Saturday, August 10, 2019

TIT BITS



                                                   TIT  BITS
                                                    --------------

எனக்குச் சில ஆதங்கங்கள் இளவயதிலிருந்தே உண்டு. எதுவும் செய்ய முடியாத கையாலாகாத்தனத்தால்  மனம் வருந்தியதும் உண்டு  அதற்கு சிலவடிகால்கள் வேண்டும்  எழுதுவதன் மூலம்   சிலவற்றை வெளிப்படுத்துகிறேன்
 
  இவற்றைப்படித்து காதில் ரத்தம்வந்தால் நான்பொறுப்பல்ல
கேள்வி –எந்தப்போரில் நெப்போலியன்  இறந்தான்
பதில் – அவனது கடைசிப் போரில்
கேள்வி –சுதந்திரப் பிரகடனம்  எங்கு கயெழுத்திடப்பட்டது?
பதில் –பிரகடனப்பத்திரத்தின் கடைசியில்
கெள்வி –தோல்விகளின் காரணமென்ன ?
பதில் –பரீட்சைகள்
கேள்வி _கலைச் சிற்றுண்டியில் எதை சாப்பிட முடியாது?
பதில் –மதிய இரவு உணவுகளை
கேள்வி –அரை ஆப்பிள் மாதிரி தோன்றுவது எது?
பதில்- அதன்மற்ற பாதி
கேள்வி-சிவப்புக் கல்லை நீலக்கடலில் எறிந்தால் என்னாகும்  ?
பதில் –ஈரமாகும்
கேள்வி-ஒருவர் எட்டு தினங்கள் தூங்காமல் இருந்தால் என்னாகும் ?
பதில் –ஒன்றுமாகாது.அவர் இரவில் உறங்கலாம்
கேள்வி-உன் ஒரு கையில் நான்கு ஆப்பிள்கள் மூன்று ஆரஞ்சுகள்
மறுகையில் நான்கு ஆரஞ்சுகள் மூன்று ஆப்பிள்கள் இருந்தால் உன்னிடம் இருப்பது என்ன?
பதில் –இரண்டு பெரிய கைகள்
கேள்வி –ஒரு யானையை ஒரு கையால் தூக்குவது எப்படி?
பதில்  -- ஒருகையுள்ள யானையே கிடையாது
கேள்வி –எட்டுபேர் ஒரு சுவற்றை நான்கு மணி நேரத்தில் கட்டினால் நான்கு பேர் அச்சுவற்றைக் கட்ட எவ்வளவு நேரமாகும் ?
பதில்  நேரமே வேண்டாம் .. சுவர் ஏற்கனவே கட்டியாயிற்றே
கேள்வி-ஒரு முட்டையை காங்கிரீட்  தளத்தில் விரிசலாகாமல் போடுவது எப்படி ?
பதில் –சாதாரணமாக காங்கிரீட் தளங்கள் விசிசலாவதில்லை
கேள்வி – River Raavi  flows in which state
பதில் In fluid state

 இனி கொஞ்சம் ஆங்கில அறுவை

1)   At a movie theatre  which arm rest is yours
2)   In the word scent  is S silent or C silent
3)   If people are evolved from monkeys  why are monkeys still around
4)   Why is there a D in fridge but not in refrigerator
5)   Who knew what time it was when the first clock was made
6)   If pros and cons are opposite won”t the the opposite of progress be congress
7)   Wonder why the word funeral starts  with FUN
                         =====================


ஒன்று புரிந்து கொள்ள வேண்டும்  உன் சுதந்திரம்   அடுத்தவன்  மூக்கு நுனிவரைதான்  மறக்காதே  என் தந்தை எனக்குக் கூறியதும்  நினைவுக்குவருகிறது அடிக்கடிசொல்வார் துவண்டு விடாதே be bold and cheerful       
       சீயர்ஃபுல் ஆக இருக்கிறேனோ இல்லையோ போல்டாக இருக்க முயற்சி செய்கிறேன்
                                  ==================
ஒருவன் ஒரு புதிய ரெஃப்ரிஜெரேடர் வாங்கினான். அவனுடைய பழைய ஃப்ரிட்ஜை வீட்டின் முன்னால் இருந்த காலி இடத்தில் வைத்து, “நல்ல நிலையில் உள்ளது. தேவை உள்ளவர் இனாமாக எடுத்துப் போகலாம் என்று ஒரு அட்டையில் எழுதி அருகே தொங்க விட்டிருந்தான். இரண்டு மூன்று நாட்களாகியும் அதை யாரும் எடுத்துப் போகவில்லை. அடுத்த நாள்” ஃப்ரிட்ஜ் விற்பனைக்கு. நல்ல கண்டிஷன். விலை ரூ.200-/
என்று அட்டையை மாற்றி எழுதினான். அதற்கு மறுநாள் ஃப்ரிட்ஜ் திருட்டுப் போயிருந்தது.!
                             --------------------

