எது கல்வி. மறுபக்கம்.
---------------------------------.
நூறு சதவீதக் கல்விதான் இலக்கு. ஆனால் அது இன்னும் எட்டப்படவில்லை. ஆனால் அது செயல்படுவதற்கு ஆங்காங்கே விதைகள் தூவப் பட்டுள்ளன.,என்பதை மறுக்க முடியாது. நூற்றாண்டுகாலமாக இன்னாருக்குத்தான் படிப்பு, இன்னாருக்கு அது கூடாது, என்ற ஆதிக்க மனப்பான்மையில் பெரும்பாலோருக்கு எழுத்தறிவே செல்ல இயலாத நிலை இருந்தது. எல்லோரும் படித்து முன்னுக்கு வந்துவிட்டால், சிலருடைய ஆதிக்கத்துக்கு முற்றுப் புள்ளி வந்துவிடும் என்ற நிலையில் ஒடுக்கி வைக்கப்பட்ட மக்கள் தொகை மிகவும் அதிகமாக இருந்தது. ஆயிரங்காரணங்களை
கூறி அடிமைப் படுத்தப்பட்டிருந்தனர் .காரணங்களை நான் விவரிக்க விரும்பவில்லை. ஆனால் எல்லோரும் படிப்பறிவு பெற்றால் சுயமாக சிந்திக்க துவங்குவார்கள் என்ற பயம் ஆண்டைகளிடம் இருந்தது. அடிமைத்தளை இறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு அஸ்திவாரம் பலப்பட,
அவர்களது அலுவலகப் பணிகளுக்கு குமாஸ்தாக்கள் தேவைப்பட மெகாலே கல்வி நடைமுறைப் படுத்தப்பட்டது. இதெல்லாம் சரித்திரம்.
நாம் இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது சிந்திக்கத் தூண்டும் கல்வி மறுக்கப் பட்டதே. கல்வி கற்றவர்கள் சிந்திக்கத் துவங்கி நாடு அடிமைத் தளையிலிருந்து விடுபட்டதும் வரலாறு.
நம்மை நாமே ஆளும்போது ,நாம் எல்லோரும் சமம் எனும்போது , வாய்ப்புகளும் சமமாக இருக்க வேண்டும். வாய்ப்பு வேண்டிப் போராட கல்வி அறிவு அவசியம். அதுவும் பரவலான நூறு சதவீதக் கல்வி அவசியம். நாம் படித்தவற்றை
பகுத்தறிந்து உணர்ந்தால் அறிவுள்ளவர்களாக ஆவோம். படித்தவர்கள் எல்லோரும் அறிவுள்ளவர்கள் அல்ல. படிக்காதவர்கள் அனைவரும் அறிவில்லாதவர்களும் அல்ல.
ஆனால் ஒருவனை அறிவாளியாகக படிப்பறிவு மிகவும் உதவும்.
தற்சமயம் நிலவி வரும் சூழ்நிலையில் கேக் ஊட்டப்பட்டு ஊக்கப்படுத்தப் படுபவர்கள் முகவரி தெரியாமல் போய்விடுகிறார்கள் என்ற அச்சமும் கல்வியறிவே காசு கொண்டு வாங்கப்பட வேண்டிய அவல நிலையில் நாம் உள்ளோம் என்ற கவலையும் இருப்பது சகஜம்
மேலே குறிப்பிடப் பட்டுள்ள பிரிவில் படாமல் எந்த ஒரு உந்து சக்தியும் இல்லாமல் படித்துயர்ந்து வந்தவர்களும் ஏராளம் உண்டு. நகரங்களில் வசிக்கும் நம் கண் முன்னே படுவது கான்வென்ட் படிப்பும் கூடவே வரும் அதிக செலவினங்களும்தான் .இல்லாதவன் தன தலைமுறைக்குப் பிறகு தன பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் என்று பாடுபடுவதையும் பார்க்கிறோம். இயற்கைதானே. ஆனால் கான்வென்ட் படிப்பும் ஆங்கிலப் படிப்பும்தான் மேலானது என்ற ஒரு மாயத் தோற்றத்துக்கு அடிமையாகும்போதுதான் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம்
