திங்கள், 6 ஜூலை, 2020

கொரோனா எண்ணங்கள்



                                     கொரோனா எண்ணங்கள்
                                        ------------------------------------

-
அரசின்  கணிப்புகள் தொடர்ந்து இருந்தாலும் கொரோனாவால் பாதிப்படைபவரி எண்ணிக்கை கூடுகிறதே தவிர  குறையக் காணோம் இன்னும்   சொல்லப் போனால் எந்தஒரு பிடியும் தெரியாமல் தவிக்கிறார்கள் என்றே தோன்றுகிறது ஊரடஙுகு செய்வதால் பொருளதாரம் சீரழிந்ததோடு  பீதியும் அதிகரித்து இருக்கிறது எந்த  சின்ன உடல்நலக்கேடுஎன்றாலும் கொரோனவோ  என்னும் எண்ணமே முதலில் வருகிறது இன்னும் குருடராய் யானையை  அடையாள்ம் காண்கின்றனர் எனக்கு தோன்றுவது  என்னவென்றால் எல்லோரும்  கொரோனாவால் பீடிக்கப்பட்டு இன்னும் யாரும் இல்லை என்னும்போது தான்  இது முடிவுக்கு வரும்பொல் இருக்கிறது  முன்பெல்லாம் உடல் நலக் குறைவு என்றால் மருத்துவரிடம் போவோம்  கொடுக்கும் மருந்துகளால்  குணமடைவோம்இப்போதெல்லாம் மருந்து சாப்பிடும்முன்பேபயந்தே சாகிறோம் மருத்துவமனையை நினைத்தாலே ஹாலுசினேஷன்கள் தான் இதை அதிகப்படுத்த இறந்தால் எப்படி யெல்லாம் வீசி எறியப்படுவோம் என்றேநினைக்கத்தோன்றுகிறது இந்தபயமே பலரை தற்கொலைக்குத் தூண்டுகிறதோ என்னவோ உடல் நலம்  சரியில்லை என்றால் நலமடையும்   நினைப்பை விட  சாவின்  நினைப்பே வருகிறது
அரசு பொருளாதாரம் வளம்பெற நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு  செலவு செய்கிறார்கள் ( எத்தனை லட்சங்கள் கோடிகள்? )வெறும்  நோடிஃபிகேஷனா இல்லை டோக்க்னிஸ்மா)   என்று சொல்லப்படுகிற்துஆனால்  இவ்வளவு பணமும்  எங்கு ற்கிறது என்பதே தெரிய வில்லை கொரோனா இன்னும் பண்க்காரர்களை உருவாக்கி இருக்கும் தொடரும்  கொரொனா பாதிப்புகளிப்போதைய நிலையில் குறையு வாய்ப்பு இருப்பதாக தெரிய வில்லை  அதிக சோதனைகள் அதிகபாதிப்பைதானே காட்டும் எப்படி குறையவாய்ப்பு
என்ன வெல்லாமோ செலவு செய்யும் அரசு அனைவருக்கும்  கொரோனா மருத்துவம் என்றால்  இலவசமாக்செய்யக்கூடாதோ
 வரவர மக்கள் அரசு சொல்லும் நியதிகள் எதையும்பின்பற்றுவதில்லை 130 கோடி மக்கள் கடைபிடிக்கக்கூடிய  வழிமுறைகள்போல் இல்லை  இங்கெல்லாம்  ஆட்டோவில் புளி மூட்டை மாதிரி அடைத்துக் கொண்டு போவதைபார்க்கிறேன் என்னதான்   செய்வார்கள்நேரத்துக்கு  வேலைக்குப் போகவேண்டும் முன்புபோல் தனியார் ஊர்திகளோ  பேரூந்துகளோ காண்பதில்லை  ஆட்டோ ஓட்டுனர்கள்கிடைக்கும் வாய்ப்பை விடுவார்க;ளா மார்க்கெட்டில்  எல்லாம் கூட்டம் பிதுங்கி வழிகிறது  அப்புறம் எங்கே தனிமனித  இடைவெளி என்னவோ போங்கள் நம்பிக்கை குறைகிறது

