Saturday, February 6, 2021

பட்ஜெட்டும்அது சார்ந்த எண்ணங்களும்

 

ஓரொர் ஆண்டும்  ஃபெப்ருவரி மாதம் பாராளுமன்றத்தில்பட்ஜெட்  தாக்கல் செய்கிறார்கள்  ஒரு விஷயம்நானிங்கு சொல்லியே ஆகவேண்டும் ஒரு இழவும் புரிவதில்லைவரவு  செலவை கூறுகிறார்களாம் முன்பெல்லாம்  பணியில் இருந்தபோது வருமான்வரி  விலக்காக என்ன சொல்லப்படுகிறது என்பதில்தான்   கவனம் இருக்கும்  இத்தனை ஆயிரம் கொடி ரூபாய்க்கு இன்ன திட்டம்  என்றேல்லாம் கூறுகிறார்கள்அம்மாதிரி செலவு செய்வது ஊழலுக்கு இடும்  வித்தாகும்வாய்ப்பு நிறையவே இருப்பது தெரிகிறது அத்தனை பணம்  hell of a lot of moneyஎன்பது மட்டும் புரிகிறதுஇந்த செலவுகளின் தணிக்கை பற்றி யாருக்குத் தெரியும்நிறைய பணப்புழக்கம்  இருப்பது தெரிகிறது 30 பெர்செண்ட் ஆட்சி என்பதன் அர்த்தம்  புரிவது போல் இருக்கிறது எப்படி ஆட்சியில் இருப்பவர்கள்  பணக்காரர்களாக இருக்கிறாகள் தெரிகிறதுஅரசியலில்  இருப்பவர்களுக்கு  ஆட்சி பற்றியோ அவர்கள்துறை பற்றியோ தெரியுமா தலைவன் புகழ் பாடி பணம் பெறுகிறார்கள்அவர்களுக்கு பாடம்  கற்பிக்க அதிகாரிகள் அவர்களும்புறங்கையை நக்காமல் இருப்பார்களா  ஊழல் எங்கே ஒழியும்  இதைவிட  ஒரு பெனெவொலெண்ட் சர்வாதிகாரியே மேல் என்று நினைக்கத் தோன்றுகிறது திருசுப்பிரமணியம்  தமிழ்நாட்டின்  நிதி மந்திரியாக இருந்தபோது  100 கோடி ரூபாய்க்கு வரவு செலவு பட்ஜெட் சமர்ப்பிக்க விரும்பியதாக  கூறியது நினைவுக்கு வருகிற்து         


23 comments:

  1. என்ற்கும் பட்ஜெட்டில் பலதும் புரிவதில்லை. 75 வயதுக்கு மேல் வருமானவரி கிடையாது என்று மட்டும் புரிந்தது

    ReplyDelete
    Replies
    1. தவறு. 75 வயதுக்கு மேல் படிவம் தாக்கல் செய்ய அவசியமில்லை என்பதே சரி. இது பயனற்றது. ஏன் எனில் பென்ஷன் வட்டி வாடகை போன்ற வருமானங்களில் இருந்து ஏற்கனவே வரி பிடிக்கப்பட்டிருக்கும். கூடுதல் பிடிக்கப்பட்டால் அதை பெற படிவம் தாக்கல் செய்தே ஆக வேண்டும். 

      அதே போன்று வருமான வரி அதிகாரி வயது வரம்பின்றி யாரையும் படிவம் தாக்கல் செய்ய கோரலாம். தாக்கல் செய்ய மறுக்க முடியாது.

      இதன் பயன் என்னவென்றால்
      குறிப்பிட்ட காலத்திற்குள் படிவம் தாக்கல் செயயவில்லை எனில் அபராதம் உண்டு. அந்த அபராதத்தை 75 வயதிருக்கு மேல் உள்ளவர்கள் தவிர்க்கலாம். 

      Jayakumar

      Delete
    2. அப்படியா ஜெயக்குமார் சார்... அப்போ இதுவும் உருப்படியில்லாத பட்ஜெட்தான் போலிருக்கு

      Delete
    3. நெல்லைசார் ஓர்ளவு தெரிந்த நமக்கே இப்படி என்றால் பாமர மக்களுக்கு இலவசங்கள் கிடைதால் சரி

      Delete
    4. ஜெயகுமார் குடுதல் விவரங்களுக்கு நன்றி

      Delete
    5. பட்ஜெட்பற்றி தெரியாவிட்டால்எடுவுமே உருப்படி கிடையாது ச்டு

      Delete
  2. இதில் ஒரு ரூபாயில் செலவு என்று ஒரு கணக்கீடு தருவார்கள்.  எப்படிதான் அரைவ் செய்கிறார்களோ..   ஒரே ஒரு சந்தோஷம்.  இதுமாதிரி சமயங்களில் ஏதாவது தொலைக்காட்சியில் பொருளாதார மேதை மயில்சாமி சொல்லும் கருத்துகளைக் கேட்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. மயில்சாமி அண்ணாதுரை விஞ்ஞானி!

