கடைசில சிலபக்கங்கள் மிஸ்ஸிங்
----------------------------------------------------------
நான் நாடகங்கள் எழுதி மேடை யேற்றி இருக்கிறேன் என்று என்னைபடிக்கும் பலரும் அறி வார்கள்பழைய மேடை யேற்றிய நாடகம் ஒன்றுகிடைத்தது அதில் கடைசியில் சிலபக்கங்கள் மிஸ்ஸிங் இல்லை இல்லை பென்சில்லில் எழுதி இருந்ததுபடிக்க முடியவீல்லை அட்வெர்சிடியையும் அட்வான்டேஜாக
மாற்ற எண்ணினேன் இருக்கும் வரை பதிவிடுவது கடைசி பக்கங்களை முடிக்கபதிவுலகநண்பர்களைநாடுவது யார் நன்றாக முடிக்கிறார்களோ அவர்களுக்கு ஒருபரிசு உண்டுரூபாய் ஆயிரம் என்மறதிக்கு நான்கொடுக்கும் விலையாகட்டும்வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாள் விட்டு நாடகம் பதிவாகும் கடைசியில் மீண்டும் போட்டி பற்றி நினைவூட்டுவேன் எழுத்தில் ஆர்வம் உள்ளவர்கள்காற்று உள்ள போதே தூற்றி கொள்ளட்டும்
காட்சி 4
இடம் ---ஜெயில்
பாத்திரங்கள்-அருணா குமரேசன்
கான்ஸ்டபிள் 420 ரெஜிஸ்த்ரார் சந்துரு
(திரை உயரும்போது கான்ஸ்டபிள் குமரேசனுக்கும் 420க்கும் உணவு தட்டை வைக்கிறான்
)
குமரேசன் ---எனக்கு எதுவும்வேண்டாம்
போலிஸ் சே அப்படிச்சொல்லக் கூடாது
குமரேச வேண்டாம்னா விட மாட்டிங்களா
போலிஸ் –வேண்டாம்னாவிடக் கூடாது
உங்கள சாப்பிட வைபபது எங்க டூட்டி
420 – போனாப்போவுது சாப்பிடு தம்பி
குமரேசன் ---எனக்கு வேண்டாம் சாகும்வறை எனக்கு சாப்பாடு வேண்டாம்
420 – சாகிற வரை உண்ணா விர்தமா
வேண்டாம் தம்பி இவங்க தற்கொலை முயற்சின்னுகேஸ் புக் பண்ணி ஜெயில்ல தள்ளிடுவாங்க
குமரேசன் --நா ஏற்கனவே ஜெயில்லதானே ஐயா இருக்கேன்
20 -- தம்பி நானிங்கவந்து ரொம்ப நாளானதால இது ஜெயிலுங்கற்தே மறந்து ப்போச்சு சரி சரி சாப்பிடு
குமரேசன் --- எனக்கு வேண்டாம்
ஐயா
420--- உனக்கு என்னதான் வேணும் உன் ஆசைதான் என்ன
குமரேசன்
--- சாகறதுக்கு முன்னாலஎந்தம்பி சந்துருவை ஒரு முறை பார்க்கணும்
420----ப்பூ நான் ஏற்பாடு பண்ரேன்
குமரேசன் என்வாழ்க்கையில முதல் தடவையா பிறர் கிட்ட நான் எதிர் பார்க்கிற உதவி இதுதான்
420-- நான் செய்யற முதல் உதவியும் இதுதான் தம்பி உங்கிட்டஎனக்கு ஒரு தனி பிரியம் வட்டிக்கடை
சுப்பையாவை நானே கொலை செய்யணுன்னு இருந்தேன்
அத நீ செஞ்சு முடிச்செ பாரு அதனால
குமரேசன் --- ஐயா அந்தக் கொலையை நான்செய்யலே ஐயா
420---நமக்குள்ள என்ன தம்பி சும்மா சொல்லு எங்கிட்டயே மறச்சா நான் நம்புவேனா
குமரேசன் --நம்ப வேண்டாம் யாரும் நம்பவேண்டாம் உலகமெல்லாம்
ஒருத்தனை உத்தமன்னு சொல்லும்போது அவன்மனசாட்சி
