சனி, 1 ஜனவரி, 2022

உணவும் உடலும் ஒரு மீள் பதிவு

 

எனக்கு வெகு நாட்களாகவே இருக்கும் சந்தேகம். உண்ணும் உணவுக்கும் உருவத்துக்கும் சம்பந்தம் உண்டா. ? எனக்குத் தெரிந்தவர்களில் சிலர் அதிக அளவிலும் அடிக்கடியும் உண்டாலும் ஒல்லிப்பிச்சான்களாகவே இருக்கிறார்கள். சிலர் குறைந்த அளவே உண்டாலும் பருமனாக இருக்கிறார்கள். .ஒருவரது எடை உயரத்துக்கு ஏற்றபடி இருக்க வேண்டும் ஒருவரது உயரத்தை செ. மீ. கணக்கில் எடுத்துக்கொண்டால் அவரது எடை பொதுவாக உயரம்   in செ.மீ-லிருந்து 100-ஐ கழித்தால் வருவது என்பது THUMB RULE ஆக எடுத்துக் கொள்ளலாம். உயரத்துக்கும் எடைக்கும் சம்பந்தம் இல்லாமல் தொந்தியும் தொப்பையுமாக , காலில் இருக்கும் செருப்பைக் கூட காணமுடியாதபடி இருந்தால் உடம்புக்கு நல்லதல்ல. உடல் நலத்தில் அக்கரை செலுத்த வேண்டும்.



சிலர் உயிர் வாழ உண்கிறார்கள். சிலர் உண்பதற்காக உயிர் வாழ்கிறார்கள். பொதுவாக உடல் பருமன் அதிகமுள்ளவர்கள் உடல் உழைப்பில் குறைந்தவர்களாக இருக்கிறார்கள். உட்கொள்ளும் உணவையும் செலவுசெய்யும் சக்தியையும் கலோரி என்னும் கணக்கில் சொல்கிறார்கள். உடல் ஆரோக்கியத்துக்கு மிக முக்கியம் நாவடக்கம். பேச்சைக் குறைப்பதல்ல. இது வேறு நாவடக்கம். உணவு உட்கொள்ளும்போது இன்னும் சிறிது சாப்பிடலாம் என்று தோன்றும்போதே உண்பதை நிறுத்திவிட வேண்டும். எழுபது சதவீதம் உணவும் இருபது சதவீதம் நீரும் உட்கொண்டபிறகு மீதி இடம் காலியாக இருப்பது முக்கியம். அதை விட்டு தொண்டைவரை உணவை நிரப்பினால் ஆரோக்கியம் உத்தரவாதம் இல்லை. 
எனக்கு உணவை ரசித்து, ருசித்துச் சாப்பிடுபவர்களைக் கண்டால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். என் உறவினர் ஒருவர் போஜனப் பிரியர். நன்றாகச் சாப்பிடுவார். அவருக்கு அந்தக் காலத்தில் குடலில் அல்சர் வந்து ஆப்பரேஷன் செய்து   இரைப்பையின் நீளத்தைக் கணிசமாக குறைத்திருந்தார்கள்.
அவர் சாப்பிடுவதைப் பார்த்து நண்பன் ஒருவன், பாதி குடலை அறுத்தெறிந்தும் இவ்வளவு சாப்பிடுபவன் , முழுக் குடலும் இருந்தால் எவ்வளவு சாப்பிடுவானோ “என்று காமெண்ட் அடிப்பான். இன்னொரு உறவினர் தோசையோ இட்லியோ சாப்பிடும்போது இன்னும் வேண்டும் என்பதை “ நாட் அவுட் “ என்று சொல்லித் தெரியப் படுத்துவார். அவரை அவுட் செய்வதற்குள் போதும் என்றாகிவிடும். ஒரு இண்டெரெஸ்டிங் விஷயம். வீட்டில் நிறைய சாப்பிடுபவர்கள் பொதுவாக ஓட்டலில் சாப்பிடும்போது அளவு மிகவும் குறைவாகவே இருக்கும். உணவுக்குப் பதில் பணத்தை உண்பதுபோல் நினைக்கிறார்களோ என்னவோ. அது டிபன் வகையறாக்களில் மட்டும்தான் இருக்கும். ஓட்டலில் அன்லிமிடெட் சாப்பாடு என்று வரும்போது ஒரு கை பிடிப்பார்கள்.

