Tuesday, August 18, 2020

கடைசியில் சில பக்கங்கள் மிஸ்ஸிங்


                           கடைசியில்   சில பக்கங்கள்   மிஸ்ஸிங்
                            ---------------------------------------------------------------

  நான் நாடகங்கள் எழுதி மேடை யேற்றி இருக்கிறேன் என்று என்னைபடிக்கும் பலரும் அறி வார்கள்பழைய மேடை யேற்றிய நாடகம் ஒன்றுகிடைத்தது அதில் கடைசியில் சிலபக்கங்கள் மிஸ்ஸிங் இல்லை இல்லை பென்சில்லில் எழுதி இருந்ததுபடிக்க முடியவீல்லை அட்வெர்சிடியையும் அட்வான்டேஜாக
மாற்ற எண்ணினேன்  இருக்கும் வரை பதிவிடுவது  கடைசி பக்கங்களை முடிக்கபதிவுலகநண்பர்களைநாடுவது யார் நன்றாக  முடிக்கிறார்களோ  அவர்களுக்கு ஒருபரிசு உண்டுரூபாய் ஆயிரம்  என்மறதிக்கு நான்கொடுக்கும் விலையாகட்டும்வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாள் விட்டு நாடகம் பதிவாகும்  கடைசியில் மீண்டும் போட்டி பற்றி நினைவூட்டுவேன் எழுத்தில் ஆர்வம் உள்ளவர்கள்காற்று உள்ள போதே துற்றிக்கொள்ளட்டும்


காட்சி 13
இடம்---கனக சபை வீடு
பாத்திரங்கள் ----கனகசபை வேதவதி சபாபதி நிருபர்

க்னக--- வேதா வேதம்  வேதவதி எங்கெ போய்  தொலஞ்சா இவ

வேதம்  --- நான் எப்போ போய் தொலைவேனோன்னு காத்து கிட்டிருக்கீங்க அந்தபாழாப்போன  யமனுக்கு என்னைப்பார்க்க மட்டும் கண்ணுதெரியலே

கனக—அது எப்படீம்மா தெரியும் ஊரிலெ  ஒவ்வொருத்தி தன் புருஷனை யமன் கிட்ட இருந்துமீட்டுட்டு  வர்ர காலத்திலெ நீ கூப்பிட்ட  குரலுக்கு ஏன்னு கேட்காம  புரட்சி  செய்யறியே

 வேதா--- இந்தாங்க  என்னை ஒன்னும்   அவ்வளவு மட்டமா நினைச்சிடாதீங்க  ஊரில எவளோ செய்த மாதிரி நானும்  உங்களை யமன் கிட்ட இருந்து  மீட்டிட்டு வரணும் அவ்வளவுதானே கொஞ்சம் இருங்க வரேன்(போகிறாள் )

கனக ----இவ்வளோ காலத்துக்கு அப்[புறமாவது இவளுக்கு நல்ல புத்தியை கொடுத்தியே கடவுளே உனக்கு நன்றி நீ வாழணும்

வேதா-----(கையில் உலக்கையுடன்  வந்து)  இப்ப நீங்க கொஞ்சம்  சாகணும்

கனக --- எதுக்கு

 வேதா --- சாகலேன்னா எப்படி  நான்  யமன் கிட்ட இருந்துமீட்டுட்டு வரதாம்  கொஞ்சம் தலையைக்காட்டுங்க உங்களை க்ளோஸ்  செய்திட்டு அப்புறமா யமன் கிட்டே இருந்து மீட்டூட்டு வரேன் (என்று உலக்கையை ஓங்க )

கனக -----ஐயோ வேதம்  வேதம் (என்று சுற்றி சுற்றி வர அவளும் விடாமல் துரத்துகிறாள்  அப்போது அங்கே நிருபர் வந்துஇருவருக்கும் நடுவில் நின்று )

