திங்கள், 28 பிப்ரவரி, 2022

சேவை மனோபாவமும் சில நினைவுகளும்

 

                                       சேவை மனோபாவம்
                                         -----------------------------
  வேலை தேடும் படலம் என்றொரு பதிவு எழுதி இருந்தேன்.
அதில் நான் HAL-ல் பயிற்சிக்குத் தேர்வானது வரை எழுதினேன்.
பெங்களூரில் வேலைக்குச் சேர நான் வந்தபோது,நான் என்
சொந்தக் காலில் நிற்க வேண்டும் உறவுகள் யாரிடமும் உதவி
பெறலாகாது என்ற முடிவில் உறுதியாய் இருந்தேன்.

 அப்பாவின் சங்கடம் அனுபவித்திருந்தால்தான் தெரியும். நேர் காணலுக்கே மெட்ராஸுக்கு அனுப்ப முடியாமல் அவர் தவித்த தவிப்புபர்மா ஷெல் சுப்பிரமணியம் அவர்களால் உதவப்பட்டதால் தீர்ந்தது. மறுபடியும் அவரிடம் கையெந்த அவருடைய தன்மானம் தடுத்தது. அவர் கணக்குப்படி, அடுத்த மாதம் என் ஸ்டைபெண்ட் பணம்வரும்வரை, சமாளிக்க ரூ.60-/ ஆவது வேண்டும். என் தங்கும் செலவு, போகவர செலவு, சாப்பாட்டுச் செலவு. என்றெல்லாம் கணக்கில் கொள்ள வேண்டும். என்ன செய்தார், ஏது செய்தார் என்று நினைவில்லை. ட்ரெயின் டிக்கட் போக என்னிடம் ரூ.15-/ கொடுத்து மகனே உன் சமத்து எப்படியாவது சமாளி.இன்னும் பத்து நாட்களில் இன்னும் கொஞ்சம் பணம் அனுப்புகிறேன்.என்று ஆறுதலும் கூறினார். எனக்குத்தான் எந்த பயமும் கிடையாதே. கவலைப் படாதீர்கள் சமாளித்துக் கொள்கிறேன் என்று சமாதானம் கூறினேன்.



       இப்படியாக ரூ.15-/ உடன் 1956-ம் வருடம் ஏப்ரல் 28-/ம் தேதி, பெங்களூர் வந்தேன். என்னிடம் ஒரு சிறிய ட்ரங்க் பெட்டி என் உடைமைகளுடனும், என் சான்றிதழ் , நியமன உத்தரவு போன்றவற்றுடனும் இருந்தது.

       பெங்களூரில் ஏதாவது ஓட்டலில் தங்க வேண்டும். எங்கு போவது.?எனக்கு பெங்களூரில் கண்டோன்மெண்டில்( கொஞ்சம் முன்னே வந்து போன பழக்கத்தில் )தங்கலாம் என்றும், அதுவே எஸ். ஜே. பாலிடெக்னிக் சென்று வர சௌகரியமாக இருக்கும் என்றும் தோன்றியது. ரயிலில் வந்து கண்டோன்மெண்ட் ஸ்டேஷனில் இறங்கினேன். ஒரு குதிரை வண்டிக்காரரிடம், ஹோட்டலில் தங்க இருப்பதாகவும் சிவாஜி நகரில் எங்காவது தங்குமிடம் காட்டுமாறும் வேண்டிக்கொண்டேன். அவர் என்னை ஓல்ட் புவர் ஹௌஸ் ரோடின் ஆரம்பத்தில் இருந்த அசோகா லாட்ஜ், என்ற இடத்துக்குக் கூட்டிச் சென்றார். அங்கு விசாரித்ததில், மாதத்துக்கு தங்கும் முறை அங்கில்லை என்றும், தினமும் தங்க ரூ.30-/ க்கும் மெலாகும் என்றும் கூறினார்கள். வேறிடம் காட்டுமாறு குதிரை வண்டிக்காரரிடம் வேண்டிக்கொண்டேன் அவரும் என் நிலைமை நன்றாகப் புரிந்து கொண்டு கமர்ஷியல் ஸ்ட்ரீட் அருகிலுள்ள இப்ராஹிம் சாஹிப் தெருவில் இருந்த ராஜா லாட்ஜ் என்ற இடத்திற்கு கூட்டிச் சென்றார். அங்கு விசாரித்ததில் மூன்று பேர் தங்கும் அறையில் எனக்கு ஒரு கட்டில் தரப்படும் என்றும் மாத வாடகை ரூ.10-/ என்றும் கூறினார்கள். நானும் மாதவாடகை ரூ.10-/ அட்வான்ஸாகக் கொடுத்தேன். லாட்ஜில் காலை சிற்றுண்டிக்கும் மதிய இரவு உணவுக்குக் கணக்கு வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறினார்கள். என் தங்கும் பிரச்சினை முடிய என் தந்தைக்குக் கடிதம் எழுதினேன். அன்று மாலை டஸ்கர் டௌனில் இருந்த என் சகோதரி ராஜி வீட்டுக்குச் சென்று விவரங்கள் கூறினேன். என் பள்ளி நண்பன் தாமோதரன் வீட்டை விசாரித்து அவனைப் போய் பார்த்தேன். அவன் என்னை மறுநாள் வாடகை சைக்கிளில் எச்.ஏ.எல். இருக்குமிடம் காண்பிக்கக் கூட்டிச் சென்றான். நான் தங்கி இருந்த இடத்திலிருந்து சுமார் 10.. அல்லது 11 கிலோமீட்டர் தூரத்தில் எச்.ஏ. எல் இருந்தது.

