Tuesday, February 15, 2022

அறிவாயுதம்

 


ஏனென்று சொல்லு நீ தென்றலே
மனசை என்னமோ பண்ணுது  புரியலே
புதுப் புது எண்ணங்கள் தோன்றுது-அதை
இடுகையில் பதிக்கவே மனம் நாடுது.

எண்ணங்கள் எழுத்துருக் கொள்ளுது
படிக்கையில் இதழிலே புன்னகை விரியுது
புரிந்து படிக்க தெளிவான மனம் வேண்டுமே
ஆனால் படிப்பவர் முகம் கோணுது ஏனோ புரியலெ

ஆயிரம் உண்டிங்கு சாதி எனினும்
மேதினியில் இட்டார் பெரியோர் இடாதோர்
இழிகுலத்தோர் என்றாள் அவ்வை மூதாட்டி.
ஒருவர் இட்டு ஒருவர் வாழல் என்ன நீதி.
இதனை நான் கேட்டால் ஏன் இந்த சுணக்கம்?
ஆணென்றும் பெண்ணென்றும் இருசாதி
அதிலும் இருப்போர் இல்லாதோர் என்னும் பேதம்
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்றே ஏதுமிலை படைப்பில்
இதனை அறிந்திடஅறிவுக்கண் திறந்திடல் வேண்டும்
அனைவருக்கும் தேவை சுய சிந்தனை
அன்றே சொன்னான் சாக்ரடீஸ் தேவை அறிவாயுதம்
அதனை அடையவே கேட்கிறேன் அனைவருக்கும்
அகக் கண் திறக்கும் சமச்சீர் கல்வி.
அறிவு என்பது அனைவருக்கும் இருப்பது
பட்டை தீட்டி ஜொலிக்க வேண்டுவதே அறிவாயுதம்
நரைகூடிக் கிழப் பருவம் எய்தி வேடிக்கை மனிதர்போல்
வீழ்வேனென்று நினைத்தாயோஎன்று கேட்கும்
நாம் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம்

ஏனென்று சொல்லு நீ தென்றலே
மனசை என்னவோ பண்ணுது புரியலே. .  .     :      

4 comments:

  1. நாடு முழுவதும் எல்லோருக்கும் ஒரே சம்பளம், எல்லோருக்கும் ஒரே உணவு, எல்லோருக்கும் ஒரே மாதிரி வீடு என்று இருந்தால் எப்படி இருக்கும்?!

    ReplyDelete
  2. அனைவருக்கும் தேவை சுய சிந்தனை//

    நிச்சயமாக ஆனால் எல்லோரது மூளையும் ஒரே போன்று வடிவமைக்கப்படவில்லையே!

    கீதா

    ReplyDelete
  3. // அறிவுக்கண் திறந்திடல் வேண்டும் //

    அருமை ஐயா...

    ReplyDelete
  4. ஸ்ரீராம் கருத்துபோல நானும் சிந்தித்ததுண்டு.

    ReplyDelete