Monday, August 26, 2019

மனம்சொல்வது


                                            மனம் சொல்வது
                                            --------------------------- 
                                           

வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது  வந்திருந்தவர் நான் தானா அவரென்று உறுதி செய்து கொண்டார்  நடுத்தர வயது ஒரு கண்பார்வைஇல்லாதது போல் தோன்றியதுவீட்டில் இன்வெர்டர் பொறுத்த வந்திருப்பதாகக் கூறினார்
ஒரு நாளில் பலமுறை மின் சாரம் போய்விடும் என்மகன் வீட்டில் இருந்தபோதே பல முறைபோயிற்று  இரவு நேரமானால் வயதான நீங்கள் இருட்டில் இருக்க வேண்டாம் என்ற என்மகன் உடனே ஒருஇன்வெர்டர் பொறுத்தஏற்பாடு செய்தான்  மேலும் மின்சாரமில்லாவிட்டால் என் ஒரே போக்கிடம் கணினியிலும்  வேலை செய்ய முடியாது என்றும் அவனுக்குத் தெரியும் இன்வெர்டர் பொறுத்தினால் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட வேண்டாம்
 வந்தவரிடம்பெயரென்ன  என்று கேட்டேன் நல்ல வேளை தமிழ் பேசத் தெரிந்தவராய் இருந்தார்கோபால் என்றார் பொதுவாகஎதையும்துருவித்துருவி  கேட்கும் வழக்கம் என்னிடமில்லை வேலை துவங்கு முன் என் மனைவி அவருக்கு காஃபி கொடுத்தார் அவர் இதை எதிர்பார்க்கவில்லை என்றார்  
உங்களுக்கு எந்த ஊர் என்று  கேட்டுத்தெரிந்துகொண்டார்
 ”உங்களிடம் நான்   பொய் சொல்லி விட்டேன் அப்படி சொல்ல என் முதலாளி கூறி இருந்தார் உண்மையில் நான் ஒரு முஸ்லிம்பலவீடுகளில் முஸ்லி,ம்  என்றால்  வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை இங்கு உங்கள் வீட்டில் எந்த வித்தியாசமும்  இல்லாமல் பழகுகிறீர்கள் என் பெயர் அப்துல்  இதை என் முதலாளியிடம் சொல்லாதீர்கள் என் ஊர் ஆம்பூர்  ஒரு முறை மிக்சியில் வேலை செய்து கொண்டிருந்தபோது   அது உடைந்து  ஒரு பீஸ்கண்ணில் பட்டுபார்வை போயிற்று  ஒரு கண்பார்வை போனாலும்  வேலையில் நான் கவனம் பிசகுவதில்லைஎந்த எந்த இணைப்புகளில்தடை இன்றி மின்சாரம்வேண்டும்  என்றுசொல்லுங்கள் அதன் படி செய்கிறேன்”  என்றார்
வாஷிங்மெஷின் நீர் இறைக்கும் பம்ப் மோட்டார்  கீசர் போன்றவை இன்வெர்டரில் இயங்குவதுகஷ்டம் என்றார்அவற்றின்  கனெக்‌ஷன் தவிர்த்து எல்லா உபயோகமும் இன்வெர்டரால் கிடைக்கும் பவர் இல்லைஎன்றாலும்  சுமார்நான்கு மணி நேரம்தடை இல்லாமல் மின்சாரம் இருக்குமென்றார்எப்பவும் கணினி இயக்கலாம்  அல்லவா என்றுகேட்டு தெரிந்து கொண்டேன் எங்கு எங்கு எதன் எதன்  கனெக்‌ஷன் இருக்கிறது என்று தெரிந்து கொண்டு வேலையை தொடங்கினார்சுமார் மூன்று மணிநேரத்தில்வேலை முடிந்தது செக் செய்து கொள்ளச்சொன்னார் இந்தகாலத்திலும் மத இன   வித்தியாசம் பாராட்டுகிறார்கள் என்பதுஅறிந்தபோது  வருத்தம் இருந்த்து
இது ஒரு நிஜ நிகழ்வு  கற்பனை அல்ல   





26 comments:

  1. எங்கள் வீட்டு கேஸ் ஸ்டவ் ரிப்பர் செய்பவர் அப்துல்தான். இதெல்லாம் பார்க்க முடியாது. நாங்களும் வீட்டுக்கு யார் வந்தாலும் காஃபி அல்லது தேநீர் கொடுத்து விடுவது வழக்கம்.

