Friday, July 24, 2020

கடைசியில் சில பக்கங்கள் மிஸ்ஸிங்

 கடைசியில் சில பக்கங்கள் மிஸ்ஸிங் 


நான் நாடகங்கள் எழுதி மேடை யேற்றி இருக்கிறேன் என்று என்னைபடிக்கும் பலரும் அறி வார்கள்பழைய மேடை யேற்றிய நாடகம் ஒன்றுகிடைத்தது அதில் கடைசியில் சிலபக்கங்கள் மிஸ்ஸிங் இல்லை இல்லை பென்சில்லில் எழுதி இருந்ததுபடிக்க முடியவீல்லை அட்வெர்சிடியையும் அட்வான்டேஜாக
மாற்ற எண்ணினேன்  இருக்கும் வரை பதிவிடுவது  கடைசி பக்கங்களை முடிக்கபதிவுலகநண்பர்களைநாடுவது யார் நன்றாக  முடிக்கிறார்களோ  அவர்களுக்கு ஒருபரிசு உண்டுரூபாய் ஆயிரம்  என்மறதிக்கு நான்கொடுக்கும் விலையாகட்டும்வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாள் விட்டு நாடகம் பதிவாகும்  கடைசியில் மீண்டும் போட்டி பற்றி நினைவூட்டுவேன் எழுத்தில் ஆர்வம் உள்ளவர்கள்காற்று உள்ள போதே துற்றிக்கொள்ளட்டும் 

