Sunday, June 17, 2018

இப்பூவுலகே எனக்கன்றோ




                                      இப்பூவுலகே எனக்கன்றோ
                                -------------------------------------------------

இப்பூவுலகே எனக்கன்றோ
------------------------------------

               பேரூந்து ஒன்றில் பயணம் செய்தேன்
               பேரழகி ஒருத்தியைப் பக்கத்தில் பார்த்தேன்.
               என்ன  அழகு இவள்,நானேன் இல்லை அவள் போல்
               எண்ணி மருகிய என் கவனம் சிதறியது.
               நிறுத்தத்தில் அவள் இறங்க எழுந்தவள்
               தடுமாறி கீழே விழப் போனவளைக் 
               கை தூக்கிப்பிடித்து நிறுத்தினேன்.
               புன்னகைத்து நன்றி சொன்னவள் செல்கையில் 
               கவனித்தேன் அவளுக்குக் கால் ஒன்று கட்டை என்று.
ஆண்டவனே, நான் குறைப் படுகையில் 
என்னை மன்னித்து விடு
எனக்கிருக்கிறது நல்ல இரு கால்கள்

              மென்று சுவைக்க மிட்டாய் வாங்க 
              பெட்டிக்கடைப் பக்கம் சென்றேன்.
              மலர்ந்து சிரித்த சிறுவனுடன் சிறிது நேரம்,
              பேசிச்செல்ல மனம் மிக  விழைந்தது.
              தாமதமானாலும் பாதகமில்லை, பேச்சுக்கொடுத்தேன்.
              காசு கொடுத்துப் போகையிலே, அதனைத் 
              தடவிப் பார்த்த பையன் நன்றி சொன்னான்
              கண்ணில்லா அவனிடம் அன்பாய்ப் பேசியதற்கு.
ஆண்டவனே நான் குறைப்படுகையிலே
என்னை மன்னித்து விடு
எனக்கிருக்கிறது காண நல்ல இரு கண்கள்.

             தெரு ஓரத்தில் ஆடிக்கொண்டிருந்த
             சிறுவர்கள் மத்தியில் ,பார்த்துப் பரவசமாகி
             நிற்கும் நானறிந்த சிறுவனிடம்  அவன் ஏன் 
            ஆடப் போகவில்லை என்றே கேட்டேன்
            மலங்க விழித்த அவனுக்கு, காதிரண்டும்
            கேளாது என்பதனை  மறந்து விட்ட நான்
ஆண்டவனே நான் குறைப்படுகையிலே
என்னை மன்னித்துவிடு.
எனக்கிருக்கிறது நல்ல இரு கேட்கும் காதுகள்



            ங்கும்  என்னை நடத்திச் செல்ல நல்ல 

            இரு கால்களும்,
           அழகான அஸ்தமனத்தில் ஆதவனை ரசிக்க
            இரு கண்களும்,
            என்னைச் சுற்றி நடப்பதைக் கிரகிக்க நல்ல 
            இரு காதுகளும்
            இருக்கையிலே குறைப்படுதல் தவறன்றோ...
            இந்த உலகையே ரசிக்க வைக்க
           எல்லாப் புலன்களும் எனக்கிருக்க 
            இந்தப் பூவுலகே எனக்கன்றோ.!
============================================
  
(ஏழு ஆண்டுகளுக்கு முன்  எழுதியது)




இந்தப் பாட்டும்  என் நினைவில் ஓடும்  நல்ல வேளை பாட்டும்காணொளியும்  கிடைத்தது யாருக்காவது இப்ப்பாடல் கேட்ட நினைவிருக்கிறதா

பாடல் வரிகள்
பல்லவி:    சிந்தை அறிந்து வாடி செல்வக் குமரன்
செந்தூர் இடம் தங்கும் பொன் தாள் மலர் கந்தன்         (சிந்தை)