அவனை குற்றவாளின்னுகுத்திக்காட்டற வேதனயை விட
உலகமெ கொலைகாரன்னு திட்டற ஒருத்தனை அவன் மனசாட்சி மட்டும் உத்தமன்னு
வாழ்த்தறதுல இருக்கிற் ஆறுதல் பெரிசு ஐயா
போலீஸ்—உன்னைத்தேடி ஒரு பொண்ணு வந்திருக்கப்பா
போலீஸ்—உன்னைத்தேடி ஒரு பொண்ணு வந்திருக்கப்பா
குமரேன்--- என்னைத்தேடியா வரட்டும் வரட்டும் ( அருணா வருகை ) யார் நீங்க் என் தம்பி சந்துரு ஏதாவது சொல்லி அனுப்பினானா
அருணா----சந்துருவுக்கு நீங்க
எதாவது சேதி சொல்லணும்னா நான் போய்ச் சொல்றேன் ஆமா சந்துரு யாரு
கும --- இன்னும் ஒரு வாரத்துல
என்னைப் பறி கொடுத்து தவிக்கப்போற என் தம்பி என் கவலை எல்லாம் அவனைப்பற்றித்தான்
அருணா---அவனைப்பார்த்துக்க அண்ணி இல்லே
கும---என்கழுத்த முடிச்சு இறுக்கறப்போ
தன்கழுத்து முடிச்ச இழக்கிற துர் பாக்கியம்
எந்த பெண்ணுக்கும் இல்லை நான்கலியாணம்
ஆகாதவன் எல்லாம் விசாரிக்கிறயே நீ யாரு
அருணா ---நானும் இன்னும் கல்யாணம் ஆகாதவ பேர் அருணா
420---அடிச்சக்கைன்னானாம் காலேஜு பீச்சு சினிமா இங்கெல்லாம்தான் நடக்கும்னு கேள்வி பட்டிருக்கேன் இப்பஜெயிலுக்குள்ளூம் வந்துடுத்தா தம்பி காதல் ரொம்ப
அபிவிருத்தி அடைஞ்சிருக்கு
அருணா ----ஐயா அவரை நான் காதலிக்க வரலை
கல்யாணம்செய்துக்க வந்தேன்
கும----- (வியப்புடன் )ஆங் ( 420 சிலயாகிறான்)
அருணா ----ஏன் ஆச்சரியப்படறீங்க்
உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா இப்பவே திருமணத்தை நடத்திடலாம்
ரெஜிஸ்துராரையும் கூட்டி வந்திருக்கேன்
கும –உன்க்கும் எனக்குமா நான் இன்னும் ஒரு வாரத்துல தூக்குல தொங்கப்போற்ச் .சிரஞ்சீவி குமரேசனுக்கும் சௌ அருணாவுக்கும் கல்யாணமா ஐயா ஜெயில்ல டெலிபோ ன் இருக்குமில்ல போன் செய்து பைத்திய்க்கார அசுபத்திரியிலிருந்து ஏதாவது பொண்ணு
தப்பிச்சு ஓடிப்போச்சான்னு கேக்கச் சொல்லுங்க
அருணா—போதும் நீங்க
நெனக்கிற மாதிரி நான் ஒண்ணும் பைத்திய்மில்ல
கும----- இல்ல குறும் புக்காரியா
இருக்கலாம் தூக்கு தண்டனைக் காத்திருக்கிற்
ஒருத்தனைப் பார்த்து எள்ளி நையாண்டி செய்யும் ஈவிரக்கமில்லாதவளா இருக் கலாம் இந்த கேசை என் மேல ஜோடிச்சவங்க உன்னை அனுப்பினார்களா உன் நாடகமென்கிட்ட பலிக்காதுன்னு சொல்லு போ
அருணா—இது நடிப்பும் இல்ல நாடகமும் இல்ல என்ன யாரும் அனுப்பவுமில்ல இது என் சொந்த லட்சியம்
கும----- யமன் கிட்டெருந்து புருஷன்
உயிரை மீட்டாள் சாவித்திரி என்று கதை படிச்சிருக்கேன்
உன் புருஷன் உயிரை மீட்கணும்னு உள்ள ஆசையில
