புதன், 28 ஆகஸ்ட், 2019

ருக்மிணி கல்யாண வைபோகமே




                           ருக்மிணி கல்யாண வைபோகமே
                            -------------------------------------------------------

இன்று ஆகஸ்ட் 28ம் நாள்  சரியாக ஒன்பது ஆண்டுகளுக்கு முன்  வலையுலகத்துக்கு என்னை அறிமுகப்படுத்தியது என்பேரன்  பத்தாம் ஆண்டுக்குள் பிரவேசிக்கிறேன் முன்புபோல் சரளமாக எழுத வருவதில்லை  முன்பெல்லாம் எழுத உட்கார்ந்தால்  எழுத்துகள் தானாக வந்து விழும்  சுமாராகவும்  இருக்கும்  ஆனால் இப்பொழுதுஎழுதுவதுஎன்பதே மிகவும் கஷ்டமாயிருக்கிறது  2011 ம் ஆண்டு
 கண்ணன் கதையை கிருஷ்ணாயணம்  என்று எழுதினேன்  அதற்கு வந்த பின்னூட்டமொன்றில் ருக்மிணி கல்யாணம்வரை முயன்றிருக்கலாமோ  என்று திருமதி கீதா சாம்பசிவம் கேட்டிருந்தார்  இப்போது முயன்று பார்க்கலாமே என்றால்  அதன்   தொட்ர்ச்சியாக எழுத முடியவில்லை

பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமனின்
அவதாரங்களில் ஒன்று கிருஷ்ணாவதாரம்
அவதாரத்தில் அவனுக்கு  பல மனைவிகள்
 இதில் எதை எழுத எதை விட இருந்தாலும் –
இவற்றில்  ருக்மிணிகல்யாணம்  சிறப்பாகப் பேசப்படுகிறது
கவர்ந்து சென்று நடந்த ராக்கத மணமல்லவா
பீஷ்மகன்  எனும் விதர்ப்ப நாட்டு மன்னனனுக்கு
 ஐந்து புதல்வர் ருக்குமி ருக்மிரதன் ருக்மி பாகு
ருக்மி கேசி ருக்மி நேத்திரன்  எனப்பெயர் கொண்டவர்
 ஒரு புதல்வி ருக்மிணி மஹாலக்ஷ்மி போன்றவள்
 துவாரகைக் கண்ணனின் பால் மையல் கொண்டாள்
 முனிவர்கள் பலரும் எடுத்துரைத்த அவன் ரூபலாவண்யத்திலும்
பராக்ரக்கிரமங்களிலும் மனதைப் பறி கொடுத்து எஞ்ஞான்றும்
  அவனையே நினைத்து உருகினாள் தந்தையும்
மகள் மனமொப்பி திருமணம்  செய்ய ஒப்பினான்
 ஒரே ஆதரவாய் இருந்த  தந்தையும் மூத்தவன் 
ருக்மிக்கு எதிரே செயல் பட இயலாமல் மண
ஏற்பாடுகளில் மூழ்கினான் விதர்ப்பநநாட்டுத் தலைநகர்
 குண்டினபுரம்அல்லோலகல்லோலப்பட்டது
ருக்மியின் நண்பன்  சிசுபாலன்  கண்ணனை எதிரி யாய்
 நினைப்பவன் மணமகனாய்த் தேர்வு செய்யப்பட்டான்
ருக்மிணி மனம் தளராது கண்ணனையே  வரித்துவிட்டாள்
மனமோரிடமும் உடல் வேறிடமும் வாழமுடியாது
மனம்வாடி தன்மேல் அன்பு பாராட்டும் ஓர் அந்தணன்  மூலம்
ஓலை ஒன்று வரைந்தாள கண்ணனுக்கு திருமணவிழாவுக்கு
 வந்து தன்னைக் கவர்ந்து செல்ல வேண்டினாள்
மண நாளுக்கு  முன் நாள் கௌரி பூசைக்காக ஆலயம்
வரும்நேரம் அவனை எதிர் கொள்ள  அவளே
 வருவதாகவு  அதுவே ஏற்ற நேரம் என்றும்குறிப்பிட்டு
இருந்தாள்கண்ணனும்  இசைந்தான்   அந்தணருடனும்
ஒரு படையுடனும்கண்ணன்குண்டினாபுரம்சேர்ந்தான்
கூடவே அண்ணன்பலராமனும் ஒரு படையுடன் உடன் சென்றான்
ருக்மிணி ஆலயம்வந்தாள் வந்தவளை கண்ணன் தேரில் ஏற்றிச் சென்றான் 
துரத்திவந்தருக்மியின் சிர முடி வெட்டிக்  கொல்லத்துணிந்தவனை
ருக்மிணி  தடுத்தாள் உயிர்ப்பிச்சை பெற்றான்  ருக்மி
பின் என்ன ருக்மிணி கல் யாண வைபோகமே …….!!!!      
           

