Monday, November 6, 2017

நினைவடுக்குகளில் இருந்த ஒருபயணம்


                           நினைவடுக்குகளில் இருந்த ஒரு பயணம்
                        ----------------------------------------------------------------------
  1985 என்று நினைக்கிறேன்  திருச்சி பி எச் இ எல்  லில் பணியிலிருந்தேன்  இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை குடும்பத்துடன்  பயணிக்க நிறுவனமே  பயணப் போக்கு வரத்துச் செலவை ஏற்றுக் கொள்ளும்  நாங்கள்  ஒரு சுற்றுப்பயணத்துக்குத் திட்டமிட்டோம் திருச்சி கோவை உதகை மைசூர் மூகாம்பிகா பேளூர் ஹளேபீட்  பெங்களூர் திருச்சி என்று திட்டமிட்டோம் அப்போது எங்கள் வீட்டில் எங்கள் செல்லம்  செல்லியும் (பார்க்க சுட்டி)  இருந்தது சுமார் ஒரு வாரகாலம் அதை தனியே விட்டுச் செல்ல முடியாது என்பதால் அதையும் கூட்டிச்செல்லத் திட்டமிட்டோம்    ஆனால் ஹோட்டல்களில் அதை அனுமதிப்பார்களா  என்று சந்தேகம்  இருந்தது. அப்படியானால் எங்களில் ஒருவர் காரிலேயே செல்லியுடன்  தங்கிக் கொள்கிறோம்  என்று மகன்கள்சொல்ல செல்லியையும் கூட்டிப்போக முடிவெடுத்தோம்
முதலில் திருச்சியிலிருந்து கோவை சென்றோம்  கோவையில் என் நண்பரின்  மகளும்  மருமகனும் இருந்தனர்.  நண்பரின் மருமகனுக்கு நாய் என்றாலேயே ஒரு பயம்  அலர்ஜி. அன்று மாலை சேர்ந்தோம் இரவு தங்கி  காலையில் புற்ப்படத்திட்டம்  செல்லியைநன்கு கட்டிப் போட்டு அவருடைய பயத்தை ஓரளவு குறைத்தோம்  மறு நாள் விடிகாலையிலேயே நீலகிரி நோக்கிப் பயணம்   பள்ளியில் நான்  படிக்கும் போது அப்பர் கூனூரில் இருந்தோம்  என்மனைவிக்கும்  பிள்ளைகளுக்கும் நாங்கள் தங்கி இருந்த சுற்றுப் புறத்தை காட்ட முதலில் கூனூர் போனோம்   அங்கே சிம்ஸ் பார்க் அருகே வீடு  ஆனால் வீடுஇருந்த சுவடே இல்லை  ஆனால் தோராயமாக  நாங்கள் இருந்த       இடத்தை எதிரே தெரிந்த மலை முகட்டை வைத்து அடையாளம் காட்டினேன்   அந்த மலை முகட்டுக்குப் பெயர் டானரிஃப் நாங்கள் குடி இருந்த வீட்டிற்கு டானரிஃப் வியூ என்று பெயர்   கூனூரில் நான் முதன்  முதலில் பணியிலிருந்த மைசூர் லாட்ஜ்  என்னும் இடமும் கூனூர் ரயில் நிலையத்துக்கு  மேல் முகட்டில் இருந்தது அதையும் என் பிள்ளகளுக்குக் காட்டி ஊட்டி சென்றோம் அங்கே பொடானிகல் கார்டன் இடத்தில் சிறி து உட்கார்ந்து பயணத்தைத் தொடர்ந்தோம்   எப்படியும்  மாலைக்குள் மைசூர் செல்லத் திட்டம்  போகும் வழி முதுமலைக் காட்டுக்குள் போய் ஆக வேண்டும்  போகும் வழியில் சாலை நடுவே ஒரு காட்டு யானை நின்றிருந்தது  காரை சற்று தூரத்தில்நிறுத்தினார் ட்ரைவர்  எங்களுக்கு செல்லி அசம்பாவிதமாகக் குரைத்து யானையின் கவனத்தை  ஈர்ப்பாளோ என்ற பயம் ஆனால் செல்லி எங்கள் கால்களுக்கடியே நல்ல தூக்கத்தில் இருந்தது  முதன் முதலில் இம்மாதிரிப் பயணம் அதற்கும்   புதிது ஒரு மாதிரி அனீசியாகவே இருந்தது மைசூர் போகும்  வழியில் நஞ்சன்கோடு இருந்தது கோவிலை வெளியே இருந்தே