செயல்திட்டம் -வழிகாட்டி
------------------------------------
( டாக்டர் கந்தசாமி அவர்கள் எழுதி இருந்த செயல் திட்டம் பற்றிய பதிவு படித்ததும் ,எண்ண அலைகள் பின்னோக்கிப் பாய, எழுந்தது இந்தப் பதிவு. )
திருச்சி பாரத மிகுமின் கொதிகலன் தொழிற்சாலைக்கு முதுநிலை பட்டப் படிப்பு
படிக்கிறவர்கள் பலரும், தாங்கள் செய்ய வேண்டிய ப்ராஜெக்டுக்கு வருவார்கள். அங்கு பணியிலிருக்கும் மேலதிகாரிகள் அவர்கள் படிப்புக்கான செயல் திட்டம் ( PROJECT ) கொடுத்து வழிகாட்டிகளாகவும் பணி புரிவார்கள்..MCA பட்டப் படிப்பு படிக்கும் இரு வேறு கல்லூரிகளிலிருந்து ஒரு மாணவனும் ஒரு மாணவியும் என்னிடம் அனுப்பப் பட்டனர். நான் அவர்களது ப்ராஜெக்டுக்கு வழிகாட்டியாக இருக்கக் கேட்டுக் கொள்ளப் பட்டேன். எனக்கு இது ஒரு இக்கட்டான பணியாகத் தோன்றியது. கணினியில் இன்ன பணி செய்து, இன்ன பலன் பெறலாம் என்பது எனக்குத் தெரியும்.. ஆனால் கணினி இயக்க அடிப்படை விஷய ஞானமோ, தேவைப் பட்ட மொழியறிவோ எனக்குக் கிடையாது. நான் முதலிலேயே அந்த மாணவர்களிடம் சொல்லி விட்டேன். நான் கொடுக்கும் பணியை அவர்கள் செய்ய வேண்டும். எப்படி செய்வது என்று எனக்குத் தெரியாது. ஆனால் செய்து வந்த பலன்களை (RESULTS ) எனக்குக் காண்பிக்க வேண்டும். கிடைக்கும் பலனை வைத்து, அவர்கள் செயல் திட்டம் சரியா இல்லையா என்று நான் கூறுவேன். இதனை அவர்களும் ஒப்புக் கொண்டார்கள்.
நான் இருந்த வால்வ் டிவிஷனில், உற்பத்தியாகும் ஒவ்வொரு வால்வுக்கும் தர சான்றிதழ் தரப் பட வேண்டும். அது தமிழக அரசின் BOILER INSPECTORATE இடம் ஒப்புதல் பெற வேண்டும். சுருங்கச் சொன்னால் BHEL-ம் BOILER INSPECTORATE-ம் தரும் சான்றிதழ் அது. அந்த சான்றிதழில் கொடுக்கப் பட்டுள்ள தகவல்கள், ஒரு வால்வ் செய்யத் தேவையான RAW MATERIALS- ன் உற்பத்தி முதல் வால்வாக மாறும்வரை நடத்தப் படும் எல்லா சோதனைகளையும் ஒருங்கிணைத்து இருப்பதாக இருக்க வேண்டும். வால்வ் தயாரிக்க ஏற்படும் கஷ்டங்களைவிட, சான்றிதழ் தருவது அதிக நேரம் எடுக்கும் பணியாக இருந்தது.. ஆயிரக் கணக்கான வால்வுகள், பல்வேறு அளவுகளில் பல்வெறு உபயோகத்துக்காகத் தயாரானவை ஆகும். ஆனால் ஒவ்வொரு சான்றிதழிலும் எல்லா விவரங்களும் இருக்க வேண்டும். அப்போதெல்லாம் இது ஒரு HERCULEAN TASK – ஆகும். இந்த சான்றிதழ்கள் ஒவ்வொன்றும்,எல்லா விவரங்களும் கொண்டு தனித் தனியாக, டைப் செய்யப் பட்டு கையெழுத்தாக வேண்டும்.இதை எளிமைப் படுத்த, இதற்காக BHEL-ல் இருந்த சிஸ்டம் எஞ்சினீர்களுடன் கணினி மூலம் சான்றிதழ்கள் பெற ஏற்பாடுகள் செய்திருந்தேன். அவை நடைமுறையில் புழக்கத்துக்கு வந்து கொண்டிருந்த நேரம்.