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டில் காபி/தேநீர் யாருக்குமே கிடையாது. பெரும்பாலும் இருக்காது. அதுனால தண்ணீர் இல்லைனா ஏதேனும் ஜூஸ். இந்த ஊர்ல ஜூஸ் வாங்கி வைத்துக்கொள்வதில்லை (நாங்க யாரும் சாப்பிடக்கூடாதுன்னு). அதுனால நீங்க வந்தாலும் அனேகமா தண்ணீர் இல்லைனா பால். ஹா ஹா

      Delete
    2. @ஸ்ரீ பலரும் இன்னும் பர்க்க்கிறார்களே

      Delete
    3. oஒருவர் வீட்டுக்குச் செல்லும்போது காஃபி அல்லது டீ அல்லது திங்க ஏதாவது கிடைக்கும் என்றாபோவார்கள்

      Delete
    4. தேநீர் அருந்த என்றே வட மாநிலங்களில் அழைப்பார்கள். தேநீருடன் கூடவே சமோசா, கசோடி, குர்குரே, ஆலு புஜியா, இனிப்புகள், பிஸ்கட்டுகள், பஜ்ஜி, பகோடா போன்றவை பரிமாறுவார்கள்.

      Delete
    5. வடமாநிலங்களில் இமாதிரி பாகுபாடு இருக்கிறதா தெரியாது

      Delete

  2. கோபாலாக வந்த ஆம்பூர் அப்துல்!

    நீங்கள் மேற்சொன்னதில் என்னைக் கவர்ந்தது - வேலை ஆரம்பிக்கு முன்பே, வந்தவருக்கு ஒரு கப் காப்பி கொடுத்த உங்கள் மனைவியாரின் செயல். பாராட்டத் தக்கது.

    ReplyDelete
    Replies
    1. அதனால்தான் அவர் பற்றிய உண்மையைக் கூறினார் மெலும் விருந்தோம்பல் என் மனைவியிடம்உண்டு

      Delete
  3. எங்கள் வீடு சுத்தம் செய்ய வாடிக்கையாக வருபவர் ஓர் முஸ்லீம் இளைஞர் தான். சுத்தமாகச் செய்வார். ஆனால் காஃபி, தேநீர் எல்லாம் வேலை இடைவேளையில் தான். முதலில் கொடுத்தால் வாங்க மறுப்பார். இதிலெல்லாம் கூட வேறுபாடு பார்ப்பவர்களும் இருக்கிறார்கள் என்னும் விஷயம் எனக்குப் புதியது. என் கணினி மருத்துவர் ஓர் கிறித்துவர். அவருக்கும் காஃபி, தேநீர் கேட்டுக் கொடுப்பது உண்டு. சகஜமாகவே பழகுவார்/வோம்.

    ReplyDelete
    Replies
    1. உங்களிடமொரு அனுபவம் கூறுகிறேன் பெங்களூர் வந்தபின் ஒரு வேலையாக திருச்சி செல்ல வேண்டி இருந்தது நண்பனொருவன் அவனது இல்லத்தில் மதிய உணவு என்றான் ஏதோ காரணத்தால் அவனால் வர இயலவிலை அவன் தாய் எனக்குமென் மச்சினனுக்கும் உணவு பறிமாறினார் அனால் எங்களை அவர் உட்கார வைத்த இடம்தான் வருத்தம் கொடுத்தது டாய்லெட்டை அடுத்த ஒரு இடத்தில் உட்கார வைத்து உணவு பறி மாறினார்ஹாலிலோ அடுக்களையிலோ என்றால் பரவாயில்லை அவருக்கு நானும் அந்தண குலமா என்னும் சந்தேகம் போலும் இப்படி வேறு பாடு பாராட்டுவதை விட ஏதும் தராமல் இருக்கலாம்

      Delete
    2. இது முன்பே ஒரு முறை கூறி இருக்கிறீர்கள்.சில, பல வருடங்கள் முன்னர் ஶ்ரீரங்கத்தில் வீதிகளுக்குள்ளே எங்களுக்கும் இம்மாதிரி அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

      Delete
    3. மனதளவில் பலஇடங்களில் வேறுபாடுகளிருக்கத்தான் செய்கின்றன

      Delete
  4. இஸ்லாமியர் என்றாலே தீவரவாதிகள் என்ற எண்ணம் பலருக்கும் இருப்பது உண்மைதான். என்ன செய்வது? அதை மாற்றுவது சற்று கடினம் தான்.

