Friday, May 3, 2019

பல நினைவுகள்


                                         பல நினைவுகள்
                                         -------------------------

                                     
                                       இப்போதெல்லாம்  திருமண விசேஷங்களில்  மருதாணி  அலங்காரமும் ஒன்று  என்பேரனின்  திருமண வைபவத்துக்கு  அவனுக்கு மனைவியாக போகிறவளின் கைகளில்  மருதாணி யில் ஒரு வித்தியாசம் இருந்தது கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள்

மருதாணிக்கைகள்

ஒவோர் ஆண்டும்  மே மாதத்தை  ஆவலுட ன்   எதிர்பார்ப்பேன் ஏப்ரல் இறுதியிலேயே  நான் வந்து விட்டேன்  என்று தலை தூக்கிக் காண்பித்தது  ஃபுட்பால் லில்லி மலர்ச் செடி


தலைதூக்கு ஃபுட்பால் லில்லி பூ 

 இப்படி தலை தூக்கும் நான்   இப்படி மலர்வேன்  என்று சொல்லாமல் சொன்னது அச்செடி

மலர்ந்து விரிந்த ஃபுட்பால் லில்லி பூ  பழைய  படம்  




எங்கேடா காணவில்லையே என்றிருக்கும் போது நானும் உள்ளேன்  என்று சொன்னது லாப்ஸ்டர் க்லாஸ் மலர்

பாருங்கள் சிகப்பு நிறமாக தொங்கும் என்னை 


இம்மாதிரி பெயர் தெரியாத செடிகளை க்ரோட்டன்ஸ் என்று மனைவி கூறுவாள்

க்ரோட்டன்ஸ் 


இன்னொரு க்ரோட்டன்ஸ் செடி

இன்னுமொரு க்ரோட்டன்ஸ்


புதிதாக வாங்கிய பாரிஜாதமலர்ச்செடிஇன்னும் மண்ணில் ஊன்றவில்லை

பவழ மல்லியா பாரிஜாதமா 


ஊசிமல்லிச் செடி

வாங்கிய நிலையில் 


கற்பூர வள்ளிச் செடி  இதன் இலைகள் இருமலுக்கு மருந்தாம் 

கற்பூர வள்ளி 













33 comments:

  1. பவழமல்லியா? பாரிஜாதமா? மலரட்டும் சொல்லலாம்! கற்பூரவள்ளி ஒரு சிறு துண்டு வைத்தால் போதும், பரவி விரவி விடும்! டேபிள் ரோஸ் கூட அப்படிச் சொல்வார்கள்.

    ReplyDelete
    Replies
    1. இரண்டும் வேறு வேறா

      Delete
    2. டேபிள் ரோஸ் முற்றிலும் வேறு. கற்பூரவல்லி கஷாயம் போட்டுக் குடிக்கலாம். இலைகளைப் பறித்து பஜ்ஜி மாதிரி போட்டுச் சாப்பிடலாம். நல்லா இருக்கும்.

      Delete
    3. எனக்கு பவழமல்லி பாரிஜாதமொன்றா வேறு வேறா தெரியவில்லை

      Delete
    4. பவள மல்லி என்றே தோன்றுகிறது சார் இலை அப்படித்தான் இருக்கிறது படத்தில் பார்க்க...

      பாரிஜாதம் என்பது வேறு. ஆனால் பலரும் பவளமல்லியை பாரிஜாதம் என்றும் சொல்வதுண்டு.

      கீதா

      Delete
  2. அழகான பூக்களின் படம் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வந்து ரசித்ததற்கு நன்றி ஜி

      Delete
  3. மலர்களும் செடிகளும் அருமை ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சார்

      Delete
  4. செடிகளின் படங்கள் மிக அழகு. மாங்காய் சீசன். உங்கள் வீட்டு மாமரத்தைப் படமெடுத்துப் போட விட்டுவிட்டீர்களே

    ReplyDelete
    Replies
    1. வீட்டு மாமரம் மட்டுமல்ல வெற்றிலைக் கொடிகளும் தென்னையும் இன்னும் பல செடிகளும் உண்டுசரியாகப் பராமரிக்க முடியவில்லை மாமரத்து காய்களைப் பறிக்க ஆட்களைத் தேடவேண்டும்

      Delete
  5. நானும் என் வீட்டு சின்னத்தோட்டத்தை படம் எடுத்து வைத்து பதிவாக்கி இருக்கிறேன் போட வேண்டும்.
    நம் வீட்டுத்தோட்டம் சின்னதோ, பெரிதோ அது தரும் ஆனந்தம் தனிதான்.

    ReplyDelete
    Replies
    1. எனதை தோட்டமென்று சொல்ல முடியாது சில செடி கொடிகள் இருக்கும் இடம் அவ்வளவே

      Delete
  6. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  7. வித்தியாசம் தெரியவில்லையே ஐயா. இன்னும்கூட நான் அவ்வப்போது ஆசைக்காக மருதாணி வைத்துக்கொள்கிறேன், பலர் கிண்டல் செய்தாலும்கூட. ஏதோ மனதில் சிறுவயது முதலே மருதாணி மீது அதீத ஆசை.

