Thursday, June 20, 2019

சுவிஸ் நேர வங்கி


                            சுவிஸ் நேர வங்கி
                                 ------------------------


சுவிட்சர்லாந்தில்  ஒரு மாணவன்படித்துக் கொண்டு  இருந்தான்  அவன் சொன்னது
“ படிக்கும் பொது பள்ளியின்  அருகேயே ஒரு வீடு வாடகைக்கு எடுத்திருந்தேன்
அதன் உரிமையாளர்  ஒரு 67 வயதுமூதாட்டி தனியே இருந்தார்  ஓய்வு பெறும் முன்  ஒரு பள்ளியில் ஆசிரியையாக  இருந்தவர்  சுவிட்சர்லாந்தில் நல்ல ஓய்வூதியம்  உண்டு  எதற்கும் கவலைப்பட வேண்டாம்  இருந்தும்   அந்த மூதாட்டி  ஒரு 87 வயது  முதியவரைபார்த்துக் கொள்ளும் பணியில் இருந்தார்
இனியும் உழைத்து சம்பாதிக்க வேண்டுமா என்று கேட்டேன்  நான்  பணம் சம்பாதிக்க உழைக்க வில்லை என்னுடை ய நேரத்தை வ்ங்கியில் இடுகிறேன்  வயசாகி என்னால் முடியாத போது  அந்த நேரத்தை நான் வித்ட்ரா  செய்யலாம் நேர வங்கி என்பது நான் புதிதாக தெரிந்து கொண்டேன் இன்னும்  தெரிந்து கொள்ள  மூதாட்டியை விளக்கம்   கேட்டேன்
 மக்கள் நேரத்தை வங்கிகளில் சேமித்தார்கள்
 உடல் உழைக்க தயாராய் இருக்கும்போது  வயதான முடியாதவர்களுக்கு   பணி புரிந்தார்கள்  அவர்கள் வயதாகும் போது சேமித்த நேரத்தை தேவைக்கேற்றபடி  வித்ட்ரா  செய்யலாம் இது சுவிஸ் ஃபெடெரல் மினிஸ்ட்ரி  ஆஃப்  சோஷுயல் செக்யூரிடி  யால்  ஏற்படுத்தப்பட்டது இள வயதில்  செய்யும் சேவை வயதானபின் உதவலாம் இதற்கு அப்ளை செய்பவர் உடல் நலமோடும் அன்புடன் பழகுபவராகவும் இருக்க வேண்டும்  தினமும் அவர்கள்  தேவைப்படும்   முதியோரை கவனித்துக் கொள்ள வேண்டும்அப்படி அவர்கள் உழைக்கும் நேரம்   அவர்களது நேரவங்கிக் கணக்கில்  வைக்கப்படும்  என் வீட்டு சொந்தக்கார மூதாட்டி வாரம் இருமுறை  இரண்டு மணிநேரம்  வயதானவருக்கு பணிவிடைசெய்யும் பணியில் இருந்தார் முதியோரிடம்  பேசுவது அவர்களை வெளியே அழைத்துச் செல்வதுஅவர்கள்  இடத்தை  சுத்தப்படுத்துவது போன்றவையே முக்கியமான பணிகள்
அவர்களது ஒப்பந்தப்படி சோஷியல் செக்யூரிடி ஏஜென்சி ஒரு வருடம் கழித்து எத்தனை மணிநேரம்  வங்கி கணக்கில் இருக்கிறதுஎன்று   கணக்கிட்டுச் சொல்வார்கள்
ஒரு நாள் பள்ளியில் நான் இருந்தபோது மூதட்டி விழுந்து அடிபட்டுக் கிடக்கிறார்கள் என்னும் செய்தி வந்து பதறி போய் மருத்துவமனைக்குச் சென்றேன் மூதாட்டி நேர வங்கிக்கு நேர வித்ட்ராவலுக்கு  அப்ளை செய்திருந்தார் இரண்டு மணி நேரத்துக்குளவரைப் பராமரிக்கநேரவங்கி ஒரு நர்சுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் உடல் நலம்பெற்றபின்  மூதாட்டி  மீண்டும்வேலைக்குச்செல்லத்துவங்கினார் நேர வங்கியில் சேமிக்க
சுவிட்சர் லாந்தின்  இந்த கான்செப்ட் நம் நாடுகளிலும்  முறைப்படுத்தினால் நலமாய் இருக்கும் 

கண்டு களிக்க ஒரு காணொளி     20 comments:

 1. புதிய செய்தி. இப்படியொன்று இருக்கிறதா? அடடே...

