கடைசியில் சில பக்கங்கள் மிஸ்ஸிங்
---------------------------------------------------
நான் நாடகங்கள் எழுதி மேடை யேற்றி இருக்கிறேன் என்று என்னைபடிக்கும் பலரும் அறி வார்கள்பழைய மேடை யேற்றிய நாடகம் ஒன்றுகிடைத்தது அதில் கடைசியில் சிலபக்கங்கள் மிஸ்ஸிங் இல்லை இல்லை பென்சில்லில் எழுதி இருந்ததுபடிக்க முடியவீல்லை அட்வெர்சிடியையும் அட்வான்டேஜாக
மாற்ற எண்ணினேன் இருக்கும் வரை பதிவிடுவது கடைசி பக்கங்களை முடிக்கபதிவுலகநண்பர்களைநாடுவது யார் நன்றாக முடிக்கிறார்களோ அவர்களுக்கு ஒருபரிசு உண்டுரூபாய் ஆயிரம் என்மறதிக்கு நான்கொடுக்கும் விலையாகட்டும்வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாள் விட்டு நாடகம் பதிவாகும் கடைசியில் மீண்டும் போட்டி பற்றி நினைவூட்டுவேன் எழுத்தில் ஆர்வம் உள்ளவர்கள்காற்று உள்ள போதே தூற்றி கொள்ளட்டும்
காட்சி 5
காட்சி 5
இடம் ரோடு
பாத்திரங்கள கனக சபை நவகோடிசபாபதி நிருபர்
(கனகசபை சபாபதி வர எதிரே நவகோடி வேகமாகப் போகிறார்)
கனக--- டேய் சபாபதி இப்ப போனது
நவகோடிதானே
சபா---- இன்னும் அரை ஃபர்லாங்
போனப்புறம் கேளுங்கஎதிர்ல வரும்போது
பார்த்தா எலியும் பூனையும்பொல இருக்கறது எனக்கென்னன்னு இருந்திட்டேன்
கூப்பிடவா (கைதட்டி ) இந்தாங்க மிஸ்டர்
கனக—என்னங்க நவகோடிபர்த்தும்பர்க்காம போறீங்க
நவ --- எங்கேயோ யோசனை
கனக --- ரொம்ப பலமோ
நவ ----பின்னென்ன கனக சபை
கேட்டிங்களா அநியாயத்தை
கனக--- என்ன விஷயம் பதறாம சொல்லும்
நவ-----நான் எவ்வளவோ சொல்லிப்பார்த்துட்டேன் கேக்கிற
வழியக் காணோம் நான் எவ்வள்வு பாடுபட்டுச்
சேர்த்தது
கனக ---- என்ன நவகோடி விஷயத்தசொல்லாம
நவ ---என் பெண் நவ நீதம் கல்யாணம்செய்துகுவேங்குது
சபா---- ப்பூ இவ்வளவுதானா ( சிரிக்கிறான் )
கனக ----பொண்ணாப்பொறந்தா கல்யாணம் செய்துக்கறது தானே லட்சணம்
நவ – என்னய்யா விஷ்யம் தெரியாம பேசறியே நவநீதம் தவிரஎனக்குவெற வாரிசே கிடையாது இதைக்கட்டி கொடுட்திட்டா என்சொத்தெல்லாம் மாப்பிள்ளைக்கு இல்லபோய்ச்சேறும்
சபா---- அப்பா எனக்கு ஒரு ப்ரில்லியண்ட் ஐடியா அப்படி செஞ்சா என்ன ?
