நான் யார்
---------------
எனக்கு அடிக்கடி நான் யாரென்னும்சந்தேகம் வருவதுண்டுஅப்படி
வரும்போது பிராம்மண்ரிடையே நிலவும் ஒருபழக்கமும்நினைவுக்கு வரும்பெரியவர்களைக் காணும்போது
தன்னை அறி முகப்படுத்திக்கொள்ளும் அபிவாதனம் ஒரு விதத்தில் சில சந்தேகங்களுக்கு
முற்றுப்புள்ளி வைக்கலாம்இந்த அபிவாதனமென்பதுதான் என்ன நான் இன்ன ரிஷி பரம்பரையில்
வந்தவன் இன்ன கோத்திரம் இன்னாரின் பேரன் இன்னாரின் மகன் இன்ன பெயர்கொண்டவன் என்பது
பொல் இருக்கும் பெரும்பாலும்கோத்திரமென்பது பிராம்மணரிடையே தான்பாவிக்கப்படுகிற்து கோவில்களில் அர்ச்சனை செய்யும்போது என்ன கோத்திரம் என்று கேட்பார்கள் கோத்திரம் அறியாதவ்ர்கள் சிவனை வழிபடுபவர் சிவ கோத்திரமென்று விஷ்ணுவை வழிபடுபவர் விஷ்ணு கோத்திரமென்றும்சொல்வார்கள் இது சரியென்று தொன்றவில்லை பெரும்பாலானவர்களுக்கு தங்கள் முப்பாட்டன்பெயர் கூட நினைவில் இருப்பதில்லை அப்படி
இருக்கும்போது இன்ன ரிஷியின் தோனறல் என்று கூறுவது சற்றே ஓவராகத் தெரிகிறது
எல்லாவற்றுக்கும் ஏதோ நம்பிக்கையே காரணம் ஒரு கதை நடுவில் நினைவில் தொன்றுகிறது
உங்களுக்கு பூனைக்குட்டி, குரங்குக்குட்டி கதை தெரியுமா. ?
பூனைக்குட்டி எல்லாப் பொறுப்பும் தன் தாய்ப் பூனையிடம் விட்டு விடும். குட்டி
வளர்ந்து பெரிதாகும்வரை பூனை தன் குட்டியை வாயினால் கவ்விக்கொண்டு பாதுகாக்கும்.
ஆனால் குரங்குக் குட்டி தன் தாயை அழுத்திப் பிடித்துக் கொண்டு அதன் அரவணைப்பிலேயே
வளரும் பூனைக் குட்டியைப் போல் மனிதனும் தன்னை ஆண்டவனிடத்தில் அர்ப்பணித்து விட
வேண்டும் என்பார்கள். ஆனால் மனிதனுக்கு கண்காண முடியாத தெய்வத்திடம் தன்னை
அர்ப்பணிப்பதில் அநேக சங்கடங்கள் உண்டு, அவன் தன்னை தன் தாய் காப்பாற்றும் என்று நம்பி இறுகிப்
பற்றிக் கொள்ளும் குரங்குக் குட்டி போல் ஆண்டவன் நம்பிக்கையைப் பற்றிக்
கொள்கிறான். , இதையே சற்று வேறு விதமாகக் கூறினால். ---தந்தையின் கையைப் பற்றிக்
கொண்டு போகும் சிறுவன் கீழே விழக் கூடும். ஆனால் தந்தையே அவன் கையை பற்றிக்கொண்டு
போனால் அவன் விழமாட்டான். தன்னம்பிக்கைக்கும் ஆண்டவனைச் சார்ந்திருப்பதற்கும் உள்ள வித்தியாசம் இதுதான்
எனக்கு பலவிதமான நம்பிக்கைகளைஉரசிப்பார்க்கும் குணம் உண்டு
கோத்திரங்கள்சாத்திரங்கள்எல்லாமே ஒருவனை மற்றவனிடம் இருந்து பிரித்துக் காண்பிப்பதையே
காட்ட உதவுகிறதுஎன்பதே என் அபிப்பிராயம் பிறப்பால் ஒரு பிராமணராக அறியப்பட்டஒரு
தம்பதியினருக்குப் பிறந்ததாலேயெ நான்பிராமணன் ஆவேனா ஒரு பிராம்மணன் தனக்காக உழைத்து எதும்சேர்க்கக்கூடாது என்பதைசொல்லி இருந்தார்கள் அக்காலத்தில் ஒரு
