திங்கள், 20 ஜூலை, 2020

எண்ணக் கலவை



                               எண்ணக்கலவை                             
                              -------------------------------


என் வீட்டருகே ஒருவருக்கு ஜுரம்  அவர் அதை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினார் அவர்கள்வந்துகோரொனாவுக்காக டெஸ்ட் செய்து அவருக்கு கொரோனா என்றுகூறினார்கள் வீடும்அவர்களும்தனிமைப்படுத்தப்பட்டனர் இரண்டு நாட்கள்கழித்து அது தவறான செய்தி என்றும் எந்தபிரச்சனையும் இல்லை என்றனர் இம்மாதிரி எத்தனை கேஸ்களோ வாக்காளர் சீட்டு குளறுபடிகள் போல் என்று நினைக்கமுடியவில்லை எத்தனை மன சங்கடங்கள் அவர்களுக்கு இருந்திருக்கும்  இந்த பாண்டமிக் காலத்தில் அவர்கள் ஏதோ தீண்டப்படாதவர்கள்போலநினைக்கப்பட்டது எத்தனை மன உளைச்சலைக் கொடுத்திருக்கும்
இந்த தொற்று உள்ளவர்கள்  எண்ணிக்கை குறைய வாய்ப்பில்லை ஆனால் பீதியைகுறைக்க பரிசோதிக்கப்பட்டவர்களில்  தொற்று இல்லாதவர்களின்  எண்ணிக்கை கணிசமாக இருக்கும்அதை வெளியிட்டால் கொஞ்சம் தைரியம்வரலாம் எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்பது பொல் வாட்ஸாப் மருத்துவர்களின் பேச்சை அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது ஆயுர்வேத மருந்து என்றால் அது நல்லதாத்தான் இருக்கும் என்று நம்பும் நம்மைஅவர்கள் டேக்கிங் ஃபர் எ ரைட்  5000 வருட பாரம்பரியம் என்னும் விளம்பரங்கள் வேறு  இந்த மருந்துகளை ஏன்சோதனைக்கு  உட்படுத்தக் கூடாது
 இங்கு  பெங்களூருவில் காவல் துறையினருக்கு அரசே மருந்துகள் தருகிறார்களாம்  பெரும்பாலும் ஆயுர்வேத மருந்துகள் அதைக் கொடுக்க மருத்துவர் பரிந்துரை வேண்டாமோ
பதிவுகளில் எதையும் செய்ய முடியாமல் பிரார்தனையையே நம்புகிறவர்களைப்பார்க்கிறேன் அந்த சிந்தனையில் எழுந்தது
 
அசதோமா சத்கமையா
தமசோமா ஜ்யோதிர்கமையா
ம்ருத்யோர்மா அம்ருதம்கமையா
ஒம் ஷாந்தி ஷாந்தி ஷாந்திஹி!
பொருள்:
பொய்யான இந்த உலகத்தனிலிருந்து மெய்யானஎன்னுள் என்னை அழைத்து செல்வாய்
மாயை என்ற இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு எம்மை வழி நடத்துவாய்
இறப்பு என்ற பயம் நீக்கி அழிவற்ற ஆன்ம ஞானம் உணரச்செய்வாய்
ஒம் என்ற பிரணவப் பொருளே! ஷாந்தி, ஷாந்தி, ஷாந்தி!”
இது ஆடிமாதம்  தமிழகத்தில் கூழ் ஊற்றும்  வழக்கம் உண்டு  கேரளத்திலும் கர்கடக கஞ்சி  கொடுப்பார்கள்  இந்தமாதத்தை  ராமாயணமாதம் என்பார்கள் ராமாயணபாராயணம் நடக்கும் நீநீநீ,,,,ள ராமாயணத்தைக் குருக்கி சாதரணன் ராமாயணமாக தினம் பாராயணம் செய்யும் விதமாக தருகிறென் அனைவரும்நலம் பெருக  
பதிவுக்கு பெயர் சூட்டலே பெரிய வேலை தலைப்பை பார்த்ததும்காததூர போகிறார்கள் தலைப்பைப்பார்த்து புடவை வாங்குவது போலவும் அட்டையை பார்த்து புத்தகம்வாங்குவது போலவுமிருக்கிற்து       




22 கருத்துகள்:

  1. கொரோனாவை வைத்து பயமுறுத்துதலும், சுற்றிவர இருப்பவர்கள் படுத்துதலும் அதிகமாகவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மைப் படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