நான் பார்த்து புரிந்து கொண்ட வரை ( இது ஒரு அனுமானம்தான். தவறு இருக்கலாம் )நன்றாக உண்டு கொழுகொழுவென்று இருப்பவர்கள். மனதளவில் இரக்க சிந்தனை உடையவர்களாகவும் கோபம் குறைந்தவராகவும் இருக்கிறார்கள். அதற்கு நேர்மாறாக ஒல்லியாய் இருப்பவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவராகவும் முன் கோபம் உள்ளவராகவும் இருக்கிறார்கள்.உணவு பற்றிய சில விஷயங்கள் பாட புத்தகங்களில் இருப்பது கண்டு சில நாட்கள் பத்திரிகைகளில் பெரிய விவாதமே இருந்தது. வெஜிடேரியன், நான்-வெஜிடேரியன் உணவுகளில் எது சிறந்ததுஎன்னும் விவாதம் சர்ச்சையைக் கிளப்பும். ஆனால் மனித்னின் வாயும் பற்களும் வெஜிடேரியன் உணவுக்குத்தான் சரியாக இருக்குமோ என்று தோன்றுகிறது. 

வெஜிடேரியன் நான்-வெஜிடேரியன் உணவு என்று எண்ணும்போது எனக்காக நான்வெஜிடேரியன் உணவைத் துறந்த என் மனைவியை நினைக்காமல் இருக்க முடியவில்லை. திருமணம் ஆன புதிதில் அவளை சென்னையில் புஹாரி ஓட்டலுக்கு அழைத்துச் சென்று அவள் பிரியப்பட்ட நான்வெஜிடேரியன் உணவைச் சாப்பிடச் சொன்னேன். அந்த என் so called நல்ல குணம் கண்டு அவள் புலால் உண்பதைத் தவிர்த்து விட்டாள். நான் உணவில் எந்த  taboo வையும் கொண்டு வரப் பிரியப் படவில்லை. என் மக்களில் பலரும் புலால் உண்பது தடுக்கப் படவில்லை

உணவு உடலுக்கு முக்கியம். ஆனால் அதுவே உடலுக்கு ஊறு விளைவிக்கும் என்றால் அதைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. நேரத்துக்கு அளவாக உண்டு உடலைப் பேணுவது மிக முக்கியம். கூடுதல் இனிப்பு வகைகளும் எண்ணையில் பொறித்த உணவு வகைகளும் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும். உண்ட உணவு செரிக்க வேண்டும். உண்ணும் உணவின் அளவு சக்தியும் உடற் பயிற்சியின் மூலம் எரிக்கப் பட வேண்டும். உட்கொள்ளும் உணவின் கலோரி அளவும் நம் உடல் சம்பந்தப் பட்ட நடவடிக்கைகளின் மூலம் செலவாகும் கலோரி அளவும் சரியாக இருந்தால் நம் உடல் கட்டுக்குள் இருக்கும். சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.நோயற்ற வாழ்வின் சரியான பாதையில்தான் நாம் இருக்கிறோம் என்று நாம் அறிய BODY MASS INDEX   என்னும் முறையை உபயோகிக்கிறார்கள். உயரத்துக்கும் எடைக்கும் உள்ள சரியான கொழுப்பின் அளவை கண்டுபிடிக்கும் ஒரு விகிதாச்சாரம்  எனக் கொள்ளலாம்



19 கருத்துகள்:

  1. சாப்பிடுவதற்கும் குண்டாய் இருபிப்பதற்கும் சம்பந்தமில்லை என்று நானும் என் அனுபவ அளவில் நினைப்பேன்.  நான் பார்த்த நண்பர்கள் சிலரை வைத்துச் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. கோபம், இரக்கம் எல்லாம் உடல் பருமனைப் பொறுத்து அமைவதாக எனக்குத் தோன்றவில்லை.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது உண்மையோ என்பது என் அனுபவம்

      நீக்கு
    2. பொதுவா உடல் பருமன் அதிகமாக இருந்தால் (ப்ரெஷர் காரணமாக) சட்னு கோபப்படுவாங்க. கோபம் உள்ளவங்கள்ட குணமும் இருக்கும்.

      நீக்கு
    3. என் அனுபவம் வேறமாதிரி

      நீக்கு
  3. இப்புத்தாண்டும் இனி வரும் ஆண்டுகளும் எல்லோருக்கும் இனிய நினைவுகளை வழங்கி நல்ல ஆரோக்கியத்தை வழங்கி மகிழ்ச்சி ஏற்படுத்திட இறைவனிடம் பிரார்த்தனைகளோடு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் அன்பான வாழ்த்துகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  4. இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
    கழிபேர் இரையான்கண் நோய்

    மேலும் முக்கியமாக :-

    செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்

    பதிலளிநீக்கு
  5. உணவு இல்லாத்போது கேட்க முடியாது

    பதிலளிநீக்கு
  6. சாப்பிடும் அளவிற்கும் உடல் அமைப்புக்கும் எனக்குத் தெரிந்து சம்பந்தமில்லை. ஒல்லியாக இருப்பவர்கள் ஏகப்பட்ட ஸ்வீட்டுகள், குழம்பு, ரசம், மோர் என அடித்து விளையாடுவதைப் பார்த்திருக்கிறேன். எனக்கெல்லாம் தண்ணீர் குடித்தாலே உடலில் வெயிட் போடும் உடல்வாகு.