அப :  அந்தோ என் ஆசை எல்லாம் கொள்ளை கொண்டானே
ஆறுமுக வடிவேலன் ஸிவபாலன்                                   (சிந்தை)

ஹரிகாம்போஜி
  1அன்று வந்து போனது அவர்க்கு நினைவில்லையோ
ஆரிட்ட போதனையோ அன்புமனம் வல்லையோ
ஒன்றுபட்டிருந்த உறுதி மனம் இல்லையோ
உத்தேசம் தான் என்ன சித்தன் மகன் குஹன்                  (சிந்தை)

ஸுரடி
 2: சின்னஞ் சிறு வயதில் என்னை மாலை இட்டானே
சிரிக்கச் சிரிக்கப் பேசி என் கைவளை தொட்டானே
அன்னம் பாலும் வெறுக்க அவனியில் கைவிட்டானே
அடிமைப் பெண்டீரென்றே முடிய மறந்திட்டானே          (சிந்தை)

காபி
3: கட்டி தொட்டுமே இதழ்க் கனி அமுதம் பொழிந்தான்
கலவி மதனைப் போலே குலவி முத்தம் கொடுத்தான்
எட்டுக்குடி வேலவன் இசை அமுதம் படித்தான்
என்றும் பிரியேன் என்று என் கைமேல் அடித்தான்            (சிந்தை)
                      தந்தையர் தினநினைவுகள் 
                      --------------------------------------------     

             ஆடிவரும் மைந்தன் ஓடிவரக் கண்டு 
              ஓடிவந்தால் வீழ்ந்து விடுவாய் -காயம் படும் 
              கவனம் கவனம் என்றே பதறினாள் 
              ஒன்றே நன்றெனப் பெற்றெடுத்த  தாய்

இன்று நான் பள்ளியில் பந்தயத்தில் 
வென்ற நாள் நானே முதல்வன்நானே முதல்வன் 
எனை வெல்ல இங்கு யாருமில்லை என் வேகம் அதிவேகம்.
அப்பாஉன்னையும் நான் வெல்வேன் 
பந்தயத்தில் என்னோடு  ஓட நீ தயாரா.?
என்றே கேட்ட மகனிடம்

              ஆறு வயதுச் சிறுவன் நீ ஒன்றும் அறியாத பாலகன் 
               உன்னோடு நான் ஓடினால் நானொன்றும் அறியாதவன் 
              என்றென்னைப் பழிப்பார்கள் நானில்லை ஓடுவதற்கு 
               என்னிடம் நீ தோல்வி காண விருப்பமில்லை எனக்கு 
               என்றே அப்பனும் மழுப்பிடஒப்புக்கொள் உன்னால் ஓடமுடியாது
ஓட்டத்தில் என்னை வெல்ல முடியாது என்றே
தன கீர்த்தி நிலை நிறுத்த சவாலுக்கு அழைத்தான் மகன்.

              மகனை ஓட்டத்தில் வெல்ல விட மகிழ்ச்சிதான்
              இருந்தாலும் வாழ்க்கைப் பந்தயத்தில் பங்கு பெற
              இதையும் ஒரு பயிற்சியாகக முயற்சிப்போமே
              என்றே மகனைப் பெற்றவனும் முனைந்து வந்தான்.

ஒடுகளமும் தூரமும் ஒழுங்காக நிர்ணயிக்கப்பட 
ஓட்டமும் துவங்க இலக்கு நோக்கி முன்னேறினான் தந்தை
அப்பனை முந்தவிட்டால் நாம் தோற்போம் ,அது 
நடக்கக் கூடாது என்றே வேகமெடுத்தான் சின்னவன்
அன்னவனை சற்றே முந்தவிட்டும் பின் தான் முந்தியும்
பந்தய நுணுக்கங்கள் நன்றாய் புரிய விட்டபின்
மகனை வெல்ல விட்டான் ,மகனின் வெற்றியில் 
மனம் மகிழ்ந்து தோற்று நின்றான் தந்தை