                  மறு நாள் என் நியமன உத்தரவுடன் எச்.ஏ.எல்.சென்று பர்சனல் டிபார்ட்மெண்டில் காண்பிக்க, அவர்கள் நான் அங்கு சேரும்போது நிறுவனத்துடன் ஒரு பாண்டில் கையெழுத்திட வேண்டுமென்றும், அதற்கு என் தந்தையின் ஒப்புதலும் வேண்டுமென்றும் கூறினார்கள். மூன்று வருடப் பயிற்சி ஒப்பந்தம் பயிற்சி முடிந்தபின் பீ. மெகானிக் பதவி நியமனம், பயிற்சி முடிந்தபின் 5-/ வருடம் பணியில் இருப்பேன் என்று உத்தரவதம்,மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பல ஷரத்துக்களுடன் கூடிய ஒப்பந்த பத்திரத்தைக் கொடுத்தனர் மறுநாளிலிருந்து எஸ்.ஜே. பாலிடெக்னிக் செல்ல வேண்டுமென்றும் , மதியம் 12- மணிமுதல் இரவு 8-/ மணி வரை அங்கு பயிற்சி என்றும் அறிவிக்கப்பட்டோம். அதில் மதியம் 12-/ மணி முதல் மாலை 4-/ மணி வரை வகுப்பறைப் பாடங்கள் என்றும், மாலை 4-/ மணி முதல் இரவு 8-/ மணி வரை ப்ராக்டிகல் ட்ரெயினிங் இருக்கும் என்றும் கூறினார்கள். எச்.ஏ.எல்.-ல்பயிற்சிப் பள்ளியில் பயிற்சிக்கான மெஷின்களோ வசதிகளோ இல்லாதிருந்ததால் இந்த அணுகு முறை. ஆறு மாதம் பயிற்சி முடிந்தபிறகு, தொழிற்சாலையில் எல்லா பிரிவுகளிலும் பயிற்சியுடன் பணி புரியும் வாய்ப்பும் தரப்படும் என்றும் அறிந்தோம்.


 இப்படியாக நான் பயிற்சியில் சேர்ந்து வாழ்வின் இன்னொரு அத்தியாயத்துக்குள் காலடி வைத்தேன். என்னுடன் அந்த அறையில் இன்னும் இருவர் இருந்தனர்.அதில் ஒருவர் பெயர் சந்திரசேகரன்.பின்னி மில்லில் வேலையிலிருந்தார்.தந்தை மறுமணம் செய்த மாற்றாந்தாயின் கொடுமைகளுக்கு ஆளானதை சொல்லும் அவருக்கு எனக்கிருந்த மாற்றாந்தாயைப் பற்றி நான் உயர்வாகப் பேசுவதை நம்புவது கஷ்டமாயிருந்தது. மற்றவர் பெயர் வாசுதேவன். கேரளக்காரர்.பெங்களூர் வந்து வேலை தேடிக்கொண்டிருந்தார். அவருக்கு செலவுக்கு ஊரிலிருந்து பணம் வரவேண்டும். நான் அந்த லாட்ஜில் இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட வேண்டும்.வாசுவுக்கு வீட்டிலிருந்து பணம், வரத் தாமதமாகி ஒரு முறை அவனால் லாட்ஜ் வாடகை கொடுக்க முடியவில்லை. அறையைக் காலி செய்ய ஓட்டல் முதலாளி கூறினார்.அதற்கு முன் வாசு தன் உடைமைகளைப் பார்த்துக் கொள்ளும்படியும், வாடகைப் பணம் கட்ட வரும்போது அதை அவன் என்னிடமிருந்து எடுத்துக் கொள்வதாகவும்கூறிப் போனான். அவனை ஓரிரு தினங்கள் காணாமல் அவனது பெட்டியைப் பறிமுதல் செய்ய ஓட்டல் முதலாளி என் அறைக்கு வந்தார். நான் அது தற்சமயம் என் பாதுகாப்பில் இருப்பதால் அதனை அவர் எடுக்கக் கூடாது என்று தடுத்தேன். அவருக்கு என் மேல் கோபம் அதிகமாகி காலையில் குளிக்க வென்னீர் தருவதை நிறுத்தினார். சிற்றுண்டி சாப்பிடும்போது குடிக்க நீர் தரமாட்டார். எப்படியும் என்னையும் அறையைக் காலி செய்ய்விக்க முயற்சிகள் மேற்கொண்டார். எந்த ஒரு செயலையும், பிற்பகல் விளையும் பலன்களை அதிகம் யோசிக்காமல் எந்த பயமும் இன்றி செயல்களை செய்து வருபவனாக நான் இருந்தேன். தவறு செய்பவர் தண்டிக்கப் பட வேண்டும் என்று உறுதியாய் இருந்தேன். என் பக்கம் எந்தத் தவறும் இல்லாதிருக்கையில் எனக்குக் கஷ்டங்கள் கொடுத்த அந்த லாட்ஜ் முதலாளி மீது கமர்ஷியல் ஸ்ட்ரீட் பொலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தேன்.அந்த இன்ஸ்பெக்டருக்கு என்னைப் பார்த்ததும் ஒரு பரிவு உண்டாகி இருக்க வேண்டும். என்னிடம் கவலைப் பட வேண்டாம் என ஆறுதல் கூறியவர், இரண்டு பொலீஸ்காரர்களை லாட்ஜுக்கு அனுப்பி அந்த முதலாளியை வரவழைத்து அவரைக் கடுமையாய் எச்சரித்து அனுப்பினார். இதனால் ஓட்டல் முதலாளி என் மேல் கோபம் அதிகமாகி இருந்தார். அவரை நான் அவமானப் படுத்தி விட்டதாக நினைத்தார். நானும் சுமூக நிலை வராது என்று உணர்ந்து சிறிது நாட்களில் அங்கிருந்து விலகி வேறு ஒரு லாட்ஜில் சில நாட்களும் அதன் பிறகு என் நண்பன் ஸ்ரீதரனின் லாட்ஜ் கோமள விலாஸிலும் தங்கினேன். இவ்வளவு நாட்களுக்குப் பிறகு அந்த சம்பவங்களை நினைத்துப் பார்க்கையில் நான் இளங்கன்று பயமறியாது என்ற படியும், கூடுதலாக இம்பல்ஸிவ்வாக இருந்திருக்கிறேன் என்றும் தெரிகிறது

விடுமுறைக்கு பெங்களூர் சென்றிருந்தபோது என் சகோதரி ராஜியின் மைத்துனன் கங்காதரன் எனக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்ததும் நான் சைக்கிள் ஓட்டப் பயின்ற இடம் தற்போது ஜனத்திரளும் சந்தடியும் வண்டி ஓட்டங்களும் மிகுந்திருக்கும் சிவாஜி நகர் பஸ் ஸ்டாண்ட்  இருக்குமிடமாகும்..அப்போது ஒன்றுமே இல்லாத திறந்த வெளியாக இருந்தது.

