ஞாயிறு, 16 ஜனவரி, 2022

உலகேமாயம்வாழ்வே மாயம்

 மாயை

பிள்ளைப் பிராயத்தில் மண் உண்ட கண்ணன் வாயில்

சிறிதே மண் காண எண்ணிய தாய் யசோதை

மண்ணுடன் விண்ணும் நீரும் நிலமும் அண்ட அகிலமும்

கண்டே மயங்கியது மாயையின் மயக்கத்தால் அன்றோ.

 

மாயை தயை கொண்டு ஆயர் குலச் சிறார்களையும்

கன்றுகளையும் காணாமல் போக்கினான் நான்முகன் பிரமன்

பரம்பொருளே இடைச் சிறுவராய் கன்றுகளாய் உருவெடுத்து

எங்கும் நீக்கமற நிறைந்து நின்றதும் மாயையின் செயலன்றோ.

 

முன்னவன் தன் மாயையை விலக்க, மறைத்த தனைத்தும்

மறையாமல் நிற்க , பிரமனே நாரணனின் கணக்கிலா

உருவம் கண்டு அவனும் மாயையில் மூழ்கி

விளக்கம் பெற்றதும் மாயையின் செயலன்றோ

 

செருக்களத்தில் பார்த்தனுக்குச் சாரதியாய் சக்கரம்

கொண்டு ஆதவனை மறைத்து பூவுலகினை இருட்டாக்க

தலை தப்பியது என எண்ணி ஜயத்ரதன் தலை காட்ட

சக்கரம் மீட்டு இருள் விலக்கி அவன் தலை கொய்ய

கண்ணன் நிகழ்த்தியதும் மாயையின் செயலன்றோ/.

 

இல்லாதது இருப்பதுபோல் தோன்றுவதும் இருப்பது

இல்லாதது எனத் தோன்றுவதும் மாயையின்

விளைவு எனப் பொருள் புரிதல் தவறாமோ.

உலகே மாயம் வாழ்வே மாயம் என்பதும் சரிதானோ

நிரந்தரம் என்பது ஏதுமில்லை,நிகழ்வுகளில் நிச்சயமில்லை.

கருத்துப் பிழைகளும் காட்சிப் பிழைகளும் நிறைந்ததே வாழ்க்கை

மாயையின் பிடியில் மயங்கி இருப்பதே வாழ்க்கையின் நிதர்சனம்

மனத்தின்  மயக்கமே  மாயை என்றறிவோம்

உண்டு உறங்கி எழுவது நிச்சயமில்லை போகுமிடம்

தெரியாமல் போகாத ஊருக்குப் பொருள் ஈட்டி யாருக்கென்ன லாபம்

பேதம் பாராமல் பகிர்ந்துண்டு  வாழ்தல்  பெருமை தரும் 

ஈதலின் இன்பம் கொடுத்தனுபவித்தால் புரியும்

 ஏற்றமும் தாழ்வும் நிரந்தரமல்ல யாரும் யாராகவும் ஆகலாம்

உணர்ந்து கொண்டால் வாழ்வில் நிம்மதி நிச்சயம்
--------------------------------------------------------------------------------------------.

மாயை என்பது தண்ணீரில்
கிடையாக நிறுத்தி வைக்கப்படும் ஒரு கோலைப் போன்றது . என்ன தான் கோல் வளையவில்லை என்று நம் common sense சொன்னாலும் ஒவ்வொரு முறையும் நமக்கு கோல் வளைந்தே தெரிகிறது. அப்படிப்பட்டது தான் மாயை. மாயை என்று தெரிந்து கொண்டே
எல்லாவற்றியும் செய்ய வேண்டி இருக்கிறது இவ்வுலகில்.

மாயை என்று நாம் சொல்லும் போது
நம்மை அறியாமலேயே 'நிரந்தரம்' என்ற ஒன்றை பின்புலத்தில் கொண்டு வந்து விடுகிறோம்.

9 கருத்துகள்:

  1. நிற்பதுவோ நடப்பதுவோ என்கிற பாரதியின் பாடலுக்கு விளக்கம் போலும் பட்டது...அருமை..வாழ்த்துகளுடன்.

    பதிலளிநீக்கு
  2. காயமே இது பொய்யடா - வெறும் 
    காற்றடைத்த பையடா
    மாயனாராம் குயவன் செய்த 
    மண் பாண்டம் ஓடடா!

    Jayakumar

    பதிலளிநீக்கு
  3. பேதம் பாராமல் பகிர்ந்துண்டு வாழ்தல் பெருமை தரும்

    ஈதலின் இன்பம் கொடுத்தனுபவித்தால் புரியும்

    ஏற்றமும் தாழ்வும் நிரந்தரமல்ல யாரும் யாராகவும் ஆகலாம்

    உணர்ந்து கொண்டால் வாழ்வில் நிம்மதி நிச்சயம். //

    உண்மைதான் சார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. புராண உதாரணங்களும், அதிலிருந்து கிடைக்கும் எண்ணச் சிதறல்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புராண் உதாரணங்கள்ன் கிருஷ்ணாயணம் ப்திவிலிருந்து

      நீக்கு