Thursday, July 30, 2020

கடைசியில் சில பக்கங்கள் மிஸ்ஸிங்


 கடை சியில் சில பக்கங்கள்  மிஸ்ஸிங்

நான் நாடகங்கள் எழுதி மேடை யேற்றி இருக்கிறேன் என்று என்னைபடிக்கும் பலரும் அறி வார்கள்பழைய மேடை யேற்றிய நாடகம் ஒன்றுகிடைத்தது அதில் கடைசியில் சிலபக்கங்கள் மிஸ்ஸிங் இல்லை இல்லை பென்சில்லில் எழுதி இருந்ததுபடிக்க முடியவீல்லை அட்வெர்சிடியையும் அட்வான்டேஜாக
மாற்ற எண்ணினேன்  இருக்கும் வரை பதிவிடுவது  கடைசி பக்கங்களை முடிக்கபதிவுலகநண்பர்களைநாடுவது யார் நன்றாக  முடிக்கிறார்களோ  அவர்களுக்கு ஒருபரிசு உண்டுரூபாய் ஆயிரம்  என்மறதிக்கு நான்கொடுக்கும் விலையாகட்டும்வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாள் விட்டு நாடகம் பதிவாகும்  கடைசியில் மீண்டும் போட்டி பற்றி நினைவூட்டுவேன் எழுத்தில் ஆர்வம் உள்ளவர்கள்காற்று உள்ள போதே துற்றிக்கொள்ளட்டும்


காட்சி ---9
 இடம்—அருணா மாளிகை
பாத்திரக்கள்--- அருணா நவகோடி  கனக சபை  சபாபதி குமரேசன்
(ட்ரஸ்டிகளின்   வருகைக்காக காத்திருக்கும்  அருணா டம்பப் பையிலிருந்து  ஒரு கண்ணாடியை எடுத்து முகம் பார்க்கையில்   அங்கு  வரும்
சபாபதி--- ஆஹா அருணா நீ இன்னிக்கி  எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா அப்பா பின்னாடி வந்துட்டிருக்காரு  அதுக்குள்ளே  உன் அழகை ஒரு அத்தியாயம் வர்ணிச்சுடறேன்  கேளு
அருணா--- என் அழகை நான்   தெரிஞ்சுகறதுக்கு என்வீட்டில் எத்தனைகண்ணாடிகள் இருக்கு தெரியுமா இருக்கிற அழகை இருக்கிறபடி காட்டும் கூட்டியோ குறைத்தோ காட்டாது
சபாக்கு தெரியுமா ஆனல் எங்க வீட்டுல ஒரு கண்ணாழ்டி  இருக்கு அதில என்ன குறையோ தெரியலை ரசம்பூசினவன் கைராசி  அப்படி நாம என்ன செய்ய
முடியும் அருணா
Aஅருணா---சேச்சே உன்முகராசி அப்படி _( அப்போது ஜி அங்கு வரும்)
கனகசபை----அவங்கம்மா கூட அப்படிட்தான் சொல்லும் சபாபதி முகராசிக்கு அருணா என்ன யார் வேணுமின்னாலும் எங்க வீட்டுக்கு மருமகளா வந்திடும்னு
நவகோடி—ஆமாம் ஆமாம் 
அருணா--- அப்போ சரிதான்  உனக்குகல்யாணம் ஆனாத்தான் சொத்துன்னு நீங்க ஏன்  சொன்னிங்க்ன்னு  இப்பத்தான்   தெரியுது சபாபதிக் என்னை கல்யாண்ம்  செய்துகொடுத்தா  சொத்து  முழுதும்   உங்களுக்குத்தானே                             சபா----எப்படி ஐடியா
அருணா ---இது மட்டும் என்க்குமுன்னாடியே தெரிஞ்சிருந்தா
சபா—கல்யாணமெ செய்துக்கறதில்லைன்னு  சபதம் எடுத்திருக்க மாட்டேஇல்லே அதனால என்ன  மனுஷன்   சொன்னா சொன்னபடி நடக்க இது என்ன பாண்டு பத்திரமா பிராமிசரிநோட்டா
அருணா --- அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லவெறும்  மேரேஜ்  சர்டிஃபிகேட் தான்  எனக்கு ஏற்கனவே கல்யாண்ம் ஆயிடுத்து இதோ சர்டிஃபிகேட்
சபா--- ஆஹா  காத்திருந்தவன்  கண்மணி  காதலியை நேத்து வந்து கயாணம்செய்த்துகிட்ட  வில்லன் யார் சொல்லு அருணா
அருணா --- சொன்னா அவரை என்ன செய்வியாம் 
சபா—என்ன செய்வேனா  என்ன செய்யணும்   நான் ஒரு சீர்திருத்த வாதி முதல்ல உன்னை விதவை ஆக்கிட்டு  விதவா விவாஹம்  செய்துப்பேன்
கனக--- உன்பிடிவாதத்தை  மாத்தின அந்த சாமர்த்தியசாலி யாரும்மா
அருணா—ஏன் மாப்பிள்ளையை உங்களுக்கு  அறிமுகம் செய்து வெக்கணும்னு உயில்ல எழுதி இருக்கா என்ன  உயில்ல இப்படி எழுதி இருக்கு அப்படி எழுதி இருக்குன்னு நீங்க வெளை யாடினதுபோதும் எனக்கு கல்யாணம் ஆயிடுத்து அதற்கு  அத்தாட்சி இதோ
சபா----பேர்ல கூட  பெர்சனாலிடி இல்லையே
கனக ----- யார் இந்தக் குமரேசன் 
சபா--- நாங்க பார்க்ககூடாதா
அருணா--- பார்க்கக் கூடாதாவது  பார்க்கமுடியாது
கனக---- அவ்வ;ளவு  பெரிய இடத்துப் பிள்ளையா அவரு  (_சொல்லி உதட்டைப் பிதுக்குகிறார்)
குமரேசன் -----அருணா  அருணா(என்று அங்கு ஓடிவர அவனைக் கண்டு  அதிர்ச்சியடைகிறாள் அருணா )
அருணா----தாத்தா (என்று வீரிட்டு அலற அவளைப்பிடித்துக்கொண்டு )
கும---- உன்னைப்பார்த்து பேச ஓடிவந்தேனா இடம்தெரியாம ரொம்பத்திண்டாடிட்டேன்
ஏன்  அருணா அப்படிப்பார்க்கிற நான் ஆவியல்ல அருணா  குமரேசன்  சதையும்  ரத்தமும்  உயிரும்   உள்ள உடம்போடு தான்  வந்திருக்கேன் அருணா பாரு
கனக—இது யார் அருணா