சாகப் போற என்னைக் க்ல்யாணம் செய்துக்க நெனக்கறியா அருணா சட்டம் என்னை கொல்லப்போவுதுஎன்னைக்கல்யாணம்
செய்துகிட்டு உன்னை நீயே சாகடிச்சுக்கப் பார்க்கறே
அருணா --- இல்லை இந்தக் கல்யாணத்தின்
மூல்ம்தான் நான்வாழப்போறேன்எனக்கு வாழ்வு தரப்போகும் கல்யாணத்துக்கு நீங்க சம்மதிச்சாஎன்
கஜானாவை வேணுமாலும் திறந்து விட்டுடுவேன்
கும--- கல்யாணத்துக்கு விலையா உங்க வர்க்கப் பெண்களுக்கு இப்படி ஏதாவது பைத்தியம்
இருக்குமா
அருணா----பிறர் வாழவே வாழ்ந்ததாக்
பெருமை பேசிட்டு ஒருபெண்ணுக்கு வாழ்வளிக்க
மறுக்கிற உங்களுக்குத்தான் பைத்திய்ம் கொஞ்ச நேரம்முன்னாடிஎந்ததம்பியை நெனச்சு அழுதீங்களோ அந்த தம்பி வாழ்நாள் பூராவும் கண் கலங்காமல் வாழ முடியும்
சந்துருவின் எதிர் காலத்துக்கு எது கேட்டாலு நன் தரேன்ன்னு சொல்லும்போது அந்தப்பணமே
வேண்டாம்னு சொல்லும் உங்களுக்குத்தான் பைத்தியம்
கும ---- போகட்டும் இந்த கல்யாண
பேரத்தில எனக்கு என்ன கிடைக்கும்
அருணா ---- கேளுங்க
கும ---ஆயிரம் ரூபாய் தருவியா
அருணா ---இவ்வளவுதானே இன்னும்
5 நிமிஷத்திலரெஜிஸ்திரார் கூடவருவேன் உடனே
கல்யாணம் மறந்துடாதீங்க (போகிறாள்)
420 --- இன்னும் கொஞ்சமதிகமா கேட்டிருக்கலாம் தம்பி
கும--- நானொண்ணும் பணக்காரனில்லையே பேராசைப்பட
(சிறிது நேரம்மௌனம் )420 --- என்ன தம்பி யோசனைபலமாஇருக்கு
கும --- இல்ல ஐயா இப்ப வந்த இந்த அருணாவை
நெனச்சிட்டு இருந்தேன் இவ கொடுக்கப்போற ஆயிர ரூபாயை எங்கள் சங்கத்துக்கே கொடுத்துடலாம்னு
இருக்கேன்(அருணா ரெஜிஸ்திரார் வருகின்றனர்
420--- அடடே நீ நெசமாவே
வந்துட்டியா நான் வெளயாட்டுன்னு இல்ல
நெனச்சேன்
ரெஜிஸ்----- யார் மாப்பிள்ளை இவரா
420--- உன்னைவிட வயசான எனக்கா
கல்யாணம் நானில்லை ரெஜிஸ்தார்இந்த தம்பிதான்
மாப்பிள்ளை (ரெஜிஸ்டிரார் ஆளுக்கொரு மாலையை
தருகிறார்) உனக்கு இந்தபெண்ணை கல்யாணம் செய்துக்கசம்மதமா
கும---- சம்மதம்
ரெஜிஸ்டிரார்-----இதிலே கையெழுத்து
போடு குமரெசனைக் கல்யாணம் செய்துக்க உனக்கு
சம்மதமா
அருணா--- ஆம் சம்மதம்
ரெஜிஸ்திரார் ---இதுல கையெழுத்து
போடுங்க ம்ம்ம் மாலையை மாத்திக்குங்க இதோ உங்க
கல்யாண செர்டிஃபிகேட் Wish you a long and happy married life (போகிறார் )
420--- இந்தாம்மா அருணா இந்த கிழவன்கிட்ட ஆசிர்வாதம்வாங்கிட்டுப் போம்மா
மஞ்சளூம் பூவுமா எந்நாளும் சுமங்கலியா இருக்கணும்
நீ (அருணா திரும்பிப்பாராமல் போகிறாள்)
கும ----செய்யறது செய்யறே பலிக்கிற
ஆசிர்வாதம்செய்யக்கூடாதா தாத்தா
