Wednesday, February 8, 2012

விருதும் அங்கீகாரமும்.






   

                                        விருதும் அங்கீகாரமும்.
                                        ======================


           சகோதரி சக்திப் பிரபா எனக்கும் அன்பின் அங்கீகாரமாக
வெர்சடைல் ப்ளாகர் என்ற விருதினை வழங்கி இருக்கிறார்.
வலைப் பூவில் VERSATALITY  எனக்கு இருக்கிறதா என்பதே 
பெரிய கேள்விக் குறி. ஆனால் என் எழுத்துக்களில் அது 
இருப்பதாகக் கூறி இருக்கிறார். அதுவே அந்த விருதினை 
அங்கீகரிக்க வைக்கிறது. மேலும் அவரே கூறுவது போல 
அன்பின் அங்கீகாரம் என்றே கருதுகிறேன். மேலும் இந்த
விருது என் வலைப் பூவின் முகவரியையும் என் எழுத்தையும் 
இன்னும் பலரிடம் சேர்க்க உதவலாம் என்பதாலும் இதனை 
ஏற்கிறேன்.

           முன்பொரு முறை திரு. சுந்தர்ஜி அவர்களது “கைகள் 
அள்ளிய நீர் “வலையில் சில வலைப் பூக்களை குறிப்பிட்டு
இவை அவசியம் படிக்கப்பட வேண்டியவை என்று கூறி 
இருந்தார். அதில் என் வலைப் பூவும் அடங்கும். அது நான் 
வலை உலகத்துக்கு அறிமுகமான நேரம். அதையே வலையில் 
எனக்குக் கிடைத்த முதல் அங்கீகாரமாகக் கருதுகிறேன்.

         எனக்கு எழுதத் தெரியுமே தவிர கணினியின்/ல் சித்து 
வேலைகள் எதுவும் தெரியாது. ஏன், வலைப் பூவைத் திரட்டி
களில் இணைக்கக்கூடத் தெரியாது. நண்பர் ஒருவர் உதவியுடன்
தமிழ்மணத்திலும் , திரட்டியிலும் இணைத்ததோடு சரி. 

       அநேகமாக என் பதிவுகள் எல்லாவற்றிலும் ஏதாவது செய்தி 
சொல்ல வருவதாகவோ, என் ஆதங்கங்களின் வெளிப்பாடாகவோ
இல்லை இளவயதில் எழுதிய காதல்வரிகளாகவோ, கதைகளில் 
மனித மனங்களின் உளக் கூற்று வெளிப் பாடாகவோ இருக்கும். 

       இந்த விருது கொடுக்கப்படும் போது இரண்டு நிபந்தனைகள்.
விதிக்கப் படுகிறது..ஒன்று:- விருது பெறுபவர் அவருக்குப் பிடித்த
ஏழு விஷயங்கள் கூற வேண்டும். இரண்டு:- விருது பெறுபவர் 
அவர் வகையில் ஐந்து பதிவர்களுக்கு இந்த விருது வழங்க 
வேண்டும். 

       அதன்படி எனக்குப் பிடித்தவற்றை ஏழு விஷயங்களுக்குள் 
அடக்குவது சிரமம் என்றாலும்;
1. அன்பு செய்யப் பிடிக்கும். 
2  அறிவை வளர்க்கப் பிடிக்கும்
3  நல்லன பகிர்தல் பிடிக்கும்.
4 .படிக்கப் பிடிக்கும்.
5. எழுதப் பிடிக்கும்.
6. உறவு கொண்டாடப் பிடிக்கும். 
7.தஞ்சாவூர், கண்ணாடி ஓவியங்கள் வரையப் பிடிக்கும்

      நான் பரிந்துரைத்து விருது வழங்கத் தேர்ந்தெடுக்கும் பதிவர்
கள் உண்மையிலேயே.பதிவுலக வித்தகர்கள்.இந்த விருதினை 
வழங்குவதில் அவர்கள் பெரும் பெயரை விட நான் அடையும் 
மகிழ்ச்சியே அதிகம். வெறுமே அவர்கள் வலை(முக )வரி
மட்டும் தருகிறேன். மற்றபடி அவர்கள் பதிவுகள் பேசும். இந்த 
விருது மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தைவிட 
அவர்கள் மூலம் இந்த விருதின் மவுசு கூடும் என்பதே என் 
தாழ்மையான எண்ணம். 

