திங்கள், 21 பிப்ரவரி, 2022

பதிவில் என் எண்ணங்கள்

 



வலைப்பூவொன்று தயார் செய்து எழுதத் துவங்கின போது, ஏற்கெனவே என் ஆத்ம திருப்திக்காக எழுதி வைத்திருந்த சில கதைகள் ,கவிதைகள்( ? ) கட்டுரைகள் என்று பதிவிடத் துவங்கினேன். நினைக்கும் கருத்துக்களை வெளியிட ஒரு வடிகால் போல் இருந்தது வலைப்பூ. ஆரம்ப காலத்தில் என் பதிவுகளை படித்தவர்கள் மிகவும் குறைவு. முதலில் நான் ஒருவன் பதிவிடுகிறேன் என்பதைப் பலருக்கும் அறிவிக்க வேண்டி தமிழ் மணத்தில் இணைத்தேன். நானே பலரது பதிவுகளைப் படித்து என் கருத்துகளைக் கூறத் தொடங்கினபோது சிலர் ரெசிப்ரொகேட் செய்தனர். அப்போது நான் படித்த சில பதிவுகள் காழ்ப்புணர்ச்சியில் மிதந்தது கண்டு என் பதிவு ஒன்றில் பதிவுகள் எப்படி இருக்கலாம் என்று எழுதினேன்.

ஆரம்பத்தில் என் திருப்திக்காக எழுதியிருந்தேன். பிற்பாடு என் எண்ணங்களைக் கடத்த் என் வலையை உபயோகிக்கத் துவங்கினேன். நான் என் பதிவுகளில் கூறும் கருத்துக்கள் விமரிசிக்கப் பட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் பதிவுலகில் மாற்றுக் கருத்துக்கள் கூறுவது தவிர்க்கப் பட்டே வருகிறது. எந்த சாரமும் இல்லாத பதிவுகளுக்கெல்லாம் புகழாரங்கள் இருப்பது பார்த்தேன். நான் கருத்து கூறும்போது என் மனதில் பட்டதை மனம் நோகாமல் தெரிவித்து வருகிறேன். அது அப்படி உணரப் பட்டும் வந்திருப்பது தெரிய வருகிறது. ஒரு முறை ஒரு நண்பர் என் பதிவுகளுக்கு பதில் இடுவது , : வீட்டில் லுங்கியுடன் இருந்து விருந்தாளிகளை வரவேற்பதுபோல் எந்தக் க்லக்கமும் இல்லாமல் சொல்ல முடிகிறது ” என்ற பொருளில் எழுதி இருந்தார். படித்தபோது நிறைவாக இருந்தது. எந்த போலித்தனத்தையும் நான் விரும்புவதில்லை என்று அவர் புரிந்து கொண்டது சரியே. புகழ்ச்சிக்கு மயங்காதவர் இல்லை. நானும் உண்மையான புகழ்ச்சி என்று தோன்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நிறையவே மாறுபட்ட கருத்துக்கள் பல எழுதி இருக்கிறேன். சடங்குகள், சம்பிரதாயங்கள், மனிதரிடையே ஏற்ற தாழ்வுகள் , அதற்கான காரணங்களாக நான் நினைக்கும் வர்ணாசிரம நியதிகள், , அதில் குளிர் காயும் பல ரக மனிதர்கள் என்று எழுதி இருக்கிறேன். ஒரு வேளை என் வயதை கருதியோ என்னவோ என்னுடன் கருத்து0 மோதல்களை பலரும் தவிர்க்கின்றனர்.

நான் நமது இறை இலக்கியங்கள் குறித்தும் எழுதி இருக்கிறேன். அவதாரங்களை கதைகள் என்று நான் குறிப்பிட்டது சிலர் அவ்வளவாக விரும்பவில்லை. அது என் கருத்து. நான் யாருடைய நம்பிக்கையையும் கேள்வி கேட்பதில்லை. கேள்வி கேட்டு தெரிந்த பின் நம்பிக்கைகள் பலப்படுத்தப் படவேண்டும் நம்பிக்கை என்னும் பெயரில் புற்றுக்குப் பால் ஊற்றுவதையும் எந்தக் கேள்வி கேட்டாலும் நம்பிக்கையை குறை கூறுகிறேன் என்று நினைப்பதையும் நான் விரும்புபதில்லை. .

ஒன்று மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. கருத்துக்கள் கூறாவிட்டாலும் பலரும் என் பதிவுகளைப் படிக்கிறார்கள். எந்த விதமான பதிவுகள் அதிகம் படிக்கப் படுகின்றன, என்று பார்த்தால் கொஞ்சம் சென்சேஷனலாக இருந்தால் .( அதுவும் தலைப்பில் தெரிய வேண்டும்) , படிக்கிறார்கள். இப்போதும் என் பழைய பதிவுகள் தேடிப்பிடித்து படிக்கப் படுகின்றன. இதையெல்லாம் பார்க்கும்போது நான் பலரும் படிக்கிறார்கள் என்று அவர்கள் விருப்பமறிந்து  எழுத வேண்டுமா. இல்லை எனக்கு திருப்தி தருவதை எழுத வேண்டுமா. A MIX OF BOTH SHOULD BE THERE.  அப்போதுதான் என்னைப் புரிந்த வாசகர்கள் தொடர்வார்கள் என்று நம்புகிறேன். 
கடைசியாக, கிட்டத்தட்ட ஆயிரம் வாசகர்கள் படித்தும் ஒரு பின்னூட்டம் கூட இல்லாத பதிவும் கண்டு என்ன நினைப்பது புரியவில்லை.           