      நீக்கு
  2. நீங்கள் கூறுவது உண்மை. எத்தனையோ மகா மாரிகள் வந்து போய்விட்டன. ஆனாலும் இந்த கொரானாவின் மேல் ஏன் இத்தனை முன்கருதல், பயம் என்று நினைக்கலாம். தெரிந்த காரணங்கள் 
    1. இதுவரை வந்த இந்த கரோனா போன்ற நுண் கிருமிகளுக்குத்  தடுப்பூசி மற்றும் மருந்துகள் உள்ளன. 2. இப்போது வந்துள்ளது புது மாதிரியானது. இதற்கு தடுப்பூசிகளோ மருந்தோ சரியாகவில்லை. . 3.தற்போது உள்ள கொரோனா பல் வேறு வடிவங்களில் தன்னைத் தான உரு மாறிக்கொள்வதாக கூறுகின்றனர். அதாவது அமெரிக்காவில் உள்ள கொரோனா இந்தியாவில் இல்லை. இந்தியாவிலும் பலவித மாற்றங்கள். 4. பண்டைக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்களுக்கு பரவுதலுக்கு ஒரு பரப்பான் (medium) தேவை (கொசு, நாய், பன்றி, கோழி, வவ்வால்) ஆனால்  காற்றிலும் இந்த கொரோனா பரவக்கூடியது. 5.இந்த வைரஸ்கள் எல்லோருக்கும் எல்லா எதிர்வினைகளையும் உண்டாக்குவதில்லை. ஆகவே சாதாரண காய்ச்சலா அல்லது கொரோனா காய்ச்சலா என்று உடனே சொல்ல முடியாது. 6. தற்போது செய்யப்படும் பரிசோதனைகள் ஆன்டிஜென் என்ற நோய் எதிர்ப்பு சக்தியை கண்டு கொரோனா அல்லது சாதாரண காய்ச்சல் என்று வேறுபடுத்துகின்றனர். ஆனால் ஆன்டிஜென் உள்ளவர்க்கெல்லாம் கொரோனா நோய் உண்டு என்பதில்லை. 7.ஆக நோயை கண்டறிவதிலும், நோயைக் குணப்படுத்துவதிலும், முன்னேற்றம் குறைவு. அதனால் நோய் பரவாமல் தடுப்பதே சிறந்த வழி. 8. ஆயுர்வேத சித்த வைத்தியங்கள் மூலம் பரிசோதனை செய்யலாம் தான். ஆனால் இந்த நோய் உயிரைப் பறிக்க வல்லது. அது புல்லட் ப்ரூப் கோட் அணிந்து துப்பாக்கி முன் நிற்பது போன்றது. உயிர் போகலாம், அல்லது இருக்கலாம். தற்போது எடுத்த முன்னெச்செரிக்கைகளால் மற்ற கிருமிகள் மூலம் பரவும் நோய்களும் ஓரளவு கட்டுப்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதும் உண்மை. பூமிக்கு பாரம் குறைக்க வந்த மஹாபாரதப் போர் போன்று இதுவும் ஒன்றோ? 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விலாவரியான விளக்கங்களுக்கு நன்றி சார் ஆண்டவன் மீண்டுமொருஅவதாரமெடுத்து வரவேண்டுமோ

      நீக்கு
    2. Jaya kumar Sir, you have an excellent understanding, Hats off to you— Rajan

      நீக்கு
    3. நானும் எழுதி இருக்கிறேன் எந்த விவரமும் இல்லாமல் ஜெயக்குமாரை பாருங்கள் புரிந்து எழுதியதை

      நீக்கு
  3. தற்காப்பு நடவடிக்கையே தேவை ஐயா. இயல்பு நிலைக்கு நாடு திரும்ப ஒத்துப்போம்.

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. இது ஒருவிஷ்ஃபுல் திங்கிங் ஆக இருக்கக்கூடாது

      நீக்கு
  5. கொரோனாகூட இன்று வியாபாரிகளின் கைக்குள் அடங்கி விட்டது ஐயா.

    எல்லோருமே வதந்தியை பரப்புகின்றனர்.

    பதிலளிநீக்கு
  6. பயமுறுத்துகிறார்கள் என்று சொல்ல முடியாது.  அவர்களின் சோதனை எந்த அளவோ...

    ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார் நன்றாய்ச் சொல்லி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  7. நமக்கு நாமே தைரியம் சொல்ல தினம் ராமாயணம் பாராயணம் செய்வோம்

    பதிலளிநீக்கு
  8. அந்த நம்பிகை நல்லது சார்

    பதிலளிநீக்கு
  9. பொய்யான இந்த உலகத்திலிருந்து -- அவ்வளவு சுலபமாக இது புரியவில்லை. அடுத்து,
    மெய்யான என்னுள் என்னை -- இதுக்கு அர்த்தம்?

    பொய்யான உலகில் வாழும் மெய்யான மெய்யான என் -- உங்களுக்குப் புரிகிற் மாதிரி கொஞ்சம் சொல்லுங்களேன்..

    பதிலளிநீக்கு
  10. சில விஷயங்களை துருவித்துருவி ஆராயக்கூடாது தமசோமா ஜோதிர்கமயா என்னும் வாக்கியம் அடிக்கடி கேட்பது சம்ஸ்கிருதம் தெரியாத நான் புரிந்தபடி எழுத முற்பட்டதன்விளைவே இது புரிவதற்கு ப்தில் கன்ஃப்யூஸ் செய்து விட்டது /1. இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்:
    2. பொய்யிலிருந்து உண்மைக்கு அழைத்துச் செல்:
    3. மரணத்திலிருந்து அமரத்துவத்திற்கு கூட்டிச் செல்:
    4. ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி ஹி/:இது விளக்கி இருக்கும் அல்லவா

    பதிலளிநீக்கு
  11. மூன்று அல்லது நான்கு நாளில் குணமாகித் திரும்புகிறார்கள். இருக்கா இல்லையான்னு அவங்களுக்கே தெரில.. இதுதான் நிலைமை. ஸ்லோகம் அற்புதம்.

    பதிலளிநீக்கு
  12. எங்கள் குடியிருப்பிலும் ஒருவருக்கு கொரோன வந்திருக்கிறது என்று செய்தி வந்ததும் நாங்கள் கீழே செல்லவே பயந்தோம். பிறகு அவருக்கு வந்திருப்பது கொரோனா அல்ல, டைபாயிட் என்றார்கள்.

    பதிலளிநீக்கு
  13. சில தவறான சேதிகள் எதிர் வினை ஏற்படுத்தலாம்

    பதிலளிநீக்கு