இதே பணியை MCA ப்ராஜெக்ட் வொர்க் செய்ய வந்தவருக்குக் கொடுத்து செய்யச் சொன்னேன். தேவையான விவரங்களை சேகரித்துக் கொண்டு அவர்கள் சான்றிதழ் உருவாக்கப் பணி செய்ய வேண்டும். அவர்களும் என்னென்னவோ செய்து, ( என்ன செய்வார்கள் என்று எனக்குத் தெரியாது.) பலன்களை எனக்குக் காண்பிப் பார்கள். திருப்தி ஏற்பட்டால் அடுத்து ஒருங்கிணைப்பு என்று செயல் திட்டம் நடக்கும். சரியாக வர வில்லை என்றால் மறுபடியும் செய்யச் சொல்வேன். இப்படியாக ப்ராஜெக்ட் வொர்க் வெற்றிகரமாக முடித்துப் பட்டம் பெற்றார்கள்.
இந்த செயல் திட்டம் செய்ய வந்த மாணவி ஒரு முறை சரியாக இல்லை என்று மறுமுறை செய்ய அனுப்பிய போது, அழுது , கலவரப் படுத்தி விட்டாள். அவளை சமாதானப் படுத்தி, எங்கு தவறு என்று சுட்டிக் காட்டத் தெரியாது, ,ஆனால் எதிர்பார்த்த பலன் இல்லை என்று நன்றாக விளக்கினேன் பிறகு சரி செய்து வந்தபோது நான் பாராட்டியதும், அந்தப் பெண் முகம் மலர்ந்தது என்னை மகிழச் செய்தது.
இப்படியாக நான் வழிகாட்டியாக இருந்து பட்டம் பெற்ற இருவரும், பிறகு வெளி நாட்டில் நல்ல பணியில் இருப்பதைக் கேட்டு மகிழ்ந்தது நிஜம்.
-------------------------------------------------------------------.
.
னல் நல்ல அனுபவ பதிவு வாழ்த்துகள்
பதிலளிநீக்குசொல்லிய மாதிரி தனிப் பதிவு போட்டு, என்னையும் அறிமுகப்படுத்திட்டீங்க. நன்றி. பதிவ சாவகாசமா படிச்சுட்டு தனியா கமென்ட் போடுகிறேன்.
பதிலளிநீக்குஇயக்கு நர்கள் நல்ல நடிகர்கள் இல்லைதான்
பதிலளிநீக்குஆயினும் அவர்களுக்குத் தேவையான நடிப்பை
நடிகர்களிடம் வாங்கிவிடுகிறார்களே
அது மாதிரித்தானே இதுவும்
அருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி
ரமணி சார் சொன்னதை வழி மொழிகிறேன்.
பதிலளிநீக்குமேல் அதிகாரிகளாக பணிபுரிய அனைத்தையுமே தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை. Man-managing வித்தையை தெரிந்து வைத்திருந்தாலே போதும்.
பதிலளிநீக்குகணினியை இயக்க மட்டுமே தெரிந்துக்கொண்டு என்னுடைய வங்கியின் கணினி டிவிஷனுக்கு சுமார் ஐந்து ஆண்டு காலம் தலைவராக பணியாற்றியவன் நான். எனக்குக் கீழே சுமார் 50 கணினி மென்பொருள் பொறியாளர்கள் பணியாற்றினர். கணினி மொழி ஏதும் தெரியாவிட்டாலும் எனக்கு என்ன வேண்டும் என்பது மட்டும் தெரிந்திருந்ததால் சமாளிக்க முடிந்தது!!
சிறப்பான வழிகாட்டல் த்ந்து அருமையான அனுபவப்பகிர்வுகள்..
பதிலளிநீக்குசிறப்பான அனுபவம்.....
பதிலளிநீக்கு