Friday, August 28, 2020

நினைவுகள் ஊடே ஒரு பயணம்

                                                  நினைவுகள் ஊடே ஒருபயண ம்
                                                  ---------------------------------------------------


பயணிப்பது என்க்கு பிடித்தசெயல் ஆனால் இப்போதெல்லாம் நினைத்துக் கொள்ளக்கூட  முடிவதில்லை என்னை யாராவது பயணிக்க அழைப்பது அவர்களே அவர்கள் தலையில் பாரமேற்றிக் கொள்வது போலாகும்  ஆனால் நான் பயணம் செய்த  இடங்கள்பற்றியும் அந்தநினைவுகள்பற்றியும்  நான்  எண்ணுவதை யாராலும்  தடுக்கமுடியாது  அப்படி பயணித்த இடங்களில் ஒன்று  பஞ்சாப்  அது நடந் து ஆகிறது 35 ஆண்டுகள் எழுதுவது எல்லாமே நினைவலைகள் பயணத்துக்கு முன்  சீக்கிஸம்  பற்றிய ஒரு புத்தகம் வாங்கினேன் அதை படிக்க துவங்கும் முன்  அப்போது எங்கள் வீட்டிலிருந்தசெல்லம்  செல்லி  அதைக் கிழித்து போட்டு விட்டது செய்ததுதவறு என்று உணர்ந்ததாலோ  என்னவோ  நான் அலுவலகம்   விட்டு 
 வரும்போது என்னைக்காணும்முன்  அது சோஃபா அடியில் சென்று ஒளிந்து கொண்டது நான் பஞ்சாப் சென்று வந்த அனுபவங்கள் மனதில் ஓடியது

அம்ருதசராஸ் மற்றும் கோவிந்தவால் சென்று வந்த அனுபவங்கள் .  1985 ஆம் வருடம் என்று நினைக்கிறேன். சம்பவங்கள் நினைவுக்கு வரும் அளவுக்கு மாதம் தேதிகள் நினைவுக்கு வருவதில்லை. நான் திருச்சியில் பாரத மிகுமின் கொதிகல தொழிற்சாலையில் உள்ள வால்வ் டிவிஷனின் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவின் பொறுப்பில்  இருந்த காலம்.

     BHEL நிறுவனம்அகில இந்தியாவில்எல்லா  இடங்களிலும் நீக்கமற  நிறைந்திருக்கும்  ஒரு நவரத்னா கம்பெனிபஞ்சாப் மாநிலத்தில் சில வகை வால்வுகளை  உற்பத்தி செய்ய ஒரு தொழிற்சாலை நிறுவ எண்ணி கோவிந்தவால் என்ற இடத்தைத் தேர்ந்தெடுத்தனர்அதற்கு டெக்னிகல் மற்றும் தரக்கட்டுப்பாடு  சம்பந்தமான விவரங்களை விளக்கவும் ஆலோசனை கூறவும்  BHEL  திருச்சியிலிருந்து  டிசைன் அல்லது உற்பத்திப் பிரிவிலிருந்து பொறுப்புள்ள அதிகாரி ஒருவர் சென்று கோவிந்தவால் தொழிற்சாலை அதிகாரிகளுக்கு விளக்க வேண்டி இருந்தது..அந்த தொழிற்சாலை அப்போது அதன் ஆரம்ப கட்டத்தில் இருந்ததுஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார் முடிவுற்று பஞ்சாபே ஒரு கொதிகலன் போல இருந்த நேரம்திருச்சியிலிருந்து அங்கு செல்ல யாரும் துணியவில்லை.டிசைன் மற்றும் மானுபாச்சர்  உடன் நெருங்கிய தொடர்புடைய தரக்கட்டுப்பாடு அதிகாரி யாரையாவது அனுப்பலாம் என்று முடிவு எடுக்கப்பட்டதுதினமும் இருபது முப்பது கொலைகள் நிகழும் பஞ்சாபுக்கு யாரும் போக விரும்பவில்லைதரக்கட்டுப்பாட்டின் பொறுப்பிலிருந்த என்னிடமும் கேட்கப்பட்டதுநான் சரியென்று ஒப்புக்கொண்டேன்.அதற்கு இரண்டு மூன்று காரணங்கள் இருந்தனஒன்று எனக்குப் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்யப் பிடிக்கும்இரண்டாவது என் பொறுப்பை தட்டிக் கழிக்க நான் விரும்பவில்லைமூன்றாவது எனக்கு ஏதாவது அசம்பாவிதம் நடக்க இருக்கும்t STATISTICAL PROBABILITY அதாவது பஞ்சாப் மாநிலத்தில் 25 லட்சம் பேர் இருக்கிறார்கள் என்றால் அதில் ஒரு நாளில் 25 பேர் தீவிர வாதிகளால் கொல்லப்படுகிறார்கள் என்றால் லட்சத்தில் ஒருவர் சாக வாய்ப்பு என்று அர்த்தம்அந்த லட்சத்தில் ஒருவனாக நான் இருப்பேன் என்பது HIGHLY IMPROBABLE .ஆக  நான் பஞ்சாப் பயணமானேன். 