      Delete
    2. அவரை யார்தான் அறியார்!  நான் சொல்வது நடிகர் மயில்சாமியைதான்!சென்ற வருடத்துக்கு முந்தைய வருடம் பட்ஜெட் அலசல் நீங்கள் பார்க்கவிலை என்று நினைக்கிறேன்.

      Delete
    3. செலவு தொகையை சதவீதத்தில்தருகிறார்களாம்

      Delete
    4. மயில்சாமி விஞானி என்பதுதான் தெரியும்

      Delete
  3. பட்ஜெட் விசயம் அடித்தட்டு மக்களுக்கு விளங்கவே இல்லை ஐயா.

    ReplyDelete
    Replies
    1. பெரும்பாலவர்களுக்கு புரியாதது ஆனால் ஊழலின் அடிநதம் என்று புரிகிறது

      Delete
  4. அரசியல் சம்பிரதாயங்களில் இதுவும் ஒன்று. அவ்வளவுதான்.

    ReplyDelete
    Replies
    1. பட்ஜெட் சம்பிரதாயமாகி விட்டது

      Delete
  5. பட்ஜெட் என்பது உயர் மட்டத்தில் இருந்து அதாவது நாட்டை ஆள்பவரில் இருந்து அடிமட்ட அரசு ஊழியர் வரை எவ்வளவு சுருட்டலாம் என்பதற்காக போடப் படம் திட்டம்தான் 1000 கொடி பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு சேவையாக வந்து சேருவது சில கோடிகள் மட்டுமே

    ReplyDelete
    Replies
    1. அட்சைதான் விரிவாக கூறி இருக்கிறேன்

      Delete
  6. சர்வாதிகாரி பெனெவொலென்ட்டாக இருக்கமாட்டான் .சர்வாதிகார ஆட்சியில் நாம் இப்படியெல்லாம் எழுதினால் சிறைக்குப் போகவேன்டியிருக்கும் .

    ReplyDelete
  7. நெஞ்சு பொறுக்குதில்லையே

    ReplyDelete
  8. பட்ஜெட் என்பது வரவு செலவு திட்டம். இதில் மூன்று வருடத்திய கணக்கு காட்டப்படும். 
     முந்தைய வருடத்தின் actuals.

    நடப்பு வருடத்தின் Revised estimates 
    வரும் ஆண்டின் (April 1 முதல்) உத்தேச வருவாய் செலவினங்கள். 
    இது ஒரு வழிகாட்டி மட்டுமே. 
    சரியான செலவுகள் income and expenditure என்ற முறையில் செய்யப்படும். 

    இந்த செலவுகள் consolidated fund of India என்ற அக்கவுண்டில் இருந்து செய்யப்படும். 
    இதை தான் vote on account குறிப்பிடுவர். 
    இன்னும் நிறைய if but உண்டு. 
    தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் படஜெட் என்பது இவ்வ்ளவு வருவாயை எதிர்பார்க்கிறோம். அதை இன்ன வழிகளில் செலவு செய்வோம் என்ற அறிக்கை மட்டுமே. அவ்வாறு நடக்க கட்டாயமில்லை. 
    வருவாய் குறையும்போது எதற்கு முன்னுரிமை செலவு என்பது போன்ற விவரங்கள் ஆட்சியாளர்கள் கையில். உதாரணமாக மாணவர் படிப்பு உதவித்தொகைக்கு நிதி ஒதுக்கப்பட்டாலும் அந்த செலவை நிறுத்தி பாராளுமன்ற கட்டிடம் கட்ட செலவு செய்யலாம். இரண்டுமே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டவை தாம். 
    விவரமாக எழுதினால் படிப்பவர்களுக்கு மூளை குழம்பிவிடும். 
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. நிறையவேஅனுமங்கள்செலவு செய்யப்படும் விதம்ததான் கேள்வி

      Delete