நாங்கள் நடந்து செல்லும் பாதையில் பெங்களூர் ஹெட் போஸ்ட் ஆஃபிஸ்  இருந்தது. நான் பதினைந்து ரூபாயுடன் பெங்களூர் வந்து தங்கினாலும் என் செலவுக்குப் பணம் தேவைப் பட்டது. அப்பா எனக்குப் பணம் அனுப்ப வேண்டுமானால் நான் அதை எப்படிப் பெறுவது.? என் பயிற்சி நேரம் மதியம் 12- மணி முதல் இரவு 8-/மணி வரை. சுமார்பதினொன்று பதினொன்றரை மணிக்கு நான் என் இருப்பிடத்தை விடுவேன். போஸ்ட் மேனைப் பார்க்க முடியாது. மேலும் என்னுடைய ஒப்பந்தப் பத்திரங்கள் அப்பாவின் கையெழுத்தாகி எனக்கு வர வேண்டும். அதை அவர் ரெஜிஸ்தர் தபாலில் அனுப்ப வேண்டும்..இதையெல்லாம் யோசித்து நாங்கள் போகும் வழியில் இருந்த தலைமைத் தபால் நிலைய போஸ்ட் மாஸ்டரை அணுகி, எனக்கு வரும் தபால்களை என் அப்பா c/o postmaster  என்று அனுப்புவார் என்றும் ,அவரிடமிருந்து நான் அதைப் பெற்றுக் கொள்கிறேன் என்றும் வேண்டிக்கொண்டேன். அவரும் ஒப்புதலளிக்க எனக்கு வரும் தபால்கள் என் பெயரிட்டு C/O POST MASTER என்று வரத் தொடங்கியது. இந்தக் காலத்தில் அப்படிச் செய்ய முடியுமா என்று தெரிய வில்லை. பிறருக்கு உதவும் எண்ணங்கள் கொண்ட மக்கள் ஊழியர்கள் ( பப்ளிக் செர்வண்ட்ஸ் )இருந்த காலம் அது. நான் பெங்களூரில் இருந்து கடிதம் அனுப்பினால் அது மறு நாள் வெல்லிங்டனில் பட்டுவாடா ஆகும். எனக்கு வந்த ஒரு கடிதத்தில் அப்பா ஒருமுறை நான் எழுதிய கடிதம் மூன்றாம் நாள் கிடைத்ததாகக் கூறி ஆதங்கப் பட்டிருந்தார். இப்போது தபல்கள் ஒரு வாரம்
 ஆனாலும் கிடைக்கிறதா என்று கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால் தற்காலத்தில் தபால் சேவையின் முக்கியத்துவம் மிகவும்குறைந்து விட்டது. பயிற்சி வகுப்புகளில் இருந்து விலகாமல் ,விடுமுறை எடுக்காமல், எனக்குப் பெற வேண்டிய தபால் மற்றும் மணி ஆர்டர்களை நான் பெறுவதற்கு செய்த உத்திதான் இந்த C/OPOSTMASTER  விவரம்.

முன்பின் தெரியாத ஒரு சிறுவனுக்கு உதவியாய் இருந்த அந்தக் குதிரை 
வண்டிக்காரரும் , ஒட்டலில் தங்கி யிருக்கும் ஒருவன் கஷ்டப்படும்போது
ஆறுதல் கூறிஅவன் துயரங்களைத் துடைக்க உதவும் மனப் பான்மையுள்ள 
போலீஸ் அதிகாரியும் அரசின் தலைமைத் தபால் நிலையம் ஆனாலும் ஊர்
பேர் தெரியாத ஒரு இளைஞன்உதவி என்று வந்தபோது எந்த சட்டமும் 
பேசாமல் உதவி புரிந்த அந்தத் தலைமைத் தபால் நிலைய போஸ்ட் 
மாஸ்டரும் சேவை மனப் பான்மையுடனே செயல் பட்டனர் என்று எண்ணும் 
போது “ ஓ, அது அந்தக் காலம் “என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.
-----------------------------------------------------------------.  











வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

நான் யார்

 நான்  யார்


பொழுது புலர்ந்தது  மெல்லென எழுவீர்

யாரோ மென்  குரலில்பாடி என்னை எழுப்புவதுபோல்  இருந்தது  கண்விழிப்பு வ்ந்ததும்   கற்பனையும் கனவு என்று தெரிந்தது அதுசரி ஏன்  அந்தமாதிரி  ஒரு கற்பனைக் கனவு என்று  ஆராய்ந்தால் கனவே கற்பனையின்  காரணம் என்றுநினைக்க முடிந்தது  கனவில் நான்  என்னை   நான் ஒரு ஜகதலப் பிரதாபனாகக்கனவு கண்டிருக்கிறேன்

நிஜம் என்ன வென்றால்  வீட்டில் பாட்டுப்பெட்டியில் கௌசல்யா சுப்ரஜா ராமா சந்தியா பிரவர்த்ததே  என்று ராமனை துயில் எழுப்பும்  பாடலை என் மனைவி போட்டுக் கேட்டுக் கொண்டிருப்பாள் தினமும்  ராமனைத் துயில் எழுப்பும்  என்மனைவி ஏன் என்னைத் துயிலெழுப்புவதில்லை  என்னை ஏன்  துயில் எழுப்பவேண்டும்   நான்தான்  எப்போதும்அரை உறக்கத்தில்தானே இருக்கிறேன் அருகில்படுத்திருக்கும்  அவள்  சிறிது அசைந்தாலும்   விழித்துக் கொள்வேன்   அது போல்தான் அவளும் இருந்தாலும்  என்னைப் பாட்டுபாடி எழுப்பாதது ஒருகுறையாகத் தெரிகிறது மனைவியிடம் சொன்னால்  போங்கன்னா  என்பாள்  மேலும் இல்லாத ஒருவரை துயிலெழுப்புவது சரி இல்லை  என்று சொன்னால் அது அவளுக்குப் பிடிக்காது ஒருவருக்குப் பிடிக்காததை செய்யாமல் இருப்பதே  சுமூக மண வாழ்வுக்கு நல்லது என்பது நான் கற்ற பாடம்