         வால்வ் தொழிற்சாலை அமைக்கப்பட இருந்த கோவிந்தவால்  அம்ருதசரசிலிருந்து சுமார் அறுபது, எழுபது கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. பாகிஸ்தான் எல்லையிலிருந்து சுமார் முப்பது  கிலோ மீட்டர். கோவிந்த வால்   கெஸ்ட் ஹவுஸ்  தயாராக  இல்லாத நிலையில் அம்ருதசரசிலிருந்து தான் .         தினமும் பயணிக்கவேண்டும்  தினமும்  கோவிந்தவால்   தொழிற் சாலை    நிர்வாகி என்னைக் காலையில் ஹோட்டலிலிருந்து பிக் அப் செய்து பணிமுடிந்ததும் மாலையில் ஹோட்டலில் விடுவதாக ஏற்பாடு.
          எனக்கு ஓரிரு சீக்கிய நண்பர்கள் உண்டு. என்னுடைய பயிற்சி காலத்தில் இந்தியாவின் எல்லா மாநிலத்தவரிடமும் பரிச்சயம் உண்டு. தமிழ் நாட்டில் அநேகமாக சீக்கியர்களை நாம்  அங்கு மிங்குமாக  ஒன்றிரண்டு   பேரைத் தான்   காண முடியும்நான் அம்ருதசராஸ் சென்றபோது  எங்கு பார்த்தாலும் தலைப்பாகை அணிந்த சர்தார்ஜிகளை கண்டபோது என்னை நானே சற்று வித்தியாசமாக உணர்ந்தேன்.

          
முதல் நாள் நான் கோவிந்தவால்  தொழிற்சாலை சீக்கிய  நிர்வாகியுடன்  டாக்சியில் பயணப்பட்டேன். அவரிடம் அங்குள்ள நிலைமை குறித்து விசாரித்தால்அவர்அதிகமாகபேச விரும்பவில்லை. அவருக்கு  என்னைப்  பார்த்து பயம் போல் தோன்றியதுஅம்ருதசரசிலிருந்து கோவிந்தவால் போகும் வழியில் தரன் தரன் என்ற ஒரு இடம்தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த இடம்அதன் அருகே நாங்கள் சென்றபோது எங்கள் கார் வழி மறிக்கப்பட்டதுபயத்தில் உறைந்து போனேன்கூட வந்த சீக்கிய நிர்வாகி என்னை பயப்படாதிருக்க கூற வண்டியை விட்டு இறங்கினோம் .மூன்றுநான்கு சர்தார்ஜிகள் எங்களை அருகிலிருந்த ஒரு சிறிய குருத்வாராவுக்கு அழைத்துச சென்றனர்அங்கிருந்த லங்காரில் இலவச உணவு அளிக்குமிடம்.) எங்களுக்கு சாப்பிட சப்பாத்தி சப்ஜி கொடுத்து உபசரித்தனர்.அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு தாம்பாளம் மாதிரி தெரிந்த ஒரு பாத்திரத்தில் எங்களுக்கு விருப்பமிருந்தால் ஏதாவது பணம் போடலாமென்றார்கள்.என் பாக்கெட்டில் கை விட்டு கிடைத்த (ரூபாய் ஐம்பதோ நூறோ தெரியவில்லை.)பணத்தைப் போட்டேன் .அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர்கள் மேல் மதிப்பு சற்றே அதிகமாயிற்று.பார்ப்பதற்கு முரடர்கள் போல் தெரிந்தாலும் வாழ்க்கையில் கொடுமைகளை அதிகம் அனுபவித்தவர்கள் .இந்திய பாகிஸ்தான் பிரிவினையில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள்.சீக்கிரமாக உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்யாரையாவது நம்பினால் அடிமை மாதிரி எது வேண்டுமானாலும் செய்வார்கள்உடலுழைப்புக்கு அஞ்சாதவர்கள்வியாபார நுணுக்கங்கள் தெரிந்தவர்கள்.