ஒரு நாள் நண்பர்களுடன் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தேன். திடீரென்று ஒருவன் “அதோ ,அந்த செத்த பறவையைப் பார் “ என்று கத்தினான். அநேகமாக
 அனைவரும் வானத்தை நோக்கி “ எங்கே “ என்று கேட்டனர்.!
                                 ---------------------------------
       
  குடி போக ஒரு வீடு வாடகைக்குத் தேடிக் கொண்டிருந்தான் நண்பன் ஒருவன். வீட்டு ப்ரோக்கரிடம்  வடக்கு திசை எது ?காலையில் எழுந்திருக்கும்போது சூரியக்கதிர் முகத்தில் அடிக்காமல் இருக்க வேண்டும் “ என்றான்.சற்று நேரம் கழிந்து அவன் மனைவி “ சூரியன் வடக்கில் உதிக்கிறதா “ என்று கேட்டாள். சூரியன் கிழக்கில்தான் உதித்துக் கொண்டிருக்கிறது “என்று பதில் சொன்னான் நண்பன். இப்போதெல்லாம் நடக்கும் நிகழ்வுகளை நான் கண்டு கொள்வதில்லை “ என்று கூறினாள் நண்பனின் மனைவி.!
                           --------------------------------------------

இக்கட்டான நிலையில் காரில் அகப்பட்டுக் கொண்டால் இருக்கை பெல்டை அறுத்து விடுவிக்கும் கருவி ஒன்று என் சகோதரியின் காரில் உள்ளது. அவள் அதை பத்திரமாக காரில் பெட்டியில் பூட்டி வைத்திருக்கிறாள்,!
                                                                         --------------------------------------------------------
         
விமானம் இறங்கி வெளியே வரும்போது என் லக்கெஜ் கன்வேயரில் வரவில்லைLOST LUGGAGE ஆஃபிஸுக்குச் சென்று புகார் கொடுத்தேன். அங்கிருந்த பெண்மணி ஆறுதலாகசரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறீர்கள். சொல்லுங்கள். நீங்கள் வரவேண்டிய விமானம் வந்துவிட்டதா?”  என்று கேட்டாளே பார்க்கலாம்.!
                                                       ---------------------
ஒரு PIZZA பார்லரில் பணியில் இருந்தபோது ஒருவர் தனியாக வந்து ஒரு PIZZA  ஆர்டர் செய்தார்.கடை சிப்பந்தி அதை நான்கு துண்டுகளாக நறுக்கவா இல்லை ஆறு துண்டுகளாக நறுக்கவா என்று கேட்டார். வந்தவர் சற்று யோசித்து ” நான்கு துண்டுகளாகவே நறுக்குங்கள். ஆறு துண்டுகளும் சாப்பிடும் அளவுக்கு எனக்குப் பசி இல்லை” என்றார்.!
                                                             ----------------------------------

இது நான்சி பெலோசி என்னும் பிரபலம் பற்றிய உண்மைக் கதை என்று சொல்லப் படுகிறது. ஒரு முறை ஒரு கூட்டத்தில் பேச ஒரு பிரபல மனநிலை மருத்துவர் வந்திருந்தார். அவரிடம் நான்சிசாதாரணமாய்த் தெரியும் ஒருவர் மன நிலை பாதிக்கப் பட்டவரா என்று எப்படிக் கண்டு பிடிப்பீர்கள் ?” என்று கேட்டாராம். ” ஒரு சுலபமான கேள்வி கேட்போம். அவர் கூறும் பதிலில் அவரைப் பற்றித் தெரிந்துவிடும்என்றார்.
என்ன மாதிரியான கேள்வி.?”
காப்டன் குக் மூன்று முறை உலகை சுற்றி வலம் வந்தார். அதில் ஒரு முறை அவர் உயிர் விட்டார் எந்த முறை.?”
” வேறு மாதிரியான கேள்வி கேட்க மாட்டீர்களா. நான் சரித்திரத்தில் கொஞ்சம் வீக்
என்று கூறினாராம் நான்சி பலோசி.!
                                                   -------------------------------------------