420 --- யார் கண்டது இவ கழுத்துல நீ போடற முடிச்சு பலமான முடிச்சா இருந்தா தூக்கு
என்ன செய்ய முடியும் அவ பெரிய பணக்காரிபோலலைஇருக்கு தம்பி பணம் பத்தும் செய்யும் தெரியுமா
கும ----இப்படி தூக்குல தொங்கப்போறவனை கல்யாணம் செய்துக்கவும் வைக்கும்
420—தூக்கில போறவனைக் காப்பாத்தினாலும் காப்பாத்தும்
கும --- அவ தலை எழுத்தையே மாத்தப்போற
இந்த கையெழுத்தை அவள் போட்டிருக்கவே வேண்டாம்தாத்தா இதுவரை எந்தம்பிக்கு மட்டும்கவலைப் பட்டேன் இப்போ
இந்த பெண்ணுக்கும் சேர்த்துஇல்ல கவலைபடவேண்டி இருக்கு
420----- நீ என்ன கவலைபடற் அந்த
பெண்ணு இல்ல உனக்காக கவலைப்பட்டு உன் விடுதலைக்காக
பாடு பட்டுகிட்டு இருக்கும்
கும ---எனக்கொண்ணும்புரியல தாத்தா கல்யாணம் ஆனப்புறம் ஒரு
நிமிஷங்கூடபுரு ஷனோட வாழமுடியாத இந்தகல்யாணத்த
அவ ஏன் செய்துக்கிட்டா ஹூம் பத்திரத்துல கையெழுத்து
போட்டுட்டு திரும்பிக்கூட பார்க்காதாவளைப் பற்றி நான் ஏன் கவலைப்படணும் ( சந்துரு வருகிறான் )
சந்துரு -----அண்ணா
கும ---சாகிறத்துக்கு முன்னாடி
உன்னைப் பார்க்கப் போறேனா ந்னு தவிச்சேன் நல்ல வேளை நீ வந்துட்டே
420 ---தம்பி உன்ன உங்க அண்ணி
இங்க அனுப்பினாங்களா
சந்--- அண்ணியா அண்ணா தாத்தா என்ன சொல்றாரு
420 ---- உங்க அண்ணனுக்கு கொஞ்ச நேரம் முன்னாடிதான் கல்யாண மாச்சு உங்க விட்டுல
உங்க அண்ணி ஒருசமயம் காத்திட்டு இருக்கும்
சந் --- உனக்கு கல்யாணம் ஆனதைக்கூடபார்க்க
எனக்கு அதிர்ஷ்டமில்லாம போச்சே அண்ணா அண்ணீ ------
கும---- ச்சே நானே இந்தக்கல்யாணத்த
ஒருகெட்டசொப்பனமா மறந்துட்டபின் அண்ணியாவ்து மண்ணாங்கட்டியாவது சந்துரு உங்க அண்ணிய
உனக்கு யாருன்னு கூட தெரிய வேண்டாம்
போலீ ---- நேரமாச்சு தம்பி
சந்துரு---- அண்ணா அண்ணா அப்பா அம்மா இல்லாததையே தெரியாமவளர்தின நீ இல்லாம நான் எப்படி அண்ணா வா(ழப்போறேன் போலீஸ் அழைத்துச் செல்கிறது )
கும --- இயற்கைக்கு விரோதமாஇறந்தவங்களோட
ஆவி அவங்களுக்கு பிரியமானவங்க பின்னாடி சுத்திகிட்டிருக்கும்சந்துரு
நானும் ஆவியா மாறி உன்பின்னாலயே வருவேன் உனக்கு ஒருஆபத்தும்வராம காப்பாத்துவேன்(தன்முகத்தைப்
பொத்திக்கொண்டு கேவி அழுகிறான் )
420 ----அந்த சின்னப்பையனுக்கு தைரியம் சொல்லாம நிநீ இப்படி அழலாமா அழாதே வா தம்பி
திரை
ஆகா, போட்டி சிறக்கட்டும்
பதிலளிநீக்குபோட்டி சிறக்க வைப்பது வாசகர்கள் கையில்
நீக்குநாடகப் போட்டிக்காக நீங்கள் கற்பித்திருக்கும் காரணமும் நன்றாக இருக்கிறது. அதை வைத்து நான் ஒரு சிறுகதை எழுதட்டுமா?..