எழுத்தறிவும் கல்வியறிவும் பரவலாக்கப்பட்டால் சுயமாக சிந்திக்கும் திறனை அவர்கள் வளர்த்துக்கொள்வார்கள். முனிசிபல், கார்ப்பரேஷன் பள்ளிகளில் படித்துப் பெயர் வாங்கும் சிறார் சிறுமிகளும் இருக்கிறார்கள்.,என்பது நமக்குத் தெரிந்ததே. நாம் எந்த ஒரு விஷயத்தையும் விவாதிக்கும்போது மிடில் கிளாஸ் மேன்டாலிடியைத்தான் அளவு கோலாகப் பயன்படுத்துகிறோம். ஏழை பாழைகளின் கருத்தைக் கேட்கவோ எடுத்துச் சொல்லவோ நம்மில் பலரும் முன் வருவதில்லை இந்நிலையில் நூறு சதவீத எழுத்தறிவும் படிப்பறிவும் இருநதால் அவர்களை அவர்களே மேம்படுத்திக் கொள்வார்கள்
நான் ஒரு முறை லலிதாம்பிகா கோவிலுக்குச் செல்ல திருமீயச்சூர் சென்றிருந்தேன் அங்கு பள்ளிக்கு சென்று வர சீருடை அணிந்த சிறுவர் சிறுமிகள் சைக்கிளில் செல்வதைக் கண்டபோது மனசுக்கு கொஞ்சம் உற்சாகமாக இருந்தது. பசியாற மதிய உணவு, சீருடை, மற்றும் சென்றுவர இலவச சைக்கிள் இவை எல்லாம் கல்வியறிவு பரவலாகச் செய்யும் உந்து சக்திகள்தானே. மேலும் தற்போது
கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள் . இதன்படி எல்லாப் பள்ளிகளிலும் ( தனியார் உட்பட ) 25% இடங்கள் ஏழைகளுக்கு ஒதுக்கப்படவேண்டும் .
கல்வி போதிக்கும் முறையில் ஏற்ற தாழ்வு குறைந்து சம வாய்ப்பு கிடைக்கும் ஒரு திட்டம் .ஆனால் இதை நடைமுறைப்படுத்த ஏகப்பட்ட எதிர்ப்புகள். இந்த எதிர்ப்புகளுக்கு எதிராக குரல் கொடுப்போம்.
சாதாரணமாகவே இந்தியக் குடிமகன் லேசுப்பட்டவன் அல்ல. அவனை இன்னும் சக்தி உள்ளவன் ஆக்க பரவலான கல்வியறிவு அடிப்படை அவசியம்.
கல்வியை வியாபாரமாக்கும் கும்பலுக்கு நாம்தான் துணை போகிறோம். அரசு பள்ளிகளை ஆதரித்து ,அதன் தரம் உயர நாம் ஏன் பாடுபடக்கூடாது. ?செல்வி. மாதங்கி மாலி சொல்லியதுபோல, There is a breed of race horses.and I add there is a rat race.
கல்வி போதிக்கும் முறையில் ஏற்ற தாழ்வு குறைந்து சம வாய்ப்பு கிடைக்கும் ஒரு திட்டம் .ஆனால் இதை நடைமுறைப்படுத்த ஏகப்பட்ட எதிர்ப்புகள். இந்த எதிர்ப்புகளுக்கு எதிராக குரல் கொடுப்போம்.
சாதாரணமாகவே இந்தியக் குடிமகன் லேசுப்பட்டவன் அல்ல. அவனை இன்னும் சக்தி உள்ளவன் ஆக்க பரவலான கல்வியறிவு அடிப்படை அவசியம்.
கல்வியை வியாபாரமாக்கும் கும்பலுக்கு நாம்தான் துணை போகிறோம். அரசு பள்ளிகளை ஆதரித்து ,அதன் தரம் உயர நாம் ஏன் பாடுபடக்கூடாது. ?செல்வி. மாதங்கி மாலி சொல்லியதுபோல, There is a breed of race horses.and I add there is a rat race.
நல்ல சிந்தனை.
பதிலளிநீக்குஒருவன் படித்துப் பட்டம் பெற்றால் அவனுடைய தலைமுறையே முன்னேறிவிடும்.
கல்வியை ஒருசாரார் தங்களுக்கு மட்டும் வைத்துக்கொண்டார்கள் என்ற அரசியல் சிந்தனை, வரலாறு தெரியாதவர்களுக்குத்தான் வரும். உ வே சாவின் தன்வரலாறு புத்தகத்தைப் படித்துப்பாருங்கள்... அல்லது நம் இதிஹாசங்களையாவது அல்லது சங்க இலக்கியங்களையாவது
படித்துதெரிவதை விட பட்டு தெரிவதெ சிறந்தது
நீக்குஅய்யா
பதிலளிநீக்குபதிவைப் படிக்கும்போது இது அய்யாவுடைய பாணி அல்லவே என்று ஒரு நெருடல். இது ஒரு மீள் பதிவோ?
