செவ்வாய், 8 டிசம்பர், 2020

தரம் இலவசம்

 தரம் இலவசம்  தெரிந்து கொள்ள 

பணிக்காலத்தில் கணிசமான பகுதியை தரக்கட்டுப்பாட்டில் செலவிட்ட்வனின் சில தரக்குறிப்புகள் ஒரு மீள்  நினைவுகள் 

ஒரு  பொருளை  உற்பத்தி  செய்பவர்  அது  தரமானதாக   இருக்க  வேண்டும்  என்பதற்கு  என்னென்ன   வகைகளில்   முயற்சி   எடுத்துக்கொள்கிறார்  (அல்லது )எடுத்துக்கொள்ள   வேண்டும்  என்று  பார்ப்போம். இது  உற்பத்தி  செய்யப்படும்   எல்லா  பொருள்களுக்கும்   பொருந்தும் .

 1) 
வாடிக்கையாளரின்   தேவையைப்   புரிந்து   கொள்ளல்.
 2)  Design  
என்று   சொல்லப்படும்   வடிவமைப்பு.
 3) 
உற்பத்தி  செய்யப்படவேண்டிய   பொருளுக்கேற்ற   மூலப்பொருள். (Raw material)
 4) 
வடிவமைப்பிற்கு   ஏற்றபடி  உருமாற்றம்  செய்யத்  தேவையான   மெஷின்                   
 5)
வடிவ  மாற்றம்  செய்ய   வழிமுறைகள் (Operation  Process)
 6)
மூலப்பொருளை  வடிவ  மாற்றம்  செய்ய  நல்ல  வேலை  தெரிந்த  பணியாளர்கள்
 7)
உற்பத்தியான  பொருட்களின்  தரம் பற்றிக்  கணிக்க  உதவும்  சோதனை  நிலையம்
 8)
உற்பத்தி  செய்யப்படும்  பொருட்களை  சீரான  முறையில்  பாக்  செய்யும்  வழிமுறைகளும்  தொழிலாளிகளும் .
 9)
உற்பத்தியான  பொருட்கள்  பாதுகாப்பான  முறையில்  டிரான்ஸ்போர்ட்  செய்தல்.


இப்படி  வாடிக்கையாளரின்  எதிர்பார்ப்புக்கு  ஏற்ற  முறையில்  செயல்  படும்போது, தரமானதாக   இருப்பதற்காக  செய்யும் செலவு , அப்பொருளை  பரிசீலனை  செய்ய எடுத்துக்கொள்ளும  நேரத்திற்கானது மட்டுமே.   செய்யப்படும்  வழி முறையிலேயே   தரத்தை உட்புகுத்தி விட்டால் தரத்துக்காக எந்த  விலையும் செலவும் இல்லை. .                                               
பிறகு  தரத்தின்  விலை  என்பதுதான்  என்ன.?
நிர்ணயிக்கப்பட்ட தரம் இல்லாமலிருக்கும்போது அதை  சரி  செய்ய  அல்லது  அந்தப்  பொருளையே   மாற்றத்  தேவையான  செலவே  தரத்தின்  விலையாகும்எந்த  மறு  வேலையும்அல்லது மாற்று  வேலையும் தேவைப்படாத  விதத்தில்  பொருள்   உற்பத்தி செய்யப்பட்டால்  தரத்திற்கென்று தனி  விலை  கிடையாதுஇது  உற்பத்தி   செய்பவருக்கும் , வாடிக்கையாளருக்கும்  கூடவே  பொருந்தும்.
------------------------
கீழே  கொடுக்கப்பட்டுள்ள  பத்தியைப்  படிக்கும்போதே  அதில்  வரும்  f   என்ற எழுத்தை  எண்ணிக்கொள்ளுங்கள் .இரண்டாம்  முறை  எண்ணாதீர்கள். அது  200%  பரிசீலனை ஆகும்.   100%  ஆகாது.     

The  necessity  of  training  farm  hands  for  first class  farms  in  the  fatherly  handling  of  farm  livestock  is
foremost  in  the  minds  of  farm  owners. Since  the  forefathers  of  the  farm  owners  trained  the  farm  hands for  first  class  farms  in  the  fatherly  handling  of   farm  livestock,  the  farm  owners  feel  they  should  carry  on  with  the  family  tradition  of  training  farm  hands  of  first  class  farms  in  the  fatherly  handling of  farm  livestock  because  they  believe   it  is  the  basis  of  good  fundamental  farm  management.


சில உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நூறு  சதவீதம்  பரிசீலனை  செய்து தரம் பிரித்து நல்ல பொருட்களையே   தேர்ந்தெடுத்து  அனுப்புவதாக நம்புகிறார்கள். ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட  சிறு  சோதனை  ஒவ்வொருவருக்கும்   வெவ்வேறு  விடையை  கொடுத்திருக்கும் ..இந்த சோதனை  மூலம்  நூறு சதவீதம் பரிசீலனை மூலம் தரம் பிரிப்பதென்பது உத்தரவாதமானது   அல்ல  என்று அறியலாம். பரிசீலனையில் பிரிக்க வேண்டிய எழுத்து தரமற்றது  என்று
வைத்துக்கொள்வோம்.

தரத்துக்கென்று தனி செலவோ விலையோ  கிடையாது .எதிர்பார்ப்புகளும்  அதை  நிறைவேற்ற  வேண்டி செய்யப்படும் செலவே ஒரு பொருளின்  விலையை  நிர்ணயிக்கும். தரம் என்பதற்கு  தனி செலவு  கிடையாது. அது  முற்றிலும்  இலவசம்.

 எத்தனைமுறை எண்ணினீர்கள் f என்ற் எழுத்தை ஒரே எண்ணிக்கை வந்ததா இது பதிவைப் புரிய உதவலாம்

 

 

 

 

 

 

               


8 கருத்துகள்:

  1. திரும்பத்திரும்பப் படிக்கின்ற வரிகளே வருகின்றனவோ என்கிற  எண்ணம் வந்ததும் எண்ணிக்கையை நிறுத்தி விட்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எண்ணக்கேட்டதுஒரு சோதனைக்காகவே எட்டனை முறை எண்ணினாலும் ஓரெ எண்வருகிறதா என்று பார்க்கவேதரம் இலவசமென்பதைதெரிவிக்கவே தரமென்பது சரியாக புரிண்டு கொள்ளப்படவில்லைவிளம்பரமே தரத்தின் அடிநாதமாகிவிட்டது ட

      நீக்கு
  2. f எத்தனை முறை என்று எண்ணுவதை விட்டு விட்டேன். அது மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைக்கக் கூடாது என்பது போன்று இருந்தது. ஆனாலும் வரிகள் வேண்டும் என்றே சில வார்த்தைகளை திரும்ப திரும்ப சொல்லி குழப்பி விடுகிறது. 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனை முறை எண்ணினாலும் ஒரெ எண்ணிக்கைவருகிறதா என சோதிப்பதன் மூலம் தரம் இலவசமாக கிடைக்கமல் அதற்கு ஒரு விலையும் தருகிறோ
      ம் என்பதையும் புரியவைக்கவே இப்பதிவு எழுதப்பட்டது

      நீக்கு
  3. பயனுள்ள ஆலோசனை விசயங்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தரம் பற்றிய சரியான புரிதலுக்காகவே எழுதப்பட்டது

      நீக்கு