Friday, March 23, 2012

நினைப்பவை எழுத்தில்......


                                         நினைப்பவை எழுத்தில்........
                                         ---------------------------------

      என் எண்ணங்கள் சில நேரங்களில் OUTLANDISH ஆகத் தெரியலாம். பெண்கள் வேலைக்குப் போவது என்பது ஆண்களுடன் சம உரிமை கோருவதற்கா, இல்லை தேவையின் அடிப்படையிலா என்பது முதலில் தெரிய வேண்டும். கிராமப் புறங்களில் ஆணும் பெண்ணும் வேலை செய்வது இயல்பாகப் போய் விட்டது. நகர்ப் புறங்களில் பெண்கள் ஆணுக்குச் சமமாகப் படித்துவிட்டார்கள் என்னும் ஒரே காரணத்துக்காக வேலைக்குப் போகிறார்களா., குடும்பத்தை நிர்வகிக்க இருவரும் பொருளீட்ட வேண்டிய கட்டாயத்துக்காக வேலைக்குப் போகிறார்களா. இல்லை யாரையும் சாராதிருக்கப் பொருளாதார பலம் வேண்டும் என்பதற்காக வேலைக்குப் போகிறார்களா. என்றெல்லாம் சிந்திக்கத் தோன்றுகிறது. பெண்கள் வேலைக்குப் போவதால் முதலில் நஷ்டப் படுவது , ஒரு நல்ல குடும்ப சூழல். படித்த பெண் குடும்பத் தலைவியாக மட்டும் இருந்தால் அவளுக்குக் குடும்பத்தில் அக்கறை காட்ட எந்த தடங்கலும் இருக்காது. குடும்பத் தலைவி சம்பாதிக்கப் போகும்போது பண வரவு இருந்தாலும் இழப்புகள்( INTANGIBLE.) அதிகம்தான். பொருளீட்டத் துவங்கி விட்டால் அவர்களது எண்ணப் போக்கே மாறி விடுகிறது. ஆணும் பெண்ணும் சேர்ந்து அன்னியோன்யமாய் வாழ்க்கை வாழத் தடங்கல்கள் அதிகமாகும். மணவயது வந்து விட்டால் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாமல் FINANCIALLY INDEPENDENT  என்ற மன மயக்கத்தில் அதை ஒத்திவைப்பதும் பிறகு வருத்தப் படுவதும் வாடிக்கையாகி விட்டது. உடல் ரீதியாகவும் உள்ள ரீதியாகவும் ஆணும் பெண்ணும் வித்தியாச மானவர்களே.. அதிலும் இப்போதைய NUCLEAR FAMILY  எதற்கும் உதவுவதில்லை. குடும்பத்தை தொலைக்கும் பெண்ணீய எண்ணங்கள் சரியா.?பெண்கள் வேலைக்குப் போகாத பல குடும்பங்களிலும் பெண்ணே தலைவியாக இருந்து குடும்பத்தை வழி நடத்திச் செல்வது நடப்பதுதான். நடந்ததுதான். ஒன்றைப் பெற ஒன்றை இழக்க வேண்டுமா.?


                                குழந்தைகள்.
                                ------------  


    குழந்தைகள் பற்றிய பல பதிவுகள் படிக்கிறேன். நானும் எழுதி இருக்கிறேன். பலவற்றில் அவர்களது குழந்தைமை விவரிக்கப் படுகிறது. அவர்களது உலகமே தனி. என் சின்ன வயதில் என்னை ஒரு வீரனாக கற்பனை செய்து கொண்டு, உட்காரும் மணையை குதிரையாகக் கருதி கையில் குச்சியுடன் போருக்குப் போனதெல்லாம் நினைவுக்கு வருகிறது.ஹைதராபாத் அருகே இருக்கும் கோல்கொண்டா கோட்டைக்குச் சென்றிருந்தோம்..( பல வருடங்களுக்கு முன்.) கோட்டையின் மேலிருந்து கை தட்டினால் கீழே கோட்டைக் கதவருகே நன்றாகக் கேட்கும். அங்கிருந்த நெரத்தில் உண்மை சொல்லப் போனால் குழந்தையாக மாறி நான் சரித்திர காலத்துக்கே சென்று விட்டேன்.