கொரோனாவுக்கு  வாக்சின் தயாரிக்கப்பட்டு  வெற்றி அடைந்தால் அனைவருக்கு  அதுகட்டாய மாக  கொடுக்கப்படவேண்டுமிதற்காகும் செலவை அரசே ஏற்க வேண்டும்        
=








22 கருத்துகள்:

  1. எங்கு பார்த்தாலும் கொரோனாபோபியா பரவிவிட்டது ஐயா. நல்ல முடிவு விரைவில் வரும் என நம்புவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பிக்கை மட்டும்போதுமென்றால் கொரோனா என்றோ ஓடியிருக்கு ம்

      நீக்கு
  2. எதுவுமே அறுதியிட்டு சொல்ல முடியவில்லை... இத்தனை நாட்கள் தொற்று இல்லாமல் இருந்த எங்கள் பகுதி, இப்போது சிறிது சிறிதாக...

    பதிலளிநீக்கு
  3. அரசு இலவசமாக யாருக்குக் கொடுக்கணும்? அரசுக்கே வருமானத்திற்கு வழி இல்லை.

    வயிறு, கொரோனா பற்றிய பயத்தை அலட்சியப்படுத்துது என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசு சொல்லும்லட்சங்கள் கோடிகள் எல்லாம் எங்கு போகின்றன

      நீக்கு
  4. எது எப்படியாயினும் கொரோனா வந்தால் செலவை அரசுதான் ஏற்கவேண்டும் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த தொற்றுக்கு ஆகும் செலவே பீதியை அதிகப்படுத்துகிறது

      நீக்கு
  5. இங்கு கேரளத்திலும் ஒரு விதம் அடக்கி கொண்டு வந்தபோது வெளி நாட்டில் இருந்து திரும்புவர்களாலும், வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்களாலும் அதிகரித்து விட்டது. வெளி மாநிலம் சென்று மீன் கொள்முதல் செய்தவர், காய்கறி கொள்முதல் செய்தவர் என்று சிலரால் பலரும் பாதிக்கப் பட்டனர். தற்போது திருவனந்தபுரம் ஒரு வார லாக்டௌனில்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லக்டௌன் தீர்ப்பாகுமனால் ஒரு வாரமென்ன கூட கூட இருக்கலாம்

      நீக்கு
  6. ஆகஸ்ட் 15 அன்று வெளியாகும் என்று சொல்லப்பட்ட வாக்சின் அதற்குள் தயாரிப்பது கடினம் என்று சொல்கிறார்கள்..  அவசரப்படக்கூடாது என்று எச்சரிக்கிறார்கள். சீனா சீக்கிரம் வெளிவந்து விட்டது.  ஏனோ மற்ற நாடுகளால் அப்படி முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரோக்கியமான மனிதர்கள் மேல்பரிசோதனை செய்து வெற்றி காண வேண்டும் கண்டு பிடிக்கும் வாக்சின் எதிர்பார்க்கும் பலன் தர வேண்டும்

      நீக்கு
  7. நடக்கின்ற நடப்பு - ஒன்றும் புரியவில்லை ஐயா..

    பதிலளிநீக்கு
  8. Situation is very worrying. Praying vaccine should be a success. I think the test period itself may be long.

    பதிலளிநீக்கு
  9. வேக்சின் வந்தால் நல்லது ஆனால் பல ஆராய்ச்சிகளுககுப் பிறகு பஅடு பாதுகாப்பானது என்று தெரிந்த பின்னரே வெளியில் வர வேண்டும். ஆகஸ்ட் 15 அன்று வெளிவர இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். ஆனால் மகன் சொல்லுவது வேக்சின் அத்தனை எளிதில் கொண்டுவர இயலாது என்றும் சொல்கிறார். எப்ப்டியோ இதிலிருந்து விரைவில் மீள வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. விரைவில் அனைவரும் நலம் பெறப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு