உன்
சம்பளம் எவ்வளவு நீ சந்தோஷமாக இருக்கிறாயா
பெண்ணின் வயதையும் ஆணின் சம்பளத்தையும் கேட்கக் கூடாது என்பார்கள்
இருந்தாலும் சொல்கிறேன் இதனால் யாராவது பயன்
பெறலாமே
என் வயது 45
என்சம்பளம் ரு 14 லட்சம் ஆண்டுக்கு
பிடித்தம்போக எனக்கு ரு 95 ஆயிரம் மாதம் கிடைக்கும் சென்னயில் வசிக்கிறேன் சந்தோஷமாகவே இருக்கிறேன் நான்
60 70 லட்சம் கொடுத்து வீடு வாங்கவில்லை
மாதம் 35 ஆயிரம் ரூபாய் இ எம் ஐ கட்டும்
அவசியமெனக்கில்லை அதனால் ஏற்படும் மன உளைச்சலும் டென்ஷனும் எனக்கில்லை மாதம் பத்தாயிரம் ரூபாய் வாடகையில் 60 70 லட்ச பெறுமான வீடு அலுவலகத்துக்கு அருகேயே வீடு போக்குவரத்துக்கு
ஆகும் செலவு அதில் வரும் டென்ஷன் முதுகு வலி எனக்கு கிடையாது அலுவலகம் மாறினால் அருகேயே வீடு
பார்ப்பேன் சொந்த வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு வரும் என்சிலநண்பர்கள் படும்பாடு பார்த்திருக்கிறேன் சென்னை போக்கு வரத்திலும் உஷ்ணத்திலும் தினம்40 கிலோ மீட்டர் பயணம் செய்து
அலுக்கும் அவர்களைப் பார்க்கும் போதுபாவமாய்
இருக்கும் உடல் சோர்வினால் அவர்களால் முழுதிறமையையும் காட்ட முடிவதில்லை அவர்களுக்கும் பெயர்கேடு அலுவலகமும் நட்டப்படுகிறது குடும்பமும்
அவர்களின் அருகாமை இல்லாமல் கஷ்டப்படுகிறது
மாதம் 20 ஆயிரம் ரூபாய் ம்யூச்சுவல் ஃபண்டில் போடுகிறேன் அடில்கிடைக்கும் வருமானம் சொந்த வீட்டில் கிடைக்கும்
வருமானம்விட அதிகம்
ரூபாய்
25 ஆயிரம் வீடுச்செலவுக்கு பெட்ரோல் இ பி காய்கறி பால் வீட்டு
வேலைக்காரி இத்தியாதி செலவுகளுக்கு ஆகலாம்
மனைவியின் தங்க சிட்டுக்கு ரூபாய் ஆறாயிரம் மனைவியை சந்தோஷமாய் வைத்திருக்க வேண்டுமே கிராமத்தில் தனியே இருக்கும் பாட்டிக்கு
ரூபாய் இரண்டாயிரம் குழந்தகளின் பள்ளி செலவுக்கு
ரூபாய் மூன்றாயிரம்
வெளியில் போகவர
சாப்பிட என்று மாதம் 14ஆயிரம் மீதி
இருக்கும் 15ப் ஆயிரமவசர தேவைகளுக்கு
எனக்கு க்ரெடிட் கார்ட் கிடையாதுநான் இ எம் ஐயில்
பொருட்கள் வாங்குவதில்லை அதுஒரு ட்ராப் எனக்கு மாதக் கடைசி ப்ராப்ளம் கிடையாது
என்னிடமொரு
125 சிசி பைக்ஐந்து ஆண்டு கால பழசு
இருக்கிறது ரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள ராயல் என் ஃபீல்ட் காண்டினெண்டல் பைக் மிதுஆசதான் ஆனால் அத்ற்கு
ஆகும்செலவுக்சள் அதிகம் என்பதால் வாங்கவில்லை
1000 சிசி ஹாட்ச் பாக் கார் ஒன்று இருக்கிறது
அது நம்சாலைகளுக்கும் எந்தேவைக்கும் போதும்
ரெஸ்டாரெண்ட்
களில் செலவு செய்வதை விட மனம்மகிழும் சுற்றுப்பயணம் மேற்கொள்வொம்
கையி உணவு எடுத்துக் கொள்வோம்
எளிமையான என் வாழ்க்கை என்னைவிட சம்பாதிக்கும் பலரைவிடஎன்னை சந்தோஷமாக வைத்திருக்கிறது
இதையெல்லாம்
என் தந்தையிடம் கற்றேன் அவருக்கு கடன்கிடையாது சொந்த வீடும் ஆரோக்கியமான உடலும் இருக்கிறது
68 வயதாகிறது பீபி சுகர் முதுகு வலி ஏதும் கிடையாது காலையில் ஐந்து மணிக்கு எழுந்திருப்பார் சுமார் மூன்று கிலோ மீட்டர்தூரம் நடப்பார் யோகா
போன்ற உடற்பயிற்சிகள் செய்வார் எங்கு போகவும்
பஸ்ஸிலேயே செல்வார் வீட்டில் சில்லறை வேலைகளை அவரே செய்வார் அம்மாவுடன் ஆதரவாகவும அன்பாகவும்பொழுதைக் கழிப்பார் உறவுகளின் விசேஷங்களுக்குச் செல்வார் எங்களைக் காண சென்னைக்கு
அடிக்கடி வருவார் என் தந்தையின் நண்பர்களும் அவர்களது பிள்ளைகளும் வெள்நாடுகளில்
நல்ல வேலைகளில் இருக்கிறார்கள்
என் மாமா
ஒருவர் பெரிய பணக்காரர் வாய்க்கு ருசியாகசாப்பிட
முடியாது நிறைய உடல் உபாதைகள் என் தாய்க்கு
நாங்கள் அயல் நாடுக்ளுக்குச்சென்றுசம்பாதிக்க வில்லையே என்னும் குறைபாடுஇருக்கலாம் ஆனால் இங்கு கிடைக்கும்நிம்மதி பிள்ளைகள அயல் நாடுகளுக்குப்போனால் கிடைக்காது என்றும் தெரியும் அவர் அடிக்கடி சொல்வார்
சிம்பிள் லிவிங் ஹை திங்கிங் தான்முக்கியம்
என் தந்தையே
மிகப் பெரிய பணக்காரர் நல்ல குடும்பம் பல்கலைக் கழகம் என்பதை அவரிடம்தான் கற்றேன் அவரே
என் இன்ஸ்பிரேஷன் என்றுநான் அவரிடம் இதுவரை
சொல்ல வில்லை சொல்லித்தெரிய வேண்டியதா அது
இப்போது உங்கள் முதல் கேள்விக்கு வருகிறேன் நான் மிகவும்
சந்தோஷமாக இருகிறேன்
(படித்ததில் அடாப்ட் செய்தது)
மனநிறைவும், சந்தோஷமுமே பெரிய செல்வம். வழக்கமாக சொல்வதுதான், மெத்தையை விலை கொடுத்து வாங்க முடியும், தூக்கத்தை வாங்க முடியாது!
பதிலளிநீக்குவரவு செலவை கட்டுக்குள் வைத்தல் சண்தோஷத்தின் முதல் பாடம் அதையே சொல்ல முயன்றிருக்கிறேன்
நீக்குசிம்பிள் லிவிங் ஹை திங்கிங் தான்முக்கியம் //
பதிலளிநீக்குஅதே தான் சார். மனதில் திருப்தி இருந்துவிட்டால் மகிழ்ச்சி தானாகவே வந்துவிடும்.
இது முன்பு வாசித்த நினைவு இருக்கிறது சார். உங்கள் தளத்திலோ அலல்து வேறு எங்கோ தெரியவில்லை ஆனால் வாசித்த நினைவு
கீதா
மனத்ல் திருப்திஅடைய சில எளிய வழிகள் (படித்ததில் அடாப்ட் செய்தது)என்றூபதிவிலேயே கூரப்பட்டிருக்கிறது
நீக்குஇதுவல்லவோ வாழ்வு...
பதிலளிநீக்குஅதற்கு சில வழிகள்
பதிலளிநீக்குநல்ல வாழ்க்கை முறை.
பதிலளிநீக்கு