நான் என்னை ஒரு ஜகதலப் பிரதாபனாக கற்பனையில் இருந்தேன்   மிகுந்த சின்ன வயதில் ஜகதலப்பிரதாபன் படம் பார்த்திருக்கிறேன் முழு கதை நினைவுக்கு வர வில்லை  இணையத்தில் தேடினால்ஆச்சரியமாக இருந்தது ஜகதலப் பிரதாபன் ஒரு ராஜ குமாரன்   அவனுக்கு   நான்கு தேவகன்னியரோரு வாழ விருப்பம் இதை கேட்ட அவன்  தந்தை அவனைச் சிரசேதம்செய்ய உத்தரவிடுகிறார்  ஆனால் தாய் அவரைத் தப்பிக்க விடுகிறார்அவ்வை  எனுமொரு தெய்வத்தாயின் பராமரிப்பில் ப்ரதாபனும் அவரதுநண்பரும் இருக்கிறார்கள் ஒரு நாள் அருகே இருக்கும் குளம் ஒன்றில் ஒரு அழகிகுளித்துக் கொண்டிருப்பதைக் காணுபிரதாபன்  அப்பெண்ணின்  புடவயை எடுத்து மறைத்துக் கொள்கிறார்  புடவை தேடி வரும் அழகிகாணாதிருக்க அவ்வை பிரதாபனை ஒரு குழந்தையாக மாற்றி விடுகிறார் நாளாவட்டத்தில்  அழகி அக்குழந்தையை நேசிக்கிறார்  விரைவில்குழந்தைஉருவம் மாற ப்ரதாபனும்  அந்த அழகியும்மணம் புரிண்டுவாழ்கின்றனர்

அவர்கள் வாழும் நாட்டின் அரசன்   பிரதாபனின் மனைவியிடம் மனம் பறி கொடுத்து பிரதாபனை தனக்கு இல்லாத ஒரு நோய்க்கு  மருந்து தேடி கொண்டுவர நாக லோகத்துக்கு அனுப்புகிறார்   பிரதாபனோ வேலையை கச்சிதமாக முடித்துமேலும் மூன்று அழகிகளோடு திரும்பி வந்து இனிதே வாழ்கிறார்  என்பதாகக் கதை

 ஒரு வேளை  ஆழ்மன ஆசைகளே கனவாக வருகிறதோ ஆனால் நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் நான் நல்லபையன்  அது பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன்

 

து

 

 


செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

நீ சந்தோஷ மாக இருக்கிறாயா

 


உன் சம்பளம் எவ்வளவு  நீ சந்தோஷமாக  இருக்கிறாயா

பெண்ணின் வயதையும்  ஆணின் சம்பளத்தையும் கேட்கக் கூடாது என்பார்கள் இருந்தாலும் சொல்கிறேன்   இதனால் யாராவது பயன் பெறலாமே

 

என் வயது 45  என்சம்பளம் ரு 14  லட்சம் ஆண்டுக்கு பிடித்தம்போக எனக்கு ரு 95 ஆயிரம் மாதம் கிடைக்கும் சென்னயில் வசிக்கிறேன்   சந்தோஷமாகவே இருக்கிறேன்  நான்  60   70 லட்சம் கொடுத்து வீடு வாங்கவில்லை மாதம்  35 ஆயிரம் ரூபாய் இ எம் ஐ  கட்டும்  அவசியமெனக்கில்லை அதனால் ஏற்படும் மன உளைச்சலும் டென்ஷனும் எனக்கில்லை மாதம்  பத்தாயிரம் ரூபாய் வாடகையில் 60  70 லட்ச பெறுமான  வீடு அலுவலகத்துக்கு அருகேயே வீடு போக்குவரத்துக்கு ஆகும் செலவு அதில் வரும்  டென்ஷன் முதுகு வலி  எனக்கு கிடையாது அலுவலகம் மாறினால் அருகேயே வீடு பார்ப்பேன்  சொந்த வீட்டில் இருந்து  அலுவலகத்துக்கு  வரும் என்சிலநண்பர்கள்  படும்பாடு பார்த்திருக்கிறேன்  சென்னை போக்கு வரத்திலும்  உஷ்ணத்திலும் தினம்40 கிலோ மீட்டர்  பயணம்  செய்து அலுக்கும்  அவர்களைப் பார்க்கும் போதுபாவமாய் இருக்கும் உடல் சோர்வினால்  அவர்களால் முழுதிறமையையும்  காட்ட முடிவதில்லை  அவர்களுக்கும் பெயர்கேடு அலுவலகமும் நட்டப்படுகிறது  குடும்பமும்  அவர்களின்   அருகாமை இல்லாமல்  கஷ்டப்படுகிறது

 மாதம்  20 ஆயிரம் ரூபாய்  ம்யூச்சுவல் ஃபண்டில் போடுகிறேன்  அடில்கிடைக்கும் வருமானம் சொந்த வீட்டில் கிடைக்கும் வருமானம்விட அதிகம்

 ரூபாய் 25 ஆயிரம் வீடுச்செலவுக்கு பெட்ரோல் இ பி காய்கறி   பால்  வீட்டு வேலைக்காரி இத்தியாதி செலவுகளுக்கு ஆகலாம்  மனைவியின் தங்க சிட்டுக்கு ரூபாய் ஆறாயிரம்   மனைவியை சந்தோஷமாய் வைத்திருக்க  வேண்டுமே கிராமத்தில் தனியே இருக்கும் பாட்டிக்கு ரூபாய் இரண்டாயிரம்  குழந்தகளின் பள்ளி செலவுக்கு ரூபாய் மூன்றாயிரம்

வெளியில் போகவர  சாப்பிட என்று மாதம்  14ஆயிரம் மீதி இருக்கும்  15ப் ஆயிரமவசர தேவைகளுக்கு

எனக்கு க்ரெடிட் கார்ட் கிடையாதுநான் இ எம் ஐயில் பொருட்கள் வாங்குவதில்லை அதுஒரு ட்ராப் எனக்கு மாதக் கடைசி ப்ராப்ளம்   கிடையாது

என்னிடமொரு  125 சிசி பைக்ஐந்து ஆண்டு கால பழசு  இருக்கிறது ரண்டு லட்ச ரூபாய்  மதிப்புள்ள  ராயல் என் ஃபீல்ட் காண்டினெண்டல்  பைக் மிதுஆசதான்  ஆனால் அத்ற்கு  ஆகும்செலவுக்சள்  அதிகம் என்பதால் வாங்கவில்லை 1000 சிசி ஹாட்ச் பாக்  கார் ஒன்று இருக்கிறது அது நம்சாலைகளுக்கும் எந்தேவைக்கும் போதும்