காட்சி ===8
இடம் ----சந்துரு வீடு
பாத்த்ரங்கள் ---சந்துரு பக்கிரி
சந்துரு---கடவுளே  உன்னை எப்படித்தான்கும்பிடுவது என்று  எனக்குத் தெரியாதுநீ நெனச்சா எதுவும் செய்யச் முடியுமாமேஎங்கண்ணனை காப்பத்த மட்டும் உன்னால் முடியாதா (ரத்த்சக் காயங்களுடன்பக்கிரி தடால் என்று வந்து விழுகிறான்)சத்தம் கேட்டு )யாரது
பக்கிரி ----ஷ்ஷ்  சத்தம்போடாதே கதவைச் சட்து முதல்லபோலீஸ் என்னை துரத்திட்டு வருது
சந்துரு---போலீசா ஐயையோ (கதவைச் சாத்துகிறான்புடிச்சுக்கிட்டு போனாஉன்னையும்தூக்கில பொட்டுடுவாங்களே ஐயையோ எவ்வளவு ரத்தம்(விளக்கிலிருந்து எண்ணைய்எடுத்து காயங்களுக்கு தடவுகிறான்)
பக்கிரி----ஆங்  உள்ளே தோட்டா பாய்ன்சிருக்கு தம்பீப்ப இங்க வந்து ஒளிஞ்சுககாம இருந்தா அவங்ககிட்ட  ஆப்பிட்டுட்டு இருப்பேன்
 சந்துரு --- எங்கண்ணனுக்கு  இப்படி ஓடி  ஒளிய தெரியாமபோச்சே
பக்கிரி –உங்க அண்ணனைக்கூடபோலீஸ் புடிச்சுட்டு போயிட்டாங்களா தம்பீ
 சந்துரு --- ஆமா விடிஞ்சா தூக்கில போடுவாங்க
பக்கிரி --- யாரையாவது கொலை செஞ்சிட்டாரா உங்கண்ணன்
சந்துரு --- சேச்சே எறும்பைக்கூட  கொல்லது எங்கண்ணன் வட்டிக்கடை  சுப்பையாவை கொன்னூட்டாருன்னு எங்கண்ணன் மேலெ வீண்பழியை சுமத்தி ……
பக்கிரி ---- வட்டிக்கடி சுப்பையாவையா  ஐயையோ பொயும்போய் நான் இங்கேயா  ஒளிஞ்சிக்க வரணம் (எழுந்து செல்ல முயன்று  முடியாமல் விழுந்து விடுகிறான் )
சந்துரு இருந்தா என்ன நான்ஒண்ணுமுக்களை பிடுச்சு கொடுக்க மாட்டேன்  நீ பொனா உன்  தம்பி என்னைப்போல  கஷ்டப் படும்தானே
பக்கிரி ---எனக்குத் தம்பியுமில்ல அண்ணனுமில்ல தங்கச்சியுமில்ல  அக்காவுமில்ல  இருந்திருந்தா உங்கண்ணனைபோல  நல்லவனா இருந்திருப்பேனோ என்னஓ உள்ளே பாய்ந்சிருகிற டோட்டஎன்னை விடாடு போலிருக்கே  தம்பிஇனிமே நான் பொழைக்கிறது கஷ்டம்     ஐய்யோ
சந்துரு ----இரு இரு அப்படி எல்லாம்சொல்லாதே அண்ணே கடவுளெ உனக்கு நான்  ரொம்ப வேலைகொடுக்கிறேன்னு கோவிச்சுக்காதே எங்கணணனோட  சேர்த்து இந்த அண்ணனையும்காப்பாத்து கடவுளே
பக்கிரி –( வறட்டு சிரிப்புடன்) யாரையுமே நான்காப்பாத்த  நெனச்சதில்லை தம்பி கொலைசெய்ய நெனச்சிருக்கேன் என்னைக்காப்பாத்தகடவுள்நெனைக்க  மாட்டார்தம்பி  ஆனா நானிப்ப நென்ச்சா உங்கண்ணைனை காப்பாத்த முடியும் கொஞ்சம்தெர்ருவில போய் போலீசை கூப்பிடு  தம்பி  
சந்துரு ---இப்பத்தானே அவங்க கிட்டருந்துடப்பிச்சு வந்திருக்கே அடுக்குள்ளச் அவங்களையே கூப்பிட சொல்றயே  உனக்கென்ன புட்ட்க்ஹி கெட்டு போச்சா
பக்கிரி-----இல்ல தம்பி இப்பஹ்தான் எனக்கு நல்ல புத்ஹி வந்த்ருக்கு எத்தனையோ கொலைகளை  கூசமல் செய்த எனக்கு ஒஉத்தனைக் காப்பாத்தணும்கிறா ஆசை இப்பத்தான் வந்திருக்கு போ ஓடு தம்பி  நான் சாவறதுக்கு  முந்தி போலீசை கூப்பிட்டு வா தம்பி
சந்துரு—மாட்டேன் உன்னையும் புடிச்சி தூக்கிலபோட்டுடுவாங்க
பக்கிரி ---போடட்டும் உங்கண்ணனாவது தப்பட்டும் நான் செத்துப்போனா  அதுக்காக துக்கப்பட யாருமில்லைஉங்கண்ணனுக்கு  நீ இருக்கே  தம்பி நீஇருக்கேஅதுக்ககவாவதுஅவ்ரூசிரோட இருக்கணம் ஓடு தம்பி ஓடு (தளர்ந்து  விழுகிறான்  )
                 
சந்துரு –ஐயயோ அண்ணே அண்ணே (அவனை உலுக்கிப்பார்த்துவிட்டு வெளியே ஓடுகிறான் )
                                      திரை    


12 comments:

 1. பன்முகக் கலைஞர் ஐயா நீங்கள்!...

  ReplyDelete
 2. நாடகத்தை தொடர்கிறேன் ஐயா...

  ReplyDelete
 3. தொடர்கிறேன் சார்.

  நல்லாருக்கு!

  கீதா

  ReplyDelete
 4. கதைப்போக்கு புரிகிறது.  ஆனால் நிதர்சனத்தில் ஓரிரவில் சட்டப்படி தூக்குதண்டனைக் கைதியைக் காப்பாற்ற முடியாது என்று படித்திருக்கிறேன்.  

  ReplyDelete
  Replies
  1. எழுதும்போது லாஜிக் எல்லாம் பார்க்கவில்லை கதையின் போக்கு புரிந்தால் போட்டியில் பங்கு பெறுவது எளிதுதானே

   Delete
 5. தீவிரமாக போகிறதே... ரைட்டு...!

  ReplyDelete
  Replies
  1. தீவிரமாய் படிக்கிறீர்கள் என்பது புரிகிறது

   Delete