கன்க—எப்படி
சபா—நானே நவநீதத்தைக் கட்டிக்கிட்டா
அவங்கசொத்து நம்ம சொத்து எல்லாம்
ஒண்ணுக்குள்ள ஒண்ணா இல்ல இருக்கும்
நவ --- நல்ல யோசனைதான் அப்ப அருணாவோட சொத்து
சபா--- அதுவும் நமக்குத்தான் நானே அருணாவையும் கல்யாணம் செய்த்துக்க்றேன்
கன---டேய் சபாபதி சொத்துக்காகஎவ்வள்வு கல்யாணம் செய்துக்குவே சட்டத்துல பைகாமி நாட் பெர்மிட்டெட்
சபா—அப்பா உங்களுக்கு உலகம் தெரியலே
புருஷன்னா தெய்வமாச்சே
பாரதபெண்ணுக்கு எந்தபொண்ணுப்பா புருஷன்மேலகேஸ்போட்டு
ஜெயிலுக்கு அனுப்புவா என்ன மிஸ்டர் நவகோடி நான் சொல்றது சரிதானே
கனக--- டேய் டேய் டேய் என்னடாஇது மிஸ்டர் நவகோடி சிவ கோடின்னுட்டு ஹாங் மாமான்னு கூப்பிடு
சபா---- போங்கப்பா எனக்கு வெக்கமாயிருக்கு
நவ--- அதனாலென்ன பரவாயில்ல பரவாயில்ல
சபா---அப்போ எனக்கு ரெண்டு கல்யாணம்ன்னு தீர்மான மாயிடுச்சு அப்பா மேரேஜுக்கு முன்னாடி இந்த ரோடில பாதியை அடமானத்துலேந்து மீட்கணும்
கனக--- என்ன சொல்றே நீ
சபா----இல்லப்பாஎனக்கு அந்தக்
கடையில கொஞ்சம்கணக்கு பற்று வரவு கடன்கொஞ்சம் ஜாஸ்தி ஆனபோது
இந்த ரோடில பாதியை அடமானம் வெச்சேன்
அந்தப்பாதி ரோடை நான் யூஸ் பண்றதில்லைஇப்ப
அந்தக்கடனைத் தீர்க்கணும் நவநீதம்
மூலமா நவகோடி மாமா கிட்டருந்து கொஞ்சம் --------
நவ----அதுதான் நம்ம நவநீததுக்கிட்ட
நடக்காது அது உன்னைக்கொண்டு போய் ஜவுளிக்கடையில அடமானம்வெச்சிட்டு கடையை வீட்டுக்கு கொண்டுவந்திடுவா என்னகனக சபை
?------
கனக சபை----என்னடா சம்பந்தி விஷயம்தெரியாதவரா ருக்காரு
சொல்லுடா அவருகிட்ட சம்பந்தம்பண்றவங்க
ஒருத்தருக்கொருத்தர் நேருக்கு நேரா பேசிக்கற வழக்கம் இல்லைன்னு சொல்லுடா அவர்கிட்ட
சபா—அட் …..மாப்பிள்ளைக்கு தரகு வேலையா
நவ---ஆமா மாப்பிள்ள அத நான்மறந்துட்டேன் நவநீதத்துக்கும் உனக்கும்
நடக்கப்போற் கல்யாணச் செலவு எல்லாம் உங்களோடதுன்னு உங்கப்பா கிட்ட சொல்லு மாப்பிள்ள
சபா--- அப்பா நவநீதத்துக்கும்
உங்களுக்கும் நடக்கப்போற கல்யாண செலவு உங்களோடதுதான் ஹாங் இல்லைல்ல
நவநீதத்துக்கும் எனக்கும் நடக்கப் போற கல்யாணாச்செலவு உங்களுடையது
கனக------என்னது
சபா-----அவர் சொன்னாருப்பா
கனக ---ஊம் மாப்பிள்ள அழப்புக்கு வாடகை கார் கூடாது புதுசா கார் வாங்கணும்செலவு பெண்வீட்டாருதுன்னு உங்க
மானர் கிட்ட சொல்லு மகனே
சபா---- போங்கப்பா மாமனார் கிட்ட