    ReplyDelete
    Replies
    1. வித்தியாசம் பாரட்டுகிறார்கள் என்பதாலேயே பெயரை மாற்றச்சொல்லி இருகிறார்

      Delete
  5. நல்லவர், கெட்டவரா எல்லா மதங்களிலும் உண்டு ஐயா இதை பலரும் நம்புவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் வேறுபாடுகள் நிலவுகின்றன என்பதை தெரிவிக்கவே பதிவு

      Delete
  6. நமக்கு உதவ வந்தவரிடம் மத, ஜாதி வேறுபாடு பார்ப்பது எனக்கும் பிடிக்காது. என் வீட்டிலும் சோஃபா சரி செய்ய ஒரு இஸ்லாமியரைத்தான் கூட்டிவந்தேன். சரியான வேலையைச் செய்துகொடுத்துவிட்டார். பெரும்பாலும் யாரும் இந்த மாதிரி வித்தியாசம் பார்ப்பதில்லை. வீடு வாடகைக்கு கொடுக்க மட்டும், பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன். (நான் பார்க்கிறேன், வீடு சுத்தமா இருக்கணுமே என்ற எண்ணத்தில். அவ்ளோதான்)

    ReplyDelete
    Replies
    1. எனக்குத் தெரிந்தஒருஇஸ்லாமியநண்பர் வெகு சுத்தம்பெரும்பாலும் பலரும்வேற்றுமை பார்ப்பதில்லை என்றாலுமின்னும் இருக்கிறது என்பதே நிஜம்

      Delete
  7. முஸ்லிம் வீட்டில் இந்துவை விடமாட்டார்கள் .பாடலாசிரியர் பிறைசூடனை ஏ.ஆர் . ரஹ்மான் இல்லத்தில் பொட்டு வைத்துக்கொண்டு வரக்கூடாது என்றதாக இணையத்தில் வாசித்தேன் .

    ReplyDelete
    Replies
    1. தெரிந்திராத தகவல் ஏற்றதாழ்வு நம்ரத்தத்தில் ஊறி இருக்கிறதோ என்னவோ

      Delete
  8. சக மனிதனை மனிதனாக நினைப்பதே, ஒரு மனிதன் என்பதற்கு தகுதியானவன்... இதற்கு எனது பதிவுகள் உதாரணமாக சொல்லலாம் - பயணத்தில் உள்ளதால், இதற்கு மேல் எழுத முடியாது... ஆனால்...

    இதில் சந்தேகம் கூட வருவதென்றால், அவன் மிருகத்தை விட கேவலமானவன்...

    ReplyDelete
  9. இன்னும் சில இடங்களில் தனி டம்ப்ளர் பாத்திரம் என்பவை இந்னும் இருக்கிறதுஎன்பதும்கேள்விப்பட்டு இருக்கிறேன்எனிங்கு கர்நாடக கோவில்கள் பலவற்றில் இலவச உணவுக்குக் கூட தனி பந்தி உண்டு

    ReplyDelete
  10. நான் கிறிஸ்தவப் பள்ளியிலும் முஸ்லீம் கல்லூரியிலும் படித்தவன். எனவே எங்கள் வீட்டில் எப்போதும் இந்த வித்தியாசம் கிடையாது. அதே சமயம் முஸ்லீம் வீடுகளில் இந்து வேலைக்காரர்களை வைப்பது கிடையாது என்பதும், அப்படியே வைத்தாலும் அவர்களுக்கு காபி டீ என்றில்லை, தண்ணீர் கூடக் கொடுப்பதில்லை என்பதையும் நான் நேரில் கண்டிருக்கிறேன். பெங்களூர் சிவாஜி நகரில் முஸ்லீம்கள் மிகுதி. அங்கெல்லாம் வங்கியில் கடன் வாங்கியவர்கள் வீட்டுக்குப் போய் வசூல் செய்துவிடமுடியாது. அவர்கள் கூட்டமாக வந்து அதிகாரிகளை மிரட்டி விரட்டி விடுவார்கள். அதனால் வெளி நாட்டு வங்கிகள் சிவாஜி நகர் முகவரி இருந்தால் கிரெடிட் கார்டு தருவதில்லை என்ற எழுதப்படாத விதியைக் கடைப்பிடித்தார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு ஆதங்கப்பதிவு பின்னூட்டங்களில்பல அறியாதசெய்திகள் நன்றி

      Delete

  11. // இந்தகாலத்திலும் மத இன வித்தியாசம் பாராட்டுகிறார்கள் என்பது அறிந்தபோது வருத்தம் இருந்தது//

    ஐயா. இந்த நூற்றாண்டிலும் இந்த மன நிலையில் உள்ளவர்கள் அநேகர் இருக்கிறார்கள். இந்த ‘வியாதி’ மறைய இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம்.

    ReplyDelete
  12. இந்த மத இன வித்தியாசம் நம் ரத்தத்தில் ஊறியது பல நூறாண்டுகளாகவே இருப்பது நீஙக இன்னும்பல ஆண்டுகள் ஆகலாம்

    ReplyDelete