பிராம்மணன் இரு பிறப்பு உடையவன்
என்றுகூறப்படுகிறது முப்புரி நூல்
இடுவதற்கும் முன்னும் பின்னுமானது
பிராம்மணன் என்பவன் பார்ப்பனன் என்பதுமிதையே காட்டுகிறது கோழிக்குஞ்சுக்கு பார்ப்பு என்றும்பெய்ர் உண்டு முட்டையாக ஒரு பிறப்பும்குஞ்சாக ஒரு பிறப்புமென்பதால் இருபிறப்பு அதுமாதிரி முப்புரி நூல் இடும் முன் ஒரு பிறப்பும் இட்டபின் ஒரு பிறப்பும் என இரு பிறப்பு அதாவது பார்ப்பு அனன்
ஓருயிர் பெற்று, இரு பிறப்பெடுத்து, முத்தீ வளர்த்து,நான்மறை பயின்று, ஐவகை வேள்வி மூட்டி, அறுதொழில் செய்து ஐம்புலன் செறுத்து, நான்குடனடக்கி, முக்குணத்தில் இரண்டை அகற்றி ஒன்றுடன் ஒன்றுபவன் இன்றும் உண்டோ.
(முத்தீ = கார்ஹபத்தியம் , ஆஹவநீயம் ,தக்ஷிணாக்கினி போன்ற மூன்று வகை அக்னிகள்.
இரு பிறப்பு = முப்புரி நூல் இடுவதற்கு முன்னும் பின்னுமானது.
நான்மறை = ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள்.
ஐவகை வேள்வி = தேவ யக்ஞம், பித்ருயக்ஞம், பூத யக்ஞம், மனுஷ்ய யக்ஞம், ப்ரஹ்ம்மயக்ஞம்
அறுதொழில், = யஜனம் ( யாகம் இயற்றுதல் ), யாஜுகம் ( மற்றவர்களை யாகம் செய்வித்தல் ) அத்யயனம் ( வேதம் ஓதுதல் ), அத்யாபக்ஞம் ( மற்றவர்களை வேதம் ஓதுவித்தல் ) தானம் ( மற்றவர்களுக்கு அளித்தல் )ப்ரதிக்ரஹம் ( மற்றவர்களிடமிருந்து பெறுதல்)
ஐம்புலன் செறுத்து = கண் முதலான ஐந்து புலன்களையும் அவற்றின் விஷயங்களில் செலுத்தாமல் நிறுத்தி
நான்குடனடக்கி = மனம் ,புத்தி, சித்தம் அஹங்காரம் ஆகிய நான்கையும் அடக்கி,
அல்லது ஆகாரம் , உறக்கம் ,பயம் உடலுறவு ஆகியவற்றை அடக்கி
என்றும் கொள்ளலாம்
முக்குணத்தில் இரண்டை அகற்றி, = ரஜஸ் மற்றும் தாமஸ குணங்களை அகற்றி
ஒன்றுடன் ஒன்றுவோர் = மீதமுள்ள ஒன்றான ஸத்வ குணத்தில் நிலை நின்று()
இதன்படி பிராம்மணனாக இருப்பவர் யாராவது இருக்கிறார்களா சில
சடங்குகள் வழி வழியாக பின்பற்றப்படுபவைபூணூல் அணிவதுமதில் ஒன்று இக்காலத்தில்பூணூலணிவதே தங்கள் சாதியை பிரகடனப் படுத்தவே என்றாகி விட்டது ஆனால் பிறபொக்கும் என்னு எண்ணம்
உடையவன் நான் பூணுல் அணியமறுத்தவன் என்னை
பிறரிடம் இருந்து மாறுபட்டுக் காட்டிக்கொள்ள நினைக்காதவன் எதையும் ஆராய்ந்து பார்க்க விரும்புபவன்
நான் பள்ளியில்படிக்கும்போதே அதிகாலையில் எழுந்து குளிர் நீரில்குளித்து (வெல்லிங்டன்நீலகிரியில்)
பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடி ஓம் ஓம் என்று உரக்க தியானமெல்லாம்செய்து பார்த்தவன்
சுவாமி
விவேகாநந்தர் நாராயண்குரு போன்றோர் எழுதியவற்றை எல்லாம் படித்து என்னுள்