பதிலளிநீக்குஅந்த சிறுகதை எழுதிய நாடகத்தை ஒட்டி இருந்தா நன்றாக இருக்கும்போட்டியை நாடகவடிவிலோ கதைவடிவிலோ எழுதினால் நன்றாக இருகும் ஜீவி எழுதுகிறார் என்றால்வேண்டாம் என்று சொல்ல முடியுமா
நீக்குஅட்வெர்சிட்டியையும் அட்வானடேஜாக.....இதுபோல உங்களிடமிருந்து பலவற்றைக் கற்றுக்கொள்கிறோம் ஐயா.
பதிலளிநீக்குபோட்டி சிறக்க வாழ்த்துகள்.
எழுதும் போது வந்து விழும் வார்த்தை கள் அவை
நீக்கு//உண்ணா விர்தமா வேண்டாம் தம்பி இவங்க தற்கொலை முயற்சின்னுகேஸ் புக் பண்ணி ஜெயில்ல தள்ளிடுவாங்க
பதிலளிநீக்குகுமரேசன் --நா ஏற்கனவே ஜெயில்லதானே ஐயா இருக்கேன்//
ரசித்தேன் ஐயா
வசனங்கள் எல்லாமே நன்றாக இருக்கிறது.
பாராட்டுக்கு நன்றி ஜி
நீக்குகதையிலும் ஆயிரம் ரூபாய் - கிடைக்குமா...?
பதிலளிநீக்குகதையாக எழுதியும் போட்டியில் பங்கு பெறலாம்
நீக்குஇது எழுதப்பட்ட காலத்தில் 1000 ரூபாய் பெரியதாக இருந்திருக்க வேண்டும். அதுதான் அருணா அதைப் பெரிதாகச் சொல்கிறாள்!
பதிலளிநீக்குசரியாக நினைதீர்கள் அந்தகாலகட்டத்ட்க்ஹுக்குஆயிரம்ரூபாய் பெரிய தொகையே
நீக்கு//நானும் ஆவியா மாறி உன்பின்னாலயே வருவேன் //
பதிலளிநீக்கு"ஏன்ணே பயமுறுத்தறே?" என்று நினைத்திருப்பானோ சந்துரு!
ஹா.. ஹா.. ஹா...
போட்டியில் பங்கு பெற லாமே
நீக்குபோட்டி என்று இல்லை. வாய்ப்பிருந்தால எழுதிப் பார்க்கலாமே என்றுதான்... நேரமும் ஒத்துழைக்க வேண்டும்.
நீக்குவாய்ப்பிருக்கிறது நேரம் உங்கள் கையில்
நீக்குசார் நன்றாக போகுது. முந்தைய பகுதிகள் வாசித்திருந்தாலும் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டால்தான் கண்டினியூட்டி இருக்கும் என்று தோன்றுகிறது. பார்ப்போம் எழுத முடிகிறதா என்று. இதையும் எடுத்து வைத்துக் கொண்டுள்ளேன்.
பதிலளிநீக்குகீதா
ஏதோ பங்கு கொள்வீர்கள் என்னும்நம்பிக்கை துளிர்க்கிறது
நீக்குமற்ற இரண்டு பகுதிகளைப் படித்துவிட்டேன். இதையும் படித்துவிட்டு எழுத முடியுமா என்று பார்க்கிறேன்.
பதிலளிநீக்குநாடக வசனத்தில் உங்கள் திறமை தெரிகிறது. பாராட்டுகிறேன்.
முயன்றால் முடியாதது இல்லை நன்றி
நீக்கு