             என்னை வெல்ல இங்கு யாராலும் முடியாது
             நானே முதல்வன், நானே முதல்வன் என்றே 
             முழங்கி ஓடிய மகனைப் பரிவுடன் கண்ட தந்தை 
             தன்னையும் அறியாமல் தன தந்தையை எண்ணினான்

இதுபோல் தானே அன்றொரு நாள் என்
தந்தை என்னை ஓடவிட்டு தன தோல்வியில்
மகிழ்ந்தபோது நானும் எண்ணினேன்.
தோல்வி கண்டு துவளாது வெற்றியைத் துரத்த
என்னை முந்தவிட்டு ஊக்குவித்த தந்தையின்
அன்பும் நேசமும் அன்று அறிந்திலேன் இன்று
உணர்கிறேன் என்று எண்ணவும் அவன் இதழ்களில் 
விரிகிறது ஒரு முறுவல்
  









40 comments:

  1. உங்களின் இறைவனுக்கு நன்றி சொல்லும் கவிதை அருமை ஐயா.

    புதிய பாடலை பழைய பாடலுடன் இணைத்து உல்டா செய்வதற்கு தேடிய காலங்களில் இந்த பாடலை கேட்டு இருக்கிறேன்.

    தந்தையர் தினத்துக்கான கடைசி பகிர்வு ஸூப்பர் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. அது நான் இப்படி இருக்க சொல்லும்நன்றி ஜி இந்தப் படம்வந்தபோது நீங்கள் பிறந்திருக்க மாட்டீர்கள் என்று தோன்றுகிறது தந்தையர் தினக் கவிதை ஒரு உண்மை நிகழ்வு வருகைக்கு நன்றி ஜி

      Delete
    2. ஐயா நான் டூட்டியூப்பில் இப்படி பாடல்களை தேடிக் கேட்பேன். பெரும்பாலும் நான் பழம்பெரும் பாடகர்களின் ரசிகனே...

      அதாவது நான் பிறக்கும் முன்பே இறந்த பாடகர்களும் உண்டு.

      Delete
    3. சில பாடல் வரிகள் நினைவில் ஓடும் ஊடகங்களில் தேடியும் கிடைப்பது அரிதாய் இருக்கிறது அப்படி ஓடும் வரிகளில் இதுவுமொன்று “மனமே நீ ஈசன்நாமத்தை வாழ்த்துவாய் தினம்வாழ்த்துவாய் “

      Delete
  2. பாட்டு இப்போத் தான் கேட்கிறேன். காட்சியும் முதல் முறையாகப் பார்க்கிறேன். என்ன படம்? ச்ரீவள்ளி? மற்றபடி உங்கள் நன்றி நவிலும் கவிதை நன்றாக இருக்கிறது. உண்மையும் அது தானே!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கணினியில் ஸ்ரீ என்று தட்டச்சு செய்ய முடியாதா அவ்வப்போது நினைவிலாடும் பாட்டு நம்மை விட தாழ்ந்து இருப்பவரை நினைக்கும்போது தோன்றிய வரிகள்

      Delete
  3. தந்தை பற்றிய நினைவு கூர்தலும் நன்று.

    ReplyDelete
    Replies
    1. தந்தை பற்றிய எழுத்துகள் உண்மை நிகழ்வின் பேரில் எழுதியது வருகைக்கு நன்றி மேம்

      Delete
  4. கடவுளுக்கு நன்றி சொல்லும் கவிதை சிறப்பு.

    வள்ளி படப் பாடல் கேட்டதில்லை.

    ReplyDelete
    Replies
    1. பாட்டு கேட்டிருக்கும் வாய்ப்புகள் குறைவு என்பதுஎன் அனுமானம்

      Delete
  5. ஏழு ஆண்டுகளுக்கு முன் எழுதிய கவிதை அருமை.

    ஸ்ரீவள்ளி படம் ருக்மணி( நடிகை லட்சுமியின் அம்மா) பழைய படம் தொலைக்காட்சியில் போடும் போது பார்த்து இருக்கிறேன்.