              

25 கருத்துகள்:

  1. சிறப்பு.

    பத்தாவது ஆண்டின் தொடக்கத்துக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றாகத்தான் எழுதுகிறீர்கள்! ஆனால் அரதப் பழசான விஷயங்களை எழுதும்போது வேகமாக வயதாகிவிடும் என்பதை மறந்துவிடவேண்டாம்! (அன்போடுதான் சொல்கிறேன்.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா... செல்லப்பா சார்... சில சமயம் உங்க பின்னூட்டம் ரொம்பவே சிரிக்க வைக்குது.

      நீக்கு
    2. @இரய செல்லப்பா அரதப்பழசானவற்றைதானே பல்வேறு நபர்களால் திருமண விழாவாகக்கொண்டாடப்படுகிறதுவயது அதுபாட்டுக்கு ஆகட்டும்

      நீக்கு
    3. @நெ த எதற்குத்தான் சிரிக்க மாட்டீர்கள்

      நீக்கு
  3. தொடர்ந்து வாசிக்க காத்திருக்கிறேன் ஐயா... உங்களால் முடியும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தொடர்ந்து எழுதுவேன் முடியுமென்று தோன்றும்வரை

      நீக்கு
  4. தொடர்ந்து எழுதுங்கள் ஐயா உங்களால் முடியும்.

    பதிலளிநீக்கு
  5. இக் காலத் தமிழ்த் திரைப்படங்கள் இதைத்தான் காப்பி யடிக்கின்றன ; ருக்மணி கல்யாண விவரம் தெரிந்துகொண்டேன் . நன்றி .சிசுபாலன் தரப்பார் எதிர்க்கவில்லையா அல்லது அவர்களுக்கு சேதி தெரியவில்லையா ? சிரமப்பட்டாயினும் எழுதுகிற உங்களின் மனத்தெம்பு நீடிக்க வாழ்த்துகிறேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஹா பாரதக்கதகள் என்று எழுதுவது வழக்கம் சிசுபாலன்கதையும் வரும் அதுவே ஒரு பதிவுக்கு எழுதலாம் மஹபாரதமொரு கதைக்களஞ்சியம்

      நீக்கு
  6. நன்றாகவே எழுதி இருக்கிறீர்கள். உங்களால் முயன்றால் முடியும் என்பதை நிரூபித்து விட்டீர்கள். வாழ்த்துகள், பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றிமேம்

      நீக்கு
    2. பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்நன்றி மேம்

      நீக்கு
  7. பத்தாவது ஆண்டுக்குள் நுழைகிறீர்கள். Good. Keep marching..

    பதிலளிநீக்கு
  8. பதிவுலகில் பத்து வருடங்கள். வாய் சொல்பேச்சு எளிது. அதுவே எழுதுவது என்றால் கடினம். உங்களைக் காட்டிலும் இளைய பதிவர்கள் பலரும் வெளியேறும் நிலையில் இந்த வயதிலும் விடாமல் எழுதுவதை வியக்கிறேன்.
    Jayakumar​​

    பதிலளிநீக்கு
  9. வலையுலகில் பத்தாம் ஆண்டு தொடக்கத்திற்கு வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
  10. பத்தாம் ஆண்டு. வியப்பாக உள்ளது. அருமை ஐயா. வாழ்த்துகள். தொடரந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  11. பத்தாம் ஆண்டு விழா! இனிய வாழ்த்து(க்)கள் ! விட்டுவிடாமல் அவ்வப்போது, எழுத மூட் வரும்போது எழுதுங்கள்.!

    பதிலளிநீக்கு
  12. வாழ்துகள்! தொடரட்டும் பல பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  13. பழைய பதிவுகளில் பலவும் இருக்கும்

    பதிலளிநீக்கு