புதன், 21 ஆகஸ்ட், 2019

நினைவு பெட்டகங்கள்



                              நினைவு பெட்டகங்கள்
                             -------------------------------------
வீட்டில் ஷோ கேசில் பலபொருட்களிருக்கும் எல்லாமே ஏதோ ஒரு நினைவையோ நிகழ்வையோ தாங்கி இருக்கும்   அவற்றில் சில  இவற்றைப்படமெடுத்து உதவிய என் மனைவிக்கு நன்றிகள்

இந்த பிள்ளையார்  மாக்கல்லால் ஆனது நாங்கள்  பேளூர் ஹலேபேட் போயிருந்தபோது சாலை யோரக் கடை ஒன்றில் வாங்கியது



கல்கத்தா காளி திருமதி கோமதிஅரசு  கொடுத்தது  கைவேலை தெரிகிறது அருகில்  இருக்கும் ராமர்  லட்சுமணர் சிலா வடிவம்திருமது கீதா  சம்பசிவத்தின் பரிசு என் மனைவிக்குக் கொடுத்தது


கும்பகோணத்தில்  நண்பச்ர் ஒருவர் கொடுத்தது அகல்விளக்கு வைக்கலாம் அணையாது மூடும் வசதி உள்ளது
 சைக்கிள் ஒரெ கம்பியில்செய்தது  டெல்லி சென்ற சமயம் ஒரு ரூபாய்க்கு வாங்கியது 1978ம் ஆண்டு என்ற நினைவு


தாஜ்மஹல் ரெப்லிகா என்மைத்துனன் கொடுத்தது மின் இணைப்பு கொடுத்தால் பிரகாசிக்கு ம்

 ஜெய்பூரில் வாங்கிய  பிள்ளையார்  பிள்ளையார் விக்கிரகங்கள்நிறைய வே  உண்டு


கேரளத்தில் வாங்கியது அஷ்டமங்கலம் என்கிறார்கள் தங்கமுலாம் பூசினோம்


விஜயவாடா அர்கே இருக்கும் கொண்டபள்ளி கிராமத்தில் வாங்கியது தசவதாரமும்கீதா உபதேசமும்   இவை கனமே இல்லாமல் தக்கையாக இருக்கும் 



எங்கள் சஷ்டியப்த பூர்த்திக்கு என்மூத்டமகனின்  மச்சினன் கொடுத்த தஞ்சாவூர் பெரியகோவில் ஆலையம்  பித் எனப்படும்பொருளால் செய்தது


அடக்கப் பாக்கிலிருந்து  செய்தது மனைவியி கை வண்ணம் மட்டை உரித்த தேங்காயின் ரெப்லிகா போல





18 கருத்துகள்:

  1. எல்லாம் அழகோ அழகு. நான் கொடுத்த சின்னஞ்சிறிய பரிசையும் நினைவு வைத்துக் கொண்டு சொன்னதற்கு நன்றி. தேங்காயின் ரெப்லிகா நன்றாக வந்திருக்கிறது. எல்லாப் பரிசுகளுமே விலை மதிக்க முடியாதவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கு சென்றாலும் நினைவாக ஏதோ பொருள்வாங்குவது வழக்கம் என் ஷோ கேஸ் நிறைய பல பொருட்கள் அவற்ற்ல் சிலவே பதிவில் வருகைக்கு நன்றி

      நீக்கு
  2. அருமையான பொருட்கள் ஒரே கம்பியில் சைக்கிள் ஸூப்பர் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டெல்லியில் வாங்கியதுஅதன் விலை ரூபாய் ஒன்றுதான் நம்பமுடிகிறதா

      நீக்கு
  3. பதில்கள்
    1. நிறையவே உள்ளன பொருட்கள் அவற்றில் சிலவே பதிவில்

      நீக்கு
  4. நினைவு பெட்டகத்தில் உள்ள எல்லாம் அழகு. நான் கொடுத்த பரிசையும் இடம் பெற செய்து இருப்பதற்கு நன்றி.
    உங்கள் மனைவியின் கைவண்ணம் மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைப்பதிவர்கள்மேல் அதுவும் நான் சந்தித்தவர் என்றால் மிகவும் மதிப்பு உண்டு அவர்களின் பரிசுப் பொருட்கள் நினைவில் இருக்கும்

      நீக்கு
  5. அருமையான தேடல்கள்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  6. சைக்கிள் சூப்பர். அகல் விளக்கு கூடும் வித்தியாசமானது கோவில்களில் உள்ளது போல.

    பதிலளிநீக்கு
  7. செல்லும் இடங்களின் நினைவாக வாங்குவது வழக்கம் அல்லது பெற்றதை நினைவு கூறுவது வழக்கம்

    பதிலளிநீக்கு