    ஆனால் இனிப்பில் எனக்கு ரொம்ப ரொம்ப விருப்பம். மகளின் உத்தரவின் பேரில் இனிப்பு, பொரித்ததைச் சாப்பிடுவதை நிறுத்தி 40 நாட்களாகின்றன (இரண்டு விதிவிலக்குகள் தவிர. இரண்டுமே கோவில் பிரசாதங்கள்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பிடும் அளவு சக்தி உபயோகிக்கும்அளவு தேவை சவுண்டி பிரமண்ர்கள்நிறைய சாப்பிடுவார்கள் ஒல்லியயாக இருப்பார்கள் எதற்கும் விடி விக்கு உண்டு

      நீக்கு
  7. நான் போட்ட கருத்துகள் வரவே இல்லையோ? சில சமயம் இப்படி ஆகிறது.

    உருவத்திற்கும் குணத்திற்கும் சம்பந்தமே இல்லை.

    ஆனால் ஆரோக்கியத்திற்கும் குணங்கள் அச்சமயத்தில் மாறுபடுவதற்கும் தொடர்பு உண்டு. அப்போதும் மனம் பக்குவப்பட்டு இருந்தால் குணம் மாறுபடாது.

    வயதாகும் போது இயலாமையால் மாறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதுவும் கூட மனம் பக்குவப்பட்டிருந்தால் வராது

    சாப்பாட்டிற்கும் எடைக்கும் தொடர்பு இருக்கா என்றால் பொதுவாக இல்லை. ஆரோக்கியமாக இருந்தால்.

    ஆனால் சர்க்கரை வியாதி, பிற ஆரோக்கியக் குறைபாடு உள்ளவர்களுக்கு சாப்பாட்டில் கவனம் தேவை. உடல் எடை என்பது மட்டுமல்ல உடல நலத்திற்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்து இட்டது வரலையா வரும்கருத்துகளெ குறைவு

      நீக்கு
  8. சுருங்கச் சொன்னால்....

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம் முன்னோர்கள் சொல்லியவங்க யாரென்று தெரியாவிட்டாலும் அவங்க வாயில சர்க்கரையை கொட்ட வேண்டும்!!!! தற்போதைய சூழலுக்கு ரொம்பவே பொருந்திப் போய்கிறது. சாதாரண மக்கள் நாம் சொத்து சேர்த்தால் கூட நோய் வந்தால் அம்புட்டுத்தான். எனவே சொத்து இல்லாவிட்டால் கூடப் பரவாயில்லை நோய் நொடி இல்லாமல் இருந்தாலே போதும் அதுவே நிம்மதி! மனதிற்கும் பணத்திற்கும்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் நூற்றுகுகு நூறு உணமை

      நீக்கு
  9. உண்ணும் உணவுக்கும் உடல் வாக்கிற்கும் சம்பந்தம் இல்லை.   உடல் வாகு, பரம்பரை, உணவு, உணவின் தன்மை, அளவு, உணவை செரிக்க செய்யும் உழைப்பு, மற்றும் செரித்த உணவை கிரகித்து பயன்படுத்தும் திறமை, வயது, சீதோஷ்ணம் என்று பல காரணங்கள் உள்ளன. பொதுவாகவே மேலை நாட்டவர் உடல் பருமனுடன் இருப்பதை காணலாம். 

    இவ்வளவும் எழுதிய தாங்கள் உங்கள் உணவு பழக்கத்தையும் BMI யும் எழுதி இருக்கலாம். பதிவு ஒரு ஆலோசனையாக உள்ளது. நன்று. 

    பதிலளிநீக்கு
  10. bmi பற்றீ எழுதினால்பதிவு நீண்டு விடும் நான் எப்போதுமின்னும்சிற் து உண்ணா லாம்என்று இருக்கும்போதே நிறுத்திக் கொள்வென்

    பதிலளிநீக்கு
  11. நல்ல பகிர்வு.பலரின் கருத்துகளும் வந்துள்ளன.
    'இன்னும் சிறிது சாப்பிடலாம் என இருக்கும் போதே நிறுத்திவிடுவேன் ' நல்ல முறை.

    சிலர் ஒரு நாளுக்கு ஆறேழு காப்பியும் இடையே இனிப்பு ,சிற்றுண்டிகளும் வயிறு நிறைய சாப்பிடுவார்கள். சாப்பாடு குறைவாகவே சாப்பிடுவேன் உடல் எடை ஏறுதே என்பார்கள் இவர்கள் அறியாமையை என்ன என்பது?

    பதிலளிநீக்கு