அருணா ---ஹங்  யாரோ( தாத்தா) (உள்ளே போகிறாள்)
குமரே---(பிரமித்தபடி)யாரோ    யாரோ
சபா--- யாரையா நீ  பைத்தியம்
கனக--- ஏய் யார் நீ
கும---என்னைதெரியாதவள்போல அருணா  சொன்னாளே  அந்த யாரோ  தெரிந்தடமாதிரி  இவன் சொன்னானே அந்த பைத்தியம் 
சபா---- வக்கணையாப்பேசாதே  உன்  பேர் என்ன
 கும--- அதட்டிப்பேசாதே என் பேரு குமரேசன்
மூவரும் ---  குமரேசனா  இருக்க முடியாது அப்பா போயும்போயும் இந்த ஆளையா  அருணா கல்யாண்ம் செய்துக்கும்
கும ___-என்ன செய்யறது அது அப்படி நேர்ந்துவிட்டபிறகு நீங்க நம்பத்தான் வேண்டும் சட்டப்படி அருணாவுக்கு  நான் கணவன்
சபா--     டேய்
கும—ஊம் மரியாதையா பேசுடா
சபா--- அப்பா பொறுஙக் அவனை மன்னிச்சிடுவோம்  ஏன்னா பயலுக்கு உடம்பு கொஞ்சம்  கரணை  கட்டி போயிருக்கு அருணா புருஷன்னு சொல்லிக்கிறதுக்கு  உனக்கு என்ன யோக்கியதை இருக்கு
குமரே--- சொல்லிக்க மட்டுமல்ல ஒரு புருஷனுக்கு புருஷனாயிருக்க என்னஎன்ன யோகியதை வேணுமோ எல்லாம்   எனக்கிருக்கு  ஆனா  அருணாவுக்கு  என்னை மதிக்கத்தெரியலை  யாரோவாம் 
நவ----உன்னை எப்படி மதிப்பாள்  அருணா உனக்கு  சொத்து இருக்கா
கும---காலணாகூட கடனில்லை அதை விட பெரியசொத்து என்ன இருக்க  முடியும்
கனக---உனக்கு என்ன வேலை
கும--- உங்களைப்போல பெரிய மனுஷங்க நடத்தும் தொழிற்சாலையில் பாடுபட்டு ஒண்ண்  ஆயிரம்மடங்கு பெருக்குவது
சபா---- அதுக்கு உனக்கு என்ன கிடைக்கும் 
கும---மத்தவன் கையை எதிர்பார்க்கத்தேவை  இல்லாத அளவுக்கு ஏதோகிடைக்கும்
ஆடம்பரச் செலவு இல்லை எனக்கு  அதுவே பெரிய வருமானம்தானே 
கனக ---இப்படி எல்லாம்நினைக்கிற நீயா  சொத்துக்காக அருணவைக் கட்டிக்கிட்டே     
கும----சீச்சீ  சொத்துக்கு மதிப்பு கொடுத்து அவளை நான் மணக்கலை அதற்கு ஆசைப்பட்டு என்மதிப்பையும் நானிழக்கத் தயாரில்லைஅருணவைப்பார்த்து நன்றிசொல்லிட்டு போலாம்னுதான் வந்தேன் ஆனா பெரிyய இடத்து மனுஷங்க கிட்ட பண்புகள் இல்லைன்னு தெரிஞ்சு கிட்டேன்
கனக---- நில்  அவ்வளவு சுலபமா  நீ இங்கிருந்து  வெளியே போக முடியாது அன்னக்காவடி நீ  அருணாவுக்கு  புருஷன்னு சொல்லிக்கிட்டதே பெரிய அவமானம் 
குஅ--- எனக்குத்தானே
நவ--- எங்களுக்கு
சபா—அந்தமான நஷ்டத்துக்கு  ஐயாயிரம்ரூபாய் ஈடு கொடுக்கணும் 
கும--- மானம்கூட உங்களுக்கு வருமானத்துக்கு ஒருசாதனமா இருந்தாலும்  உங்க மானம் இவ்வளவு  மலிவா இருக்கக்கூடாது  அருணாவுக்கு நான்  தான்  புருஷன்  ஜம்பமில்லை  இதோ ஆதாரம்(சர்டிஃபிகேட்டை  காட்ட )
கனக--- யார்ரா  அங்க இவனை கழுத்தப்பிடிச்சு  வெளியே தள்ளுஆதாரமாம் ஆதாரம் ----சபா----அதுக்கு ஒரு ஆள்வேணுமா   (
(குமரேசனை நெருங்க)
கும --- ஜாக்கிரதை  கிட்ட வந்தே  உன் சுகாதாரம் கெட்டுவிடும் (மிரட்டி போகிறான்)                                                                                                                                                                              
நவ ---பேராசை பெரு நஷ்டம்னு சும்மாவா சொன்னாங்க(அருணா  அங்கு சோர்வுடன்வர)
கனக--- இதெல்லாம் என்னம்மா
அருணா --- இன்னுமா புரியலே எனக்கு கல்யாணம் ஆயிடுத்து என்சொத்தை ஒழுங்கா என்னிடம் ஒப்பச்டைங்க  இதுவரை உயிலக்கூட காட்டாம
கனக ---காட்டாம  பூட்டியா வெக்கப் போறோம் இதோ படிக்கிறேன்   கேளு “பதினெட்டு வயதானபின் அருணா கல்யாணம் செய்து கொண்டு    முப்பது நாளாவதுபுருஷனுடன்  குடித்தனம்நடத்திய பின் சொத்தை சுயாதீனம் ச்ய்துகொள்ள  வேண்டியது
அருணா---- என்னது  முப்பது நாள் குடித்தனம் வேற செய்யணும்னா சொல்றீங்க
நவ---நாங்களா  சொல்றோம்   உங்கப்பா எழுதிவெச்ச  உயில்பேசுதம்மா உயில்பேசுது
கனக---எங்களுக்கு ஏன்  வீண்பொல்லாப்பு  அவர் உசிரை விடும்போ எழுதின உயில் எங்க உயிரை இல்லவாங்குது  முப்பது நாள்குடித்தனம் செய்துட்டு வந்து கேளூ உடனே சொத்தை  ஒப்படைக்கிறோம் வாய்யா போலாம் 
                                 திரை         10 comments:

 1. சுவாரஸ்யமான வசனங்கள் ரசிக்க வைத்தது ஐயா.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் ரசிப்பது போட்டியில் கலந்து கொள்ள எதுவாயிருக்கும் நன்றி

   Delete
 2. // கிட்டே வந்தால் சுகாதாரம் கெட்டு விடும்... //

  ஹா... ஹா... அருமை ஐயா...

  ReplyDelete
 3. உயிலில் அடுத்த விதியும் வைத்திருக்கிறாரா அவள் அப்பா?  பாவம்தான்!

  ReplyDelete
  Replies
  1. கதைக்கு திருப்பு முனையோ

   Delete
 4. வசனங்கள் சுவாரசியம். குறிப்பாக குமரேசன் பேசும் வசனங்கள். கொஞ்சம் சோ அவர்களை நினைவுபடுத்தியது டக்கென்று. ரசித்தேன் சார்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. என் எழுத்துகளைப் ப்டிப்பவருக்கு நன்கு புரியும் நான் யாரைப்போலவும் எழுதுவதில்லை அக்மார்க் என் பாணிதான்போட்டியில் பங்கெடுப்பது பற்றி தீர்மானித்க்து விட்டீர்களா

   Delete
 5. உயில் பேசுது. இதனை வைத்து மிரட்டுபவர்கள் பலர். வாழ்வில் பலரைப் பார்த்துள்ளேன்.

  ReplyDelete