 ரெஸ்டாரெண்ட் களில் செலவு செய்வதை விட மனம்மகிழும் சுற்றுப்பயணம்  மேற்கொள்வொம்  கையி உணவு எடுத்துக் கொள்வோம்

எளிமையான என் வாழ்க்கை என்னைவிட சம்பாதிக்கும்  பலரைவிடஎன்னை சந்தோஷமாக  வைத்திருக்கிறது

 இதையெல்லாம் என் தந்தையிடம் கற்றேன் அவருக்கு கடன்கிடையாது சொந்த வீடும் ஆரோக்கியமான உடலும் இருக்கிறது 68 வயதாகிறது  பீபி  சுகர் முதுகு வலி ஏதும் கிடையாது  காலையில் ஐந்து மணிக்கு  எழுந்திருப்பார்  சுமார் மூன்று கிலோ மீட்டர்தூரம் நடப்பார் யோகா போன்ற உடற்பயிற்சிகள் செய்வார்  எங்கு போகவும் பஸ்ஸிலேயே செல்வார்    வீட்டில் சில்லறை வேலைகளை  அவரே செய்வார் அம்மாவுடன் ஆதரவாகவும அன்பாகவும்பொழுதைக்  கழிப்பார் உறவுகளின்  விசேஷங்களுக்குச் செல்வார் எங்களைக் காண சென்னைக்கு அடிக்கடி வருவார்  என் தந்தையின் நண்பர்களும்  அவர்களது பிள்ளைகளும்  வெள்நாடுகளில்  நல்ல வேலைகளில் இருக்கிறார்கள்

 என் மாமா ஒருவர் பெரிய பணக்காரர்  வாய்க்கு ருசியாகசாப்பிட முடியாது நிறைய உடல் உபாதைகள்  என் தாய்க்கு நாங்கள் அயல் நாடுக்ளுக்குச்சென்றுசம்பாதிக்க வில்லையே என்னும் குறைபாடுஇருக்கலாம்  ஆனால் இங்கு கிடைக்கும்நிம்மதி பிள்ளைகள அயல்   நாடுகளுக்குப்போனால்  கிடைக்காது என்றும் தெரியும் அவர் அடிக்கடி சொல்வார் சிம்பிள் லிவிங் ஹை திங்கிங் தான்முக்கியம் 

 என் தந்தையே மிகப் பெரிய பணக்காரர் நல்ல குடும்பம் பல்கலைக் கழகம் என்பதை அவரிடம்தான் கற்றேன் அவரே என்  இன்ஸ்பிரேஷன் என்றுநான் அவரிடம் இதுவரை சொல்ல வில்லை சொல்லித்தெரிய வேண்டியதா அது 

இப்போது உங்கள் முதல் கேள்விக்கு வருகிறேன்  நான்  மிகவும் சந்தோஷமாக இருகிறேன்

(படித்ததில்  அடாப்ட் செய்தது)



 


திங்கள், 21 பிப்ரவரி, 2022

பதிவில் என் எண்ணங்கள்

 



வலைப்பூவொன்று தயார் செய்து எழுதத் துவங்கின போது, ஏற்கெனவே என் ஆத்ம திருப்திக்காக எழுதி வைத்திருந்த சில கதைகள் ,கவிதைகள்( ? ) கட்டுரைகள் என்று பதிவிடத் துவங்கினேன். நினைக்கும் கருத்துக்களை வெளியிட ஒரு வடிகால் போல் இருந்தது வலைப்பூ. ஆரம்ப காலத்தில் என் பதிவுகளை படித்தவர்கள் மிகவும் குறைவு. முதலில் நான் ஒருவன் பதிவிடுகிறேன் என்பதைப் பலருக்கும் அறிவிக்க வேண்டி தமிழ் மணத்தில் இணைத்தேன். நானே பலரது பதிவுகளைப் படித்து என் கருத்துகளைக் கூறத் தொடங்கினபோது சிலர் ரெசிப்ரொகேட் செய்தனர். அப்போது நான் படித்த சில பதிவுகள் காழ்ப்புணர்ச்சியில் மிதந்தது கண்டு என் பதிவு ஒன்றில் பதிவுகள் எப்படி இருக்கலாம் என்று எழுதினேன்.

ஆரம்பத்தில் என் திருப்திக்காக எழுதியிருந்தேன். பிற்பாடு என் எண்ணங்களைக் கடத்த் என் வலையை உபயோகிக்கத் துவங்கினேன். நான் என் பதிவுகளில் கூறும் கருத்துக்கள் விமரிசிக்கப் பட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் பதிவுலகில் மாற்றுக் கருத்துக்கள் கூறுவது தவிர்க்கப் பட்டே வருகிறது. எந்த சாரமும் இல்லாத பதிவுகளுக்கெல்லாம் புகழாரங்கள் இருப்பது பார்த்தேன். நான் கருத்து கூறும்போது என் மனதில் பட்டதை மனம் நோகாமல் தெரிவித்து வருகிறேன். அது அப்படி உணரப் பட்டும் வந்திருப்பது தெரிய வருகிறது. ஒரு முறை ஒரு நண்பர் என் பதிவுகளுக்கு பதில் இடுவது , : வீட்டில் லுங்கியுடன் இருந்து விருந்தாளிகளை வரவேற்பதுபோல் எந்தக் க்லக்கமும் இல்லாமல் சொல்ல முடிகிறது ” என்ற பொருளில் எழுதி இருந்தார். படித்தபோது நிறைவாக இருந்தது. எந்த போலித்தனத்தையும் நான் விரும்புவதில்லை என்று அவர் புரிந்து கொண்டது சரியே. புகழ்ச்சிக்கு மயங்காதவர் இல்லை. நானும் உண்மையான புகழ்ச்சி என்று தோன்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நிறையவே மாறுபட்ட கருத்துக்கள் பல எழுதி இருக்கிறேன். சடங்குகள், சம்பிரதாயங்கள், மனிதரிடையே ஏற்ற தாழ்வுகள் , அதற்கான காரணங்களாக நான் நினைக்கும் வர்ணாசிரம நியதிகள், , அதில் குளிர் காயும் பல ரக மனிதர்கள் என்று எழுதி இருக்கிறேன். ஒரு வேளை என் வயதை கருதியோ என்னவோ என்னுடன் கருத்து0 மோதல்களை பலரும் தவிர்க்கின்றனர்.