இன்றைக்கு என் பேரன் அவன் தாய் சமைக்கும்போது அருகில் இருந்து செய்முறைகளை கேட்கிறான். எதற்கு என்று கேட்டால், நாளை அவன் பெரிதாகும்போது அவன் மனைவி நேரத்தில் உணவு கொடுக்க வில்லை என்றால் அவனாகச் செய்து கொள்ள வேண்டுமாம்.! அவன் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள உதவுமாம்.இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் அவனிடம் நூற்றுக்கு நூறு மதிப் பெண்கள் வாங்குவாயா என்று கேட்டால், முடியாது 25/25 தான் வாங்குவேன் என்கிறான். ஒரே குழந்தை இரு வேறு தளங்களில் சிந்திப்பதைக் காணும்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவன் என்னைப் பார்த்து ஒருமுறை பொறாமையுடன் எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஜாலியாக இருக்கலாம் உன்னைப் போல் நானாவது எப்போது என்று கூறியதை ஒரு முறை பதிவிட்டிருந்தேன்.


                பதில் தெரிய வேண்டிய கேள்விகள் சில
                --------------------------------------.

சில விஷயங்களை ஆங்கிலத்தில் படித்ததை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆனால் அதை தமிழாக்கம் செய்தால் சுவை குறைந்து விடும், அல்லது எனக்கு சுவை குன்றாமல் தமிழாக்கம் செய்யத் தெரியவில்லை, என்பதனால் அவற்றை அப்படியே ஆங்கிலத்திலேயே தருகிறேன்.

1.        WHY IS ABBREVIATION  SUCH A LONG WORD.?

2      WHY IS IT THAT DOCTORS CALL WHAT THEY DO “ PRACTICE.”

3.     WHY IS THE MAN WHO INVESTS ALL YOUR MONEY CALLED THE “BROKER.”?

4.        WHY IS THE TIME OF THE DAY WITH THE SLOWEST OF TRAFFIC CALLED “THE RUSH HOUR.”?

5.        WHY DO THEY STERLISE THE NEEDLE FOR LETHAL INJECTION.?

6  YOU KNOW THAT INDESTRUCTIBLE  BLACK BOX THAT IS USED IN AEROPLANES. WHY
        
     .  DON’T THEY MAKE THE WHOLE PLANE OUT OF THAT STUFF.?

7     WHY ARE THEY CALLED THE APARTMENTS WHEN THEY ARE ALL STRUCK
  
       TOGETHER.

8.  IF FLYING IS SAFE, WHY DO THEY CALL THE AIRPORT THE TERMINAL.?

9. IF CON IS THE OPPOSITE OF PRO, IS CONGRESS THE OPPOSITE OF PROGRESS.?

                    இனி ஒரு குட்டிக் கதை,
                                   --------------------------
கண்ணில்லாத பெண் ஒருத்தி தன்னையும் வெறுத்து எல்லோரையும் வெறுத்து வந்தாள். இருந்தாலும் அவள் மேல் தனி அன்பு கொண்ட அவளது காதலனை மிகவும் விரும்பினாள். “ எனக்கு எப்படியாவது பார்வை கிடைத்தால் உன்னை மணந்து கொள்வேன் “ என்று அவனிடம் கூறினாள்..இப்படி இருக்கும்போது அவளுக்கு இரண்டு கண்கள் தானமாய்க் கிடைக்கப்பட்டு ஆப்பரேஷன் செய்யப் பட்டது. அவளது கட்டு பிரிக்கப்பட்டு அவளால் எல்லாவற்றையும் காண முடிந்தது. அவளது காதலனையும் காண முடிந்தது. அவன் அவளிடம், “இப்போதுதான் உனக்குக் கண் பார்வை வந்து விட்டதே .என்னை திருமணம் செய்து கொள்கிறாயா ?என்று கேட்டான்.