ஏதாவதுமாற்றம் தென்படுகிறதா என்று சோதித்துப்பார்த்தவன் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட
ஏற்ற தாழ்வுகளைக் கண்டு கொதித்தவன் எங்கள் கிராமத்தில் நான் என் பத்துவயது பிராயத்தில் மனிதனின் மலத்தை மனிதரே அள்ளும் அவலத்தைக் கண்டுஅக்காலத்திலேயே அதுதவறுஎன்று
உணர்ந்தவன் காலம் மிகவும் மாறி விட்டது சாதி சம்பிரதாயங்கள் மெதுவாக மாறி வருகின்றன
எனக்குச் சில ஆதங்கங்கள் இளவயதிலிருந்தே உண்டு. எதுவும் செய்ய முடியாத கையாலாகாத்தனத்தால் மனம் வருந்தியதும் உண்டு அதற்கு சிலவடிகால்கள் வேண்டும் எழுதுவதன் மூலம் சிலவற்றை வெளிப்படுத்துகிறேன்
இப்பதிவும்
அதுபோல் ஒன்றுதான்
என் தந்தை பார்ப்பவர்களிடம் எல்லாம் அவர்களின் பரம்பரைத் தகவல்கள் பற்றிக்கேட்டுத் திணறடிப்பார். அவர்களுக்கு அவர்கள் முன்னோர்கள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள் உங்கள் சந்ததியினருக்கும் அதைச் சொல்லுங்கள் என்று சொல்வார். இதுபற்றி அப்போது இளந்தமிழன் என்கிற பத்திரிகையிலும் எழுதி இருந்தார்.
பதிலளிநீக்குமுன்னோர் பற்றிக் கேட்டால் ஏதோ ஒரு ரிஷியின்பெயரைச் சொல்லலாமா
நீக்குஅவ்வப்போது தன்னை உணர்தல் நல்லது ஐயா.
பதிலளிநீக்குகூடவே உணர்வது எதைப் பற்றி என்று தெரிதலும் அவசியம் அல்லவா
நீக்குநம் அனைவருக்குமே எழுதுவது ஒரு வடிகால் தானே?
பதிலளிநீக்குபொதுவாகப் பலரும்பொழுதுபோக்காக எழுதுகின்றனர் என்பதிவுகளில் சாதாரணமாகப் புரிந்து கொள்ளப்படாத சங்கதிகளிருக்கும்
நீக்குஉங்கள் வழக்கமான விசாரங்கள்! பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குபல நுணுக்கமான பலரும் அறியாத விஷயங்களும் இருக்கின்றனவே
நீக்குஇதில் எதுவுமே புதிது இல்லையே! பல முறை உங்களுக்கு முன்னால் இருந்தே பலராலும் பேசப்பட்டவையே! ஆங்கிலேயர் விதைத்த விதை தானே இது!
நீக்குதெர்ந்தும்தெரியாமல் இருப்பவை பற்றியே பதிவு. வலைப் பதிவுகளில் பேசப்படாத சங்கதிகள் பிரம்மணரின் பணி பற்றி ஆங்கிலேயர் விதை விதைத்தார்களா எனக்கு புதிய சேதி
நீக்குநான் யார்...?
பதிலளிநீக்குhttp://dindiguldhanabalan.blogspot.com/2015/04/who-am-i.html
பதிவின் மையக்கருத்தில் உங்கள் பழையபதிவு திரைப்பாடல்களால் விளக்க முயன்றது போல் அல்லாமல் பலருக்கும்தெரியாத சில விஷயங்களையும் சொல்லிச் சென்றி ருக்கிறதே
நீக்குதெய்வத்தின் குரல் மற்றும் சோவின் எங்கே பிராமணன் இவை இரண்டும் இங்கே பிரதிபலிக்கிறது. நான் யார் என்பது தலைப்பு மாத்திரம். ஒன்று மட்டும் நான் புரிந்து கொண்டேன். உங்கள் கருத்துக்கள் மற்றவர்களின் சாதாரண சிந்தனைகளை விட மாறுபட்டே இருக்கும், Rebellion என்பது உங்களின் (அ )சாதாரணமான கொள்கை.