         
ஒருமுறை போபாலில் ஒரு சர்தார்ஜியின் கடையில் என் பிள்ளைகளுக்காக ஆயத்த உடைகள் வாங்க சென்றேன்அன்று காலை தலைமையகத்திலிருந்து என் வேலை நிகழ்ச்சி நிரலில் மாற்றம் கூறி உடனே ட்ராம்பே செல்லப் பணித்திருந்தனர்அதனால் உடை வாங்கி இருக்கும் பணத்தை செலவு செய்ய தயக்கமாயிருந்ததுஅந்தக் கடை முதலாளி என்னிடம் பணம் இல்லாவிட்டால் பாதகமில்லைஊர் பொய் சேர்ந்தபிறகு அனுப்பிக் கொடுங்கள் போதும் என்று கூறி ,முன்பின் அறியாத என்னிடம் உடைகளைப் பாக் செய்து கொடுத்தார்மனித இயல்பு தெரிந்து பழகுவதில் சர்தார்ஜிக்கள் சிறந்தவர்கள் என்ற எண்ணத்தை என்னிடம்  ஏற்படுத்தினார் அவர்.  பஞ்சாபில் எனக்கு வேண்டி ஏதாவது  செய்வதற்கு வாய்ப்பு தருமாறு வேண்டி வேண்டி உதவியவர்கள்  நிறையப் பேர்.  பஞ்சாபில் பிச்சைக்கார  சர்தார்ஜிகளைப் பார்ப்பதே   மிகவும்  அரிது.


        பஞ்சாப் சென்றபோது அம்ருதசராஸ் பொற்கோவில் காணும் பாக்கியம் கிடைத்தது.ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த இடம் காணும்போதுகாந்தி படத்தின் காட்சிகள் நடுவே நான் இருந்ததுபோல் ஒரு உணர்வு ஏற்பட்டதுபொற்கோவிலில் சீக்கியர்களின் அதிகார பீடமான அகல் தக்த் இருக்கிறதுஅங்குள்ள ஒரு ஓவியபட காலரியில் இருக்கும் படங்களைப் பார்க்கும்போது மனம் பதைக்கிறதுசீக்கியர்களின் தியாகங்களும் உயிர்பலிகளும் கோரமான படங்கள் மூலம் தத்ரூபமாக வெளிப்படுகிறதுஅதுதான் அவர்களது உள்ளக் கனலை அணையாது காக்கிறதோ என்னவோ.

        ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்கோவின்தவாலுக்கு ஒரு  தொழிற்சாலை கிடைத்ததில் மகிழ்ந்த அவர்கள் அது சரியாக  சிறப்பாக  நடைபெற ஆலோசனைகள் கூறி வழி நடத்த வந்த என்னிடம் மிகவும்  பவ்யமாகவும் மரியாதையாகவும் நடந்து கொண்டார்கள்கோவிந்தவால் குருத்வாரா சீக்கியர்களின் விசேஷ புண்ணிய தலங்களுள் ஒன்றுஅங்கு நான் சென்றபோது (நம்மிடையே பூர்ண கும்ப மரியாதை தருவதுபோல்)அங்கு எனக்கு சிரோப்பா எனப்படும் மஞ்சள் காவியில் தலைப்பாகை துணி தந்து மரியாதை செய்தனர்அதை நான்  இன்னும்  பொக்கிஷமாக  வைத்திருக்கிறேன்.  சீக்கியர்களைப்  பற்றி  எழுதுவதற்கு நிறையவே இருக்கிறது.