அவள் அவளது காதலனை உற்றுப் பார்த்தாள். விழியில்லாத கண்களைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தாள். அவள் அதை எதிர்பார்க்கவில்லை. காலம் முழுவதும் ஒரு பார்வை இல்லாதவனுடன் வாழ்வா என்று யோசித்தவள் அவனை மணக்க மறுத்து விட்டாள்.

பார்வையில்லாத விழிகளிருந்து கண்ணீர் வழிந்தோட அவன் சொன்னான். “உன் கண்களைக் கவனமாகப் பார்த்துக்கொள். அவை உனதாகும் முன்பாக எனதாய் இருந்தது.

இப்படித்தான் கடந்து வந்த பாதையை மறந்துபோய் பலரும் நடந்து கொள்கிறோம். வாழ்வு நமக்குக் கிடைத்த பரிசு.

பிறரைக் கடிந்து பேசுமுன். பேசவே முடியாதவரைப் பற்றி நினைக்கிறோமா.?

உணவின் சுவை பற்றிக் குறை கூறுமுன், உணவே கிடைக்காமல் கஷ்டப் படும் எளியோரைப் பற்றி நினைக்கிறோமா.?

வண்டியோட்ட வேண்டிய தூரத்தைப் பற்றிக் குறை கூறுமுன், அந்த தூரத்தை நடந்தே கடக்க வேண்டி இருப்பவர் பற்றி சிந்திக்கிறோமா.?

இதையெல்லாம் என்னை எழுத வைப்பதே நான் “ஜாக்கி மணியும் பந்தயக் குதிரையும் “ என்று பதிவிட்டபின் விஜய் டீவியில் ”நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி” என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஓரிருவரது வாழ்க்கையை அவர்கள் சொல்லக் கேட்ட பிறகு எழுந்த எண்ணமே.

வாழ்க்கை ஒரு பார்ட்டியோ கச்சேரியோ அல்ல. இருந்தாலும் நாம் இருக்கும் வரை மகிழ்வோடு நடனமாட முயல்வோம்.

                                 சில உண்மைகள்
                                 ------------------------
வாழ்க்கையில் நம் எண்ணங்களை பிறரது மனதில் பதிய வைப்பதும், பிறர் பணத்தை நம் உடைமையாக்குவதும் மிகவும் கடினம். இதில் முந்தையதில் வெற்றி பெறுபவர் ஆசான் எனப்படும் குரு. பின்னதில் வெற்றி பெறுபவர் பிஸினஸ்மேன் எனலாம். இது இரண்டிலும் வெற்றி பெறுபவரை மனைவி எனலாம். இரண்டிலுமே தோல்வியைத் தழுவுபவர் பாவம் கணவன்.
------------------------------------------------------------------------14 comments:

 1. இப்படித்தான் கடந்து வந்த பாதையை மறந்துபோய் பலரும் நடந்து கொள்கிறோம். வாழ்வு நமக்குக் கிடைத்த பரிசு.

  இந்த பதிவுப் பரிசுக்கு நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 2. இது இரண்டிலும் வெற்றி பெறுபவரை மனைவி எனலாம்.

  இரண்டிலுமே தோல்வியைத் தழுவுபவர் பாவம் கணவன்.

  நல்லது !

  ReplyDelete
 3. ரொம்பக் கேள்வி கேட்டவர்களும் அதிக சிந்தனை செய்தவர்களும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை!!!!!!!!

  ReplyDelete
 4. The argument is quite popular these days. I cannot say that I have the most appropriate solution to the issue being discussed here. But from what i have heard and what I have thought about- there are a few things I should like to share.

  The situation can never be discussed on a general platform. It is highly subjective. A certain colleague of mine, would rather like being a house-wife than leave her 2 year old daughter back home with her mom. But she is not sure if that would work since she and her husband have plans-- getting a house/daughter's schooling etc. For her, the work is a necessity. But there are girls who feel independent when they have money to spend with them. this is- very subjective. It depends upon their mind-set. While some girls may not mind being house-wife, some would feel that they are losing their freedom.

