Thursday, July 16, 2020

பல்சுவை


                                                         பல்சுவை
                                                         --------------
சுமைதாங்கி  என்னும் படத்தில் - கமலா லக்ஷ்மணின்   நாட்டியம்  எனக்குபிடித்திருந்தது அதைப் பகிர்கிறேன்                     
 dean martin  என்றொரு பாடகர் butter  cup of golden hair  என்று பாடியிருந்தார்  அந்த  இன்ஸ்பிரேஷனில்  எழுந்த வரிகள்
        
வெண்ணைய்க் கிண்ண்மே உன் கன்னமே
வெண்சங்கு கழுத்தில் புரளும்  முத்தச் சுருளும் செம்பட்டையோ தங்க நிறமோ  நான் அறியேன் ஆனால்உன்னை ஸ்பரிசிக்க  கொடுத்துவைத்தவை  அவை
என்னைப் பார் என்று கூவும் கொங்கைகளும்   அழகானவை 
நானவற்றை மேயக்கண்டால் அனிச்சையாய் உன்கைகள் அதை மறைக்கும்
கட்டி அணைக்க  கருதி வந்தால் கண்மணியெ காதல் கொண்டால்
உந்தன் பார்வையே  அதைத் தடுக்கும்
என்னை நீயும்  தடுத்தாட்கொள்வதும் ஏனோ
வெண்ணைக் கிண்ணமே தங்கச் சிலையே  காதலுக்கு
குறை இல்லையேமனித இயல்பு பற்றி முன்பு எப்போதோ எழுதியது  அவைது மீண்டும்  இங்கே


முதன் முதலில் வேலைக்குப் போய் முதல் மாத சம்பளத்தில் ஒரு மணி பர்ஸ் வாங்கினான் அவன். வேலை கிடைத்ததற்கு நன்றி சொல்லும் விதமாக, அவனது இஷ்ட தெய்வத்தின் படம் ஒன்றை பர்ஸில் வைத்தான். சில நாட்கள் கழிந்ததும் தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரின் புகைப்படத்தையும் சேர்த்து வைத்துக் கொண்டான். சில வருடங்களில் அவனுக்கு திருமணமானது. அவனது ஆசைமனைவியின் புகைப்படத்தை பர்சில் வைக்கப் போனான்.படத்தை வைக்கக் கொஞ்ச்ம் சிரமமாக இருந்தது. அப்போது கடவுளின் படத்தை நீக்கி விட்டு மனைவியின் படத்தை வைத்துக் கொண்டான். சில வருடங்கள் கழிந்தது. அவனுக்கு அழகான ஒரு குழந்தை பிறந்தது. குழந்தையின் புகைப் படத்தை வைக்கப் போகும் முன் தாய் தந்தை படங்களை நீக்கினான் இவனுக்கு வயதாகி பிள்ளைகள் வளர்ந்ததும் மனைவியின் புகைப் படத்தை அகற்றி தன் பேரக் குழந்தையின் புகைப்படத்தை வைத்துக் கொண்டான். இன்னும் சில வருடங்கள் கழிந்ததும் தன் மக்கள் தன்னை உதாசீனப்படுத்துவதுபோல் தோன்றவே எல்லோருடைய படங்களையும் அகற்றிவிட்டு மீண்டும் தன் இஷ்ட தெய்வத்தின் படத்தைத் தேடி எடுத்து வைத்துக் கொண்டான்....!
---------------------------------------------------------------------------------------------------------------


ஒவ்வொரு முறையும் ஹெலிகாப்டரைப் பார்க்கும் போதும் கணவன் “எனக்கு அதில் பயணம் செய்ய ஆசையாய் இருக்கிறது “ என்பான் .மனைவி “ எனக்குப் புரியுதுங்க. இருந்தாலும் அதில் ஏறிச் சுற்றிப் பார்க்க ரூபாய் ஐநூறு கேட்கிறார்கள். ஐநூறு ரூபாய் என்றால் ஐநூறு ரூபாய் அல்லவா “ என்று கூறி அவன் வாயை அடைப்பாள். ஒருமுறை ஒரு திருவிழாத்திடலில் ஹெலிகாப்டர் பயணத்துக்கு ஏற்றிக் கொண்டு போவதும் மீண்டும் வந்து வேறு சிலரை ஏற்றிக் கொண்டு போவதுமாய் இருந்தது. கணவன் மனைவியிடம் “ எனக்கு எண்பது வயதாகிறது. இப்போது என்னால் பயணம் செய்ய முடியாமல் போனால் ஒருவேளை எப்போதும் முடியாமல் போகலாம்” என்று குறைபட்டுக்கொண்டான். அப்போதும் மனைவி “ஹெலிகாப்டரில் ஏறிச் சுற்றிப்பார்க்க ரூபாய் ஐநூறு கேட்கிறார்கள். ஐநூறு என்றால் ஐநூறு ரூபாய் அல்லவா.?என்றாள். இவர்களுடைய சம்பாஷணையை ஹெலிகாப்டர் பைலட் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் இவர்களிடம் “ நான் உங்கள் இருவரையும் ஹெலிகாப்டரில் ஏற்றி சுற்றிக் காட்டுகிறேன்.ஒரு பைசா தரவேண்டாம்.  ஆனால் ஒரு கண்டிஷன். பறக்கும்போது இருவரும் ஏதும் பேசக் கூடாது. மீறி ஏதாவது பேசினால் ஆளுக்கு  ஐநூறு ரூபாய். ஐநூறு என்றால் ஐநூறு ரூபாய் அல்லவா.” என்றார். கணவனும் மனைவியும் ஒப்புக்கொண்டு ஹெலிகாப்டரில் ஏறினார்கள். பைலட் ஹெலிகாப்டரை செலுத்தும்போது மிக வேகமாகவும்
திடீரென்று மேலே ஏறியும் அதேபோல் திடீரென்று கீழே இறக்கியும் பல சாகசங்களை நிகழ்த்தினார். கணவன் மனைவி இருவரும் ” மூச் “ ஒரு வார்த்தை பேசவில்லை. பைலட் கீழே ஹெலிகாப்டரை இறக்கியதும் கணவனிடம் நான் என்னென்னவோ சாகசங்கள் செய்தும் நீங்கள் அலறி சப்தம் செய்வீர்கள் என்று நினைத்தேன். ஆனால் நீங்களோ.... I AM IMPRESSED ஒரு சப்தமும் எழுப்பவில்லை” என்றார். கணவன் “ உண்மையைச் சொல்வதென்றால் என் மனைவி கீழே விழுந்ததும் நான் உரக்கக் கூச்சல் போட நினைத்தேன்.ஆனால்.... ஐநூறு என்றால் ஐநூறு ரூபாய்அல்லவா என்றார் 
                             --------------------------------------- 

