Tuesday, August 11, 2020

இன்று கோகுலாஷ்டமி

               

                                                கோகுலாஷ்டமி
                                               ===============
முதலில் கண்ணனை  கேசாதி பாதம் பார்ப்போம்   நலம் தரும்

கண்டேன் நான் கண்ணனை

கார்மேக வண்ணனைக்

குருவாயூர் கோவில் நடையில்
 
கருநிறம் சுருட்டைமுடி
ரத்தினம் பதித்த தலையணி
மயில் பீலி செருக
வெண்ணிறப் பிறை நெற்றி ,
மேல்நோக்கி இடப் பெற்ற
குறியுடன் முடியும்
நெற்றியும் கண்ணாரக்
( கண்டேன் நான் கண்ணனை )

விபுவே.!அசைகின்ற புருவங்கள்
அடியில் அருள்தரும் உன் கண்கள்
ஒளிவீசி என் அகம் குளிர்விக்கக்
( கண்டேன் நான் கண்ணனை )

எடுப்பான நாசி கண்ணாடிக் கன்னங்கள்
சுடரிடும் மகர குண்டலங்கள்  அசைந்தாட,
ஒளிவீசும் முத்துப் பற்கள் செவ்விதழ்களின்
நடுவே பளீரிடப் புன்னகைக்கும் உன் முகம்
( கண்டேன் நான் கண்ணனை )

இரத்தினம் பதித்தக் கை வளைக் குலுங்க
செந்தளிர் விரல்கள் மீட்ட
வேணுகானம் காற்றில் தவழ
நாத கீதந்தனில் எனை மறந்து
( கண்டேன் நான் கண்ணனை )

மென் கழுத்தில் மணிமாலைகள்
மலர்மாலைகள் தொங்க
நிற மாலைகளில் வண்டினம் வந்தாடக்
( கண்டேன் நான் கண்ணனை )

சந்தண மணம் பரப்பும் உன்
திருமேனியில் உலகமே  ஒன்றியிருந்தும்
மெல்லிடையோய் பொன்னிறப் பட்டாடையுடன்
கதிர் பரப்பும் மணி அரைஞாணின்
சலங்கைகள் சல சலக்கக் கண்டு
நீலவண்ணக் கண்ணா எனை மறந்து
( கண்டேன் நான் கண்ணனை )


அழகு தொடை இரண்டும் பருத்தவை
அழகுடன் உறுதியும் கலந்தவை
மனம் மயக்கும் கலங்கடிக்கும்
எனவே பட்டாடை மறைத்தனவோ
காணும் கணுக்கால்பிடித்து வணங்கக்
( கண்டேன் நான் கண்ணனை )

உன் கழலடி தொழலே இன்பம்
அறியாமையில் மூழ்கியவர்களை
மந்தார மலையை உயர்த்தும் ஆமைக்கு
ஒப்பாக உள்ளது உன் நுனிக்கால்
அடைக்கல மடைந்த  என் அறியாமை
துன்பங்கள் களைய வேண்டியே
( கண்டேன் நான் கண்ணனை )

குருவாயூரின் தலைவனே அருட்கடலே
கிருஷ்ணா.! உன் உறுப்புகளில் திருவடிகளே
சிறந்தவை மோட்சம் தருபவை தலைவைத்து
பற்றவே வந்த எனைக் காத்தருளக்
( கண்டேன் நான் கண்ணனை.)

இந்த கொரோனா தொற்று வந்தாலும் வந்தது எங்கள் வீட்டின் முன்  வரும்விழாக்கால ஊர்வலங்கள் tableau போன்றவைஅறவே  இல்லை இல்லாவிட்டால்என்ன பழைய நினைவுகள் இருக்கிறதே நினைவிலாட



கண்ணனின் காளிங்க நடனம்  பழைய சேமிப்பிலிருந்து

14 comments:

  1. பழைய நினைவுகள் என்றாலும் இனிமை...

    ஸ்ரீகிருஷ்ண.. கிருஷ்ண..

    ReplyDelete
    Replies
    1. இப்பொதெல்லாம் வாழ்வே நினைவுகளாகி விட்டதே

      Delete
  2. ரசித்தேன்.   கோகுலாஷ்டமி வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. என் எழுத்துக்கு நாராயணீயம் அடிப்படை பேஸிஸ்

      Delete
  3. இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  4. காணொளியும் கவிதையும் அருமை....வாழ்த்துகளுடன்..

    ReplyDelete
    Replies
    1. எல்லாப் புகழும் நாராயணியத்துக்கே

      Delete
  5. ரசித்தேன் சார். தாமதமான வாழ்த்துகள். இந்தக் காணொளி முன்பும் பார்த்த நினைவு. இப்போதுதான் திருவிழாக்கள் இல்லையே

    கீதா

    ReplyDelete
    Replies
    1. திருவிழாக்களை வீட்டின் முன்பிந்தேகாண முடிந்ததும் ஒருகாலம்

      Delete
  6. உங்கள் கவிதை அருமை.
    கண்ணனின் காளிங்க நடனம் அருமை.

    ReplyDelete
  7. கவிதை நாராயணியத்தில் இருந்துஎடுத்து ஆண்டது

    ReplyDelete