  "Economic independence" for women is an extremely important factor at times. It might not have been so, a few years back. But it is, now. Some friends who had to quit their jobs, since their husbands had "on-site" jobs, have rather depressing tales to share.

  Having been brought up by a working mom myself, i have realized how difficult it was for her to raise me. my father played a very important role here. He would get up at 4 am along with my mom and help her cook. Mornings, he would get me ready and take me to school. and evenings, mom would take care of me. i do feel at times, that may be at times i needed either of them more and they weren't around then. but in the long run, it has made me who i am today. I have absolutely no complaints about how i have turned out to be.

  Our society is transforming, sir. It would take some time to fill the gaps. This is normal now, for women to work. the 'normalcy' of this situation would take a few years to reflect in the minds of the people as well...

  ReplyDelete
 5. கடைசி வரியில வச்சீங்களே.. :)

  சுதந்திரம் என்பதைப் பல கண்ணோட்டங்களில் பார்க்கலாம். சில விட்டுக்கொடுத்துப் பகிர வேண்டியவை. financial independence (என்ன தமிழ்?) அப்படியல்ல. பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனிப் பாதுகாப்பும் சுதந்திரமும் அவசியம். குறிப்பாக, இன்னும் நூறு வருடங்களுக்குப் பெண்களுக்கு அவசியம் (இந்தியாவில், தமிழ்நாட்டில்).

  'குடும்பத் தலைவி'யாக மனைவி 'வழி நடத்திய'தெல்லாம் சும்மா கதைக்கு. எந்த நாளிலும் அப்படி நடக்கவில்லை. நானும் பாட்டனுக்குப் பாட்டன் காலத்துக் கதையெல்லாம் பார்த்து, படித்து, கேட்டுவிட்டேன். மிட்டாதார் வீட்டிலும் பெண் சமையலறை தான். படிப்பு மறுக்கப்பட்டவர் தான். பிச்சைக்காரன் வீட்டிலும் பெண் அடுப்படியில் தான். கணவனைக் கும்பிட்டு கணவன் சொற்படி நடந்து, போகிற காலத்தில் குடும்பத்தலைவியாக இருந்தாள் என்று கௌரவ ஆஸ்கர் கொடுத்து அப்படிச் சொல்வது ஆண்களின் வழக்கமாக இருந்தது, இருக்கிறது.

  இன்றைய தலைமுறை எவ்வளவோ மேல், ஆனால் இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம். இன்றைக்கு நிறைய பெண்கள் tend to balance both very effectively. அந்தத் திறமை பெண்களுக்கு மட்டுமே உண்டு என்று நம்புகிறேன். ஆண்கள் அடிப்படையில் சுயநலம் கொண்டவர்கள். கௌரவமும் பாரம்பரியமும் பெருமையும் பார்ப்பவர்கள். ஆணாதிக்கம் நம் கலாசாரத்தில் பரம்பரையாகக் கலந்து வந்திருப்பதால் மாறுவதற்கு நாளாகும். நூறு குடும்பங்களில் பெண்கள் படித்து வேலைக்குப் போனால் பத்து குடும்பங்களில் சீரழிவு ஏற்படலாம். price of change. அதற்குப் பயந்து பழைய குருடி கதையாகப் போனால் நூறு பெண்களும் பாதிக்கப்படுவார்கள்.

  ஆண்களை மிகக் கேவலமாகவும் கர்சீப் போல் பயன்படுத்திக்கொள்ளும் காதலிகளும் மனைவிகளும் இருக்கிறார்கள். big picture.. இன்னும் ஆண்கள் தான் ஆதிக்கம் செய்கிறார்கள். நூறு ஆண் CEO இருந்தால் ஒரு பெண் CEO. that is how it rolls.