நிருபர் --- உங்கள்சண்டைக்கான காரணத்தை முதல்ல சொல்லுங்கசார்  இன்னிக்கு காலையில் இருந்து ஒரு  நியூஸ்கூட கிடைக்கல  திடீர்னு உலகம் யோக்கியமா  மாறிடிச்சோன்னு சந்தேகப்பட்டேன் சொல்லுங்க சார் (என்று பேப்பர் பென் எடுக்க )

கனக --- உன்னை யார்யா  இங்கே கூப்பீட்டது

நிருபர் ---கணவனை மனைவியின்  உலக்கை தாக்குதலில்  இருந்து காப்பாற்றிய  நிருபருக்கு ஏச்சு ஆங் என்ன கேட்டீங்க என்னை யாரும் கூப்பிட வேணாம்சார் எங்கெங்கெ அதர்மம் தர்மத்தைஅழிக்க நினைக்குதோ அங்கங்கே  நான் காட்சி அளிப்பேன்

சபாபதி ----(அங்கு வந்து )சார் நீங்களா வாங்கஎங்க நியூசைப் பேப்பர்ல  போட்டதுக்கு தாங்க்ஸ்  அப்பா இவ்வளவு பெரிய மனுஷனாய் இருந்து உங்கபேர் பேப்பர்ல வரலன்னு கவலைப்பட்டீங்களே  இப்ப பாருங்க வந்துடுச்சு இதோ பாருங்க
(பேப்பரை நீட்டுகிறான்)

கனக --- நடுத்தெருவில்சம்பந்தி சண்டை மேலத்தெரு கனகசபைக்கும் நவகோடி எனும் அவர் சம்பந்திக்கும்----

வேதா---- இதைப்போட்டிங்களே  தூக்கில போறவனைக்கட்டிக்கிட்ட வள் கதையைப்போட்டீங்களா

 நிருபர் ---அதுதானே முதல் பக்கத்து முக்கிய செய்தி

சபாபதி—அன்னிக்கு அந்த குமரேசனை விட்டு விரட்டுனு  வெட்டினோமே

 கனக --- வெரட்டினா என்னடா இப்ப அவ்னைக் கூட்டிட்டு வாழப் போறாளாமே அருணா

சபாபதி  ---  what---
 
நிருபர்----- GRAND news  அதைப்போய் முதல்லகுறிப்பெடுக்கணும் வரென் பிரதர்(ஓடுகிறான்)

கனக—இதைக்கேட்டதும்  நானும் உன்னை மாதிரிதான்யா  சிலையா நின்னேன்  என் இதயமே நின்னு போச்சோன்னு சந்தேகப்பட்டேன்

சபா ----அதெப்படி நிக்கும் உங்களுக்குதான் இதயமே கிடையாதே

கனக – கேட்டயாடி நம் புத்திர பாக்கியம் பேசறதை

வேதா----அவனுக்கு  மூளை ஜாஸ்தின்னு  சும்மாவா சொன்னாங்க  எங்கண்ணு (சபாபதியை  திருஷ்டி கழிக்கிறாள்)

கனக ---வேற வெனையே வேண்டாம்   இப்படி ஒரு சம்சாரமும் மகனும் இருந்தா  மனுஷன் தூக்குதான் போட்டுக்கணும்

சபா--- அப்பா சாகறதுதான்  சாகறீங்க  அருணாவோட  அப்பா மாதிரி வில்லங்கம்  செய்து வைக்காம ஒழுங்கா என் பேருக்கு உயில எழுதி வையுங்க  நீங்க பாட்டுக்கு சபாபதி கல்யாணம் செய்துகிட்டாதான்  சொத்துனு எழுதி  தொலச்சிடாதீங்க ஒரு பெண்ணாவது என்னை க் கல்யாணம் செய்துக்குவான்ற நம்பிக்கையே இல்லாம போச்சு

கனக---நம்பிக்கையை கைவிடாதேடா

வேதா ---அருணாவோட  சொத்தும்  வரும்னு தான் நாமும்நம்பினோம்
 
கனக –இப்பமட்டும்  என்ன கெட்டுப்போச்சு  அவ புருஷனோட முப்பது நாளாவது  வாழணும்னு  நிபந்தனை இருக்குதுன்னேன்