பார்த்துபயணம்  தொடர்ந்தோம்   மைசூர் சென்று ஒரு ஹோட்டலில் அறை எடுத்தோம்   செல்லி இருப்பதைச் சொல்லவில்லை  நாயும் பவ்யமாக இருந்து இருப்பைக் காட்டிக் கொள்ளவில்லை  அறைக்குச் சென்ற்தும்  எல்லா மூலைகளையும் மோப்பம் பார்த்து வந்துஓரிடத்தைல் செட்டில் ஆகியது மறு நாள் ஹோட்டலைக் காலி செய்து பயணம் புறப்பட்டோம்  நாங்கள்சாமுண்டீஸ்வரி கோவிலுக்குச் சென்றோம்  செல்லி காரிலேயே என் மகன் ஒருவனுடனிருந்தது  பிறகு மைசூரின் பிரதான இடமாகிய பேலசுக்குச்சென்றோம்   வெளியில் இருந்தே பார்த்து கிளம்பினோம் அங்கிருந்து மூகாம்பிகை கோவிலுக்குப்போனோம்   அங்கும்  விடுதியில் செல்லியை யாரும் கண்டு கொள்ள வில்லை 
அப்போதெல்லாம் ஒரு இடத்துக்குச்சென்றால் ஈடுபாடு எதுவும் இருந்ததில்லை எதையும் கவனித்துப்பார்த்ததுமில்லை கோவில் என்பதே போவது ஒரு மாற்றத்துக்காகத்தான்  என் மனைவிக்காகத்தான் அன்கிருந்து பேளூர் ஹளேபேட்  என்னும் இடத்துக்கும் சென்றோம்  மழை பெய்ஹு கொண்டிருந்த நினைவு இரவு வேளை சாலையில் எங்கள் கார் தவிர வேறேது மில்லை.  திடீரென்று ட்ரைவர் ப்ரேக் போட்டுக்காரை நிறுத்தினார்  ஏன்  என்று கேட்டதற்கு வழியில் ரோடில் ஒரு பாம்பு சென்றதாகவும்  அதன் மேல் காரை ஏற்றாமல் இருக்க நிறுத்தியதாகவும் கூறினார்  கார் பாம்பி மேல் ஏறினால் ட்ரைவருக்கு ஆபத்து என்னும் எண்ணத்துடன் இருந்தார்  சாலையில் பாம்பு  ஏதுமில்லை என்று உறுதி செய்து கொண்டபின்  பயணம் தொடர்ந்தது  இதன் நடுவே என் இளைய மகனுக்கு நல்ல சுரம்  இருந்தது  விந்திய கிரி என்னும் இடத்தில் கோமடேஸ்வரரின் மிகப்பெரிய சிலை இருந்தது. நானும் என்  மூத்தமகனும் மலை ஏறிப் போனோம் கீழே என் மனைவி என் இளையமகன்  கார் ட்ரைவர் மற்றும் செல்லி இருந்தனர்  சிலையைப் பார்த்துவரும்போது எங்கள்காரைச் சுற்றி ஒரே கூட்டம் என்னவென்று வந்து பார்த்தால் பலரும் எங்கள் நாய் செல்லியைப்பார்க்கக் கூடி இருந்தனர் பலருக்கும் அது நாயா கரடியா என்னும் சந்தேகம்  நாய் என்று சொன்னாலும் நம்பாமல் அதை குரைக்கச்சொல்லிக் கேட்டனர் ஒரு வழியாக அவர்களிடம் இருந்துதப்பித்துப் போனோம்  பேளூர் ஹளேபேட் போன்ற இடங்களில் சிற்பக் கலையின்  உச்சத்தைக் கண்டோம்  இன்றுபோல் இருந்திருந்தால்  எத்தனையோ செய்திகள் சேகரித்து இருப்பேன்   பிறகு அங்கிருந்து நேராகபெங்களூரில் என் மாமியார் வீட்டுக்குப் பயணித்தோம்பெங்களூரில் நல்ல வரவேற்பு  முடிந்து மறு படியும் திருச்சி நோக்கிப் பயணம்   பயணம்  முடிந்து போகும் போது ட்ரைவர் செல்லியின்  கால் நகங்களால்  காரின்  கதவுப் பகுதியில் நிறையவே ஸ்க்ராட்ச் ஆகி யிருப்பதை காட்டினார்  ஒரு வழியாக அவரை சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தோம் வெறும் நிகழ்வுகளை நினைவில் இருந்து மீட்டெடுத்தபதிவு இது எனக்கே ஏதோ டாகுமெண்டரி படம்பார்த்துச் சொன்னது போல் இருக்கிறது  பழைய படங்களை டிஜிடைஸ் செய்து பதிவிட்டிருக்கிறேன் 
எங்கள் செல்லம் செல்லி 