  படிப்பதையும் வேலைக்குப் போவதையும் பெண்கள் நிறுத்தவே கூடாது. இந்தியா பெண்களுக்குக் கொடுத்து வந்த வருமான வரிச்சலுகையை ரத்து செய்கிறார்களாமே? முற்போக்காக ஒன்று செய்தால் பொறுக்காதே?

  abbreviation.. ரசித்தேன்.

  ReplyDelete
 6. எல்லா வாழ்க்கைகளையும் ஒரே தராசில் நிறுக்க முயன்றிருக்கிறீர்கள். எத்தனையோ விதிவிலக்குகள் விளிம்புகளில் வாழ்ந்துகொண்டிருப்பதை அறிவீர்கள். மாதங்கி மற்றும் அப்பாதுரை அவர்களின் கருத்துக்களோடு ஒத்துப்போகிறேன்.ஒரு பெண் பணிக்கு செல்வதால் உண்டாகும் இழப்புகளுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லை, ஒரு பெண் குடும்பத்தலைவியாக மட்டுமே பரிணமிப்பதால் உண்டாகும் இழப்புகள். அவரவர் தனிப்பட்ட மனநிலைகளைப் பொறுத்தே அமைகிறது குடும்ப வாழ்க்கையின் இன்பமும் துன்பமும் என்பது என் கருத்து. எனினும் இங்கு அலசப்பட்டிருக்கும் பல எண்ணங்கள் சிந்தனையைத் தூண்டுவதில் வெற்றி பெற்றிருக்கின்றன. நன்றி ஐயா.

  ReplyDelete
 7. @இராஜராஜேஸ்வரி,
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 8. @டாக்டர் கந்தசாமி,
  நான் எப்போதுமே ஒளிவு மறைவு இல்லாமல் பேசுபவன். உங்கள் கருத்தில் சொல்ல வந்தது என் சிற்றறிவுக்கு தெரியவில்லை. இருந்தாலும் படித்து ஏதோ கருத்து இட்டதற்கு நன்றி.

  ReplyDelete
 9. @ கீதமஞ்சரி
  @ மாதங்கி,
  @ அப்பாதுரை.
  நான் எழுதியதில் இதுதான் சரியென்ற தொனியில் எதுவும் எழுதவில்லை. பல அபிப்பிராயங்கள் இருக்கலாம் என்று தெரியும்.பல்வேறு கருத்துக்கள் புரிந்து கொள்ள இதுவும் ஒரு சந்தர்ப்பம். என் எண்ணங்களையும் கோடி காட்டி இருக்கிறேன் அவ்வளவுதான். வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 10. அன்புள்ள ஜிஎம்பி ஐயா...

  வணக்கம். தொடர்ந்த பணிகள். தவிரவும் ஏப்ரல இறுதிவரை இதேநிலைமைதான். என்னுடைய மகன் இறுதியாண்டு திட்டப்பணிகளுக்கென கணிப்பொறியின் இணையம் முழுக்க அவன் கையில். எனவே அவன் தருகின்ற நேரத்தில் பதிவுகளுக்கு வரவேண்டியிருக்கிறது. இதுவே எனது தாமதக் காரணம்.

  சுந்தர்ஜி பதிவைப் பார்த்துவிட்டு உங்களின் பதிவிற்கு வந்தேன். வெகு கணமான செய்தித்தொகுப்பு. முதலில் குட்டிக்கதை அருமையான கதை. மனதுக்கு இதமாக உள்ளது.

