Thursday, January 9, 2020

கனவில் தொலைந்து போகிறவன்



                                       கனவில்  தொலைந்து போகிறவன்
                                      --------------------------------------------------------


கனவுகள் இனிமையானவை கற்பனை கலந்தால் எழுது பொருள்கிடைக்கும்  இம்மாதிரி கனவுகளுடன்   கற்பனை கலந்து பல பதிவுகள் எழுதி இருக்கிறேன்   கனவில் கடவுளோடு உரையாடி இருக்கிறேன் நான் நினைத்தும் பார்க்காத பல செய்திகள்  கற்பனையில் வரும் சில தத்துவங்கள்பிறக்கும்   ஆனல் என்ன குறை என்றால்  விடிந்ததும்  கனவுகள்மறந்து போகும் பின் எழுதுவது எல்லாம்கற்பனையே அண்மையில் புத்தாண்டு பதிவில் என்  சின்ன சின்ன ஆசைகளைக் குறிப்பிட்டு இருந்தேன்   அவை எல்லாம் கனவில் சாத்தியமாகும் போது ஏதோ இனம் தெரியாத மகிழ்ச்சி வருகிறது கனவில் பூமியின் புவி ஈர்ப்பினையும் தாண்டி  மிதக்கவும் செய்திருக்கிறேன்  அப்போது அதுவே சந்தோஷம்தரும்  கனவிலாவது நினைவில் செய்ய முடியாததைச்செய்ய  முடிகிறது  ஒரு வேளை வாழ்வெ ஒரு கனவாய் இருந்தால்  எத்தனை நன்றாக இருக்கும்
நேற்றிரவு ஒரு கனவு கண்டேன்   ஊர் பெயர் தெரியாதஇடம் நானும் என் இளையமகனும்  எங்கோநடந்து செல்கிறோம்   என்னை விட என்மகன் மகிழ்கிறான் அப்பா நீங்கள் நன்றாகத்தானே நடக்கிறீர்கள் உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று  உற்சாக மூட்டுகிறான்  அப்போதே அவனிடம் இது கனவுதானே என்கிறேன் சிறிது தூரம் சென்றபின் போதும் வீடுநோக்கிச்செல்வோம் என்கிறேன்  பாதைமறந்துவிட்டது  ஆனால் டைரெக்‌ஷன்  நோக்கிச் செல்லலாம் என்கிறேன்  சிறிது தூரம் சென்றபின்   வழிதவறியது தெரிகிறது மகனிடம் ஏதாவது  வண்டி கிடைக்குமா எனப்பார்க்கச் சொல்கிறேன் அவனும் வண்டி தேடிப்போகிறான்
 அவன் போய் சற்று நேரம்  ஆனதால்   நானும் அங்குமிங்குமலைகிறேன் அங்கு ஒரு பெரியவரிடம் எங்கள் இருப்பிடம் பற்றிக்கூறி எவ்வளவு தூரம்  இருக்குமென்க்கேட்கிறேன்  அவர் சொன்ன தூரம் என்னை மலைக்க வைத்து விட்டது கனவுக்குத்தான் நேரம் தூரம் தேசமெதுவுமில்லையே   
மிகக்குறைந்த நேரத்தில் மிக அதிக தூரம் வந்து விட்டோம் என்று தெரிகிறது நடந்தோ வண்டி வைத்தோ கடக்கும்தூரமல்ல  திடீரென்று என்முன்னே  ஒரு பெரியநாய்  மெல்லமெல்லஎன் அருகில் வருகிறது  எனக்குள்பயமதிகரிக்கிறது எனக்கானால் நாய் என்றாலேயே  பயம்  அதிகம்  என்மேல் தாவி என் மெல் கால்வைத்து என்னை மோப்பம்பிடிக்கிறது பயத்தில் நான்  கூச்சல் போட்டு விட்டேன் கனவ்ல்பேசுவது பிறருக்குத் தெரியாது ஆனால் கூகுரல் கேட்கும்   



22 comments:

  1. நனவுலகமும் (நடப்புலகம் என்று கூடச் சொல்லலாம்) கனவுலகமும் கலந்த கனவுகள் எனக்கும் வருவதுண்டு...   சமீபத்தில் கூட....

    ReplyDelete
    Replies
    1. அருமையான பதிவுகள் கிடைக்கலாம் நினைவுக்கு வந்தால்

      Delete
  2. சந்தோஷப்படுவது, இன்பப்படுவது நடைமுறை வாழ்வைவிட கனவில் சாத்தியமாகும் ஐயா.

    கனவு இல்லையெனில் ஏழை இறுதிவரை துன்பப்படுவான்.

    ReplyDelete
    Replies
    1. கனவுகள் நம்வசம் இருந்தால் நன்று

      Delete
  3. கனவுகள் இல்லாத உறக்கம் கொள்பவர்கள் அரிது என்றாலும் அவர்கள் கொடுத்து வைத்தவர்கள். என் பாதி உறக்கம் கனவுகளிலேயே கழிந்துவிடுகிறது.