பேசறதுக்கு மாப்பிள்ளைக்கு வெக்கமாயிருக்காதா
நவ –கல்யாண செலவை வேணா
நான் ஏத்துக்கறேன் கார் வாங்கற செலவு
மாப்பிள்ளை வீட்டாரது ஆம்மாம்
கனக --- அதுதான் நடக்காது
நவ –நடக்காதா
கனக—நடக்குமா
சபா--- கல்யாணத்துக்கு ஒரு ஐட்டம் சம்பந்தி சண்டை ஆரம்பமாயிடுத்து ஆமா சண்டை வந்துட்டாமட்டும் சம்பந்திகள்நேருக்கு
நேர் பேசிக்குவாங்க போலிருக்கு
நவ ---நடக்குமா நடக்காதான்னு நான்பாத்துடறேன் நீவா மாப்பிள்ள்
கனக----போயிடுவாயடா நீ (என்று சபாபதியைஆளுக்கொரு பக்கம் இழுக்கினறனர்
)
சபா--- கை கை அப்பா கை மாமா கை (அப்போது அங்கு ஓடிவரும்)
நிருபர்---
என்ன ய்யா இது நடு ரோட்டில யுத்தம் நீங்க
யாரு உங்க பேரு
நவ--- ஐயா ஐநா சபை பார்வையாளரா
நிருபர் ---சேச்சே நிமிஷக் கொலை நிருபர் நான் எங்கெங்கே வாலிபர்கள்
பருவப்பெண்களை கும்கும்னு குத்தறங்களோ எங்கெங்கே கொலைகார மாப்பிள்ளைகள் மாமனார்களை சடக் சடக்குன்னு குத்துறாங்களோ அங்கெல்லா நான்காட்சி
அளிப்பேன் பெர்மனெண்ட் அட்ரெஸ் கேர் ஆஃப் கோர்ட் ம்ம்ம் இந்த நடு ரோட் யுத்தத்துக்கான
காரணங்களை சொல்றீங்களா
சபா—எழுதிக்கோங்க்ச சார் மகனுக்கும் மகளுக்கும் ஆகப்போற கல்யாணத்தை பற்றிசம்பந்திகள்நடுத்
தெருவில் சண்டை தாலிகட்டப் போகும் மாப்பிள்ளையின்
கைகளை ஆளுக்கொண்றாக பிய்த்தெடுத்த கோரம்
அந்தோ பரிதாபம்
கனக---ஆமாண்டா மெனக்கெட்டு எல்லாத்தையும் புட்டு
புட்டுசொல்லு சம்பந்திகள் இன்னக்கி அடிச்சுகுவாங்க்
நாளக்கே ஒன்னா சேர்ந்துகுவாங்க என்ன நவகோடி
நவ –நாளைக்கென்ன இன்னக்கே சேர்ந்துகுவோம்வாங்க்
சபா உங்க்ளுக்கு என் அனுதாபம்சார் இன்னும் எப்பவாவதுசண்டை வந்தா சொலி அனுப்பறேன் வரேன் சார் வணக்கம் போடக்கூட கையை தூக்க் முடியலையே (
(மூவரும் போகிறர்கள்)
திரை
மிஸ் பண்ணாமல் வாசித்து வருகிறேன் ஐயா.
பதிலளிநீக்குதொடர்ந்து வாருங்கள் நன்றி
நீக்குதொடர்ந்து வருகிறேன் ஐயா.
பதிலளிநீக்குரசித்தேன் சண்டையை...
வந்து ரசித்தமைக்கு நன்றி ஜி
நீக்குநிமிஷக் கொலை நிருபர்...! ஹா... ஹா...
பதிலளிநீக்குநிமிஷக் கொலை நிருபர்...! ஹா... ஹா...நன்றாய் இருக்கிறதா ஹஹஹ
நீக்குநிருபருக்கு இவரே சம்பவத்தை செய்தி போல சொல்லி விடுகிறார்! தொடர்கிறேன்.
பதிலளிநீக்குநிருபர்கள் அப்படித்தானே செய்தி சேகரிக்கிறார்கள்
பதிலளிநீக்குநிருபருக்கு வேலையே இல்லை போல!!!
பதிலளிநீக்குகீதா
கீதா