சிறகடிக்கும் எண்ணங்கள்
என்னவொ தெரியலை நான் எழுதிய பழையபதிவு ஒன்று என்னை மீள்பதிவாக்கு
என்றது ஒரு வேளை இதுதான் இண்ட்யூஷனோ
எண்ணச் சிறகுகளில்..
------------------------------
அந்திசாயும் நேரம், அழகான மாலை வேளை
பகல் இறந்து இரவு உயிர்க்கும்போது,
வாழ்வின் மாலையில் மதி மயங்கி,
எண்ணச் சிறகுகள் என்னுள்ளே படபடக்க
எண்ணிப் பார்க்கிறேன், இதுகால் இருந்த இருப்பை.
அன்றொரு நாள் எந்தையும் தாயும் மகிழ்ந்து குலவ,
விபத்தின் விளைவாய், எங்கிருந்தோ என்னைக்
கேளாது இங்கெவனோ தூக்கி எறிந்திட்டான்,
இன்னும் எங்கோ எனைக் கேளாது எறியப்படுவேனோ
கண்மூடி உறக்கம் விழித்தெழுந்தால்
நாளை என்பது நிஜமாகும்.
கடந்த காலம் ,வாழ்ந்த வாழ்க்கை
கடந்ததுதானே; மாற்றல் இயலுமோ.
அந்த நாள் அக்குயவன் கை
ஆட்டத்தால் நேர்ந்த பிழைக்கு(பிழையா.?)
இந்த நாளில் ஏழையெனை
ஏனோ குறைகள் கூறுவரே.
நெஞ்சே, நீயும் எத்தனை நாள்
நெருப்பில் மூழ்கி நின்றிடுவாய்.
வஞ்ச உலகில் எல்லாம் ஒழித்திட்டு,
மறந்து நீக்கிச் சென்றிடவே
சித்தத்தில் நீயும் தயாரா, எண்ணுவாய் நீயே.
எண்ணி எண்ணி உன் குறைகள் மட்டும் ஏனோ
உன்னுகின்றாய். மண்ணில் நீயோர் ஒளிவட்டம்
மற்றவ் வட்டம் காண்போர் விழியின் வளைவே
வளைவெல்லாம்.என்றறிந்தவந்தானே நீ.
வாழ்வின் விடியல்,பகல்,மாலை வரை வந்து
விட்டாய்,வென்றுவிட்டாய். வாழ்க்கை நிறைவேயன்றோ
நீ சென்ற பின்னே பழிக்கும்படியா இருப்பாய்.
உன் உயிர்ப் பறவை இன்னும் இருக்கிறது
அறம் ,பொருள் ,இன்பம் கழித்தாயிற்று;
வீடு நோக்கிப் பறப்பதே மீதி.
என்னுயிர்ப் பறவையே,
நான் கண்களை மூடிக் கொள்கிறேன்
நீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.
என் நெஞ்சுக்கூட்டை விட்டு
அழகாக வெளியேறிவிடு, யாரும் அறியாமல்.
மூடிய கண்கள் விழித்து விட்டால்
------------------------------
அந்திசாயும் நேரம், அழகான மாலை வேளை
பகல் இறந்து இரவு உயிர்க்கும்போது,
வாழ்வின் மாலையில் மதி மயங்கி,
எண்ணச் சிறகுகள் என்னுள்ளே படபடக்க
எண்ணிப் பார்க்கிறேன், இதுகால் இருந்த இருப்பை.
அன்றொரு நாள் எந்தையும் தாயும் மகிழ்ந்து குலவ,
விபத்தின் விளைவாய், எங்கிருந்தோ என்னைக்
கேளாது இங்கெவனோ தூக்கி எறிந்திட்டான்,
இன்னும் எங்கோ எனைக் கேளாது எறியப்படுவேனோ
கண்மூடி உறக்கம் விழித்தெழுந்தால்
நாளை என்பது நிஜமாகும்.
கடந்த காலம் ,வாழ்ந்த வாழ்க்கை
கடந்ததுதானே; மாற்றல் இயலுமோ.
அந்த நாள் அக்குயவன் கை
ஆட்டத்தால் நேர்ந்த பிழைக்கு(பிழையா.?)
இந்த நாளில் ஏழையெனை
ஏனோ குறைகள் கூறுவரே.
நெஞ்சே, நீயும் எத்தனை நாள்
நெருப்பில் மூழ்கி நின்றிடுவாய்.
வஞ்ச உலகில் எல்லாம் ஒழித்திட்டு,
மறந்து நீக்கிச் சென்றிடவே
சித்தத்தில் நீயும் தயாரா, எண்ணுவாய் நீயே.