    ReplyDelete
    Replies
    1. மருதாணிக் கையில் என்பேரனின் பெயரும் இடப்பட்டுள்ளது

      Delete
  8. தோட்டத்து மலர்களும் செடிகளும் அழகு.

    மருதாணியில் பெயர் எழுதப்பட்டிருப்பதைக் குறிப்பிடுகிறீர்களா?

    ReplyDelete
    Replies
    1. ஆம் மேடம் பெயர் படிக்க முடிந்ததா

      Delete
  9. என் காலத்தில் மருதாணி இலைகளை அம்மிக் கல்லில் மை போல அரைத்து இரவு கை விரல்களில் தொப்பி போல வைப்பார்கள். கை நடு மத்தியில் முழு நிலவு போல வட்டமாக மருதாணி தீட்டல்.
    கால் பாத விரல்களிலும் மருதாணித் தொப்பி. உள்ளங்கால் பகுதியில் வட்டமாக. இரவு படுக்கப் போவதற்கு கொஞ்ச நேரம் முன்னால் இதெல்லாம் நடக்கும். மருதாணி அலங்காரம் முடிந்ததும் தான் அதற்கென்று காத்திருந்தது போலா அரிப்பு மெல்ல ஆரம்பிக்கும். சொறிந்து கொள்ள முடியாத நிலை.

    எப்படியோ இத்தனை அவஸ்தைகளுக்கும் நடுவில் தூக்கம் போட்டு காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக கை அலம்பிப் பார்த்தால்... செக்கச் செவெலென்று மருதாணி அழகு கூட்டும்.
    மருதாணி சருமத்திற்கு ஆரோக்கியமானது. விரல் நகங்களில் சொத்தை விழாமல் காக்கும்.

    காகிகக் குப்பியில் வரும் ரெடிமேட் மருதாணி இராசயனக் கலப்பு கொண்டது. ஒத்துக் கொள்ளாதவர்களுக்கு அலர்ஜி ஏஏபடுத்தும்.
    அதைத் தவிர்ப்பதே நல்லது.

    ReplyDelete
    Replies
    1. என் சிறுவயதில் மருதாணி இடுவது நீங்கள் சொல்லியபடிதான் இப்போது மருதாணி அல்சங்காரம்செலவு பிடிக்கும் முன்னூறு நானூறு ஆகிறது விசாகப் பட்டினம் கடற்கரையில் மருதாணி இட்டு சம்பாதிப்பதைக் கண்டிருக்கிறேன் ஐந்து நிமிஷத்தில் அழகானவேலை மிகவும்சீப்

      Delete
    2. ஆமாம் விசாகப்பட்டினக் கடற்கரையில் சென்னையில் பனகல்பார்க் நல்லிக்கு எதிரில் பலரும் அமர்ந்திருப்பதைக் காணலாம். நிறைய இடங்களில் இப்படிச் செய்கிறார்கள் சார்

      கீதா

      Delete
  10. படங்களும் செய்திகளும்
    அருமையான தொகுப்பு

    ReplyDelete
    Replies
    1. வருகை மகிழ்ச்சி தருகிறது

      Delete
  11. அருமையானத் தொகுப்பு ஐயா
    நன்றி

    ReplyDelete
  12. வலக்கைச் சுண்டு விரல் அருகே உங்கள் பேரனின் பெயர் எழுதப் பட்டிருப்பதைப் பார்த்துவிட்டு வந்தால் இங்கே கருத்துக்களில் அதைச் சொல்லி இருக்கிறீர்கள். இந்த மருதாணி வைப்பது அதாவது வட இந்திய முறையில் வைப்பது இப்போது பரவலாக ஆனாலும் அங்கெல்லாம் திருமணத்தின் போது மணப்பெண்ணின் கைகளில் வரையப்படும் டிசைன் இரண்டும் ஒரு பாதி ஒரு கையிலும் இன்னொரு பாதி இன்னொரு கையிலுமாக வைப்பார்கள். கைகளைச் சேர்த்து வைத்தால் அந்த அழகான டிசைன் தெரியும். மயில் என்றால் இரு கைகளிலுமாக வரைவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. பெயரை பார்த்து விட்டீர்களா சொன்னடு நீங்கள்மட்டும்தான் ராமலக்‌ஷ்மியும் பெயர் பற்றி குறிப்பிட்டார்கள் வருகைக்கு நன்றி மேம்

      Delete
  13. பசுமை, பூக்கள் அற்புதம்

    ReplyDelete
    Replies
    1. சில எக்சோடிக் புக்கள் வளர்கிறது வருகைக்கு நன்றி

      Delete
  14. சிறு அளவிலாவது செடி கொடி வளர்க்கிறீர்களே ! பாராட்டுகிறேன் .

    ReplyDelete
  15. ஒரு சிறிய இடத்தில் வீடு அதில் சிறிது இடம்செடிகொடிகளுக்காக பாராட்டுக்கு நன்றி சார்

    ReplyDelete
  16. செடிகள் பூ எல்லாமே அழகாக இருக்கின்றன சார்.

    துளசிதரன், கீதா

    ReplyDelete