பதிலளிநீக்குஇதையும் படித்து பாருங்கள்.
http://minminipoochchigal.blogspot.com/2009/12/part1_9878.html
Jayakumar
ஆம்நான் ஒரு ரிபெல்தான் பதிவுகளில் பலரும் தெரியாமல் எட்டிப்போகும் சில விஷயங்களைச் சொல்லி இருக்கிறேனே
பதிலளிநீக்குநுணுக்கமான செய்திகளுடன் கலக்கலான பதிவு....
பதிலளிநீக்குநீங்கள் சொல்கிறிர்கள் பலரும் சொல்லத்தயங்குகிறார்கள் நன்றி
நீக்கு// என்னுள் ஏதாவது மாற்றம் தென்படுகிறதா என்று சோதித்துப்பார்த்தவன் //
பதிலளிநீக்குசிறப்பு...
சிலவற்றில் நானும் முயன்று வெற்றியும் கண்டுள்ளேன்... தோல்வியும் அடைந்துள்ளேன்... ஆனால், முயற்சி மட்டும் விடக்கூடாது என்பதே என் எண்ணம்...
முயற்சிகளுக்கு குறைவில்லை வெற்றி எது அல்லாதது எது என்றுகணிப்பதில்தான் சூட்சுமம் இருக்கிறது மீள்வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்குதான், தன் தேவைகள், தன் கடவுள், தன் வழிபாடுனு தன்னோடயே வாழ்க்கையை முடித்துவிடுபவர்கள் அதிகம்.
பதிலளிநீக்கு***மனிதனின் மலத்தை மனிதரே அள்ளும் அவலத்தைக் கண்டுஅக்காலத்திலேயே அதுதவறுஎன்று உணர்ந்தவன்***
நான் பார்த்தவரைக்கும், தன்னை அவர்கள் (இதுபோல் வேலை செய்பவர்கள்) இடத்தில் நிறுத்திப் பார்க்க தைரியமில்லாத கோழைகள்தான் பலர். நான் அந்த வேலை செய்யப் போவதில்லை. நமக்கெதுக்கு இந்த பிரச்சினை என்று போகிற பெரியமனிதர்கள் கோடிக்கும் மேலே.....அவர்களைப் பத்தி சிந்திப்பதே பெரிய விசயம்தான் சார்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி என்று பங்கு போட்டது பற்றி அந்தவயதில் தெரிந்திருக்கவில்லைவருகைக்கு நன்றி
நீக்குஇதெல்லாம் பழைய சிந்தனைகள் தானே ஐயா! 'நீங்கள் யார்' என்று உண்மையிலேயே தெரிந்துகொள்வதற்குள் ஆண்டுகள் உருண்டோடிவிடும் போலிருக்கிறதே!
பதிலளிநீக்குநான் யார் என்பது எனக்கு தெரியாததுபோல்தான் பலருக்கும் அவர்கள் யார் என்று தெரிவதில்லைஆண்டுகௌருண்டோடி விடும் என்பது உண்மையே எத்தனையோ ஆண்டுகள் உருண்டோடியும்புரிந்து கொள்ளதவர்களே அதிகம் வருகைக்கு நன்றி
பதிலளிநீக்குஎத்தனையோ புதிய விஷயங்களை அறிந்தேன் ; மிக்க நன்றி . பிராம்மணாராய்ப் பிறந்தும் மரபுகளை மீறுந் துணிச்சல் உங்களிடம் இருப்பது கண்டு வியக்கிறேன் ; பாரதியார் நினைவுக்கு வருகிறார் .
பதிலளிநீக்குவருகையும் கருத்தும்மகிழ்ச்சி தருகிறது
நீக்கு