ஆண்டொன்று கழிகிறது, இன்னொன்று மலர்கிறது.
நாளெல்லாம் ஒன்றுபோல் தோன்றினும் ஒன்றாவதில்லை.
ஒவ்வொரு விடியலிலும் மீண்டும் உயிர்க்கிறோம்
புலரியில் புள்ளினங்கள் பறக்கும்போது அவை
நேற்றை நினைக்கின்றனவா ?. இன்றைக்கென்று புதுப்
பிரமாணங்கள் எடுக்கின்றனவா ?..மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த
இன்று, நேற்று, நாளையெல்லாம் .ஓ......! அவனுக்கு ஓரறிவு கூட
இருப்பதாலா. இருக்கட்டும். நேற்றின் நாளையாம் இன்று பற்றி
நேற்றே கவலை கொண்ட அவன் இன்றின் நாளையைப் பற்றி
சிந்திக்காமல் இருப்பானா. சிந்திக்கட்டும் சிந்திக்க வேண்டும்
நாளெல்லாம் ஒன்றுபோல் தோன்றினும் ஒன்றாவதில்லை.
ஒவ்வொரு நாளும் சிகரம் தொட இன்னொரு வாய்ப்பு.
வாழ்க்கைப் பயணம் தொடர்வோம் . புத்தாண்டில் புது
சிகரம் தொடப் பிரமாணம் எடுப்போம்.
(ஒரு இழப்பின் வேதனையில் என்னையே தேற்றிக் கொள்ள
(ஒரு இழப்பின் வேதனையில் என்னையே தேற்றிக் கொள்ள
எழுதியது)
இன்னுமொரு என்று தொடர் பதிவா? உணவும் உடலும் மீள் பதிவு, இன்னுமொரு சுட்ட கதை, இன்னுமொரு வாய்ப்பு.
பதிலளிநீக்கு// இன்றின் நாளையைப் பற்றிசிந்திக்காமல் இருப்பானா. சிந்திக்கட்டும் சிந்திக்க வேண்டும். // சிந்திக்கிறேன். சாப்பாட்டு மெனு உட்பட.
//(ஒரு இழப்பின் வேதனையில் என்னையே தேற்றிக் கொள்ள எழுதியது)//
எதை கொண்டு வந்தோம், எதை இழக்க.
முடித்தது மகிழ்ச்சி
பதிலளிநீக்குஅருமை ஐயா...
பதிலளிநீக்குநன்றீ
நீக்குநல்ல கருத்து சார். நாளை என்று சிந்திப்பதால்தான் மனிதர்கள் நாம் தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு ஃப்ராக்ஷன் ஆஃப் நொடியும் கூட வேறுதான். ஏனென்றால் மனம் அப்படியானது!
பதிலளிநீக்குஒவ்வொரு நாளையு(யை)ம் எப்படிக் கையாள்வது என்றே ஓடிக் கொண்டிருக்கிறது!!
சிகரம் தொடும் வாய்ப்பெல்லாம் எல்லாருக்கும் அமைந்துவிடுவதில்லை சார். அதில் ஏகப்பட்ட மன உளைச்சல்கள் அதைச் சமாளிக்கத் தெரியவேண்டுமே. எது நடக்க வேண்டுமோ அதுவே நடக்கும் என்று போனால் போகத் தெரிந்தால் கொஞ்சம் அமைதி. அதனால்தான் இந்த நிமிடத்தில் வாழ்வோம் என்று தத்துவங்கள் சொல்கிறதோ!! (இதில் எனக்கு சில கேள்விகள் எழும் எனக்கு)
கீதா
த்துதுவங்க சொல்வது எல்லாம் சரியல்ல அதுவேநாம் நினைபதுதானே
நீக்குசில இழப்புகளில் மனம் தன்னைத் தேற்றிக்கொள்ள அரற்றும்போது எழும் சிந்தனைகளை வரிகளாக்கி விட்டீர்கள். இதுவே சந்தோஷ நேரத்தில் மனம் மனதுக்குள் எதையும் மறைத்து வைத்துக் கொள்வதில்லை இல்லையா?
பதிலளிநீக்குஉங்களெண்ணம் அப்படியா
நீக்குசிகரம் தொட இன்னொரு வாய்ப்பு....தன்னம்பிக்கை வரிகள் ஐயா.
பதிலளிநீக்குஒவ்வொரு நாளும் சிகரம்தொட வாய்ப்புதானே
பதிலளிநீக்குசுருக்கமாக எனினும் அழுத்தமாக...வாழ்த்துகளுடன்..
பதிலளிநீக்குபலரும் வேறு விதமாகப் பார்க்கின்றன்ர்
பதிலளிநீக்கு