கடைசி வரி சிந்திக்க வைத்தது. rat race vs horse race
Jayakumar
பாணி என்று ஏதுமில்லை
நீக்குமீள் பதிவு என்று நினைக்கிறேன். வாசித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குகல்வி இப்போது Rat Race தான். எல்லோரும் கல்வி பெற வேண்டும் என்பது உண்மை. உங்கள் சிந்தனை நல்ல சிந்தனை.
ஆனால் எத்தனை பேர் பெற்றோர் தங்கள் குழந்தைகளைக் கல்வி கற்க அனுப்புகிறார்கள்? அதாவது நான் சொல்வது வறுமைக்கோட்டில் இருப்பவர்கள். அரசுப் பள்ளிக்குக் கூட அனுப்புவதில்லை. உங்கள் வீட்டுப் பக்கம் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் என் வீட்டுப் பக்கம் நான் கண்டுவருவது. குழந்தைகள் வீட்டு வேலைக்கு அனுப்பப்படுகிறார்கள். அதுவும் இப்போது கொரோனா என்ற சௌகரியம் வேறு. பள்ளிக்குப் பெற்றோர் அனுப்புவதே இல்லை. படிச்சு என்ன பண்ணப் போறா என்று வீட்டு வேலைக்கு அனுப்பினால் அதுவும் 4 ஆம் வகுப்பு 5 ஆம் வகுப்பு படிக்கும் பெண்கள் ஆண்கள் உட்பட...அதன் பின் பள்ளி செல்வதில்லை. வீட்டுச் சூழல் ஒரு ரூம் தான் இருக்கும் ஆனால் டிவி இருக்கும்! எப்படிக் குழந்தைகள் படிப்பார்கள்? பெற்றோருக்குத் தன் குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற சிந்தனை இல்லாத போது?
இதாவது கர்நாடகா இன்னும் கிராமங்கள் அத்தனை வளரவில்லை. (மொபைல் ஃபோன் வைத்துக் கொள்வதில் வளர்ந்திருக்கின்றன!)
கல்வி அறிவு அதிகம் என்று சொல்லப்படும் கேரளத்தில் கூட மலபார் ஏரியாவில் வருடம் தோறும் பிள்ளை பிடித்தல் என்று கோடை விடுமுறையில் ஆசிரியர்களின் தலையாயபணி அதுதான். 5, 6, 7 ஆம் வகுப்புக்குப் பிறகு பள்ளிக்கு வரவில்லை என்றால் ஆசிரியர்கள் சென்று பஸ் இனாம், நோட் புக் தருகிறோம், ஃபீஸ் கட்ட வேண்டாம் என்று சொல்லி பெற்றோரை மசிய வைக்க வேண்டியிருக்கிறது. இது நான் கண் கூடாகக் கண்டது. துளசி வீட்டிற்குச் சென்றிருந்த போது அவரும் அவர் மனைவியும் ஒவ்வொரு பகுதுயாகச் சென்று ஏன் அனுப்பவில்லை என்ற கேள்வியிலிருந்து தொடங்கி...நானும் உடன் சென்றதால் தெரிய வந்தது. பெற்றோரின் மீதான தவறு என்பது கண்கூடாகத் தெரிந்தது. கல்ஃபிற்கு வேலைக்கு அனுப்ப ரெடியாக இருப்பவர்கள் அடிப்படைக் கல்விக்குக் கூட முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பெற்றோரே அப்படி இருந்தால் பிள்ளைகள் எப்படி இருப்பார்கள்? நல்ல வழிநடத்தலும் இல்லாத போது?
அடுத்து தமிழ்நாட்டில் புதுக்கோட்டையில், - நம் பதிவர் மது/கஸ்தூரி ரங்கன் இது பற்றி பதிவே போட்டிருக்கிறார். நிறைய பதிவுகள்.
இதில் சொல்ல நிறைய இருக்கிறது சார். நாம் ஒரு பக்கம் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம்.
கீதா
அனைவருக்கும் கல்வி என்பது முக்கியமான இலக்கு. கேரளாவை மட்டுமே இன்னமும் 100 சதவிகிதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக சொல்லி வருகிறோம். மற்ற மாநிலங்களும் இதைக் கருத்தில்கொண்டு ஆவன செய்யவேண்டும்.
பதிலளிநீக்குஅ க் கா. என்று எழுத்துக்கூட்டிப் படிப்பதுதான் கேரளாவின் நூறு சதவிகிதக் கல்வியறிவு.
நீக்குசனாதான சாக்கடையும் ஒரு காரணம்... அதை சார்ந்தவர்களுக்கு எல்லா ஓட்டைகளிலும் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும்...
பதிலளிநீக்கு