அப்பர் குனூரில் டானெரிஃப் மலை பின்னணியில் 
 
குனூரில் நான் பணியில் இருந்த இடமருகே
  
உதகை பொடானிகல் கார்டெனில்
  
மைசூர் பாலஸ் முன்னால் 
,
மூகாம்பிகை கோவில் முன் 

           
பேளூர் ஒரு காட்சி 

பேளூர் இன்னொரு காட்சி 
 
ஹளே பேடு  சிற்பங்கள் 

ஷ்ரவனபலெகொளா  கோமடேஸ்வரர் 


பெங்களூரில் 

    ,
           

.  



 




46 comments:

  1. நானும் தங்களுடன் பயணித்தது போல் இருக்கின்றது...

    தங்கள் கைவண்ணம் அருமை..

    ReplyDelete
    Replies
    1. அந்தக்காலப் பயணங்களை நான் அதிகம் பயன்படுத்தவில்லையோ என்பது சந்தேகமாக இருக்கிறது

      Delete
  2. தங்கள் வலைப்பதிவை இளைஞர் ஒருவரிடம் காட்டினேன். நன்றாக எழுதக்கூடியவர், இப்படி அரதப் பழசான விஷயங்களை அடிக்கடி எழுதி உங்களை இன்னும் வயதானவராக்கி விடுவதில் இன்பம் காண்கிறாரே, சரியா என்று கேள்வி எழுப்பினார். நான் உங்கள் மீது அன்பு மிகக் கொண்டவன். உங்களை ஒருவர் குறை சொல்லிவிட்டால் எனக்குப் பொறுப்பதில்லை.

    -இராய செல்லப்பா சென்னையில் இருந்து

    ReplyDelete
    Replies
    1. அரதப் பழசான நினைவுகளே அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாக இருக்கிறது உங்கள் நண்பரிடம் கூறுங்கள் சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்

      Delete
  3. இனிய நினைவுகள். எங்கள் வீட்டிலும் செல்லி போன்ற தோற்றமுடைய ஒரு வளர்ப்புப் பிராணி இருந்ததாகவும், என்னைப் பிரசவிக்க என் தாயார் கிளம்பிச் செல்ல சற்று நேரத்துக்கு முன் அது மரணித்ததாகவும் சொல்லக் கேள்வி.

    ReplyDelete
    Replies
    1. என் செல்லம் மரணித்ததுக்கதிலிருந்து மீள என்
      இளையமகனுக்கு நாட்கள் ஆயிற்று

      Delete
  4. இனிய நினைவுகள். படங்களும் நன்றாக இருந்தன. உங்கள் செல்லி கொஞ்சம் கொஞ்சம் எங்கள் மோதியை நினைவூட்டியது!