நான் நமது இறை இலக்கியங்கள் குறித்தும் எழுதி இருக்கிறேன். அவதாரங்களை கதைகள் என்று நான் குறிப்பிட்டது சிலர் அவ்வளவாக விரும்பவில்லை. அது என் கருத்து. நான் யாருடைய நம்பிக்கையையும் கேள்வி கேட்பதில்லை. கேள்வி கேட்டு தெரிந்த பின் நம்பிக்கைகள் பலப்படுத்தப் படவேண்டும் நம்பிக்கை என்னும் பெயரில் புற்றுக்குப் பால் ஊற்றுவதையும் எந்தக் கேள்வி கேட்டாலும் நம்பிக்கையை குறை கூறுகிறேன் என்று நினைப்பதையும் நான் விரும்புபதில்லை. .

ஒன்று மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. கருத்துக்கள் கூறாவிட்டாலும் பலரும் என் பதிவுகளைப் படிக்கிறார்கள். எந்த விதமான பதிவுகள் அதிகம் படிக்கப் படுகின்றன, என்று பார்த்தால் கொஞ்சம் சென்சேஷனலாக இருந்தால் .( அதுவும் தலைப்பில் தெரிய வேண்டும்) , படிக்கிறார்கள். இப்போதும் என் பழைய பதிவுகள் தேடிப்பிடித்து படிக்கப் படுகின்றன. இதையெல்லாம் பார்க்கும்போது நான் பலரும் படிக்கிறார்கள் என்று அவர்கள் விருப்பமறிந்து  எழுத வேண்டுமா. இல்லை எனக்கு திருப்தி தருவதை எழுத வேண்டுமா. A MIX OF BOTH SHOULD BE THERE.  அப்போதுதான் என்னைப் புரிந்த வாசகர்கள் தொடர்வார்கள் என்று நம்புகிறேன். 
கடைசியாக, கிட்டத்தட்ட ஆயிரம் வாசகர்கள் படித்தும் ஒரு பின்னூட்டம் கூட இல்லாத பதிவும் கண்டு என்ன நினைப்பது புரியவில்லை.           









வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

பேத்தியின் திருமணம்

 


 

 

என் பேத்தியின் திருமணம்  ஒரு வழியாய்நல்ல படியாய் ஜனவரி 22 ம் தேதி நடந்து  முடிந்தது

எங்கள் வீடு  ஒரு பாரத விலாஸ் மனதுக்கு பிடித்தவருடன்  ஜாதி சாதகம்பாராமல்மணம்செய்வதில் என் காலத்திலிருந்தே வழக்கம்

 என் பேத்தியும்அந்த லிஸ்டில் வந்து விட்டாள் மணமகன்தாயார்தெலுங்கு பிராமணர்தந்தை முதலியார் மனம்  ஒத்த மணம்

 

திருமண ச் சடங்கு இரு வீட்டாரும் ஒத்துக் கொண்ட படி இரு வீட்டு வழக்கப்படிநடந்தது அதைகாணொலியாக ட்யூபில் வெளி இட்டிருந்தான் வர முடியாதவர்கண்டு மகிழ   என்மகன்திருமண செலவுதான் நினைத்தும் பார்க்கமுடிய்வில்லை நானாயிருந்தால்  திருமணமே வேண்டாம் என்று இருந்திருப்பேன்என் ஆயுசு பூராவும் அவ்வளவு பணம் நான் சம்பாதித்துஇருக்க வில்லைமணம் என்றால் சட்ங்குகள்  என்றாகிவிட்டது

இந்த கோவிட்தொற்றால் வருவதாகச் சொன்னபலரும் வர முடியவில்லைவந்தவர்களில் பலருக்கும் சோதனையில்தொற்றின்அறிகுறிகள் இருந்தது எல்லாம்பயம்தான்இதை தெரிந்து கொள்ளஆளூக்குரூபாய்   ஆயிரம்  செலவு

அறுபது வயதுக்கு மேற்பட்டோர்  பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளவேண்டுமாம்  சட்டம் மதிக்கும்எங்களுக்கு  ஊசி போட வீட்டுக்கே  வந்துபோட உதவி இருந்தது நன்றி  அவர்களுக்கு 



       


வியாழன், 17 பிப்ரவரி, 2022

கனவினில் தொலைந்து போனவன்

 கனவினில் தொலைந்து போனவன்

 

கனவுகள் இனிமையானவை கற்பனை கலந்தால் எழுது பொருள்கிடைக்கும்  இம்மாதிரி கனவுகளுடன்   கற்பனை கலந்து பல பதிவுகள் எழுதி இருக்கிறேன்   கனவில் கடவுளோடு உரையாடி இருக்கிறேன் நான் நினைத்தும் பார்க்காத பல செய்திகள்  கற்பனையில் வரும் சில தத்துவங்கள்பிறக்கும்   ஆனல் என்ன குறை என்றால்  விடிந்ததும்  கனவுகள்மறந்து போகும் பின் எழுதுவது எல்லாம்கற்பனையே அண்மையில் புத்தாண்டு பதிவில் என்  சின்ன சின்ன ஆசைகளைக் குறிப்பிட்டு இருந்தேன்   அவை எல்லாம் கனவில் சாத்தியமாகும் போது ஏதோ இனம் தெரியாத மகிழ்ச்சி வருகிறது கனவில் பூமியின் புவி ஈர்ப்பினையும் தாண்டி  மிதக்க்லவும் செய்திருக்கிறேன்  அப்போது அதுவே சந்தோஷம்தரும்  கனவிலாவது நினைவில் செய்ய முடியாததைச்செய்ய  முடிகிறது  ஒரு வேளை வாழ்வே ஒரு கனவாய் இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும்

நேற்றிரவு ஒரு கனவு கண்டேன்   ஊர் பெயர் தெரியாதஇடம் நானும் என் இளையமகனும்  எங்கோநடந்து செல்கிறோம்   என்னை விட என்மகன் மகிழ்கிறான் அப்பா நீங்கள் நன்றாகத்தானே நடக்கிறீர்கள் உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று  உற்சாக மூட்டுகிறான்  அப்போதெ அவனிடம் இது கனவுதானே என்கிறேன் சிறிது தூரம் சென்றபின் போதும் வீடுநோக்கிச்செல்வோம் என்கிறேன்  பாதைமறந்துவிட்டது  ஆனால் டைரெக்‌ஷன்  நோக்கிச் செல்லலாம் என்கிறேன்  சிறிது தூரம் சென்றபின்   வழிதவறியது தெரிகிறது மகனிடம் ஏதாவது  வண்டி கிடைக்குமா எனப்பார்க்கச் சொல்கிறேன் அவனும் வண்டி தேடிப்போகிறான்