எண்ணி எண்ணி உன் குறைகள் மட்டும் ஏனோ
உன்னுகின்றாய். மண்ணில் நீயோர் ஒளிவட்டம்
மற்றவ் வட்டம் காண்போர் விழியின் வளைவே
வளைவெல்லாம்.என்றறிந்தவந்தானே நீ.
வாழ்வின் விடியல்,பகல்,மாலை வரை வந்து
விட்டாய்,வென்றுவிட்டாய். வாழ்க்கை நிறைவேயன்றோ
நீ சென்ற பின்னே பழிக்கும்படியா இருப்பாய்.
உன் உயிர்ப் பறவை இன்னும் இருக்கிறது
அறம் ,பொருள் ,இன்பம் கழித்தாயிற்று;
வீடு நோக்கிப் பறப்பதே மீதி.
என்னுயிர்ப் பறவையே,
நான் கண்களை மூடிக் கொள்கிறேன்
நீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.
என் நெஞ்சுக்கூட்டை விட்டு
அழகாக வெளியேறிவிடு, யாரும் அறியாமல்.
மூடிய கண்கள் விழித்து விட்டால்
இன்னும் இன்னும் சிறகடிப்பாயே
யே
மனதின் எண்ணக்குவியல்கள். அருமை. ரசித்தேன்.
பதிலளிநீக்குமுன்போல் எழுத்தில் ஃப்லோ இருப்பதில்லை
நீக்குதொடர்ந்து உற்சாகமாக எதையாவது பதிவிட்டுக் கொண்டிருப்பதே பாராட்டுக்குரியது.
நீக்குஎழுதுவது சிரமமில்லை நான்சொலல வந்தது ழுத்வதில் ஒரு ஃப்லோ கிடைப்பதில்லை என்றுதான்
நீக்குசிந்தனைகள் சிறகடித்து பறக்கும் நிலைப்பாட்டை சொல்லிய விதம் நன்று.
பதிலளிநீக்குவந்து ரசித்ததற்கு நன்றி ஜி
நீக்குரொம்ப நல்லாருக்கு சார். அழகா எழுதியிருக்கீங்க. ரசித்தேன்.
பதிலளிநீக்குகீதா
மனதில் தோன்றியதை எழுதியது பரட்டுக்குநன்றி
நீக்குஎண்ணப் பறவை சிறகடித்து விண்ணில் பறக்கிறது.. என்ற பாடல் நினைவுக்கு வந்தது.
பதிலளிநீக்குஎழுதுவது ஒன்று வாசிப்பவர் புரிந்து கொள்வது ஒன்று என்று ஒட்டி வராமல் விலகும் பொழுது தான் எண்ணங்கள் தன்னைத் தானே நொந்து கொள்கின்றன.
எனக்கு அந்தப்பாடல் தெரியாது பொதுவாகவே நான் எதிர்கொள்ளூம் பிரச்சனை எழுதியதை புரிந்து கொள்ள முடியாதபடி இது இல்லை என்றே நினைக்கிறேன் எண்ணங்கள் நொந்து கொள்ளது எழுதியவர் ஒரு வேளை நொந்து கொள்ளலாம்
பதிலளிநீக்குஎண்ணப் பறவை பறக்கட்டும்
பதிலளிநீக்குஉயிரை மையமாய் வைத்து எழுதியது
நீக்குதத்துவம், ஆதங்கம், மகிழ்ச்சி என உணர்ச்சிக்கலவைகளின் தொகுப்பாக உள்ளது ஐயா.
பதிலளிநீக்குஅப்படிஎழுந்த எண்ணமே எழுத்தில்
நீக்குஎண்ணச் சிறகுகளில்...
பதிலளிநீக்குவண்ணமாக வரைந்தீர்கள்
அருமை
உயிர் பிரிவதை எண்ணச்சிறகுஅலைல் வடித்தேன் பாராட்டுக்கு நன்றி
நீக்குநன்றி டிடி
பதிலளிநீக்குவிபரீத ஆசைகள். காலா அருகில் வாடா நான் உன்னை உதைக்கிறேன் என்று எழுதிய கைகளோ என்னுயிர் பறவையே சென்று விடு என்றும் எழுதியது என்று ஒரு வியப்பு. மாறுபட்ட சிந்தனைகள் இருக்கலாம். ஆனால் "நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ....... ". விதியை வெல்ல மதி சில சமயம் தான். ஆனாலும் விதியே கடைசி முடிவு. ஆகவே இருக்கும் வரை இயல்பாக இருங்கள். காத்திருப்போம். கவலைகள் வேண்டாம்.
பதிலளிநீக்குJayakumar
நான் எழுதியதைசரியாகப் புரிந்து பின்னூட்டம் இட்டதற்கு நன்றி யாருக்கும் எண்ட பாதிப்பும் இல்லா,மல் போக வேண்டும்என்பதன் விளிவே இப்பதிவு காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் இப்போது இடுவெ இயல்பு
நீக்கு