நோவாலே மடிந்திட்டான் புத்தன்; கண்டீர் அந்தணனாம்  சங்கராச்சாரியன் மாண்டான்;அதற்கடுத்த இராமானுஜனும் போனான்;சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்; தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்;பலர் புகழும் ராமனுமே ஆற்றில் வீழ்ந்தான்;பார்மீது நான் சாகாதிருப்பேன் , காண்பீர்.! மலிவு கண்டீரிவ்வுண்மை, பொய் கூறேன் யான், மடிந்தாலும் பொய் கூறேன் மானுடர்க்கே,நலிவுமில்லை, சாவுமில்லை, கேளீர், கேளீர், நாணத்தைக் கவலையினை சினத்தைப் பொய்யை அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவுமங்கே அழிந்து போகும் “
சாவு என்று பாரதி கூறியது இந்த ஊன் உடம்பின் அழிவையே
                          ===============================







.

19 comments:

  1. சில ஆங்கிலத்தில் படித்திருந்தாலும் மீண்டும் படித்துக் கொண்டேன். நல்ல அறுவை. ரசிக்கும்படி இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. ஆங்கில அறுவை தவிர வேறு ஏதும் ஆங்கிலத்தில் எழுத வில்லையே

      Delete
  2. ஏற்கெனவே படித்திருந்தவை ஆயினும் புன்னகைக்க வைத்ததற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. புன்னகை என்ன விலை ஸ்ரீ

      Delete
  3. ரசிக்க வைத்தது ஐயா.

    ReplyDelete
    Replies
    1. ரட்சிப்புக்கு நன்றி ஜி

      Delete
    2. ரசித்ததே ரட்சிப்பும் ஆனதோ? :-))))

      Delete
    3. கூட வந்த ஒரு ட் தவறாய்வந்து சிரிக்க வைக்கிறது

      Delete
  4. காதில் ரத்தம் எல்லாம் வரவில்லை... வாயில் சிரிப்பு தான் வந்தது...!

    ReplyDelete
  5. சிரிப்பு வரவழைக்க என்ன பாடுபட வேண்டி இருக்கிறது

    ReplyDelete
  6. இரண்டு பெரிய கைகள். ஹாஹாஹா. :)

    ReplyDelete
    Replies
    1. சிரிப்பை வரவழைக்கும் துணுக்குகள் சிலவற்றை ரசிப்பது மகிழ்ச்சியே

      Delete
  7. மிகவும் மெனக்கெட்டு சிரிப்பு கொத்துகளை அளித்துள்ளீர்கள் சிரிப்பு வராமல் இருக்குமா?

    ReplyDelete
  8. சிரித்து மகிழ வேண்டுவதே நோக்கம் நன்றி

    ReplyDelete
  9. இப்படிப்பட்ட அறுவைகளை யோசித்து எழுதுவதற்கும் ஒரு சாமர்த்தியம் தேவை . தொகுத்துத் தந்தமைக்கு மிக்க நன்றி .என் பங்குக்கு ஒன்று : பின்லேடனின் அண்ணன் பெயர் , மனைவி பெயர் என்ன ? முன்லேடன் , பின்லேடி .

    ReplyDelete
  10. உங்கள் பங்கு ஒரிஜினல் எனது கண்டெடுக்கப்பட்டது நன்றி சார்

    ReplyDelete
  11. சில ஏற்கனவே படித்திருந்தாலும் இங்கும் மீண்டும் சிரிக்க வைத்தது. எல்லாமே ரசித்தேன் சார்.

    பல கடி ஜோக்ஸ் என்று வந்தவை.

    கீதா

    ReplyDelete
  12. அதுதான் முதலிலேயே சொன்னேனே நான்பொறுப்பல்ல என்று

    ReplyDelete
  13. :-) கார்சீட் பெல்ட் வாசிக்கும்போதுதான் நினைவுக்கு வருது... இங்கெ பாத்ரூம் ப்ரைவஸி லாக் தவறுதலா திறக்கலைன்னாலோ, பாத்ரூம் உள்ளே சின்னப்பிள்ளைகள் போய் மாட்டிக்கிட்டாலோ, வெளியில் இருந்து தாளைத் திறக்க ஒரு கம்பிபோல ஒன்னு கொடுத்துருக்காங்க, பூட்டுகள் வாங்கும்போதே.... அதை எங்கே வச்சேன்னு தெரியலை. தேடி எடுத்துக் கவனமா குறிப்பிட்ட இடத்துலே வச்சுக்கணும்.

    ReplyDelete