கைரேகை ஜோசியம்
பதிவுகள் வெளியிட்டு பழகி விட்டது என்னதான் எழுதுவது என்பதே பெரிய கேள்வி எங்கள் ப்ளாகில் ஜோசியம்பற்றி எழுதி இருந்ததைப் படித்தபோது அதில் நம் அனுபவத்தையும் பகிரலாமே என்னும் எண்ணம் எழுந்தது
நான் எச் ஏ எல் ஏரோ என்ஜினில் பணி புரிந்து கொண்டிருந்த
காலம் திருமணம் ஆகி இருக்கவில்லை ஒரு நாள் என் தமக்கையின் வீட்டுக்கு போயிருந்தேன்
அங்கு குறீ சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி
கேட்டுக் கொண்டிருந்தவர்கள் சொல்வதுசரியாக இருப்பதாக கூறிக்கொண்டிருந்தார்கள் நானும்
என் கையை நீட்டினேன்அந்தப் பெண்மணி
என்னை தீர்க்கமாகப்பார்த்து நான் எனக்கு நானே
ராஜா எனக்கு நானே மந்திரி என்பது போன்ற செய்திகளை
சுவைபட சொல்லிக் கொண்டுவந்தார் ஒரு கட்டத்தில் நான் அதிகம் சந்தோக்ஷிக்க வேண்டாம்
காலன் எனக்கு விதித்திருந்தகாலம் நெருங்கி விட்டது என்றும்இன்னும் சில நாட்களே வாழ்வேன் என்றும் கூறினார் ஒரு சில விநாடிகள் வெலவெலத்துப்
போனேன்என் தந்தைமறைந்தபின் பொறுப்புகள் எனக்கு
அதிகம் இருந்தது மரக்கால் படி ஆழாக்கு என்பதுபோல்
என்பின்னே ஐவர் இருந்தனர் நானும் போய்விட்டால்
அவ்ர்கள்கதி என்ன என்று மனம் நினைக்க
தொடங்கியது நம் முடிவு நம்கையில் இல்லையே குறிகாரியின் வாக்பலிக்குமானால் நான் கை கட்டிக்கொண்டிருக்ககூடாதே நான் போனாலும் என்னை
நம்பி இருப்பவர்கள்கஷ்ட்ப்படக்கூடாதுஎன்னும்
எண்ண்மே என்னை ஆட்டிப்படைத்ததுமூளை
என்னஎன்னவோ கண்க்கு போட்ட்து ஒரு எல் ஐ சி
பாலிசி எடுக்க துணிந்தேன் ரூ 10000—க்கு அப்போதுஅது எனக்கு பெரிய தொகை மாதம் ரூ 25 ப்ரிமியம் என் சக்திக்கு மீறியது இருந்தாலும்
ஏதாவது அசம்பாவிதம்நடந்தாலும் சமாளிக்க உதவலாஎனக்கு ப்ரிமியம் கட்டுவதே
நாக்கு தள்ளும் எப்படியோ 16 மாதங்கள் கட்டினேன் அதற்கு
மெல்முடியப் வில்லை ஆறுமாதம் கெடு நினைத்திருந்த நான்16 மாதங்கள் ஆகியும் சாகவில்லை அப்போது தீர்மானித்து கைரேகை ஜோசியம் கற்க துணிந்தேன்CHIEEROS PALMISTRY புத்தகம்வாங்கி கைரேகை சாஸ்திரம் கற்க துவங்கினேன்கற்றதைதெரிந்தவர்களிடம் சோதித்து பார்க்க துவங்கினேன் ஜோசியம் பெரும்பாலும்
குணாதிசய அடிப்படையில்கடந்தகாலத்தை ஓரளவு கணிக்கிறார்கள் , வாக்கு சாதுர்யமும்உதவும் அடிப்படையில் இன்னின்ன ரேகைகள் இன்னீன மாதிரி என்று தெரிந்து
கொள்ள் உதவும் வருங்கா ல கணிப்பு எல்லாம் சும்ம ஒருசான்ஸ்தான்
என் வீட்டுக்கு ரேகை பார்க்க வருபவர் எண்ணிக்கை கூடியதுஅவர்களிடம் நானே ஜோசியம்
எல்லாம்நம்பக்கூடியது அல்ல என்று கூற
ஆரம்பித்தேன் மனிதர்களின் ஒரு ஆர்வக் கோளாறேபலரி சம்பாதனை ஆகி விட்டதுஇதை நான் தெரிந்து கோள்ள திரும்பப்
பெற்முடியாத ரூபாய் நானூறு செலவு செய்ய வேண்டி வந்தது புத்தி கொள்முதலாக
சுவைபடச் சொல்லி இருக்கிறீர்கள். குறி சொல்வது வேறு, கைரேகை பார்ப்பது வேறு இல்லையா? கைரேகை பார்பபவர்கள் பெரும்பாலும் தனரேகை, இருதய ரேகை என்று வார்த்தைகளில் விளையாடுவார்கள்.
பதிலளிநீக்குஅந்த பெண்மணி கையில் ஒரு கோலுடன் என் கைபார்த்து அருடம்சொன்னார் இது ஒரு வித கை ரேகை சோதிடம்
நீக்குசுஜாதா கதைகளில் வஸந்த் கைரேகை பார்ப்பதை இளம் பெண்களை மடக்க உபயோகிப்பதாக எழுதுவார். நினைத்தாலே இனிக்கும் படத்தில் கமல் ஜெயராதாவுக்கு கைரேகை பார்க்கும் காட்சி ரசிக்க முடியும். "அப்புறம்?" என்று ஜெயப்பிரதா கேட்டதும் "அப்புறம்.... ம்ம்ம்... PTO பிபியை போட்டிருக்கே.." என்பார். டிபிகல் சுஜாதா!
பதிலளிநீக்கு* ஜெயராதா இல்லை, ஜெயப்பிரதா
நீக்குஎனக்கு ஒரு உறவினன் இருந்தான் (இருக்கிறான்...இப்போ அமெரிக்காவில்). அவன் யூனியில் படிக்கும்போது கைரேகை கத்துக்கிட்டான், அதுக்கு காரணம், எங்க போனாலும் இளம் பெண்கள் கையை நீட்டி ஜோசியம் கேட்பாங்கன்னு. அதுக்கு ஏத்தமாதிரி நல்ல வாய்ஜாலக்காரன்.
நீக்குகைரேகை நிச்சயம் சயன்ஸ்தான்.
எதை எழுதினாலும் ஒரு திரைப்படமோஎதாவது எழுத்தாளாரின்
நீக்குபடைப்போதான் பதிவர்களின் நினைவுக்கு வருகிறது
நேம்ஸ் மேக் நோ சென்ஸ்டு மி
பதிலளிநீக்குஒருவரது வாய் ஜாலம் என்றும் கை கொடுக்காது
பதிலளிநீக்குகையை காண்பித்ததால் 16 மாதங்கள் கவலையில் தவித்திருக்கிறீர்கள்
பதிலளிநீக்குப்ரிமியம் க்ட்ட முடியாததால் வந்த தவிப்பு அது
பதிலளிநீக்கு