    ReplyDelete
    Replies
    1. அந்தக் காலத்தில் காமிராவில் எடுத்தது இப்போது வலைக்காக டிஜிடைஸ் செய்தது செல்லியைப் பற்றி ஒரு பதிவே சுட்டியில் கொடுத்திருக்கிறேன்

      Delete
  5. போகும் இடமெல்லாம், நீங்கள் உங்கள் செல்லப் பிராணியையும் அழைத்துச் சென்றது என்பது ஒரு பெரிய ‘ரிஸ்க்’ தான்.

    ReplyDelete
    Replies
    1. அப்போது எதுவும் தெரியவில்லை தங்குமிடம்பற்றிய கவலைமட்டும்தான் இருந்தது

      Delete
  6. பயண அனுபவம் ரசிக்கும்படி இருந்தது. முன்னமேயே தெரிந்திருந்தால் பயண அனுபவங்களை எழுதி வைத்திருப்பீர்கள். 85களில் elephant பெல்பாட்டம் இருந்ததா?

    கோமடீஸ்வரர் இன்னும் பெரியதாக இருப்பார் என்று நினைத்தேன். எப்படி ஒரு புகைப்படத்தில் அடக்கமுடிந்தது (பையனையும் சேர்த்து?)

    ReplyDelete
    Replies
    1. ஹாஅ ஹா ஹா பெல்ப்பொட்டம்:) அதைத்தான் நானும் நினைச்சேன்:).. படங்களில் பார்ப்பதைப்போல இருக்கு..

      Delete
    2. நான் ஏழாவது படித்துக்கொண்டிருந்தபோது, எங்கள் பள்ளியில் கன்னட நடிகர் ராஜ்குமார் சொந்தக்காரனும் படித்துக்கொண்டிருந்தான். அவன் எலெபென்ட் பெல்பாட்டம் அணிந்து வருவான். (பெல்பாட்டம்னாலே பேன்ட் கீழ பெரிதாக இருக்கும். எலெபென்ட் பெல்பாட்டம்னா, 1 1/2 அடிக்கு கீழ்ப்பக்கம் அகலம்)

      Delete
    3. எலிஃபண்ட் பெல்பாட்டம் பெயர் நன்றாக இருக்கிறதே

      Delete
  7. ரசனையான அனுபவங்கள். நாலுகால் எல்லாத்தையும் கூடவே அழித்துச் சென்று வந்தது த்ரில்தான். புகைப்படங்கள் ரசிக்க வைத்தன.

    ReplyDelete
    Replies
    1. //நாலுகால் எல்லாத்தையும் //

      கூகிள் நறநற... நாலுகால் செல்லத்தையும் என்று படிக்கவும்.

      Delete
  8. தங்களின் நீண்ட பயணத்தில்,தங்களின் செல்லப் பிராணினையும் அழைத்துச் சென்றது மனம் கவர்ந்தது ஐயா

    ReplyDelete
  9. வாவ்!! இனிமையான பயண அனுபவம் சார். செல்லியையும் அழைத்து சென்றது நம்ம ஊரை பொறுத்தவரை மிக பெரிய விஷயம் ..
    இங்கே வெளிநாடுகளில் pet friendly ஹோட்டேல்ஸ் தனியாவே இருக்கு பூனை நாலுகால் செல்லங்களை நம்முடன் கூட்டிட்டு போகலாம் அங்கேயே தங்கலாம் ..

    இப்படி நினைவுகளை பகிர்வதும் தனி சந்தோஷமே

    ReplyDelete
  10. எனது குன்னூர் நினைவுகளையும் மீட்டி விட்டீர்கள். நான் மேல் குன்னூரில் ஹோட்டல் ரிட்ஸ்க்கு அருகில் ஒரு மலையாளத்துக்காரரின் சிறிய விடுதியில் தங்கியிருந்தேன்.
    இரண்டு நண்பர்கள் ஷேரிங் அறை. ரூம் என்றால் கட்டில், மெத்தை, குளிர் தாங்கும் போர்வைகள் மட்டும் தான். சாப்பாடும் அந்த மலையாளத்துக்காரரின் ஓட்டலில் தான்.
    கொஞ்ச நேரம் அந்த நினைவுகளில் ஆழ்ந்து இருந்தேன்.