  ReplyDelete
  Replies
  1. எனக்கெ அது புதியதாக இருந்ததால் பகிர்ந்தேன்

   Delete
 2. சேவலைச் சமாளிக்க முடியாமல் நானும் பின்வாங்கியதுண்டு! கொஞ்ச நாட்களுக்குமுன் எங்கள் வீட்டுக்கருகில் ஒரு ரௌடிச் சேவல் இருந்தது. அது எல்லோரையும் துரத்தி பயமுறுத்தி வந்தது. அதன் சொந்தக்காரரிடம் சொல்லி அப்புறம் அதை அப்புறப்படுத்தினோம்!!

  ReplyDelete
  Replies
  1. சில விலங்குகள் பற்றிய நம் எண்ணம் சரிய தெரியவில்லை

   Delete
 3. ஸ்விஸ் விடயம் உலக நாடுகள் அனைத்துமே பின்பற்றக்கூடியது.

  சேவல்கள் அனைத்துமே தேவகோட்டையில் இருந்து வாங்கிச் சென்றதாக இருக்கலாம் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. எனக்கு அது புதிய விஷயம்

   Delete
 4. புதிய விஷயம்! இங்கே இம்மாதிரிக் கணக்கெல்லாம் வைத்துக்கொள்ளாமல் சேவை செய்பவர்கள் நிறையவே உண்டு! சேவை ஒன்றே குறிக்கோளாகக் கொண்டவர்கள் உண்டு.

  ReplyDelete
  Replies
  1. உறவினர்களுக்காக வேண்டுமானால் சேவை செய்வார்கள் நம்நாட்டில் மற்றபடி எதையும் எதிர்நோக்காமல் சேவை செய்கிறார்களா தெரியவில்லை

   Delete
  2. விளம்பரம் இன்றிச் செய்பவர்கள் பலர் இன்னமும் இருக்கின்றனர். எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செய்கின்றவர்கள் அவர்கள் எல்லாம்!

   Delete
  3. முற்பகல் செய்யி பிற்பகல் விளையும்

   Delete
 5. சேவல் முரடாக இருக்கே! எங்கே பிடிச்சீங்க இதை? :)))))

  ReplyDelete
  Replies
  1. யு ட்யூபில் நிறையவே காணக்கிடைக்கிறது

   Delete
 6. அந்த நான் என்பது நீங்களா??..

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்குமா சந்தேகம்

   Delete
 7. ஓ.. நான் என்பது அந்த மாணவனா?..

  சுவிஸ் வங்கிகள் என்றாலே நம் மனசில் பதிவதே வேறொன்று தான். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் டெபாஸிட் செய்யலாம் போலிருக்கு.

  நம் நாட்டுக்கு இதெல்லாம் ஒத்து வராது. கடன் வாங்குவதற்கும் தள்ளுபடிக்கும் தான் இங்கு வங்கிகளே வேலை செய்கின்றன.

  ReplyDelete
 8. அங்கும் சாதரண வங்கிகளில் இந்த சேவை இருக்காதுஎன்றே நினைக்கிறேன்

  ReplyDelete
 9. வித்யாசமாக இருக்கிறது ஐயா.

  ReplyDelete
  Replies
  1. as usual என்று நினைத்துக் கொள்கிறேன்

   Delete
 10. புதிய தகவல் ஐயா... நன்றி...

  ReplyDelete
 11. /விளம்பரம் இன்றிச் செய்பவர்கள் பலர் இன்னமும் இருக்கின்றனர். எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செய்கின்றவர்கள் அவர்கள் எல்லாம்!/ இதைப்பார்த்தீர்களா

  ReplyDelete