 அவன் போய் சற்று நேரம்  ஆனதால்   நானும் அங்குமிங்குமலைகிறேன் அங்கு ஒரு பெரியவரிடம் எங்கள் இருப்பிடம் பற்றிக்கூறி எவ்வளவு தூரம்  இருக்குமென்க்கேட்கிறேன்  அவர் சொன்ன தூரம் என்னை மலைக்க வைத்து விட்டது கனவுக்குத்தான் நேரம் தூரம் தேசமெதுவுமில்லையே   

மிகக்குறைந்த நேரத்தில் மிக அதிக தூரம் வந்து விட்டோம் என்று தெரிகிறது நடந்தோ வண்டி வைத்தோ கடக்கும்தூரமல்ல  திடீரென்று என்முன்னே  ஒரு பெரியநாய்  மெல்லமெல்லஎன் அருகில் வருகிறது  எனக்குள்பயமதிகரிக்கிறது எனக்கானால் நாய் என்றாலேயே  பயம்  அதிகம்  என்மேல் தாவி என் மெல் கால்வைத்து என்னை 

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

அறிவாயுதம்

 


ஏனென்று சொல்லு நீ தென்றலே
மனசை என்னமோ பண்ணுது  புரியலே
புதுப் புது எண்ணங்கள் தோன்றுது-அதை
இடுகையில் பதிக்கவே மனம் நாடுது.

எண்ணங்கள் எழுத்துருக் கொள்ளுது
படிக்கையில் இதழிலே புன்னகை விரியுது
புரிந்து படிக்க தெளிவான மனம் வேண்டுமே
ஆனால் படிப்பவர் முகம் கோணுது ஏனோ புரியலெ

ஆயிரம் உண்டிங்கு சாதி எனினும்
மேதினியில் இட்டார் பெரியோர் இடாதோர்
இழிகுலத்தோர் என்றாள் அவ்வை மூதாட்டி.
ஒருவர் இட்டு ஒருவர் வாழல் என்ன நீதி.
இதனை நான் கேட்டால் ஏன் இந்த சுணக்கம்?
ஆணென்றும் பெண்ணென்றும் இருசாதி
அதிலும் இருப்போர் இல்லாதோர் என்னும் பேதம்
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்றே ஏதுமிலை படைப்பில்
இதனை அறிந்திடஅறிவுக்கண் திறந்திடல் வேண்டும்
அனைவருக்கும் தேவை சுய சிந்தனை
அன்றே சொன்னான் சாக்ரடீஸ் தேவை அறிவாயுதம்
அதனை அடையவே கேட்கிறேன் அனைவருக்கும்
அகக் கண் திறக்கும் சமச்சீர் கல்வி.
அறிவு என்பது அனைவருக்கும் இருப்பது
பட்டை தீட்டி ஜொலிக்க வேண்டுவதே அறிவாயுதம்
நரைகூடிக் கிழப் பருவம் எய்தி வேடிக்கை மனிதர்போல்
வீழ்வேனென்று நினைத்தாயோஎன்று கேட்கும்
நாம் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம்

ஏனென்று சொல்லு நீ தென்றலே
மனசை என்னவோ பண்ணுது புரியலே. .  .     :      

சனி, 12 பிப்ரவரி, 2022

நினைவுகள் பறவை

 

நினைவுகள் பறவை ஒரு மீள்பதிவு2011ல் எழுதியது

 

            நான் பதிவெழுத விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. ஆனால் அவை எவ்வளவு தூரம் வாசகர்களை ஈர்க்கும் என்று தெரிவதில்லை. இருந்தாலும் பரவாயில்லை. நான் ரசித்து, விரும்பி எழுதியவை அவ்வள்வு ரசிக்கப் படாமலும் , ஏனோதானோ என்று எழுதியவை விருப்பத்துடன் படிக்கப் படுவதையும் பார்க்கும்போது, எழுதுவது மட்டுமே நான் செய்ய வேண்டியது, மற்றது வாசகர்கள் ரசனை என்று விட்டுவிட்டு. இதை எழுதுகிறேன்.


        ஏழெட்டு நாட்கள் நான் பெங்களூரில் இல்லாமல் என் தம்பியின் தொடர் அழைப்பின் பேரில் கோயமுத்தூர் சென்றிருந்தேன். என் தம்பியிடம் என் மனைவி ஒரே ஒரு கண்டிஷன் இட்டாள். அவளைக் கோயில்களுக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்பதுதான் அது. குருவாயூருக்கு எத்தனை முறை சென்றாலும் அவளுக்குத் திருப்தி இருக்காது. மறுபடியும் மறுபடியும் குழந்தை கண்ணனைக் காண விரும்புவாள்..இந்தமுறை கேரள தமிழ் நாடுகளிடையே முல்லைப் பெரியாரால் பதட்டம் நிலவ , அங்கு செல்லவே தயக்கம் இருந்தது. மதுரைக்குப் போகலாமா என்று பரிசீலிக்கப் பட்டது. எனக்கு எதுவானாலும் சம்மதமாகவே இருந்தது. அண்ணியின் விருப்பம் நிறைவேற்ற குருவாயூரே செல்ல முடிவாயிற்று. பயப்பட்டபடி ஏதும் நிகழவில்லை. நிம்மதியான ,அருமையான தரிசனம் கடந்த சில காலங்களில் கிடைக்காத அற்புத தரிசனம், அரை மணிநேரத்தில் மூன்று முறை கண்ணனின் திருவருள் காணப் பெற்றோம். கண்ணனின் அழகு சிலை ஒன்றையும் வாங்கிக் கொண்டு திரும்பினோம். என்ன சொல்வது. நாங்கள் வாளையாரைத் தாண்டியதும் எல்லையை மூடிவிட்டார்கள். துன்பங்கள் துடைப்பவன் கடாட்சம் கிடைக்கப் பெற்று மகிழ்ந்தோம்.