    நீங்கள் அணிந்திருக்கும் அந்தக் கால பைஜாமா போன்ற குதிகால் பகுதியில் அகண்ட பேண்ட் பிரமாதம்.

    ReplyDelete
  11. மிக அருமையான இளமை நினைவுகள்... படங்களைக்கூட சேமித்து வைத்திருக்கிறீங்கள் நல்ல விசயம்.

    அப்போ உங்களுக்கு மீசை இல்லையே ஐயா:)..

    ReplyDelete
  12. பெல்பாட்டம் அதிகம் ரசித்தேன். நாங்கள் கல்லூரியில் படிக்கும் காலகட்டத்தில்கூட (1970களின் இறுதி)பெல்பாட்டம் இருந்தது. படிக்கும்போது உடன் பயணிக்கும் உணர்வு ஏற்பட்டது. நீங்கள் கூறியுள்ள இடங்களில் மூகாம்பிகை கோயில் மட்டும் நாங்கள் போகாதது. மூகாம்பிகையைக் காணும் நாளுக்காகக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  13. நினைவுகள் ஒரு சங்கீதம்.
    ஃப்ரம் செல்.

    ReplyDelete
  14. நெத பெல்பாட்டம் அப்போதைய ஃபாஷன் படங்களை கூர்ந்து கவனிக்கிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. அப்பாவி அதிரா படங்களில் தான் பார்த்தீர்கள் ஹஹஹ ...!

      Delete
  15. ஸ்ரீராம் திருத்தியும் சரியாகவில்லையே நாலுகால் எல்லாத்தையும் அல்ல ஒன்று மட்டும்தான்

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் அழித்துச் செல்ல வில்லை அழைத்துச் சென்றோம்

      Delete
    2. கரந்தைஜெயக்குமார் வேறு வழி இருக்கவில்லை சார்

      Delete
    3. ஏஞ்செலின் செல்லியைப் பற்றிய பதிவை சுட்டியில்படித்தீர்களா கனிவான கருத்துரைக்கு நன்றி மேம்

      Delete
    4. ஜீவி ஒன்றிலிருந்து இன்னொன்று என்பதுசரியே உங்கள் நினைவுகளை மீட்டெடுப்பதற்கு உதவியதில் மகிழ்ச்சி சார்

      Delete
    5. அப்பாவி அதிரா இந்த மீசைக்கு ஒரு பின்னணி உண்டு என்மூத்தமகன் திருமண வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தபோது என்னை பார்த்து எனக்கே பாவம் என்று தோன்றியது பிறகு சீது காலத்துக்குப் பின் மீசை வளர்க்கத் தொடங்கி விட்டேன் பழைய படங்கள் நிறையவே இருக்கிறது பின்னணிதான் சரியாகநினைவுக்கு வருவதில்லை

      Delete
    6. பல இடங்களுக்கும் சென்று வந்திருக்கிறேன் எல்லாம் நினைவுக்கு வருவதில்லை மூகாம்பிகை கோவிலுக்கே மூன்றுமுறைக்கும் மேல் சென்றிருக்கிறேன்

      Delete
    7. கில்லர்ஜி நினைவுகள் சங்கீதம் அபஸ்வர சங்கீதமும் உண்டு அவற்றை வெளியிடுவதாக இல்லை

      Delete
  16. பேளூர், ஹலபேடு, போனோம் என்றெழுதியதில் இருந்து பேளூர் போயிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. ஒரு படமும் காட்டப்படுகிறது. ஆனால் பேளூரைப்பற்றி ஒன்றுமே எழுதவில்லை. அதன் தாக்கம் உங்கள் மீதில்லை போலும்.

    பேளூர் சென்னக் கேசவா கோயில் பார்க்கவில்லையா? ஹசால்ய மன்னனின் கட்டடக்கலைக்கு புகழ்பெற்ற எடுத்துக்காட்டு. ஹலபீடையும் அவந்தான் கட்டினான். இராமானுஜரால் வைணவனாக மாற்றப்பட்டு அவரின் விண்ணப்பதை ஏற்ற் அவன் கட்டிய கோயிலது. உள்ளே சென்றால் ஆண்டாளுக்கும் பேயாழ்வாருக்கும் சன்னதிகளைத்ட் தொடக்கத்திலேயே பார்க்கலாம். Just google image Chennakesava temple Belur and see for yourself its glorious beauty.