 வேதா—அதான் வாழப்போறாளே  பின்ன என்ன

கனக—அங்கதானிருக்கு பாயிண்ட் சபாபதி எப்படியாவது அவளை வாழ முடியாத   தடுக்கணும்

சபா---ஐடியா   சகுனியும்சாணக்கியனும் கெட்டாங்க  பொன்னடை போர்த்தி  பாராட்ட  வேண்டிய மேதை அப்பா நீங்க

வேதா ---பாராட்டு  இருக்கட்டும்டா கண்ணு  மொதல்ல அப்பா சொல்றதக் கேளூ

சபா--- அப்பா இனிமேல் ஒண்ணும் சொல்லவேண்டாம்   எப்போ அடி எடுத்துக் கொடுத்திட்டீங்களோ  அதுக்கப்புறம்  சூழ்ச்சி படலத்த முடிச்சு வெக்க வேண்டியது என் பொறுப்பு
                                 திரை          











20 comments:

  1. பெரிய நாடகம் போலத் தெரியுது... இதை நிறைய தடவை மேடையேத்திருக்கீங்களா?

    ReplyDelete
    Replies
    1. iஇதை ஒரு முறைதான்மேடை யேற்றி இருக்கிறேன் மனுஸ்க்ரிப்ட் அழிந்துபோனதால்ஒருபுதுமுயற்சி யாக முடிக்க வாசகர்களை வேண்டுகிறேன்

      Delete
    2. தலைப்பு எழுத்தாளர் சுஜாதா தலைப்பு போல தெரிந்து ஆச்சரியமாக உள்ளே வந்தேன்.

      Delete
    3. அதுதானே பார்த்தேன் ஜொதிஜியை இழுக்க தலைப்பு சுஜாதாவுடையதுபொல் இருக்க வேண்டுமோ ஒருபுத்தகத்தின் அட்டையைப்பார்த்து அதனை மதிப்பிடல் கூடாதென்று சொல்வார்கள்

      Delete
  2. உரையாடல் ரசிக்க வைத்தது தொடர்கிறேன் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. ரச்த்து தொடர்வதற்கு நன்றி ஜி

      Delete
  3. எங்கெங்கே அதர்மம் தர்மத்தை அழிக்க நினைக்குதோ அங்கங்கே வரும் நிருபர்... அடேங்கப்பா...!

    ReplyDelete
    Replies
    1. வாயுள்ள பிள்ளை போல இருக்கு

      Delete
  4. ஹையோ...   வில்லன் எண்ட்ரியா?   இவனை வேற அருணா சமாளிக்கணும்!  குமரேசனும்தான்!

    ReplyDelete
    Replies
    1. காமெடியன் வில்லனாவானோ

      Delete
  5. என்னை யாரும் கூப்பிட வேணாம்சார் எங்கெங்கெ அதர்மம் தர்மத்தைஅழிக்க நினைக்குதோ அங்கங்கே நான் காட்சி அளிப்பேன்//

    ஹா ஹா ஹா இதுவும் இன்னும் வசங்களை ரசித்தேன் சார்.

    சார் பெரிய நாடகம் போல இருக்கு. அப்ப 2.30 - 3 மணி நேரம் நாடகமோ

    கீதா

    ReplyDelete
    Replies
    1. 1-30 to 2-30 மண்க்குமேல் வராது

      Delete
  6. வசனங்கள் அருமை சார். தொடர்கிறோம்

    துளசிதரன்

    ReplyDelete
  7. தொடர் வருகைக்கு நன்றீ சார்

    ReplyDelete
  8. தொய்வில்லாமல் செல்லும் உரையாடல்களை தொடர்ந்து ரசித்து, வாசித்து வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஊன்றி வாசிப்படு தெரிகிறது நன்றி

      Delete
  9. எல்லாரும் குறீப்பிட்டதுபோல் உரையாடல்கள் உயர்தரமாக இருக்கின்றன.

    ReplyDelete
  10. உரையாடல் மூலம்கதை சொல்லப்படுகிற்து

    ReplyDelete