                           இன்றும்  என்னிடம் பொக்கிஷமாக இருக்கும்   சிரோப்பா                 




.



  


16 comments:

  1. பயம் என்பது உங்களுக்கு கிடையாது என்று தெரிகிறது ஐயா.

    சிரோப்பா இன்னும் பாதுகாத்து வைத்து இருப்பது பெரிய விசயம்.

    நானும் இப்படித்தான் பொக்கிஷமாக பல பொருட்கள், பல காலங்கலாக வைத்து இருக்கிறேன்.

    எனக்குப் பிறகு இவைகள் நிச்சயமாக குப்பைக்கே செல்லும்.

    சீக்கியர்கள் கடுமையான உழைப்பாளிகள் என்பது நானறிந்த விசயமே...

    ReplyDelete
    Replies
    1. இன்னும் பல விஷயங்கள் நினைவில் பின்னர் எழுதலாம்

      Delete
  2. உங்களின் நினைவுகளும் பொக்கிசங்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. ஆம் நினைவுகள் பொக்கிஷங்கள் தான்

      Delete
  3. சீக்கியர்கள் மீது எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு ... உங்கள் எழுத்துக்கள் மூலம் அது மேலும் பன்மடங்கு பெருகியுள்ளது ... உங்களின் கடந்தகால பயண அனுபவங்கள் எங்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கிறது.நன்றி ஐயா ...

    ReplyDelete
    Replies
    1. சீக்கியர்களைப்பற்றி நிறைய ஜோக்குகளும் உண்டு

      Delete
  4. நினைவு நாடாக்கள் நன்றாக இருக்கின்றன. சீக்கியர்கள் உழைப்பாளிகள். தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  5. வந்து ரசித்தற்கு நன்றி சார்

    ReplyDelete
  6. சும்மா வேடிக்கையான யாரையும் புண்படுத்தாத சர்தார் ஜோக் ஒன்று இரண்டு சேர்த்திருக்கலாம். Jayakumar

    ReplyDelete
    Replies
    1. ஒரு சர்தார் ஓட்ட மைதானத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தாராமங்கு வந்த நிருபர் ஒருவர் ARE YOU RALAXING என்று கேட்டாராம் அதற்கு சர்தார் NO I AM MILKA SINGH என்றாராம்

      Delete
  7. நினைவுகள் என்றுமே இனியவை

    ReplyDelete
    Replies
    1. எல்லா நினைவுகளும் அப்படியா

      Delete
  8. நல்ல நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி. எங்களுக்கும் அதிகமாக சர்தார்ஜிகளே நண்பர்கள்.மிக நல்ல மனிதர்கள். பஞ்சாபிலும் எல்லாமும் பார்க்க உதவி செய்தார்கள். நாங்கள் ஐந்தாறு வருடம் முன்னர் தான் பஞ்சாப் சென்றோம். 35 வருஷங்கள் முன்னர் நீங்க போயிட்டு வந்ததை இப்போவும் நினைவு வைத்திருப்பது ஆச்சரியம் தான். இறைவன் கருணை.

    ReplyDelete
  9. அங்கிருந்தபோது சர்தார்ஜி நண்பர்கள் உங்களுக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று அடிக்கடி கேட்பார்கள்

    ReplyDelete
  10. பஞ்சாப் செல்லத் துணிந்தமை பாராட்டுக்குரிய செயல் .மேலும் எழுதுங்கள்>

    ReplyDelete
    Replies
    1. அப்படி ஒரு அனுபவம்கிடைத்ததே

      Delete