Tuesday, March 19, 2013

கணவன் மனைவிகள்.                                       கணவன் மனைவிகள்..
                                       ---------------------------------
பேசாமல் பெண்ணாய்ப் பிறந்திருக்கலாம், பெண்களும் மனைவியரும் மன்னிக்கவும், என்பது போன்றபதிவுகள் எழுதி இருக்கிறேன். அந்தத் தொடர்ச்சியில்  கணவன் மனைவிகள் என்று இப்போது படித்த சிலவற்றைப் பகிர்கிறேன். All in lighter vein.!  மனைவி..:-மணலில் உன் பெயர் எழுதினேன்
          கடலலையில் கரைந்து மறைந்தது.
          காற்றில் உன்பெயரை எழுதினேன்
          புயலில் அது காணாமல் போய்விட்டது.
          பிறகென் இதயத்தில் அதை எழுதினேன்
          எனக்கு இதய வலியே மிஞ்சியது. !( ஹார்ட் அட்டாக்)

கணவன்..:_ பசியில் இருந்தேன் கடவுள் பிஜ்ஜா படைத்தார்.
           தாகத்தில் இருந்தேன் கடவுள் பெப்ஸி படைத்தார்.
           இருளில் இருந்தேன் கடவுள் ஒளியைப் படைத்தார்.
           சோதனை. வேதனை ஏதுமின்றி இருந்தேன்
           கடவுள் உன்னைப் படைத்தார்.
                    --------------

கணவன்.:- மழை எல்லாவற்றையும் அழகாக்குகிறது.
           புல்லிற்கும் பூவுக்கும் புத்தொளி தருகிறது.
           மழை எல்லாவற்றையும் அழகாக்குகிறது
           உன் மேல் மட்டும் மழை ஏன் பெய்வதில்லை. 
                  ----------------  


கணவன் ஒரு குடும்பத்தின் தலைவன் என்றால்.
மனைவி என்பவள் அவனது கழுத்து.
அது திரும்பும் திசை நோக்கியே அவன் செல்வான்
                ---------------------

நரகத்தில் இருந்து ஒருவன் அவனது மனைவியை தொலை பேசியில் அழைக்க சாத்தானிடம் அனுமதி கேட்டான். பேசிமுடித்தவுடன். எவ்வளவு பணம் தர வேண்டும் என்று கேட்டான். நரகத்திலிருந்து இன்னொரு நரகத்துக்குப் பேச காசில்லை. ஃப்ரீ என்றது சாத்தான்.
                 ---------------------------

மனைவி.:- நான் ஒரு நாளிதழாக இருந்தால் எப்போதும் உன் கையில்
           இருக்கலாமே.
கணவன்.:- நானும் அதை விரும்புவேன். தினமும் புதிதாய்க் கிடைக்குமே.
                    ---------------------------
மருத்துவர்.:- உங்கள் கணவருக்கு ஓய்வும்  அமைதியும் தேவை.இதோ சில தூக்க மாத்திரைகள்.
மனைவி.:- இதை அவருக்கு எப்போது கொடுக்க வேண்டும்.?
மருத்துவர்.:- இவை அவருக்கல்ல. உங்களுக்கு
                     -----------------------

மனைவி.:- நீங்கள் எந்த அளவு முட்டாள் என்று தெரிந்து கொள்ள உங்களைத்
           திருமணம் செய்ய வேண்டி இருந்தது.
கணவன்.:- நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ளக் கேட்டபோதே  
           தெரிந்து இருக்க வேண்டுமே.
                   ----------------------------

மனைவி.:- நான் எவரெஸ்டின் உச்சியில் ஏறினால் என்ன தருவாய்.?
கணவன்..:- அங்கிருந்து ஒரே தள்ளு.
                       --------------------Husband
: Do you know the meaning of WIFE?
It means, Without Information, Fighting Everytime!
Wife
: No darling, it means - With Idiot For Ever
 
                        --------------  


 

.
 

  

                              

12 comments:

 1. இதையெல்லாம் பிரசுரிக்க வீட்ல சரின்னுட்டாங்களா ஐயா?

  ReplyDelete
 2. ஹா... ஹா... செம தாக்குதல் சார்...

  ReplyDelete
 3. தங்கள் வீட்டில் உள்ளவர்கள் உங்கள் வலைப் பூவைப் படிக்கின்றார்களா அய்யா.

  ReplyDelete

 4. @ உமேஷ் ஸ்ரீநிவாசன்.
  அவர்களிடம் படித்துக்காட்டி ஓக்கே சொன்ன பிறகே பதிவிட்டது....!

  ReplyDelete
 5. @ திண்டுக்கல் தனபாலன்.
  கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்கவில்லையே..!

  ReplyDelete
 6. @ கரந்தை ஜெயக்குமார்.
  அவர்களுக்கு தனிப்பட்ட ஆர்வம் ஏதுமொல்லை. நான் தான் சிலநேரங்களில் உட்காரவைத்துப் படித்துக் காட்டுவேன்.

  ReplyDelete
 7. சிரிக்க வைத்தீர்கள். நன்றி.

  ReplyDelete
 8. Thangal iyapukku nerethiraana padaippu enpathu thangaludan pazhakiyavarkalukkuththaan theriyum padithuch siriththen

  ReplyDelete
 9. உங்கள் நகைச்சுவை பதிவுகளைச் சொல்லி வாய்விட்டுச் சிரிக்க என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் அருகில் இல்லையே என்ற கவலை ஏற்பட்டது.

  கணவன் மனைவிகள் > தவறு.
  கணவன் – மனைவி (அல்லது) கணவனும் மனைவியும் > சரி

  ReplyDelete

 10. @ தி.தமிழ் இளங்கோ
  நீங்கள் என்ன தமிழ் வாத்தியாரா.? கணவன் மனைவியர் என்று சொல்வது வழக்கில் உள்ளது. நான் நகைச் சுவைக்காக கணவன் மனைவிகள் என்று எழுதினேன்..! என் மீசையில் மண் ஒட்டவில்லையே....

  ReplyDelete

 11. @ ரமணி
  வாருங்கள். நீண்ட இடைவெளி.!ஆங்கில எழுத்துக்கள் கருத்தில். உங்கள் பதிவுகளும் வருவதில்லை. கணினி பிரச்சனையா.?மதுரையில் உங்களுடன் இருந்த அந்த சில மணித்துளிகள். மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டன. ஒரு விதத்தில் நீங்கள் கூறுவது சரியே. நகைச்சுவை ரசிப்பேன். ஆனால் மற்றவரை நகைக்க வைக்கத் தெரியாது. நன்றி.

  ReplyDelete