கண்டேன் நான் கண்ணனை )

இரத்தினம் பதித்தக் கை வளைக் குலுங்க
செந்தளிர் விரல்கள் மீட்ட
வேணுகானம் காற்றில் தவழ
நாத கீதந்தனில் எனை மறந்து
( கண்டேன் நான் கண்ணனை )

மென் கழுத்தில் மணிமாலைகள்
மலர்மாலைகள் தொங்க
நிற மாலைகளில் வண்டினம் வந்தாடக்
( கண்டேன் நான் கண்ணனை )சந்தண மணம் பரப்பும் உன்
திருமேனியில் உலகமே  ஒன்றியிருந்தும்
மெல்லிடையோய் பொன்னிறப் பட்டாடையுடன்
கதிர் பரப்பும் மணி அரைஞாணின்
சலங்கைகள் சல சலக்கக் கண்டு
நீலவண்ணக் கண்ணா எனை மறந்து
( கண்டேன் நான் கண்ணனை )

அழகு தொடை இரண்டும் பருத்தவை
அழகுடன் உறுதியும் கலந்தவை
மனம் மயக்கும் கலங்கடிக்கும்
எனவே பட்டாடை மறைத்தனவோ
காணும் கணுக்கால்பிடித்து வணங்கக்
( கண்டேன் நான் கண்ணனை )

உன் கழலடி தொழலே இன்பம்
அறியாமையில் மூழ்கியவர்களை
மந்தார மலையை உயர்த்தும் ஆமைக்கு
ஒப்பாக உள்ளது உன் நுனிக்கால்
அடைக்கல மடைந்த  என் அறியாமை
துன்பங்கள் களைய வேண்டியே
( கண்டேன் நான் கண்ணனை )

குருவாயூரின் தலைவனே அருட்கடலே
கிருஷ்ணா.! உன் உறுப்புகளில் திருவடிகளே
சிறந்தவை மோட்சம் தருபவை தலைவைத்து
பற்றவே வந்த எனைக் காத்தருளக்
( கண்டேன் நான் கண்ணனை.)

இ்ங்கே சொடுக்கினால்  கண்ணன் கதை படிக்கலாம் ஒவ்வொரு பத்தியும் ஒரே வாக்கியத்தில் இருப்பது விசேஷம்  


  


                          

28 comments:

 1. ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள் ஐயா.

  பாடல் அருமை. சுட்டிக்கு செல்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. பாடலை ரசித்ததற்கு நன்றி சார்

   Delete
 2. "இங்கே" சுட்டி இயக்கமில்லை ஐயா.

  ReplyDelete
  Replies
  1. இங்கேயில் இ யில் சொடுக்கினால் இயங்கும் எங்கோ தவறு

   Delete
 3. ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நல்ல நாட்களில் வரும் ஒரு ஸ்டாண்டார்ட் பின்னூட்டம் நன்றி

   Delete
 4. ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. கிருஷ்ணாயணம் மற்றும் கேசாதி பாதம் பதிவைப் படித்து வந்தேன் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. கிருஷ்ணன் கதை ஒரு சினாப்சிஸ்

   Delete
 6. நன்னாளில் அருமையான பதிவு.

  ReplyDelete
 7. அருமை ஐயா... வாழ்த்துகள்...

  கில்லர்ஜி அவர்களே... "இங்கே" என்பதில், "இ" எழுத்தின் மேல் சொடுக்கவும்... ஐயா நீங்களும் இதை சரி செய்யலாம்...

  ReplyDelete
  Replies
  1. பதிவிட்ட பின் தெரிந்தது சரிசெய்ய நேரமிருக்கவில்லைசரியாககண்டு பிடித்ததற்கு நன்றி சார்

   Delete
 8. கிருஸ்ணஜெயந்தி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. பதிவு பற்றி சொல ஏதுமில்லையா

  ReplyDelete
 10. அருமையான பாடல். பண்ணிசை ஒலிக்கிறது. கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் பாலா சார்.

  ReplyDelete
 11. நன்றி மேம் சுட்டிக்குச் சென்றால் கண்ணனின் கதையையும் படித்திருக்கலாம் சுட்டியில் இ எழுத்து மட்டுமே சொடுக்கப்ப்ட வேண்டும்

  ReplyDelete
 12. முன்பே படித்திருந்தாலும், உங்கள் கண்ணன் கவிதை இனிக்கவே செய்கிறது. கிருஷ்ணனுக்குப் பிடித்தமான பாலக்காட்டு உணவுகளை வேண்டியமட்டும் உண்டு மகிழ்வீராக என்று உங்களையும் அம்மையையும் வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. இதன் மூலம் நாராயணீம் என்றுசொல்லி ருக்கிறேனே நாரயணீயம் நூலுக்கு தமிழாக்கம் தந்த உங்கள் கருத்தும் இனிக்கிறது

   Delete
 13. என் கருத்து தொடர்கிறது ஐயா...நன்னாளில் அருமையான பதிவு. நேற்று தஞ்சாவூரில் உள்ள யாதவ கண்ணன் கோயிலைப் பற்றி ஆங்கில விக்கிபீடியாவில் புதிய பதிவினை (Yadhava Kannan Temple, Thanjavur) நான் ஆரம்பித்தது மகிழ்ச்சியாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. கண்ணனை கேசதிபாதம் வர்ணித்துநாராயைஇயத்தில் இருப்பதை என்பாணியில் எழுதி இருக்கிறேன் விக்கிபீடியாவில் இன்னார் எழுத்யதுஎன்பதை எப்படி அறிவதுசார்

   Delete
 14. கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள் ஐயா.

  ReplyDelete
 15. எந்நளைக்கும் வேண்டும் உங்கள்வாழ்த்து

  ReplyDelete
 16. அருமையான படைப்பு
  வாழ்த்துகள்

  ReplyDelete
 17. என்னல் ஆன முயற்சி வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 18. விழாக்கள் மகிழ்ச்சி தருகின்றன .

  ReplyDelete
  Replies
  1. பதிவர்களுக்கு எழுது பொருள் கூட

   Delete