    ReplyDelete
    Replies
    1. அந்தக்காலத்தில் ஒரு உருக்குப் போய் வருவதுதான் முக்கியமாகப்பட்டது வேறு விஷயங்களில் மனம் செல்லவில்லை என்பதே உண்மை

      Delete
    2. உங்களைப் பற்றிய செய்திகளைத் தெரிந்து கொள்ள முடியவில்லையே

      Delete
  17. கால இயந்திரத்தில் எங்களை ஏற்றிக்சென்று தங்களின் பயணத்தில் பங்குகொள்ள செய்தமைக்கு நன்றி! பழைய படங்களை பாதுகாத்து வைத்திருப்பது அறிந்து மகிழ்ச்சி. நானும் தங்களைப்போலவே பழைய படங்களை பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பழைய படங்கள் பல முறை பதிவிட வைக்க உதவுகிறது தேதி வாரியாகச் சேகரிக்க ஆரம்பித்தது 1993க் க்கு பின்தான்

      Delete
  18. இனிமையான பொக்கிஷமான நினைவுகள் ஸார். ஃபோட்டோக்களை இத்தனை வருடம் சேமித்து வைத்தது பெரிய விஷயம் ஸார். உங்கள் ஆர்வம் தெரிகிறது.

    செல்லி செல்லத்தையும் அழைத்துச் சென்றது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது ஸார். அதுவும் நம்மூரில் சமாளித்திருக்கிறீர்களே!! உங்கள் எல்லோரையும் பாராட்டணும். யானைக்கால் பெல்பாட்டாம் ரொம்ப நல்லாருக்கு ஸார்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. செல்லி பற்றிய பதிவைப் படித்தீர்களா சுட்டி கொடுத்திருக்கிறேனே வருகைக்கு நன்றி கீதா

      Delete
  19. அந்த செல்வியை நான் பார்த்திருக்கிறேன். அதற்கு வால் கிடையாது. எங்களுக்கு திருமணமான புதிதில் உங்கள் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்திருந்த பொழுது பார்த்தேன். பெண்கள் இல்லாத வீட்டில் அதுதான் (அவள்தான்) பெண் அதனால்தான் செல்லி என்றீர்கள். எங்களைச் பார்த்து குறைக்கவில்லை. சமர்த்தாக காலடியில் படுத்துக் கொண்டது.

    ReplyDelete
    Replies
    1. பெணில்லாத வீட்டில் பெண்மாதிரி மட்டுமல்ல என்மனைவியின் மாமியார் என்றும் கூறு வாள் தனிப் பதிவே எழுதி இருக்கிறேன்

      Delete
  20. அருமையான நினைவலைகள்.
    பழைய படங்களுடன் பகிர்வு அருமை.
    இங்கு வெளிநாட்டில் தங்கள் செல்லங்களுடன் தான் பயணம் செய்கிறார்கள். அதற்கும் வித விதமாய் அலங்காரம் செய்து அழைத்து வருகிறார்கள்.

    ReplyDelete
  21. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மேம்

    ReplyDelete
  22. படங்களுடன் பயணக் குறிப்புகள் அருமை. நினைவு கூர்ந்து எழுதியிருக்கிறீர்கள். “நாயா கரடியா..” சுவாரஸ்யமான சம்பவமே.

    பேளூர், ஹளிபேடு நானும் சென்றிருக்கிறேன். வியக்க வைக்கும் சிற்பங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி மேம்

      Delete
  23. நினைவலைகளில் நாங்களும் மூழ்கினோம். செல்லபிராணிகளின் மேல் நாம் வைக்கும் பிரியம் அலாதியானது. குடும்பத்தின் ஒரு அங்கமெனவே இருப்பவை. பேலூர் புகைப்படமும், அக்கால உடைகளும் சுவராஸ்யமானவை. Also very happy to see your younger son's childhood pics

    ReplyDelete