  பெண்கள் வேலைக்குச் செல்வது குறித்த தங்களின் பதிவில் நான் கொஞ்சம் முரண்படுகிறேன். இரண்டும் ஒரே தராசில் நிறுக்கப்படுவதல்ல என்பது என்னுடைய கருத்து. இதன் காரணங்கள் குறித்து இன்னொரு சந்தர்ப்பத்தில் உங்களுடன் வெகு விரிவாக விவாதிப்பேன். ஆனாலும் ஒன்று சொல்ல முடியும். இன்றைக்குப் பெண்கள் வேலைக்குச் செல்வது என்பது சூழல். ஆணாதிக்க எதிர்ப்பின் தீவிரத்தைத் தணித்துக்கொள்ள என்பது அச்சூழல்களுள் முதன்மையானது. இதற்கான சான்றுகள் நிறைய என்னிடம் உள்ளது. வீட்டுக்குள் இருப்பது என்பதில் பல பெண்களுக்கிடையில் பல முரண்கள் உள்ளன. இவற்றை வெளியில் சொல்லமுடியாத செய்திகளும் கலந்து உள்ளன குறிப்பிட்ட விழுக்காட்டில். எனவே இவை பற்றியெல்லாம் இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசுவேன்.

  அடுத்து தாங்கள் கேட்டுள்ள ஆங்கிலக் கேள்விகள் படு சுவாரஸ்யமாக உள்ளன. அவற்றுக்கான பதில்களைத் தேடித் தருவேன். அப்போது பெண்கள் தொடர்பான தங்களின் பதிவிற்கான பதிலுடன்.

  இன்றைய பொழுது உங்கள் பதிவால் நிறைவு.

  சந்திக்கலாம்.

  ReplyDelete
 11. வாய்ப்பு வாய்க்கிறவர்கள் எனது பதிவின் சிறுகதைகள் பகுதியில் உள்ள 'பெண்மை வாழ்கவென்று' சிறுகதையைப் படித்துப் பார்க்கலாம்.
  ஒரு குமுறலே வெளிப்படும்.

  பெண்கள் வேலைக்குச் செல்வதைப் பற்றிய இந்தப் பதிவின் பல கேள்விகளுக்கு அந்தச் சிறுகதையே பதிலாகப் போகும்.

  ReplyDelete
 12. @ ஹரணி ஐயா, வழக்கம்போல் உங்கள் பின்னூட்டம் கண்டதும் மகிழ்ந்தேன்.பெண்கள் வேலைக்குப் போவது சரியா இல்லையா என்பதல்ல கேள்வி. எந்த காரணத்துக்காக என்பதில்தான் சிக்கலே. மாதங்கி சொல்லி இருப்பதுபோல் அது SUBJECTIVE முடிவு. சாதக பாதகங்களை நோக்கி முடிவு இருக்க வேண்டும். பலன்களும் இழப்புகளும் சிந்திக்கப் பட்டு தேர்வு செய்ய வேண்டும். படித்த பெண்கள் எல்லோருமே வேலைக்குப் போய்த்தான் ஆகவேண்டுமா. இதுதான் சரி என்று அறுதியிட்டுக் கூறமுடியாத கேள்வி.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

  ReplyDelete
 13. @ ஜீவி சார், உங்கள் பின்னூட்டமும் கதையும் படித்தேன். உங்களது ஒரு கதையை படிக்க வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி. கீதமஞ்சரி சொல்லியுள்ளதுபோல் எல்லா வாழ்க்கைகளையும் ஒரே தராசிலா வைத்து எழுதி இருக்கிறேன்.? நான் வேலைக்குப் போவதா வேண்டாமா என்று முடிவெடுக்கும்போது ( அது அவரவர் சூழலைப் பொறுத்தது.)பலாபலன்களும் இழப்புகளும் சிந்திக்கப் பட வேண்டும் என்பதே என் கோரிக்கை. நான் கண்ட வரையில் பல குடும்பங்களில் உணர விரும்பாத இழப்புக்கள் அதிகம். கூடுதல் வரவு என்பது மட்டும்தான் லாபம். படித்துக் கருத்திட்டதற்கு நன்றி.

  ReplyDelete
 14. மன்னிக்க வேண்டும் GMB அய்யா, தொடர்கதை படிக்க கால அவகாசம் இல்லை.
  இந்தப் பதிவில் குட்டிக் கதை நெஞ்சைத் தொட்டது .
  Abreviation, Practice, Black box, Terminal------ Really good to read.

  ReplyDelete