12 கருத்துகள்:

  1. ஐயா 
    உள்ளதை உள்ளபடி சொன்ன இன்றைய பதிவு மனதில் உரைத்தாலும் பின்னூட்டம் என்ற ஒன்றே ஊக்கம் தருவது என்ற உங்கள் கருத்தை ஏற்க முடியவில்லை. வலையிலும் இணையத்திலும் படிப்பவர்கள் அறிவு விருத்திக்காக படிப்பதில்லை, பின்னூட்டம் சந்தேகங்கள் என்று நிவர்த்தி செய்ய என்று முயல்வதில்லை.  அவர்கள் மிக்கவாறும் மேலோட்டமாகத் தான் பதிவுகளை வாசிக்கின்றனர். அப்படி வாசிக்கும்போது ஏதோ ஒன்று மனதில் படியுமானால் பின்னூட்டம் ஆக வெளிப்படும். 
    கடை விரித்தேன். கொள்பவர்கள் கொள்ளட்டும். என்று உங்கள் பதிவுகளை எப்போதும் போல் வெளியிடலாம்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
  2. மனதில் உள்ள(த்)தை வெளிப்படுத்துவதில் தங்களுக்கு நிகர் யாருமில்லை - அது உங்களின் பதிவானாலும் சரி, மற்றவர்களின் வலைப்பூ கருத்துரை என்றாலும் சரி... அதற்காக 'இப்படித்தான், இதுதான் சரி," என்று பிடிவாதம் செய்பவர் என்பதும் தவறு... (முன்பு அவ்வாறு நினைத்திருந்தேன் என்பதையும் இங்கு சொல்ல விரும்புகிறேன்...)

    "தோன்றின் புகழொடு தோன்றுக" என்ற குறளின் உங்களின் புரிதல், எனக்கு புகழ் அதிகாரத்தின் குறளின் குரல் பதிவுகள் ஆரம்பிக்க ஒரு காரணமாக இருந்தது...

    மற்றபடி இறை நம்பிக்கை பற்றி சொல்லி உள்ளீர்கள்... "நம்பிக்கை" இதில் பதில் உள்ளது... என்னைப் பொறுத்தவரை, தானே தான் உணர வேண்டியதை, வெளிச்சம் போட்டு விளம்பரம் செய்வது ஒருவகையில் வேசம் போட்டு ஏமாற்றுவது... இங்கே ஏமாற்றுவது என்பது தன்னை முதலில், பிறரை இரண்டாவது...

    அப்புறம் வர்ணாசிரம நியதிகள் மனித குலத்திற்கே கேடு...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  3. உங்களுக்கென்று ஒரு ககுத்து உள்ள்துதெரிகிறதுதெளிவித்தத்ற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. பதிலுரைக்காவிடினும் படிப்பவர்கள்
    எண்ணிக்கை தெரிந்து கொள்ளமுடிவது
    திருப்தி தரும் தானே....

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ஐயா எழுதுவது என்பது உங்களது மனதிருப்திக்காக இதை மனதில் கொள்ளுங்கள்.

    பின்னூட்டம் இல்லாததால் நமது எழுத்தில் வலிமை இல்லை என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்.

    //ஒரு வேளை என் வயதை கருதியோ என்னவோ என்னுடன் கருத்து மோதல்களை பலரும் தவிர்க்கின்றனர்//

    இதுவும் உண்மையே... எது எப்படியோ எழுதுவதை நிறுத்தாதீர்கள். இன்றைய தங்களது கருத்து நாளை பிறருக்கு பயனளிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  6. A MIX OF BOTH SHOULD BE THERE. //

    இது சரிதான் என்றாலும் பலராலும் வாசிக்கப்படுகிறது, பிறரது விருப்பம் என்பதில் ஓரளவிற்கு மேல் காம்ப்ரமைஸ் செய்து கொள்வது சற்று சிரமம்.

    நிச்சயமாக உங்கள் வயதைக் கருதி கருத்து மோதல்கள் தவிர்க்கப்படும்.

    பின்னூட்டம் வரவில்லை என்றாலும் அமைதியாக வாசித்துச் செல்பவர்களைக் கருத்தில் கொள்ளலாம். எனவே உங்களுக்கு எழுதுவதில் மனம் மகிழ்வடையும், திருப்தி தரும் என்பதால் எழுதுங்கள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  7. வாதத்தில் வென்று நட்பை இழப்பதைவிட அவரவர் கருத்து அவரவர்களுக்கு என்று சென்று விடுவது சிறந்தது.  நட்பு பாதிக்கப்படாது.  கணவன் மனைவிக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் இருக்கும்.  வாதத்தினாலோ, என் கருத்துதான் உயர்ந்தது என்று சண்டையிடுவதாலோ லாபமில்லை.  பதிவுகளை படிக்கும் எண்ணிக்கைக்கும் பின்னூட்டத்தின் எண்ணிக்கைக்கும் சம்பந்தம் இருக்காது.

    பதிலளிநீக்கு