    //இதுபோல் தானே அன்றொரு நாள் என்
    தந்தை என்னை ஓடவிட்டு தன தோல்வியில்
    மகிழ்ந்தபோது நானும் எண்ணினேன்.
    தோல்வி கண்டு துவளாது வெற்றியைத் துரத்த
    என்னை முந்தவிட்டு ஊக்குவித்த தந்தையின்
    அன்பும் நேசமும் அன்று அறிந்திலேன் இன்று
    உணர்கிறேன் என்று எண்ணவும் அவன் இதழ்களில்
    விரிகிறது ஒரு முறுவல்,//

    நன்றாக இருக்கிறது.
    தந்தையர் தின வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி மேம்

      Delete
  6. அரிதரிது மானிடர் ஆதல் அரிதுமானிடர் ஆயினும் கூன்குருடு செவிடுபேடு நீங்கிப் பிறத்தல் அரிது

    அவ்வை சொன்னதுதானே... அது நினைவுக்கு வருகிறது. கவிதை நன்றாக எழுதுகிறீர்கள்..

    அந்தப் பாடல் கேட்டதில்லை...

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி ஸ்ரீ பழைய பாடல்களை தேடிப்போடும்நீங்கள் கேட்டிருக்கலாம் என்று தோன்றியது

      Delete
    2. ///பேடு நீங்கிப் பிறத்தல் அரிது//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது ஒளவைப் பாட்டி ஏதோ யோசனையில் அப்படிச் சொல்லிட்டா என்பதற்காக ஓவராத் துள்ளக்கூடா:)) ஹா ஹா ஹா:))

      Delete
    3. ஒரு சாதாரண வலைப் பதிவர் சொல்கிறார் என்பதை விட ஔவையாரோ கண்ணதாசனோ கூறினால் மதிப்பு கூடுதல் ஆள் விலை கல் விலை என்று சொல்வார்கள்

      Delete
  7. அருமையான உள்ளக் கருத்துகள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்

      Delete
  8. அருமையான கவிதை ஐயா
    உடல் நலக்குறைவு காரணமாக சில நாட்கள் பதிவுகளைப் பார்க்க இயலா நிலை,
    இனி தொடர்வேன் ஐயா

    ReplyDelete
    Replies
    1. வருபவர்கள் வராவிட்டால் ஏன் என்னும்கேள்வி எழுவது சகஜந்தானே

      Delete
  9. கவிதை சிறப்பு...

    காணொளி பாடல் கேட்டுள்ளேன் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. காணொளியும் பாடலும் நிறைய சிரமத்துக்கு பின் கிடைத்தவை

      Delete
  10. இந்தப் பாடலைக் கேட்டதில்லை. இன்று முதன் முதலாக்க் கேட்டேன். அருமையாய் இருந்தது.

    இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ - உங்கள் கவிதை வழி சொல்கிறது. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. இப்போதெல்லாம் அவ்வப்போதுதான் தலை காட்டுகிறீர்கள் வருகைக்கு நன்றி சார்

      Delete
    2. இல்லை சார். எல்லா இடுகைகளையும் படித்துவிடுவேன். கடந்த இரண்டு இடுகைகளுக்கு பொருத்தமான பதில் தோன்றாததால் எழுதியிருக்கமாட்டேன்.

      Delete
    3. இடுக்ககளுக்கு பொருத்தமாய் பின்னூட்டம் எத்தனைபேர் அப்படி யோசிக்கிறார்கள் நன்றி சார்

      Delete
  11. ஏழு ஆண்டுகளுக்கு முன் எழுதியது இப்பொழுதும் பொருந்தி வருகிறது ஐயா. பாலசந்தர் திரைப்படம் ஒன்று இவ்வாறான ஒரு கருவினை மையமாக் கொண்டிருந்தது.