    ReplyDelete
  4. கனவுகள் இனிமையானவை நிஜ வாழ்வில் நடக்காதவை கனவில் நடக்கலாம்

    ReplyDelete
  5. கனவு வரும் அளவிற்கு தூக்கம் வருவதே பலருக்கும் பெருங்கனவு...!

    ReplyDelete
    Replies
    1. அது பெருங்கனவு அல்ல கவலை

      Delete
  6. எனக்கு இவ்வளவு தொடர்ச்சியாய்க் கனவு வருவதில்லையே ! எல்லாம் துண்டு துண்டாய் !

    ReplyDelete
    Replies
    1. கனவுகள் எல்லோருக்கும்வரும்பெரும்பாலும் அவை நினைவுக்கு வருவதில்லை

      Delete
  7. கனவுகள் ஏன் வருகின்றன என்பதற்கு அறிவியல் காரணம் சொல்லலாம். அதைச் சொல்லி எல்லாவற்றிற்கும் ஒரு அறிவியல் உண்மை இருப்பதைத் தெரிந்து கொள்வதை விட கனவின் சுகத்தை சுகிப்பதே ரசனையானது. அந்த ரசனையை மலினப்படுத்த நான் விரும்பவில்லை. கனவு உங்கள் எண்ணங்களுக்கு ஒரு அவுட்லெட். அனுபவியுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள்பதிவுகளின் தொடக்கத்தில் கனவுகள்பற்றி நீங்கள் எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறது எல்லா காரண காரியங்களும் விளங்குவதில்லை நாம் விரும்பியவாறு கனவுகள் வருகிறதா என்ன அவுட்லெட் ஆவதற்கு

      Delete
    2. ஆமாம். உங்கள் நினைவாற்றலுக்கு நன்றி.

      'கனவில் நனைந்த நினைவுகள்' என்ற குறுநாவலின் ஒவ்வொரு அத்தியாயத் தொடக்கத்திலும் கட்டம் கட்டி கனவுகள் பற்றி என் எண்ணங்களைப் பதிந்திருந்தேன். இப்போ சொல்லியிருப்பது இப்பொழுது கனவு பற்றி மனசில் தோன்றியது.

      Delete
    3. என்ன நினைவாற்றல் சார் எழுதியவை நினைவுக்கு வரவில்லையே

      Delete
  8. நான் கனவு காண்கிறேனா இல்லையா என்பதே எனக்குத் தெரியறதில்லை. விழித்து எழுந்தால் எதுவும் நினைவில் வருவதில்லை. ஆனால் தூக்கத்தில் கத்துகிறேன் அடிக்கடி என என் கணவர் சொல்லுவார். இங்கேயும் அப்படிக் கத்திப் பையர் கூட எழுந்து வந்து என்னவென்று பார்க்கிறார் என்றும் சொல்லுவார். ஆனால் நான் முழிச்சுக்கறதில்லையாம்! தூங்கிண்டு தான் இருந்திருக்கிறேன். :))))) விழித்து எழுந்தாலும் சொல்லத் தெரியாது.

    ReplyDelete
    Replies
    1. கனவுகளுடன் ஒன்றி விடுகிறீர்கள் போல பக்கத்தில் இருப்பவர் பாடுதான் திண்டாட்டம்

      Delete
  9. உங்கள் ‘கனவை’ நீளமாகச் சொல்லியிருக்கிறீர்கள். இதில் எத்தனை சதவிகிதம் கற்பனை !

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்

      Delete
  10. //பயத்தில் நான் கூச்சல் போட்டு விட்டேன் கனவ்ல்பேசுவது பிறருக்குத் தெரியாது ஆனால் கூகுரல் கேட்கும்   // suspense வைத்து முடித்து விட்டீர்கள். பின்னர் என்ன நடந்தது. மனைவி பயந்து உங்களுக்கு விபூதி பூசி விட்டார்களா? 

    ReplyDelete
    Replies
    1. இன்னும் எழுதப்போனால் கற்பனை ஆகிவிடும்

      Delete
  11. கனவுக்கும் நனவுக்கும் தொடர்பு உண்டு. நீங்கள் கண்ட கனவில் நாய் வந்ததன் காரணம் ஏற்கனவே நீங்கள் நாய் வளர்த்திருந்ததுதான். உங்களி அறியாமலேயே அந்த நிகழ்வு அடிமனதில் பதிந்து இருந்ததால் கனவில் அது வருகிறது என எண்ணுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நான் நிறைய கற்பனை செய்பவன் எனக்கு நாய் என்றால் பிடிப்பதில்லை இப்போதெல்லாம்கனவில் நாய் வந்தாலும் கனவு அது பற்றியதல்லவே

      Delete