            மறுநாள்  என் விருப்பம் பூர்த்திசெய்ய கூனூர் வெல்லிங்டன் பகுதிகளுக்குச் சென்றொம். நான் நான்கு வருடங்கள் வசித்த இடங்களையும் படித்த பள்ளியையும் முதன் முதல் வேலை பார்த்த மைசூர் லாட்ஜ் இருந்த இடங்களையும் என் மனைவிக்கும் தம்பி, தம்பி மனைவிக்கும் காண்பித்தேன். வட்டக் குடியிருப்பில் நாங்கள் இருந்த இடம் தற்போது ஒரு குதிரை லாயாமாக உருவெடுத்திருக்கிறது. அங்கு இன்னும் நினைவுகளை தாங்கி நிறுத்தும் ஒரே சின்னமாக அந்த சாம்பிராணி மரமும், முனீஸ்வரன் இருந்த திட்டும் மட்டுமே இருக்கிறது. அடுத்த முறை செல்லும்பொது , செல்ல வாய்ப்பு கிடைக்கும்போது ,அவையும் இருக்குமா என்பது சந்தேகமே. இதை எழுதும்போதே மனம் வாடுகிறது.


              நான் படித்த பள்ளி புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி  அப்பர் குனூரில் சிம்ஸ் பார்க் அருகே இன்னும் புதுப் பொலிவோடு இருப்பது கண்டு மிகவும் மகிழ்ந்தேன். பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரை சந்தித்து ,1954-ம் வருடம் அங்கிருந்துதான் பள்ளியிறுதிப் படிப்பு முடித்தேன் என்று கூறியபோது, அவர் அப்போது தான் பிறந்திருக்கவே இல்லை என்றார். இத்தனை வருடங்களுக்குப் பிறகு நாங்கள் அப்பள்ளிக்குச் சென்றது மகிழ்ச்சி தருகிறது என்றார்.


             நாங்கள் மலையிலிருந்து கீழிறங்கும்போது கார் போகும் பாதையில் நான்கு காட்டு யானைகள் நின்றிருந்தன. நான் என் பள்ளி நாட்களின் நினைவுகளில் மூழ்கி இருந்தேன். மற்றவர்கள் சுவாரசியமாகப் பேசிக் கொண்டு இருந்ததால் சாலையில் யானைகளைக் கவனிக்க வில்லை. சுமார் முப்பது அடி தூரத்தில் வந்ததும் தான் யானைகள் இருப்பது கவனிக்கப் பட்டது. பயத்தில் உறைந்து விட்டோம். காரைத் திருப்பி செலுத்த முடியாது. நேராகவும் போக முடியாது மூன்று பெரிய யானைகளும் ஒரு குட்டியும் இருந்தன. யானைகள் எங்களை சட்டை செய்ததாகவே தெரியவில்லை. அதுவும் நல்லதுக்குத்தான்.ஐந்து நிமிடங்கள் வரை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்தோம். அவை சாலையை விட்டுக் கீழிறஙகத் துவங்கியதும் விர்ர்ரேன்று காரை செலுத்தி எங்களுக்கு நிம்மதி கொடுத்தார் எங்கள் ட்ரைவர். ஒரு திகிலான அனுபவம்தான் அது


       .       அதற்கு மறுநாள் ஒரு வித்தியாசமான கோவில் தரிசனம் .கோவையில் காரமடை அருகே கேஜி க்ரூப்ஸ் நிர்வகிக்கும் தென் திருப்பதி என்று அழைக்கப் படும் பாலாஜி ( பெருமாள், வெங்கடேஸ்வரா ) கோவில். ஒரு ரம்மியமான சூழ்நிலையில் அமைதியான பசுமை சூழ்ந்துள்ள இடத்தில் அழகான ஆலயம் இதில் என்னைக் கவர்ந்த விஷயம் என்னவென்றால், சாதாரணமாக ஆலயங்களில் பக்தர்கள் செய்யும் அர்ச்சனை ,அபிஷேக ஆராதனைகள் ஏதுமில்லை. கோயில் நிர்வாகமே அந்தந்த நேரத்தில் பூஜைகள் செய்கின்றனர். எல்லோருக்கும் சமமான தரிசனம். உண்டியல் தட்டு வகையறாக்கள் ஏதுமில்லை. வாரத்தில் மூன்றுநாட்கள் அன்னதானம். மற்ற நாட்களில் தொன்னையில் பிரசாதம். நான் சில நாட்களுக்கு முன் எழுதிய பதிவுக்கு நேர்மாறான நிகழ்வுகள். மனம் லேசானதுபோல் உணர்ந்தேன்


               அங்கிருந்து வரும்போது பதிவர் ஐயா டாக்டர் கந்தசாமி அவர்கள் இல்லத்துக்குச் சென்று அவரைக் கண்டு பரிச்சயப் படுத்திக் கொண்டேன். என்னைவிட மூத்தவர். என்னைவிட இளமையுடன் இருக்கிறார். அன்பான உபசரிப்பு. ஆதரவான பேச்சு. என் உடல் நலம் குறித்த அக்கறையான விசாரிப்பு. நினைவுப் பரிசாக ஒரு பேனாவும் ஒரு குறிப்பேடும் அன்புடன் கொடுத்தார். அவருடன் நான் எடுத்துக் கொண்ட புகைப் படம் சரியாக வந்திருந்தால் பதிவில் இணைத்திருப்பேன். ஒரு நல்ல நண்பரை சந்தித்த மகிழ்ச்சியுடன் திரும்பினேன்.


            

 

 

புதன், 9 பிப்ரவரி, 2022

இளைய பாரதம்

 

நம்பிக்கை

கூட்டம் அலை மோத நெரிசலில் பெண்ணொருத்தி
படும் பாடு கண்டு கொதித்தது அவன் மனசு.
பேரூந்தொன்றில் பயண்ம் செய்கிறான் அவ்விளைஞன்
சந்தடி சாக்கில் அரைக் கிழவன் ஒருவன் அப்பெண்ணின்
மேல் வேண்டுமென்றே உராய்தல் கண்டு அருகில்
வந்த நடத்துனரிடம் சுட்டிக் காண்பிக்க அவரும்
சமயோசிதமாக நடுவில் சென்று மெள்ள அக்கிழவனை
அப்புறப் படுத்துகிறார். பிறகு தன் கட்டை விரல் உயர்த்தி
இளைஞனுக்கு சமிக்ஞை செய்கிறார். பார்த்துக் கொண்டிருந்த

எனக்கு இளைய பாரதம் மேல் நம்பிக்கை கூடியது