    ReplyDelete
    Replies
    1. கவிதையின் கரு என்றும் பொருந்தக் கூடியதுதானே பால சந்தர் படம் பார்த்ததில்லை இக்கருவில்

      Delete
  12. பாடல் கேட்டதில்லை .மிகவும் அருமையா இருக்கு அந்த நடனம் முகபாவம் எல்லாமே அருமை .
    பெரும்பாலானோர் எல்லாத்துக்கும் சலிப்பாங்க ஆனா கண்ணை திறந்து அகக்கண்ணை திறந்து பார்த்தாதான் தெரியும் நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவங்கன்னு

    ReplyDelete
    Replies
    1. மனதில் ஓடும் வரிகளுக்காகத் தேடி எடுத்ததூடல் உறுப்புகள் நன்றாய் இருப்பதே நாம்செய்த பேறு வருகைக்கு நன்றி மேம்

      Delete
  13. கடவுளுக்கு நன்றி சொல்லும் கவிதை நன்று!. தந்தையர் தின கவிதையும் சிறப்பாக இருக்கிறது.
    ஸ்ரீ வள்ளி பாடல் முதல் முறையாக கேட்கிறேன். பாடல் நன்றாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி. நின்ற இடத்திலேயே ஆடுகிறார் ருக்மணி. பாடியிருப்பவர் யார்? வசந்த கோகிலமா?

    ReplyDelete
    Replies
    1. யார்பாடியதுஎன்னும் குறிப்பு பார்த்த நினவு இல்லை அடிக்கடி மனசில் ஓடும்வரிகள் வருகைக்கு நன்றி

      Delete
  14. இப்பூவுலகே எனக்கன்றோ...மிக அருமை ஐயா ...ரசித்தேன்...


    ReplyDelete
    Replies
    1. மனதில் தோன்றியது பதிவாயிற்று வருகைக்கு நன்றி மேம்

      Delete
  15. அழகான கவிதை.. அது உண்மைதானே.. நம்மில் உள்ள பொஸிடிவ்வானவற்றை நினைக்காமல் அடுத்தவர்களைப் பார்த்து ஏங்குவது எவ்ளோ தப்பு எனக் கவிதையில்/பாடலில் சொல்லிட்டீங்க.

    பாட்டு நன்றாக இருக்கு, ஆனா எங்கும் கேட்டதாக நினைவில் இல்லை.. இப்போதெல்லாம் ரேடியோக்களில் இப்படிப் பாடல்கள் ஒலிபரப்பாவதில்லை என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஊனம் இன்றி இருப்பதே பெரிய பேறு என்று நினைத்ததால் வந்த பதிவு மிகப்பழைய பாடல் இப்போது கேட்பது அரிது

      Delete
  16. தந்தையர் தினப்பதிவு நெகிழ்வு . அருமை சார் !

    ReplyDelete
    Replies
    1. அரிதாக வருகை புரிந்தாலும் பாராட்டுக்கு நன்றி மேம்

      Delete
  17. துளசி: இந்தப் பாடல் கேட்டதில்லை சார். உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.

    கீதா: கவிதை ரொம்ப அழகாக எழுதுறீங்க சார். // ஆண்டவனே நான் குறைப்படுகையிலே
    என்னை மன்னித்து விடு.
    எனக்கிருக்கிறது காண நல்ல இரு கண்கள்.//

    ரசித்த வரிகள் சார்.

    பாடல் கேட்டதுண்டு என் மாமி எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார் சார்.

    ReplyDelete
    Replies
    1. துளசி -- இந்தப்பாடலை கேட்டிருக்கும் வாய்ப்பு குறாஐவு என்று நானும் நினைத்தேன் கீதாவுக்கு அவர்கள் மாமி பாடிக்காடி யிருக்கிறார் பல பழைய பாடல்கள் மனதில் ரிவைண்ட் ஆகும் ஊனமின்றி இருப்பது அதிர்ஷ்டம்தானே

      Delete