1..கைகள் அள்ளிய நீர். 
    http://sundargprakash.blogspot.in

2.ஹரணி பக்கங்கள்.
   thanjavur-harani.blogspot.in

3.மதுரை சரவணன்.
   http:// veeluthukal.blogspot.in

4.சாமியின் மன அலைகள்.
   http://swamysmusings.blogspot.in

5.சமுத்ரா. வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு
   www.samudrasukhi.com

இந்த விருது சங்கிலியைத் துவக்கி தொடர வைத்த.
நித்திய கல்யாணி, உஷா ஸ்ரீகுமார், வை. கோபாலகிருஷ்ணன்,
ஷக்திப்பிரபா ஆகியோருக்கு என் நன்றி. 
------------------------------------------------------------------------------- 
.                                                                                                   

8 comments:

  1. விருதுகள் பற்றி எனக்கென்று தனிப்பட்ட ஓர் அபிப்ராயம் இருக்கிறது.அவற்றைப் பெறுவதிலும் அளவுகடந்த தயக்கமும் கூச்சமும் உண்டு.காலம் சலிக்கவிருக்கும் நூற்றாண்டுச் சல்லடையில் சலிக்கப்பட்டு அநேகமாக சல்லடையின் மேற்புறம் தங்கிவிடக்கூடிய கசடாக நானிருக்கக் கூடும். ஆகவே இந்த விருதுகளில் இருந்து ஒரு விலக்கம்.

    ஆனால் என் அப்பாவின் வயதையொத்த சிந்தனைகளிலும் எழுத்துக்களிலும் தனியே சிறப்புற்றிருக்கும் பெரும் அனுபவஸ்தரான உங்கள் கையால் குட்டும் முதுகில் ஷொட்டும் பெறுவதைப் பேறாக எண்ணுகிறேன்.நிச்சயம் உங்களின் நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பேன் பாலு சார்.

    ReplyDelete
  2. விருது கிடைத்ததற்கும் கொடுத்ததற்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. மனமார்ந்த பாராட்டுக்களுடன் கூடிய நமஸ்காரங்கள் ஐயா!

    //இந்த விருது சங்கிலியைத் துவக்கி தொடர வைத்த

    நித்திய கல்யாணி,
    உஷா ஸ்ரீகுமார்,
    வை.கோபாலகிருஷ்ணன்,
    ஷக்திப்பிரபா

    ஆகியோருக்கு என் நன்றி//

    தங்களின் இந்த நன்றி அறிவிப்பில் எங்கள் அனைவர் பெயர்களையும்
    மறக்காமல் குறிப்பிட்டுள்ளது மிகவும் வித்யாசமாகவும் விரும்பத்தக்கதாகவும் உள்ளது.

    அதற்கு என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

    தங்களின் தங்கக்கைகளால் விருது பெறும் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  4. அன்புள்ள ஐயா...

    வணக்கம்.உங்களின் அன்பிற்கு நான் என்ன பகிர்ந்துகொள்ளமுடியும். என்னுடைய தந்தையின் நிலையில் உங்களை நிறுத்தி உங்களை வணங்கி உங்களின் விருதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

    உங்களின் அன்பிற்கு நான் இன்னும் இயங்கவேண்டும் வெகு விரிவான தளத்தில். மனிதம்.. நியாயம்..தர்மம்..மனசான்று விலகாமை..உலகியலின் உண்மை என இலக்குகளில் இன்னும் தீவிரம் காட்டவேண்டும்.

    பணிகிறேன். பணிகிறேன்.
    மகிழ்கிறேன். மகிழ்கிறேன்.

    நன்றிகள். நன்றிகள்.

    ReplyDelete
  5. எனக்கு கிடைத்த அங்கீகாரத்தை ,விருதினை
    என் மனம் கவர்ந்த பதிவினைத் தரும் தங்களுடன்
    பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்
    தங்கள் பதிவுலகப் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. எனக்கு மதிப்பளித்து விருது வழங்கிய திரு.GMB அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  7. @ரமணி, உங்கள் பதிவில் நான் எழுதிய பின்னூட்டங்கள் காணாமல் போய்விடுகிறது. என்ன தொழில் நுட்ப சிக்கலோ.?விருதுக்கு தேர்ந்தெடுத்ததுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  8. பலரது பதிவுகளிலும் நான் இட்ட பின்னூட்டங்கள் காணாமல் போய்விடுகிறது.

    ReplyDelete