கனவினில் தொலைந்து போனவன்
கனவுகள் இனிமையானவை கற்பனை கலந்தால் எழுது
பொருள்கிடைக்கும் இம்மாதிரி
கனவுகளுடன் கற்பனை கலந்து பல பதிவுகள்
எழுதி இருக்கிறேன் கனவில் கடவுளோடு
உரையாடி இருக்கிறேன் நான் நினைத்தும் பார்க்காத பல செய்திகள் கற்பனையில் வரும் சில
தத்துவங்கள்பிறக்கும் ஆனல் என்ன குறை என்றால் விடிந்ததும்
கனவுகள்மறந்து போகும் பின் எழுதுவது எல்லாம்கற்பனையே அண்மையில் புத்தாண்டு
பதிவில் என் சின்ன சின்ன ஆசைகளைக்
குறிப்பிட்டு இருந்தேன் அவை எல்லாம்
கனவில் சாத்தியமாகும் போது ஏதோ இனம் தெரியாத மகிழ்ச்சி வருகிறது கனவில் பூமியின்
புவி ஈர்ப்பினையும் தாண்டி மிதக்க்லவும்
செய்திருக்கிறேன் அப்போது அதுவே சந்தோஷம்தரும் கனவிலாவது நினைவில் செய்ய
முடியாததைச்செய்ய முடிகிறது ஒரு வேளை வாழ்வே ஒரு கனவாய் இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும்
நேற்றிரவு ஒரு கனவு கண்டேன் ஊர் பெயர் தெரியாதஇடம் நானும் என் இளையமகனும் எங்கோநடந்து செல்கிறோம் என்னை விட என்மகன் மகிழ்கிறான் அப்பா நீங்கள்
நன்றாகத்தானே நடக்கிறீர்கள் உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று உற்சாக மூட்டுகிறான் அப்போதெ அவனிடம் இது கனவுதானே என்கிறேன் சிறிது
தூரம் சென்றபின் போதும் வீடுநோக்கிச்செல்வோம் என்கிறேன் பாதைமறந்துவிட்டது ஆனால் டைரெக்ஷன் நோக்கிச் செல்லலாம் என்கிறேன் சிறிது தூரம் சென்றபின் வழிதவறியது தெரிகிறது மகனிடம் ஏதாவது வண்டி கிடைக்குமா எனப்பார்க்கச் சொல்கிறேன்
அவனும் வண்டி தேடிப்போகிறான்
அவன் போய் சற்று
நேரம் ஆனதால் நானும் அங்குமிங்குமலைகிறேன் அங்கு ஒரு
பெரியவரிடம் எங்கள் இருப்பிடம் பற்றிக்கூறி எவ்வளவு தூரம் இருக்குமென்க்கேட்கிறேன் அவர் சொன்ன தூரம் என்னை மலைக்க வைத்து விட்டது கனவுக்குத்தான்
நேரம் தூரம் தேசமெதுவுமில்லையே
பதிவு பாதியில் நிற்கிறதே...
பதிலளிநீக்குஆழ்மன எண்ணங்களே கனவுகளாகின்றன. சிலசமயம் சம்பந்தமில்லாதவையும் கனவுகளில் இடம்பெறும் என்பது என் அனுபவம்!
கனவில் நாய் உங்கள் மேல் ஏறி உங்கள் பயத்
பதிலளிநீக்குதை போக்கி இருக்கிறதே :) இப்போது சற்று பயம் போனதா? பயம் கூடியதா?
ஆழ்மனதில் உறங்கிக் கிடக்கும் சில எண்ணங்கள், ஆசைகள் கனவுகளாய் வரும். அதோடு சில எந்தவிதத்தொடர்பும் இல்லாதவை கூட வரலாம்.
பதிலளிநீக்குபதிவு பாதியில் நிற்கிறதே சார்
கீதா
நீங்கள் சொல்லியிருப்பது போல் கனவுகள் நல்ல கதைகளுக்கு வழிவகுக்கும்.
பதிலளிநீக்குகீதா
தொடருமா ஐயா...?
பதிலளிநீக்கு