24 comments:

 1. Replies
  1. வந்து ரசித்ததற்கு நன்றி சார்

   Delete
 2. இஷ்ட தெய்வத்தின் படத்தின் வைப்பது பரம்பரை பழக்கமாக இருக்கலாம்...!

  இரண்டாவது நபருக்கு மனைவி மேல் அதீத பாசம்...! ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. மனித இயல்புகள் சிலவற்றைகட்டவே பதிவு வருகைக்கு நன்றி

   Delete
 3. பெரியவரின் மனைவி ஐநூறு பெறாதவரா ?

  காலம் மாறும்போது காட்சியும் (படம்) மாறுகிறது.

  ReplyDelete
  Replies
  1. ஐநூறு என்றால் ஐநூறு அல்லவா அவ்ர் மனைவி சொன்னதுதானே

   Delete
 4. ஐம்பதிலும் ஆசை வரும் என்றது எண்பதிலும் ஆசை வரும் என்பதாகி விட்டது. பர்சில் படம் உண்மை.
   Jayakumar

  ReplyDelete
  Replies
  1. ஆசைக்கு நரை இல்லை ஒப்புக்கொள்வதில் ஏந்தயக்கம்

   Delete
 5. புகைப்படங்கள் மாறிய கதை மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. மனித இயல்புக்கு எடுத்துக்காட்டு ?

   Delete
 6. பர்சில் படங்கள் மாறுவது இயல்பு. மனைவிக்கு அவ்வளவுதானா மதிப்பு? 

  ReplyDelete
 7. மனைவியே ஐநூறு என்றால் ஐநூறு என்றாரே

  ReplyDelete
 8. ஆஹா...இந்த கெலிகேப்டர் ஜோக் கேள்விப்படாதது...அருமை...

  ReplyDelete
  Replies
  1. முன்பு எப்போதோ எழுதியதுகேள்விபட்டிருக்க வேண்டுமே வருகைக்கு நன்றி

   Delete
 9. பர்சில் வைக்கும் படம் தர்ப்பணம் செய்யும்போது மாறும் தலைமுறைப் பெயர்களை நினைவு ப்படுத்துகிறது.

  ஹெலிகாப்டர் ஜோக் ஏற்கெனவே படித்திருந்தாலும் மீண்டும் ரசித்தேன்.  

  கவிதை ஓகே.

  ReplyDelete
  Replies
  1. பர்சில் வைக்கும் படம் தர்ப்பணம் செய்யும்போது மாறும் தலைமுறைப் பெயர்களை நினைவு ப்படுத்துகிறது..புரிய்வில்லை

   Delete
 10. பல்சுவை எல்லாம் சுவை...

  ReplyDelete
  Replies
  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகை மகிழ்ச்சி

   Delete
 11. என்பது வயதிலும் அவர் ஆசை நிறைவேறவில்லை போல!

  ReplyDelete
 12. உங்கள் மனதில் இன்னும் அழியாதிருக்கும் காதல் உணர்வுகளை ஒரு காவியமாகப் படைத்தால் என்ன? இன்றே ஆரம்பித்துவிடுங்கள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. என்பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரியும் என் காதல் உண்ர்வுகள் பல பதிவுகளில் விரவி இருக்கும்

   Delete
 13. பல்சுவை ரசித்தேன். அருமை.
  பர்சில் படங்கள் மாறுவது ரசிக்கும்படி இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. பதிவை ரசித்தது கேட்டு மகிழ்ச்சி

   Delete